-
1st April 2009, 06:30 PM
#341
Senior Member
Veteran Hubber
http://www.mediafire.com/?sharekey=c...4e75f6e8ebb871
article can be downloaded from there - it looks like an elite journal read by ethnomusicologists and scholars!
-
1st April 2009 06:30 PM
# ADS
Circuit advertisement
-
8th April 2009, 05:09 PM
#342
Senior Member
Veteran Hubber
There was a discussion going on Post-modernism and Raaja in this thread I believe. Here is an article by Write Nagarjunan touching briefly on the subject quoting few examples including Raaja's songs.
-
3rd May 2009, 12:21 PM
#343
Senior Member
Devoted Hubber
Charu's take on postmodern music!!!
பின் நவீனத்துவ இசை என்றால் என்ன என்று சிறிது பார்ப்போம்.
1. பின்நவீனத்துவ இசை எந்தக் குறிப்பிட்ட வடிவத்திலும் வைத்துப் பொருத்திப் பார்க்க முடியாத, பிடிபடாத தன்மை (Elusiveness) கொண்டது.
2. இசைய ஜனநாயகப் படுத்துகிறது. (அதாவது, யார் வேண்டுமானாலும் பாடலாம்; எந்த ஒலியை வேண்டுமானாலும் இசையாக்கலாம். ஒரு பாடகியின் வளையல் ஓசையைக் கூட ரஹ்மான் ஒரு பாடலில் சேர்த்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தில்லி-6 படத்தில் வரும் யே தில்லி ஹை மேரே யார், பஸ் இஷ்க் மொஹபத் ப்யார் என்ற பாடலை ப்ளாஸே, பென்னி தயால், விவியன் போச்சா, தன்வி, க்ளேர் ஆகியோர் பாடியுள்ளனர். இவர்களின் குரல்களைக் கவனியுங்கள். இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் இக்குரல்களைப் பயன்படுத்துவது பற்றிக் கற்பனையும் செய்து பார்க்க முடியாது. ரேகே, ராப், மெட்டல் ராக் போன்ற இசை வடிவங்களைச் சேர்ந்த பாடல்களில்தான் இக்குரல்களை நீங்கள் கேட்க முடியும். இவர்களில், தனது 12ஆவது வயதிலிருந்து பாடும் விவியன் போச்சாவை இன்றைய ஜாஸ் உலகின் முதல் தரமான பாடகி என்று சொல்லலாம். ஜாஸ் தவிர, ப்ளூஸ், ராக் என்று பலவித இசை வடிவங்களிலும் பாடி வருபவர். இவருடைய புன்னகைக்கும் முகங்கள் என்ற ஜாஸ் பாடல் ஒரு இசை அற்புதம். தன்வி ஷா ஸ்லம்டாக் மில்லியனரில் ஜெய் ஹோ பாடியவர்.
3. முரண்நகை (மஸாக்களி தில்லி 6)
4. இசையில் உயர்வு தாழ்வு என்று பாகுபாடு பார்ப்பதில்லை.
5. கட்டமைப்பில் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதை மறுத்தல்.
தில்லி 6 இல் வரும் தில் கீரா கஹி பல் தஃபதன் என்ற பாடலின் மத்தியில் வரும் வாத்திய இசை ஹங்கேரியன் நடன இசையாகும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இப்பாடலில் ஒரு நேர்க்கோட்டுத் தன்மை இருக்காது. ஆரம்பத்தில் குரலின் பின்னணியில் ஒரு மந்திரவாதியின் வசிய இசை போன்ற கிதார் ஒலி, பிறகு அதுவே சிம்ஃபொனியாக மாறி, உடனே ஸ்காட்டிஷ் பேக்பைப்பருக்குச் சென்று, பாடலின் மத்தியில் ஹங்கேரிய நடன இசையும், கடைசியில் பிரம்மாண்டமான Baroque வடிவ இசையுமாக ஒழுங்கற்று எங்கெங்கோ பயணித்து முடிகிறது இந்தப் பாடல். மத்தியில் வரும் ஹங்கேரிய நடன இசையை, நான் பார்க்க நேர்ந்த நூற்றுக் கணக்கான ஹங்கேரியத் திரைப்படங்களில் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். குறிப்பாக, திருமணம் முடிந்து இந்த நடனத்தை ஆடுவார்கள். அங்கே குழுமியுள்ள ஒவ்வொரு ஆடவனும் மணப்பெண்ணுடன் ஆடுவான். ரஹ்மானின் இந்தக் குறிப்பிட்ட பாடலைப் பற்றி மட்டுமே நான்கு பக்கங்களுக்கு எழுத முடியும். 