-
21st March 2009, 10:55 PM
#271
Moderator
Diamond Hubber
மிஸ் சவுத் இண்டியா 2009
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மிஸ் சவுத் இண்டியா 2009 அழகிப் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது.
முதல் இடம் பெற்று கிரீடம் சூடிக்கொண்டவர் பெங்களூரைச் சேர்ந்த தீபிகா. ஜாஸ்மின், சவுமியாவுக்கு அடுத்தடுத்த இடம். நடிகை ரம்யா கிருஷ்ணன் மூவருக்கும் கிரீடம் சூட்டி வாழ்த்தினார்.
கோயமுத்தூர், ஹைதராபாத், கோழிக்கோடு, பெங்களூர் ஆகிய நகரங்களில் 16 வயது முதல் 25 வயதுக்குள் உள்ள மாடல் பெண்களில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களில் `மிஸ் சவுத் இண்டியா 2009' அழகியை தேர்வு செய்தனர். மிஸ் தமிழ்நாடாக அனுஷாவும், மிஸ் ஆந்திராவாக ஸ்வேதாவும், மிஸ் கேரளாவாக அகான்ஷாவும், மிஸ் கர்நாடகாவாக ஜாஸ்மினும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த அழகிப் போட்டி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
நன்றி -- தினதந்தி
-
21st March 2009 10:55 PM
# ADS
Circuit advertisement
-
21st March 2009, 10:56 PM
#272
Moderator
Diamond Hubber
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மனதுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு ராஜ் டிவி ஒளிபரப்பும் நிகழ்ச்சி, `பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.
வாழ்த்துபவர்களின் புகைப்படத்தையும், அவர்களுக்கு பிடித்த பாடலையும் ஒளிபரப்பி மகிழ்விக்கிறது இந்நிகழ்ச்சி.
சனிக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.
நன்றி -- தினதந்தி
-
21st March 2009, 10:57 PM
#273
Moderator
Diamond Hubber
ஆலய தரிசனம்
வசந்த் டி.வியில் வெள்ளி தோறும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆலய தரிசனம் நிகழ்ச்சி. வசந்த் டி.வி தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை இ.மணிபாரதி இயக்குகிறார்.
ஒவ்வொரு ஆலயத்தின் வரலாறு, உருவான பின்னணி, மகிமைகள், அருள் பாலிக்கும் கடவுளின் தோற்றம், பக்தர்களின் பக்தி பரவசம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.
நன்றி -- தினதந்தி
-
21st March 2009, 10:58 PM
#274
Moderator
Diamond Hubber
பெண்ணே உனக்காக
பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி "பெண்ணே உனக்காக.''
ஒரு பெண் வாழ்க்கையில் பல வகையில் பரிணமிக்கிறாள். அதோடு அவள் உடல் நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை. அந்தப் பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றத்துக்கும் அது பயனுள்ளதாக அமைகிறது.
பெண்களுடைய உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே உடல்நலக்குறைவு வராமல் காத்துக்கொள்ள முடியும். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிரபல மகப்பேறு மருத்துவர் `ஜெயம்' கண்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கிறார்.
நன்றி -- தினதந்தி
-
21st March 2009, 11:08 PM
#275
Moderator
Diamond Hubber
மைதிலி : புதிய சீரியலின் முன்னோட்டம்
தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வரிசையில் கலைஞர் டி.வி.யில் புதிதாக இடம்பிடித்திருக்கும் சீரீயல் மைதிலி. மீடியா மாஸ்டர்ஸ் வழங்கும் இந்த சீரியலை ஸ்ரீதர் நாராயணன், விஜயா ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை- திரைக்கதை- இயக்கம் எம்.விஸ்வநாத். சீரியலின் கதைப்படி பொறுமையில் பூமியாகவும், கருணையில் வானமாகவும் வாழ்பவர் மைதிலி. தன் இளம் வயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்து தன் கடின உழைப்பால் உயர்ந்தவன் ராம் பிரசாத். ஒரு சந்தர்ப்பத்தில் ராம் பிரசாத் கடத்தப்பட்டு, தன் சுய நினைவை இழக்கிறார். மைதிலி தான் கற்ற சங்கீதத்தின் மூலம் மிகப்பெரிய திரைப்பட பாகியாகிறார். தன்னை அவமானப்படுத்திய தன் குடும்பத்தை ஒரு தாயாய் தாங்குகிறார். தன் கணவன் ராம் பிரசாத்தை தேட ஆரம்பிக்கிறார். பழைய நினைவுகளை மறந்த ராம்பிரசாத், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா சென்று புதிய வாழ்க்கை*யை வாழ ஆரம்பிக்கிறான். இருவரும் மீண்டும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதுதான் மைதிலி சீரியலில் சீரீயஸ் கதையாம்.
சீரியலில் அஜய், சுஜிதா, வடிவுக்கரசி, சண்முக சுந்தரம், தீபா வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், கிரி, சிலோன் மனோகர், எல்.ஐ.சி.,நரசிம்மன், பாரதி கண்ணன், சிலானி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சி.பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.20 மணி முதல் 2 மணி வரை மைதிலியை கலைஞர் டி.வி.யில் காணலாம்.
