-
23rd January 2009, 10:26 PM
#71
Senior Member
Senior Hubber
Inime Nangadhan (V4) would be telecasted shortly on Zee TV (date to be announced).
-
23rd January 2009 10:26 PM
# ADS
Circuit advertisement
-
23rd January 2009, 11:32 PM
#72
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
crvenky
Inime Nangadhan (V4) would be telecasted shortly on Zee TV (date to be announced).
thats great news. Pls post the exact timings too !
-
24th January 2009, 04:27 AM
#73
Senior Member
Devoted Hubber
Original video of IR's live concert in Italy available here
Dear Vibrations of IlaiyaRaaja,
Kindly the get the Original Video from "The Best Audio", Chennai. Contact No: 42123464 (Chennai, India)
With love & peace,
Akbar
-
24th January 2009, 09:45 AM
#74
Senior Member
Devoted Hubber
"Azhagu Malar Aada" in Sarode is just adorable in the above link
-
25th January 2009, 11:35 AM
#75
Senior Member
Senior Hubber
Inime Nanganadhan tomorrow (26th) at 10 am in Zee TV.
-
26th January 2009, 06:46 PM
#76
Senior Member
Senior Hubber
Last saturday's "ennodu paattu paadungaL" had IR's rythm programmer Puru as the chief guest and he made some interesting observation which is quite noteworthy. Extensive use of technology has shrunk musicmanship among instrument players today which is a very disturbing trend.
. Though technology has brought many sound samples, it is killing home grown talent.
Are our film MDs listening?
-
30th January 2009, 01:25 PM
#77
Senior Member
Devoted Hubber
தமிழ் சினிமாவில் இசைக் குறிப்புகளை நிரப்பிய இரண்டு இமயங்கள் இணைந்த தருணம் அது!
டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய தங்கள் நினைவுகளையும் கருத்துக்களையும் பிரபலங்கள் பகிர்ந்துகொள்ளும் 'இமயத்துடன்' என்னும் நிகழ்ச்சி விரைவில் கலைஞர் டி.வி -யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. விஜயராஜ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஐடியா கொடுத்தது டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான மு.க.அழகிரி.
மிக நீண்ட நாட்கள் கழித்து குரல் இமயமும், இசை இமயமும் கலைஞருக் காகச் சந்தித்துக்கொண்டார்கள். அந்த நெகிழ்வான சந்திப்பு இதோ...
''எதுக்குமே ஒரு யோக்கியதாம்சம் வேண்டும். அதாவது அருகதை. டி.எம்.எஸ் அண்ணன் பற்றிப் பேச, எனக்கு அந்த அருகதை இருக்கு. ஏன்னா, எனக்கு அவரோட வேல்யூ தெரியும். அவரோட குரலுக்கு ஈடாக நாம் திருப்பிக்கொடுப்பதற்கு உலகத்தில் எதுவுமே கிடையாது. ஆண்மை நிரம்பிய குரல்வளத்தில் அவருக்கு முன்னும் யாரும் இல்லை, பின்னாலும் யாரும் இல்லை. ஆண் குரல் என்றால் அது டி.எம்.எஸ்ஸோடு முடிந்துவிட்டது'' என்கிற ராஜாவின் குரலில் அழுத்தம் அடர்த்தியாகக் கூடுகிறது.
'' 'அன்னக்கிளி' படத்துக்கு இசையமைக்கும்போது டி.எம்.எஸ்ஸை எப்படியாவது பாட வைக்கணும்னு முடிவு செய்தேன். ஆனா, அது ஒரு சின்ன பட்ஜெட் படம். டூயட் பாடல்களோ, வேறு பிரமாண்டமான பாடல்களோ கிடையாது. பஞ்சு அருணாசலம் சார்கிட்ட சொல்லி, அண்ணன் பாடுவதற்காகவே ஒரு சிச்சுவேஷனை உருவாக்கச் சொன்னேன்'' என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் ராஜாவின் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கிறார் டி.எம்.எஸ். ஆசீர்வாதத்தைக் குனிந்து பெற்றுக்கொள்ளும் ராஜாவிடம் அப்படி ஓர் அடக்கம்!