25 ஆண்டுகளுக்கு முன்பு தில்லி ஹங்கேரியத் தூதரகத்தில் திரையிடப்படும் ஹங்கேரிய இயக்குனர் ஸொல்தான் ஃபாப்ரியின் படங்களில் பார்த்த அந்த நடன இசையை இப்போது ரஹ்மானின் பாடலில் கேட்டது ஓர் அபூர்வ அனுபவம். ரஹ்மானின் இசையை உலகின் எந்த மூலையில் உள்ளவனும் ரசிக்க முடிவதற்குக் காரணமும் இதுதான். நம்ப முடியாதவர்கள் இந்த இணைப்பில் நடனமாடும் ஹங்கேரியர்கள் என்ற பாடலையும், நடனத்தையும் பார்க்கலாம். இதையும் ரஹ்மானின் மேற்கண்ட பாடலின் மத்தியில் வரும் வாத்திய இசையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
ரஹ்மான் பயன்படுத்தும் பாடகர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு தனிக் கட்டுரை எழுதலாம் என்ற அளவுக்கு அவர்கள் பெரும் சாதனையாளர்களாக விளங்குகிறார்கள். தில் கீரா கஹி பல் தஃபதன் என்ற இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் ஆஷ் கிங் என்ற 25 வயது இளைஞர். ரிதம் அண்ட் ப்ளூஸின் (R&B) முடிசூடா மன்னன் என்று கருதப்படும் ஆர். கெல்லியுடன் பாடி வருபவர் ஆஷ் கிங். லண்டனிலேயே பிறந்து வளர்ந்த ஆஷ் கிங்கின் அப்பா பெங்காலி, அம்மா குஜராத்தி. இவருடைய அப்பாவும் ஒரு இசையமைப்பாளர். இன்றைய ரிதம் அண்ட் ப்ளூஸ் இசை வட்டத்தில் ஆஷ் கிங் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இவ்வாறாக ரஹ்மான் உலகம் முழுவதும் இசைக் கலைஞர்களைத் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். டேலண்ட் ஹண்ட் என்பார்கள். இசையின் மீதான வேட்கைதான் ரஹ்மானை இப்படி உலகம் முழுவதும் தேட வைக்கிறது.
6. இசையில் மேட்டிமைத் தன்மையை விலக்குவது.
தில்லி 6 இல் மொஹித் சௌஹான் பாடிய மஸாக்களி பாடலை உதாரணமாகச் சொல்லலாம். கடந்த பத்தாண்டுகளின் பாடலாகக் கொண்டாடப்படும் இதில் கடக் முடக் என்றுதான் ஏதேதோ சப்தங்கள் வருகின்றன. ஆனால் இதுவரை இப்படி ஒரு பாடலை நாம் கேட்டிருக்க மாட்டோம். இதேபோல் தில்லி-6 இல் ரேகா பாரத்வாஜ், ஷ்ரத்தா பண்டிட், சுஜாதா மஜூம்தார் பாடிய கேந்தா ஃபூல் என்ற பாடல். (கேந்த் விளையாட்டு; ஃபூல் மலர். பூக்களை உருண்டையாகக் கட்டி விளையாடும் ஆட்டம்). இதில் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை தொடர்ந்து வரும் ஹே ஹே என்ற குரலை வட இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு குறியீடு என்று சொல்லலாம். அங்கே புறா வளர்ப்பது அவர்களின் கலாச்சாரத்தோடு இணைந்த விஷயம். ஐம்பது நூறு என்று வளர்ப்பார்கள். அவர்கள் புறாக்களோடு பேசும் பாஷையே அந்த ஹே ஹே...
7. முழுமைத் தன்மையைத் தவிர்த்தல். (தேவ்.டியில் வரும் இமோஸனல் அத்யாச்சார் என்ற பாடலின் பாண்டு வாத்தியக் கோஷ்டி வடிவம். பொதுவாக, திருமண வைபவங்களில் பாடும் பாண்டு வாத்தியக் கோஷ்டியின் பாடல்களுக்கு யாரும் மரியாதை தருவதில்லை. ஆனால் தேவ்.டியில் இந்தப் பாடல் ஒரு சூப்பர் ஹிட்).
8. இசையை அரசியல், சமூக, கலாச்சாரச் சூழலுக்கு அப்பாற்பட்டதாகவும், தனித்த, சுயேட்சையான அளவீடுகளைக் கொண்டதாகவும் கருதாமல் இருத்தல்.
