-
23rd April 2009, 10:57 AM
#111
Veteran Hubber
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே.
sundhari endhai thuNaivi, en paachaththodarai ellaam
vandhu ari chindhura vaNNaththinaaL, makidan thalaimEl
andhari, neeli, azhiyaadha kannikai, aaraNaththOn
kam thari kaiththalaththaaL-malarththaaL en karuththanavE
-
23rd April 2009 10:57 AM
# ADS
Circuit advertisement
-
23rd April 2009, 11:16 AM
#112
Veteran Hubber
கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்து என்முன் நிற்கவே.
karuththana endhaithan kaNNana, vaNNak kanakaveRpin
peruththana, paal azhum piLLaikku nalkina, pEr aruLkoor
thiruththana paaramum; aaramum, chenkaich chilaiyum, ambum,
muruththana mooralum, neeyum, ammE! vandhu enmun niRkavE
-
23rd April 2009, 12:54 PM
#113
Veteran Hubber
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்- தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
aanandhamaay, en aRivaay, niRaintha amudhamumaay,
vaan andhamaana vadivu udaiyaaL, maRai naankinukkum
thaan andhamaana, charaNaaravindham-thavaLa niRak
kaanam tham aadaranku aam embiraan mudik kaNNiathE
-
24th April 2009, 12:29 PM
#114
Veteran Hubber
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே,கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றி மற்றுஓர் தெய்வம் வந்திப்பதே?
pooththavaLE, puvanam pathinaankaiyum! pooththavaNNam
kaaththavaLE! pin karanthavaLE! kaRaikkaNdanukku
mooththavaLE! enRummoovaa mukunthaRku iLaiyavaLE!
maaththavaLE! unnai anRi maRRu Or theyvam vandhippathE?
-
24th April 2009, 12:45 PM
#115
Veteran Hubber
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே;
vandhippavar unnai, vaanavar thaanavar aanavarhaL;
chindhippavar, nalthichaimukaa naaraNar; chindhaiyuLLE
pandhippavar, azhiyaap paramaanandhar; paaril unnaich
chandhippavarkku eLithaam empiraatti! nin thaNNaLiyE:
-
24th April 2009, 12:55 PM
#116
Veteran Hubber
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
thaNNaLikku enRu, munnE pala kOdi thavankaL cheyvaar,
maN aLikkum chelvamO peRuvaar? madhi vaanavar tham
viN aLikkum chelvamum azhiyaa muththi veedum, anRO?-
paN aLikkum chol parimaLa yaamaLaip painkiLiyE!
-
27th April 2009, 01:15 PM
#117
Veteran Hubber
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே,-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
kiLiyE, kiLaiNYar manaththE kidanthu kiLarnthu oLirum
oLiyE, oLirum oLikku idamE, eNNil onRum illaa
veLiyE, veLi mudhal poodhankaL aaki virindha ammE!-
aLiyEn aRivu aLaviRku aLavaanadhu adhichayamE.
-
27th April 2009, 01:20 PM
#118
Veteran Hubber
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
adhichayam aana vadivu udaiyaaL, aravindham ellaam
thudhi chaya aanana sundharavalli, thuNai irathi
pathi chayamaanathu apachayam aaka, mun paarththavardham
mathi chayam aaka anRO, vaama paakaththai vavviyathE?
-
27th April 2009, 01:28 PM
#119
Veteran Hubber
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து எனனை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும் போது- வெளி நிற்கவே.
vavviya paakaththu iRaivarum neeyum makizhnNthirukkum
chevviyum, unkaL thirumaNak kOlamum, chindhaiyuLLE
avviyam theerththu ennai aaNdapoR paadhamum aakivandhu-
vevviya kaalan enmEl varumpOthu-veLi niRkavE!
-
28th April 2009, 03:10 PM
#120
Veteran Hubber
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
veLinNinRa niNndhirumEniyaip paarththu, en vizhiyum nenchum
kaLinNinRa veLLam karaikaNdadhu; illai; karuththinuLLE
theLinNinRa NYaanam thikazhkinRathu; enna thiruvuLamO?-
oLinNinRa kONankaL onpathum mEvi uRaipavaLE!
Bookmarks