-
21st March 2009, 11:09 PM
#276
Moderator
Diamond Hubber
மசாலா சீரியல்கள் : மின்னல் தீபா பேட்டி
மாயி படத்தில் இடம் பெறும்... மாயி அண்ணன் வந்திருக்காக... மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்களெல்லாம் வந்திருக்காக... வாம்மா மின்னல்...! என்ற காமெடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையுமே கவர்ந்தது. நம்மையும் அறியாமல் வாய் விட்டு சிரிக்க வைத்த அந்த காமெடி சீனில் மின்னல் போல் வந்து மறையும் பெண்ணாக நடித்தவர் நடிகை தீபா. மின்னல் பெண் கேரக்டரில் நடித்ததால் மின்னல் தீபா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் தீபா சின்னத்திரையில், செல்லமடி நீ எனக்கு, சூப்பர் சுந்தரி, ரேகா ஐ.பி.எஸ். சீரியல்களில் நடித்திருக்கிறார்; "ஜெயா "டிவி'க்காக "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடித்து வருகிறார். அவரின் பேட்டி:
* சீரியல்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம் பெறுகிறது என்று ரசிகர்களே குறை கூறுகின்றனரே?
நிறைய "டிவி' சேனல்கள் வருவதால போட்டி, போட்டு சீரியல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவேண்டிய நிலை உள்ளது. சீரியல் பரபரப்பா பேசப்படணும், ரசிகர்களை ஈர்க்கணும்ங்கிற முடிவில் டைரக்டருங்க களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. ஸ்பீடாகவும், த்ரிலிங்காகவும் சீரியலை நகர்த்த சினிமா மாதிரி சீரியல்களுக்கும் மசாலா தடவ வேண்டியிருக்கு. சில சீரியல்களில் வன்முறை காட்சிகளும் இடம் பெற்று விடுகிறது. "டிவி' சீரியலுக்கும் சென்சார் வைத்துவிட்டால் எந்த பிரச்னையும் வராது.
* சென்டிமென்ட், வன்முறை பிடிக்காததால் தான் காமெடி சீரியல்களில் நடிக்கிறீர்களா?
நானும் பல சீரியல்களில் பல்வேறு கேரக்டர்களில் நடிச்சிருக்கேன். இப்ப ஜெயா "டிவி'யில் "பொய் சொல்லப் போறோம்' காமெடி சீரியலில் நடிச்சிட்டிருக்கேன். இந்த கேரக்டரில் தான் நடிப்பேன் என்று தனி திட்டம் ஏதும் இல்லை. எல்லாக் கேரக்டரிலும் நடிப்பேன்.
* சென்டிமென்ட் சீனில் நடிப்பதை விட காமெடி சீனில் நடிப்பது சிரமம் என்கின்றனரே?
சென்டிமென்ட் சீன்ல ஈசியா நடிச்சிடலாம். நமக்கு ஏதும் ரிலாக்ஸ் இருக்காது. காமெடி சீனில் நடிப்பது ஜாலியாகவும் ரிலாக்ஸாவும் இருக்கும். காமெடி வசனங்களை பேசி நடிக்கும் போது மொத்த யூனிட்டும் சிரிச்சுக்கிட்டே ஒர்க் பண்றதால ஷூட்டிங் வேகமா நடக்கும்.
* கலையுலகில் நடிகைகள் அவ்வப்போது "ஏடாகூடமா' சிக்கிக் கொள்கின்றனரே?
பிரச்னையில்லாம எதுவும் இல்லை.எல்லாத்தையும் பார்த்து எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துக்கிட்டா நாம சேர வேண்டிய இடத்தை சென்றடைந்து விடலாம்ன்னு நினைச்சு கவனமா நடந்தா எந்த பிரச்னையும் வராதுன்னு நான் சொல்வேன்.
* சினிமாவில் நடித்து விட்டு "டிவி'க்கு வந்து விட்டீர்களே, சினிமா வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டீர்களா?
"சினிமாவில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நிறைய நடிச்சுட்டேன். "மாயி'படத்தில மின்னல் கேரக்டர்ல நடிச்சேன். எங்கே போனாலும் "வாம்மா மின்னல்' என்று படத்தில் பேசப்படும் வசனத்தை சொல்லி ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வரவேற்பு கிடைச்சது. அதன்பிறகு "திரையுலகத்திலும் சரி, "டிவி' வட்டாரத்திலும் சரி மின்னல் தீபான்னே தான் அழைக்கின்றனர். "மாஸ்கோவின் காவிரி' படத்தில் சந்தானத்தோட ஜோடியா நடிச்சிருக்கேன். சீன் நல்லா வந்திருக்கு,''என்று தீபா சந்தோஷம் பொங்க சொன்னார்.