உதாரணம், தில்லி-6 இன் மோலா, மேரே மோலா என்ற ஒன்பது நிமிட சூஃபி பாடல். கைலாஷ் கேர் மற்றும் ஜவேத் அலி பாடியது. இஸ்லாம் என்பது அன்பின் வாழ்முறை என்பதை உலகுக்கு அறிவிக்கும் பாடல் இது. ஆழ்வார் பாடல்களில் காணக் கூடிய அதே பக்திப் பரவசம் பொங்கும் கவ்வாலி.
அர்ஸியான் ஸாரி மே செஹ்ரே பே லிக் கே லாயா ஹூம்
தும்ஸே க்யா மாங்கும் மே; தும் குத் ஹீ சமஜ் லோ
மோலா, மேரே மோலா...
என்னுடைய எல்லா வேண்டுதல்களையும்
என் முகத்திலேயே எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்
உன்னிடம் நான் என்ன கேட்கப் போகிறேன்; நீயாகவே அதைத் தெரிந்து கொள்...
எஜமானே என் எஜமானே...
இந்தப் பாடலைப் பற்றியும் ஏராளமாக எழுதிக் கொண்டு போகலாம். இதைப் பாடியவர்களில் ஒருவரான கைலாஷ் கேர் என்ற இளைஞர் சூஃபி இசையின் மிக முக்கிய பாடகர். நுஸ்ரத் ஃபதே அலிகானைத் தனது ஆசானாகக் கொண்டவர். இவரது அல்லா கே பந்தே மிகவும் பிரபலமான பாடல். ஜவேத் அலியை இனி நாம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அதிகம் பார்க்கலாம் (குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்).
9. உலகின் சகலவிதமான இசை வடிவங்களையும், மரபுகளையும் உபயோகப் படுத்திக் கொள்ளுதல்.
ரஹ்மானின் இசையை வைத்து இது பற்றி நிறையவே எழுதலாம் என்றாலும், தில்லி-6 இல் வரும் ரெஹ்னா தூ என்ற அற்புதத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். 6 நிமிடம் 51 நொடிகள் செல்லும் இப்பாடலின் இறுதியில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு ஆஃப்ரிக்கப் புல்லாங்குழல் எந்தக் குரல்களும் இல்லாமல் தனியாக ஒலிக்கிறது. பல ஜாஸ் நிகழ்ச்சிகளில் மட்டுமே இந்தப் புல்லாங்குழலைக் கேட்டிருக்கிறேன்.
அதே படத்தில் இடம் பெற்றுள்ள ஹேய் காலா பந்தர் என்ற பாடல் உலகின் சிறந்த ராப் (Rap) பாடகர்களுள் ஒருவரான எமினெம்மின் தரத்தை விட உயர்ந்ததாக இருக்கிறது. இந்தப் பாடலின் ஆரம்பத்திலும் மத்தியிலும் வரும் அசரீரியான பெண் குரல் ரய் இசையைச் சார்ந்தது.
10. இசையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல். அதாவது, இசையைப் பாதுகாப்பதில் மட்டும் அல்லாமல், இசையின் உருவாக்கத்திலும், அதன் உட்கட்டமைப்பிலும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
தில்லி-6இல் வரும் உஸ்தாத் படே குலாம் அலி கானின் தும்ரி பாடலான போர் பயி... ரீ மிக்ஸ். நாம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்த ரீ மிக்ஸ் ரகம் அல்ல இது. இந்தப் பாடலை ஒருமுறையேனும் கேட்டுப் பார்த்தால்தான் இது எம்மாதிரி ரீ மிக்ஸ் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உஸ்தாத் பாடும் போதே அவரைத் தொடர்ந்து ஷ்ரேயா கோஷலும் பாடுகிறார். ஷ்ரேயா கோஷலின் வாழ்நாளில் அவருக்குக் கிடைத்த உச்ச பட்ச கௌரவம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
11. முரண்பாடுகளை அனுமதித்தல்.
12. இரட்டை எதிர்முரணை விலக்கிப் பல்வேறு ஊடுபாவுகளைப் பரவச் செய்தல்.
13. துண்டு துண்டாகவும், சிறு கூறுகளாகவும் ஆக்கி நேர்க்கோட்டுத் தன்மையை நீக்குதல்.
14. பன்முகத் தன்மை.
15. பலவித அர்த்தங்களை உருவாக்குதல்.
-
3rd May 2009, 02:09 PM
#344
Senior Member
Veteran Hubber
Absolutely laughable!!!
Eminently avoidable article.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
3rd May 2009, 07:17 PM
#345
Senior Member
Devoted Hubber