''இந்த ஆசீர்வாதம் போதும்ணே! இதைத்தான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன்'' என்கிற ராஜாவின் குரல் தழுதழுக்கிறது. சிறிது நேரம் வார்த்தைகளற்ற மௌனம் இருவருக்கும் இடையில் அமர்கிறது. மௌனத்தை உடைக்கிறது டி.எம்.எஸ்ஸின் மதுரக் குரல்.
''இப்ப எனக்கு 86 வயசாகுது. ஆனாலும் இன்னும் குரல் தளர்ந்துடலை. சின்ன வயசிலிருந்தே என் சாரீரத்துக்கு மெருகு கொடுப்பேன். இதுவரை எவ்வளவோ பக்திப் பாடல்கள் பாடியிருக்கேன். ஆனா, எந்தக் குரலையும் இதுவரை காப்பியடிச்சதுஇல்லை'' என்று டி.எம்.எஸ் சொல்ல, ''ஆஹா!'' என்று ஆமோதிக்கிறார் இசைஞானி.
'' 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்' பாட்டை மறக்க முடியுமா? நான் படத்துக்கு மியூஸிக் பண்றதுக்கு முன்னால உங்க கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசிச்சுட்டிருந்தேன். அப்ப எனக்கு 'சரிகம'வும் தெரியாது, 'பதநிச'வும் தெரியாது. மியூஸிக் நோட்ஸ்னா சுத்தமா என்னன்னு தெரியாது. எழுதிவெச்சு பிராக்டீஸ் பண்ணி ஆர்மோனியம் வாசிப்பேன். பெங்களூரு, மதுரைன்னு எத்தனை ஊர்களுக்குப் போய்க் கச்சேரி பண்ணியிருக்கோம். கச்சேரி முடிஞ்சவுடனே இசைக் கலைஞர்களுக்கு வேற பொழுதுபோக்கு கிடையாது. எல்லாம் தண்ணியடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் உங்களைப் பார்த்தவுடனே பாட்டிலை எல்லாம் மறைச்சு வைப்பாங்க'' என்று பெரிதாக சிரிக்கத் தொடங்கும் இசைஞானியின் கைகளைப் பற்றிக்கொள்கிறார் டி.எம்.எஸ்.
''அன்னக்கிளி, பத்ரகாளி, தீபம்னு மூணு படத்துக்கு இசையமைச்சு முடிஞ்ச நேரம். அப்ப மலேசியாவில் இசை நிகழ்ச்சி. நீங்க அங்கே பேசினதைப் பலரும் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க. 'கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் மாதிரியான ஜாம்பவான்கள் இசையில் அவ்வளவு சுலபமாப் பாடிட முடியாது. பாடிப் பாடி பிராக்டீஸ் பண்ணிக் குரலில் மெருகேத்தித்தான் பாடுவேன்'னு நீங்க பேசுனீங்க. ஆனா, அப்ப வளர்ந்து வரும் என்னை மாதிரியான இசையமைப்பாளர்களை நீங்க மட்டம் தட்டுறீங்கன்னு பல பேர் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனால், உங்க பேச்சுல சத்தியம் இருந்தது. அது எனக்குத் தெரியும்'' என்கிற இளையராஜா, ''உங்களை நான் பயன்படுத்திக்கலை, ஓரங்கட்டினேன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. அப்ப ரஜினி, கமல் மாதிரியான நடிகர்கள் வளர்ந்து வந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நானும் வளர்ந்துட்டிருந்தேன். உங்களைப் புறக்கணிக்கணும்கிறது என் நோக்கம் கிடையாது. ஆனா, உங்களை எப்படி அணுகுறதுங்கிற கூச்சம் எனக்கு இருந்துச்சு. அதுதான் நிஜம்!'' என்று மனம் திறக்கிறார் ராஜா.
