-
15th April 2009, 04:05 PM
#361
Senior Member
Platinum Hubber
இன்றையிலிருந்து இன்னும் சில தினங்களுக்கு நான் வேறு ஊர் சென்று விடுவதால், எழுதுவது உடனுக்கு உடன் முடியுமா எனத் தெரியவில்லை. நிச்சயம் அன்றைய தொடரை அன்றன்று எழுத முயற்சிக்கிறேன். இத்திரிக்கு மட்டுமேனும் என் வருகை பதிவிட்டுப் போக எத்தனிக்கிறேன். எனினும் அங்கு இருக்கும் கணினி கொண்டு "தமிழ்" எழுதுவதும் படிப்பதும் முடியுமா எனத் தெரியவில்லை.
மூன்று நாட்களுக்கு மேல் ஒரு பகுதி பதிக்கப்படவில்லை என்றால்
I invite vr, or wrap or aana or just anyone to fill the gap .
அப்படியே விடுபட்டுப்போன ஆன்மீக விவாதங்கள் என் சிற்றறிவுக்கு ஏட்டியது ஏதேனும் நினைவு இருந்தால் நான் வந்த பிறகு எழுதுகிறேன்.
-
15th April 2009 04:05 PM
# ADS
Circuit advertisement
-
15th April 2009, 05:59 PM
#362
Moderator
Diamond Hubber
பயணம் இனிதே நடக்கட்டும்.
பி.கு.
தமிழ் எங்குமே உண்டு
-
15th April 2009, 06:03 PM
#363
Moderator
Diamond Hubber

Originally Posted by
Shakthiprabha
April 13th
விவாகம் என்றாலே .....
(வளரும்)
எப்பொழுதுமே அப்படித்தானா
(
-
15th April 2009, 06:15 PM
#364
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Shakthiprabha
ஒரு பகுதி பதிக்கப்படவில்லை என்றால்
I invite vr, or wrap or aana or just anyone to fill the gap .
sure ka
யுவன் இசை ராஜா...

-
15th April 2009, 06:21 PM
#365
Senior Member
Senior Hubber

Originally Posted by
Shakthiprabha
April 13th
_______
ஜாபரி என்ற ரிஷி இராமனை காட்டைவிட்டு நாட்டை ஆள புறப்படுவதற்கு வேண்டி சார்வாதம் செய்ததாக சான்று உண்டாம்.
I guess this is Jaabaali.
Love and Light.
-
15th April 2009, 06:44 PM
#366
Senior Member
Platinum Hubber
-
15th April 2009, 06:46 PM
#367
Senior Member
Platinum Hubber

Originally Posted by
aanaa

Originally Posted by
Shakthiprabha
April 13th
விவாகம் என்றாலே .....
(வளரும்)
எப்பொழுதுமே அப்படித்தானா

(
ரொம்ப குறைந்துவிட்டது ஆனா. ஜாதி-மதங்கள் கூட சில நேரங்களில் சில இடங்களில் சில மனிதர்களால், விட்டுக்கொடுக்கப் படுகிறது. உட்பிரிவுகள் இப்பொழுதெல்லாம் பொருட்டாய் இருப்பதில்லை. (பெரும்பாலும்)
-
17th April 2009, 02:30 AM
#368
Moderator
Diamond Hubber

Originally Posted by
Shakthiprabha
மூன்று நாட்களுக்கு மேல் ஒரு பகுதி பதிக்கப்படவில்லை என்றால்
1
-
17th April 2009, 09:28 AM
#369
Senior Member
Veteran Hubber

Originally Posted by
aanaa

Originally Posted by
Shakthiprabha
மூன்று நாட்களுக்கு மேல் ஒரு பகுதி பதிக்கப்படவில்லை என்றால்
1
aana, actually there was no program yesterday. J's election campaign speech was telecasted LIVE throughout the evening.
//nethikku night'E post pannanum'nu nenaichen, marandhutten
யுவன் இசை ராஜா...