Originally Posted by
jaiganes
Absolutely laughable!!!
Eminently avoidable article.
... dont you think at least some parts are worth considering?
-
3rd May 2009, 09:42 PM
#346
Senior Member
Veteran Hubber

Originally Posted by
eagle

Originally Posted by
jaiganes
Absolutely laughable!!!
Eminently avoidable article.

... dont you think at least some parts are worth considering?
I want to ignore this guy's articles particularly about music. Kazhuthai paya
-
4th May 2009, 01:49 AM
#347
Senior Member
Veteran Hubber
eagle,
Too many Tamil writers have started writing about music as if they are top rate music critics. I had corresponded with one such writer and I was disappointed with the reply I got but that's a different story.
I personally believe there are enough people in this forum who know much more about music than Charu. So I don't think we need to take this person seriously. Atleast I don't intend to.
-
4th May 2009, 05:32 PM
#348
Senior Member
Veteran Hubber

Originally Posted by
eagle

Originally Posted by
jaiganes
Absolutely laughable!!!
Eminently avoidable article.

... dont you think at least some parts are worth considering?
Full comedy thaan
Oru dilli-6 layae ivvalo post-modern music kandupdudichavarkku raajavoda aayiram aayiram paadalgalla kandupudikka mudiyalanannu nenaikkum bodhu paavama irukku avara nenacha :P
yes some parts are worth considering and I have answers for those too, but replying to this idiot is waste of time
-
4th May 2009, 07:52 PM
#349
ரகுமானை பற்றி எழுதுபவர் அவரை பற்றி மட்டும் எழுதி இருக்க வேண்டும். முதலில் எனக்கு சாருவின் attitude பிடிக்கவில்லை. இன்றல்ல, இவர் தினமலரில் எழத துவங்கிய போதிருந்தே இவரை ignore செய்து வருகிறேன்.
தயை கூர்ந்து இவர் கிளப்பும் controversyயை கண்டு கொள்ளாதீர்கள்.
-
23rd February 2010, 07:36 PM
#350
Senior Member
Veteran Hubber
Breaking news! "All About Jazz" publishes review of Maestro.Ilaiyaraaja's music for PAA and KERALAVERMA PAZHASSI RAAJA....
Renowned jazz music critic/columnist Chris Slawecki reviews/critiques Maestro.Ilaiyaraaja's recent best-selling album "PAA" for Allaboutjazz.com, the web's premier resource for jazz music.
http://www.allaboutjazz.com/php/arti...?id=35635&pg=4
Snippets:
'the bright and colorful "Mudhi Mudhi Ittefaq Se," the sound of internationally-contemporary jazzjazz that sounds at home in any nationpainted in colorful strokes behind a female vocalist who chases its light melody the way that a kitten chases a kite tail'
Enjoy!!
PS: since Chris Slawecki is essentially a jazz music critic, it would be unfair to expect him to write about the nuances of Indian classical music elements used by IR in either of these albums - plus, the slot(s) given for reviews of albums is/are limited - so, pls bear in mind, these factors while reading the reviews
"The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep"
-Robert Frost
Bookmarks