-
2nd April 2009, 10:13 PM
#291
Moderator
Diamond Hubber
மைதிலி : புதிய சீரியலின் முன்னோட்டம்
தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வரிசையில் கலைஞர் டி.வி.யில் புதிதாக இடம்பிடித்திருக்கும் சீரீயல் மைதிலி. மீடியா மாஸ்டர்ஸ் வழங்கும் இந்த சீரியலை ஸ்ரீதர் நாராயணன், விஜயா ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை- திரைக்கதை- இயக்கம் எம்.விஸ்வநாத். சீரியலின் கதைப்படி பொறுமையில் பூமியாகவும், கருணையில் வானமாகவும் வாழ்பவர் மைதிலி. தன் இளம் வயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்து தன் கடின உழைப்பால் உயர்ந்தவன் ராம் பிரசாத். ஒரு சந்தர்ப்பத்தில் ராம் பிரசாத் கடத்தப்பட்டு, தன் சுய நினைவை இழக்கிறார். மைதிலி தான் கற்ற சங்கீதத்தின் மூலம் மிகப்பெரிய திரைப்பட பாகியாகிறார். தன்னை அவமானப்படுத்திய தன் குடும்பத்தை ஒரு தாயாய் தாங்குகிறார். தன் கணவன் ராம் பிரசாத்தை தேட ஆரம்பிக்கிறார். பழைய நினைவுகளை மறந்த ராம்பிரசாத், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா சென்று புதிய வாழ்க்கை*யை வாழ ஆரம்பிக்கிறான். இருவரும் மீண்டும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதுதான் மைதிலி சீரியலில் சீரீயஸ் கதையாம்.
சீரியலில் அஜய், சுஜிதா, வடிவுக்கரசி, சண்முக சுந்தரம், தீபா வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், கிரி, சிலோன் மனோகர், எல்.ஐ.சி.,நரசிம்மன், பாரதி கண்ணன், சிலானி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சி.பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.20 மணி முதல் 2 மணி வரை மைதிலியை கலைஞர் டி.வி.யில் காணலாம்.
http://cinema.dinamalar.com/DetailNe...ம்
-
2nd April 2009 10:13 PM
# ADS
Circuit advertisement
-
2nd April 2009, 10:15 PM
#292
Moderator
Diamond Hubber
சின்னத்திரை சிப்ஸ்
* பாலியல் சந்தேகங்களுக்கு தீர்வு: டாக்டர் மாத்ருபூதம் நடத்திய புதிரா புனிதமா நிகழ்ச்சிதான் செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த வரிசையில், வசந்த் சேனலில் சனி, ஞாயிறு தோறும் இரவு 11 மணிக்கு டாக்டர் காமராஜ், பாலியல் சந்தேகங்களுக்கு தீர்வு தருகிறார்.
* தக திமி தா: ஜெயா சேனலில், ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த பரதநாட்டிய போட்டி நிகழ்ச்சியில், புது சுற்றுகளுடன், புதுப்பொலிவுடன் வழங்குகிறார் நடனக்கலைஞர் அபர்ணா.
* இந்த வாரம் பாலாஜி: ஜெயா சேனலில், திங்கள் முதல் வெள்ளி தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், இந்த வாரம் முழுவதும் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் பாலாஜி பங்கேற்கிறார். அனுபவங்களை சொல்வதுடன், அவர் பட காட்சிகள், பாடல்கள் இடம்பெறும்.
* பாடவா என் பாடலை: இமயம் "டிவி'யில் புதன் தோறும் இரவு 7 மணிக்கு வரும் இதில், வளரும் பாடகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தொகுத்து வழங்குபவர் ஸ்ருதி.