-
21st March 2009, 11:10 PM
#277
Moderator
Diamond Hubber
கலைஞர் டி.வி.யில் ஜே.கே.ரீத்தீஷ் தயாரிக்கும் சீரியல்
நாயகன் படத்தின் நாயகன் ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் சீரியல் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது. ஜே.கே.ரித்தீஷின் ஆரிக் மீடியாக சார்பில் தயாரிக்கப்படும் சீரியல் ஆண்டாள். மார்ச் 8ம்தேதி முதல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை சுகன்யா நடிக்கிறார். ரத்தன்.ஜி., இயக்கும் இந்த தொடருக்கு இணை தயாரிப்பாளர் ஆதம் பாவா. புதுமையான கதையம்சத்துடன் உருவாகி வரும் இந்த ஆண்டாள் சீரியல் கண்டிப்பாக பெண்களை கவரும் என்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.
-
21st March 2009, 11:13 PM
#278
Moderator
Diamond Hubber
Thirumbipaarkiraen Jaya TV, Monday-Friday, 10 p.m.
Thirumbipaarkiraen
(Jaya TV, Monday-Friday, 10 p.m.)
Veteran actor-filmmaker K. Balaji goes down memory lane in ‘Thirumbipaarkiraen.’ Producer of several hits, he shares his experiences and impressions from March 23-27.
Meanwhile, ‘Thaka-dimi-tha’, the dance show is reaching its 300th show. Directed by Radhika Shurajit, the talent contest will be anchored by Aparna, dancer-actor. The programme is telecast on Sunday, 8 a.m.
Ride the Recession
நன்றி -- hindu
-
21st March 2009, 11:14 PM
#279
Moderator
Diamond Hubber
நன்றி -- hindu
(NDTV 24X7, Friday, 8.30 p.m.)
As the worst economic crisis in recent history unfolds, NDTV 24X7 brings you some effective measures to combat the depression. The show, launched earlier this month, discusses how the crisis is impacting us, be it home loans, property prices or job losses. There are interviews with the best business minds in the industry sharing expert tips on how to cope with the slowdown. In this episode, Shweta Rajpal Kohli talks to some top industrialists and CEOs on how companies are seeing this crisis as an opportunity and revamping their business models.
Azhagana Raakshassy
(Zee Tamizh, Monday - Thursday, 8 p.m.)
Azhagana Raakshassy, the mega serial telecast on Zee Thamizh, is a family drama with a young and bubbly Shakthi as its protagonist. Shakthi, who lives in a village near Kumbakonam, is intelligent but not too attractive as she wears spectacles and braces. But, for her, life is a game to be enjoyed to the fullest
She gets a job in Chennai. She meets Kishore who falls in love with her. At first, Shakthi resists but soon falls in love with him. But that’s when she discovers the truth… Kishore’s mother Sivagami is in her death bed. Kishore is only after his mother’s property. But he can’t get it unless he gets married immediately. So Kishore decides to marry Shakthi to get his hands on the property. Shakti meets Sivagami and likes her. So she agrees to marry Kishore. Soon fate intervenes in Kishore’s plans. The serial, which has completed 69 episodes, has been shot extensively in Pollachi.
The cast includes Y.Gee Mahendra, Shyamantha, Suresh, Priya, Bhavani, Vasavi, Ramya, Shabnam, Anju, Sathish and Afsar Babu. It is produced and directed by Prabhu Nepal for Jakaarb Telefilms.
Election Special
(Makkal TV, Mon-Sun, 8 p.m. and 10 p.m.)
Coming after the News bulletin, the four-minute Election Special features interviews with voters done by newsmen, trained by specialists.
Kadhai Naeram
(Makkal TV, Monday-Friday, 7 p.m.)
This half-hour belongs to master story-teller Balu Mahendra. Some of the best short stories in Tamil get a visual spread through the lens of the ace cinematographer.
Kurinji Malar
(Makkal TV, Wednesday, 4.30 p.m.)
Kurinji Malar is where viewers meet children with extraordinary talent. It also shows how determination and hard work play a big role in their achievements.
Russian film
(Makkal TV, Saturday, 6.03 p.m.)
‘Ballad of a Soldier’ is the Russian film to be telecast on Saturday. It is set against the backdrop of the Second World War. A young soldier brings down two of enemy tanks. His reward is a visit to his home town to see his mother. His journey forms the narrative.
Neeya Naana
(Vijay TV, Sunday, 9 p.m.)
The topic of discussion for this week in ‘Neeya Naana’ is Government / Higher Officials vs General Public’. The problems faced by the public on a day-to-day basis will be discussed. Senior officials from the passport office, colleges, schools, hospitals, the police force, customer care services and banks will answer queries. Gopinath is the moderator.
-
28th March 2009, 04:56 AM
#280
Moderator
Diamond Hubber
டி.வி. தந்த பாடகர்கள்
இன்றைய பின்னணி பாடகர்களில் பலரும் ராஜகீதம் நிகழ்ச்சி மூலம் கிடைத்தவர்கள் தான்.முகேஷ், மதுமிதா, ஹரிசரண், ஹரிணி, சத்யன், சுகிர்தா ராம், பிரியதர்ஷினி, விக்னேஷ் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. ராஜ் டிவியில் 9-வது ஆண்டாக தொடரும் இந்த இசைநிகழ்ச்சியை இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது நடத்தி வருகிறார்.
நன்றி: தினதந்தி
Bookmarks