-
17th April 2009, 01:22 PM
#370
Senior Member
Platinum Hubber
April 15th
________
பாகவதரிடம் தன் கணவனின் செய்கைக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கிறாள் பர்வதம். பகுத்தறிவாதம் என்ற
பெயரில் தொன்றுதொட்ட காலம் முதல் நாத்திகமும் இருந்து வந்திருக்கிறது, இன்று நாத்திகம் பேசியவர்கள் மாறவும் செய்யலாம், தனக்கு நீலகண்டன் மாறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக பாகவதர் ஆறுதல் கூறுகிறார்.
பொதுவாகவே இன்றைய சமுதாயத்தில் விஞ்ஞானம் மேம்பட்டு விளங்கிவருகிறது. Proof எனப்படும் புலன்களின் புரிதலுக்கு உட்படும் சாட்சிகள் சுட்டிக்காட்டப்படுவதால் விஞ்ஞானிகளின் விளக்கங்களும் அறிக்கைகளும் ஆச்சார்யர்களின் கூற்றை விட ஞானிகளின் விளங்கங்களை விட, ஏன், இறைவனின் வாக்குக்கும் மேலாக கருதப்படுகிறது. நம்மவர்கள் விஞ்ஞானிகளின் பேச்சுக்கு வேறு மறுப்போ அல்லது எதிர்கேள்வியோ கேட்பது கூட இல்லை. பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் (fox-tv) மனிதன் சந்திரனில் கால் பதித்ததை கேள்விக்குறியதாக செய்து சர்ச்சை எழுப்பினர். அதற்கு விஞ்ஞானிகள் தக்கபதில் அளித்தனர் என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞானி ஒருவன் சொல்லிவிட்டால் கேள்விக்கணைகளைக் கூட நம் மக்கள் எழுப்புவதில்லை என்பது எவ்வகையான பகுத்தறிவைக் குறிக்கும் என யோசிக்க வேண்டும். பல நேரங்களில் பிரபல விஞ்ஞானிகள் தவறாக கருத்து கூறிவிடலாம். அவர்களும் மனிதனுக்குறிய குறைபாடுகளுடன் செயல் படுவதால் தவறு நேர்ந்துவிடலாம். சமீபத்தில் பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பின் பேரில் தயாரித்து உபயோகித்து வந்த மருந்து பொருள்கள் தவறான விளைவுகளைக் கொடுத்துள்ளது. குற்றவிசாரணை நடத்தியதனைத் தொடர்ந்து அக்கண்டுபிடிப்பு முறையானதல்ல எனத் தெரியவந்துள்ளது. மருந்து பொருள்களை உலகெங்கும் ரத்து செய்து நேரிட்டது. பகுத்தறிவு ஒரே சீராக எந்தத் துறையிலும் செயல்பட வேண்டும். புராணங்களும் நம் புலன்களுக்கு எட்டாததாக விளங்கும் இறைத் தத்துவத்தை மட்டுமே பகுத்தறிந்து கேட்பது பாரபட்சமான கோணத்தை காட்டுகிறது.
நம் மதத்தில் கேள்விகளைக் கேட்பதும், எதிர்மறை கருத்துக்களுக்கு விளக்கங்கள் அளிப்பதும் பெரிதும் அங்கீகரிப்பப்பட்டவையாகத் தான் இன்று வரை இருந்துவருகிறது. கீதையில் பகவானின் பேச்சுகே "குழப்பாமல் புரியும்படி பேசு" என அர்ஜுனன் எனும் மனிதன் விளங்கக்கேட்கிறான். பகுத்தறிவாதம் வைத்து அதன் பின் விளங்கச்செய்வதால் வேதங்கள் மேலும் சிறப்புறுகிறது.
சாம்புவின் மகன் க்ருபா வெளிநாடு செல்ல ஆசைப்படுவதாய் சாம்புவுக்கு தெரியவருகிறது. அவருக்கு அதில் பரிபூரண ஒப்புமை இல்லை. இந்த நாடும் மயிலை பதியில் உள்ள சுகமும் வேறெங்கு கிடைக்கும்! எனப் பிரஸ்தாபிக்கிறார்.
மைலாப்பூரின் பூராதன பெருமையும், க்ஷேத்ர ஸ்தலம் பெருமையும் சொல்லி மாளாது. அதில் ஒன்று பூம்பாவையை திருநாவுக்கரசர் உயிர்பித்த நிகழ்ச்சி. அதுவும் மயிலை திருக்கபாலீஸ்வரர் கோவலில் நிகழ்ந்துள்ளதை பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார்.
(வளரும்)
Bookmarks