http://cinema.dinamalar.com/DetailNe...ஸ்
-
2nd April 2009, 10:16 PM
#293
Moderator
Diamond Hubber
சூப்பர் சிங்கர்ஸ் நடுவர்கள் படும் பாடு
நடுவர்ன்னா: நடுவர்கள் என்றால் எந்த அளவுக்கு கஷ்டம் என்பதை விஜய் "டிவி'யில் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் அந்த மூவர் படும்பாட்டை பார்த்தாலே தெரியும். நியாயப்படுத்துவதே நடுவர்கள் வேலையாகப் போய்விட்டது. முந்தைய வாரம்,"கர்நாடக இசை தெரியாமலேயே இப்படி அசத்திய முதல் ஆள் நீங்கள் தான்' என்று, பிரபல கலைஞர் சுதா ரகுநாதனே பாராட்டிய கும்பகோணம் பிர சன்னா "எலிமினேட்' ஆகி விட்டார். "நீங்கள் யாரு என்னை நீக்குவது...' என்று பிரசி., ஒரு பாட்டு பாடி வெளியேறினாரே... அட சபாஷ்!
ஜாலிவுட் சினிமா: ஜெயா சேனலில், இன்று ஆரம்பமாகும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி இது. பிரபல திரைப்படங் களின் கிளைமாக்ஸ் காட்சிக்கு பின்னர், படம் தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து நகைச்சுவையாக காட்சிகள் சேர்க் கப்படும். ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு மறக்காதீங்க. இந்த வாரம், "அந்த 7 நாட்கள்' படம்; பிரபல நடிகர், நடிகைகளின் முகச்சாயல் மாறாமல் கலைஞர்கள் பங்கேற்பது சிறப்பம்சம்.
சகலகலா கல்லூரி: கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வித்தியாசமான போட்டி நிகழ்ச்சி இது. ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில், கல்லூரி குழுக்கள் பங்கேற்கும். இசை, நடனம், நகைச்சுவையில் கலக் கும் குழுவுக்கு சகலகலா கல்லூரி பட்டம் வழங்கப்படும். மிமிக்ரி சேது, மோனிகா தொகுத்து வழங்குகின்றனர். நடுவர்களாக, பாடகி கல்பனா ராகவேந்தர், காதல் கந்தாஸ், நடிகை ஐஸ்வர்யா உள்ளனர்.
அருளமுதம்: பக்தி என்றால் ஜெயா "டிவி' தான். இன்று முதல் ஞாயிறு தோறும் காலை 6.30 க்கு அரை மணி நேர ஆன்மிகத்தொடர் ஒளிபரப்பாகிறது. தமிழக கோவில்களின் அறியப் படாத தகவல்கள் இதில் இடம்பெறும். கீதை தத்துவங்களும் இடம்பெறும். சுட்டீஸ் தமிழ்ப்பேச்சு: விஜய் "டிவி'யில் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை தொடர்ந்து, இப்போது சிறுவர், சிறுமியரின் செந்தமிழ் ஆற்றல் தேடல் நிகழ்ச்சி இன்று (29-03-09) ஆரம்பமாகிறது. நடுவர்கள் சுப.வீரபாண்டியன், பர்வீன் சுல்தானா, சல்மா. இன்று காலை 9 மணிக்கு பாருங்க.
http://cinema.dinamalar.com/DetailNe...டு
-
4th April 2009, 09:09 PM
#294
Moderator
Diamond Hubber
மக்கள் தொலைக்காட்சியில் ஆடுகளம்
மக்கள் தொலைக்காட்சியில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `ஆடுகளம்'. கைப்பந்து, கால்பந்து, சடுகுடு, பனிச்சறுக்கு, அலை விளையாட்டு, இருசக்கர வாகன பந்தயம், கோல்ப் என்று விதவிதமான விளையாட்டுகள் விளையாடப் படுகின்றன.
இதிலே பொழுது போக்கு விளையாட்டுகள், உயிரைப் பணயம் வைத்து விளையாடும் சாகச விளையாட்டு என்று பல வகை விளையாட்டுகள் இருக்கின்றன.
உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளையாடப்படும் விறுவிறுப்பான பல்வேறு விளையாட்டுகளையும் தொகுத்து அதற்கு தமிழ் வர்ணனை தந்து ஒளிபரப்பப் படுகிறது.
இந்த ஆடுகளம், விளையாட்டை பகையாகப் பாராமல் விளையாட்டாக பார்த்து ரசிக்க சொல்லித்தரும் நிகழ்ச்சி.