அமைதியாக ஆமோதிக்கும் டி.எம்.எஸ், ''ஜி.ராமநாதன் பாடும்போது, 'குனிஞ்சு பாடக் கூடாது. கலைஞன்னா நிமிர்ந்துதான் பாடணும்'னு சொல்வாரு. அந்தக் கட்டளைதான் கம்பீரமா, ஆண்மையா என் குரலை மாற்றியது. என்னோட சாரீரத்தோட குரு தியாகராஜ பாகவதர். அதே மாதிரி உச்சரிப்புக்கும் சொல்வளத்துக்கும் கே.பி.சுந்தராம்பாள் குரு. பாவத்துக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா குரு'' என்று தன் இசைமூலத்தைச் சொல்லும் டி.எம்.எஸ், ''நான் ஒரு டியூன் போட்டிருக்கேன். கேளுங்க'' என்று தத்தகாரம் போடத் தொடங்குகிறார். அவரது டியூனில் மயங்கிய இசைஞானி மெள்ளத் தலையசைக்கிறார். ''இந்த டியூன்ல வார்த்தைகளைப் போட்டுட்டா, ஒரு நல்ல பாட்டு கிடைக்கும்'' என்று டி.எம்.எஸ். முடிக்க, ''இன்னிக்கு இருக்கும் இசைஅமைப்பாளர்களுக்கு நீங்க பாடம் எடுக்கணும்'' என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்கிறார் இசைஞானி.
சந்திப்பின் இறுதியில், ''என்னைப் பயன்படுத்திக்க ராஜா'' என்று இசைஞானியின் கைகளைப் பற்றிக்கொண்டே டி.எம்.எஸ் சொல்ல, ''நிச்சயமா, நிச்சயமாண்ணே'' என்று உறுதி தெரிவித்தார் இளையராஜா.
காலத்தின் வரையறைக்கு அப்பாலும் வாழவிருக்கும் கலைஞர்கள் இருவரும் அன்பில் மகிழ்ந்து, உணர்வில் நெகிழ்ந்து, பிரியத்தில் கலந்து இசையில் கரைந்த அந்த சந்திப்பு இசையைப் போலவே இனிமையானது"
- From this weeks AV
-
30th January 2009, 02:40 PM
#78
Senior Member
Seasoned Hubber
-
30th January 2009, 02:59 PM
#79
Senior Member
Seasoned Hubber
Who is the MD of Rattha Kanneer ?
This film makes me rethink my assumption that re-recording in Tamil Cinema was almost nothing before the entry of IR !
Just see the amazing rerecording.
And listen to the BGM at around 7:10 - 7:20 of the clipping . Does it not end like "Tharappa pappa paaram.." that IR directs his musician for "Naan Kadavul" recording ?
-
30th January 2009, 03:20 PM
#80
Senior Member
Seasoned Hubber
அது சரி... !
TMS-இன் கர்வம் அப்படியே தான் இருக்கிறது.
சில வருடங்கள் முன்னால் வரை "சில முட்டாள்கள் தங்கள் ஆர்மோனிய பெட்டியில் வருவதை எல்லாம் நான் பாட வேண்டும் என்று எதிர்ப் பார்த்தார்கள்" என்று ராஜாவை இடித்தவர் இப்பொழுது "ராஜா..என்னை உபயோக படுத்திக் கொள்" என்று வழிகிறாராக்கும் !
இவரிடம் போய் இசை ஞானி இந்த அளவுக்கு அடக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார் ! T.M.S-ஐ ராஜா புகழ்ந்ததர்க்கு பதிலாக ஒரு பாராட்டுக் கூட அந்த பக்கத்திலிருந்துக் காணோம் !
Bookmarks