மக்கள் தொலைக்காட்சியில் நாளை மாலை 3.30 மணிக்கு ஆடுகளம் ஒளிபரப்பாகும்.
நன்றி: தினதந்தி
-
4th April 2009, 09:10 PM
#295
Moderator
Diamond Hubber
திரும்பிப் பார்க்கிறார்' நடிகை சச்சு
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு இடம் பெறும் `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் வரும் வாரம் நடிகை சச்சு பங்கேற்கிறார்.
வீரத்திருமகன் படத்தில் நாயகியாக அறிமுகமாகி காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் ஜோடியாக காமெடி நடிப்பிலும் கொடிகட்டியவர் சச்சு. இந்த நிகழ்ச்சியில் இதுவரை அவர் வாழ்வில் நடைபெற்ற மறக்கமுடியாத பசுமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார். இடையிடையே அவர் நடித்த படங்களில் இருந்து காட்சிகளும் பாடல்களும் ஒளிபரப்பாகும்.
நன்றி: தினதந்தி
-
4th April 2009, 09:12 PM
#296
Moderator
Diamond Hubber
இமயம் டிவியில் பாடவா என் பாடலை
இமயம் டிவியில் புதன் தோறும் இரவு 7 மணிக்கும் மற்றும் வெள்ளி பிற்பகல் 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி "பாடவா என் பாடலை.'' திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு சரியான மேடை அமைத்துத் தருவதே இந்த நிகழ்ச்சி. ஸ்ருதி தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
4th April 2009, 09:13 PM
#297
Moderator
Diamond Hubber
ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அழகான ராட்சசி'
புதிய கேரக்டர்கள்
ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அழகான ராட்சசி' தொடரில் இப்போது கதை புதிய டிரெண்டில் பயணிக்கிறது. அதற்கேற்ப நடிகை சுதாசந்திரன், சுலக்ஷனா, அஜய்ரத்னம், சஞ்சய், வனஜா, மனோகர், ஜெயலட்சுமி ஆகியோர் கதையின் புதிய பக்கங்களில் பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
4th April 2009, 09:14 PM
#298
Moderator
Diamond Hubber
டாப் 10 காமெடி
ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ``சிரிப்பொலி'' தொலைக்காட்சியில் `டாப் 10 காமெடி நிகழ்ச்சி' ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை நட்சத்திரம் ராஜீ பற்பல கெட்டப்புகளில் தோன்றி காமெடி செய்கிறார்.
சமீப காலங்களில் திரைக்கு வந்த திரைப்படங்களில் குபீர் சிரிப்பை வரவழைத்த காட்சிகளாகத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நாளைய ஒளிபரப்பில் `ஒட்டுநர் - நடத்துனர்' என்று இரு வேடங்களில் தோன்றி சிரிப்பு மழை பொழிகிறார் ராஜி.
நன்றி: தினதந்தி
-
4th April 2009, 09:19 PM
#299
Moderator
Diamond Hubber
சிறப்பு விருந்தினர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக 50 வாரங்களை கடந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'. தமிழகம் முழுவதிலுமிருந்து நடனத்தில் ஆர்வம் கொண்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினர்.
நடன கலைஞர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடனக்கலைஞர்கள் சுந்தம், ரகுராம் மற்றும் புலியூர் சரோஜா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நடனகலைஞர்களின் பாடல்களை தேர்வு செய்து நடனம் ஆடினார்கள் போட்டியாளர்கள். மிகவும் விறுவிறுப்பாகவும் சுவராசியமாகவும் அன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
4th April 2009, 09:20 PM
#300
Moderator
Diamond Hubber
ஜெய் கிருஷ்ணா
ராஜ் தொலைக்காட்சியில் வருகிற 15ம் தேதி முதல் 'ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா' என்ற பெயரில் புதிய தொடர் ஒன்று உலா வரவிருக்கிறது. இத்தொடர் பகவான் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றியும், அவரது பெருமைகள் பற்றியும் சுவை மாறாமல் எடுத்து சொல்ல வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிப்பரப்பாகவிருக்கும் இத்தொடர் முழுவதும் பக்தி மணம் கமழும் என்பதில் ஐயமில்லை.
Bookmarks