View Poll Results: Do you believe in "Karma"

Voters
29. You may not vote on this poll
  • yes,

    23 79.31%
  • No,

    5 17.24%
  • do know,

    1 3.45%
Page 55 of 80 FirstFirst ... 545535455565765 ... LastLast
Results 541 to 550 of 800

Thread: Cho-vin "EngE BraahmNan"? Jaya tv

  1. #541
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha.
    May 20th
    ________
    .

    பரப்பிரம்மம் என்ற அந்த வஸ்து ஒன்றே முழுமையானது என்று பல வேத வியாக்கியானங்களில் கேட்டிருக்கிறோம். அந்த வஸ்துவை எவன் ஒருவன் அறிந்தவனாக நினைக்கிறானோ அவன் அறிந்தானல்லன். எவன் ஒருவன் அறியாதவன் என்று நினைக்கிறானோ அவன் அறியாதவனும் அல்லன். எவன் ஒருவன் அதை அறிந்தும் அறியாததுமாக உணர்கிறானோ அவனே அதை சரியாய் புரிந்து கொண்டவன் ஆகிறான். இந்த பரப்பிரம்மத்திலிருந்தே இறைவனும், மானிடரும், ஜடமும், பொருட்களும், மற்ற எல்லாமும் தோன்றியது.


    (வளரும்)



    விசு'வின் வசனம் போல் உள்ளது.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #542
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    விசு'வின் வசனம் போல் உள்ளது.
    yeah, thats the plight of one who TRIES to understand

  4. #543
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Tuesday - May 19, 2009

    Thanks to ISAITAMILNET - Prahu
    [html:6083ccda98] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13548479&vid=5108969&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8972/85831265.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13548479&vid=5108969&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8972/85831265.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:6083ccda98]
    "அன்பே சிவம்.

  5. #544
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Wednesday -May 20, 2009

    Thanks to ISAITAMILNET - Prabhu

    [html:682ed216f9]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:682ed216f9]
    "அன்பே சிவம்.

  6. #545
    Senior Member Senior Hubber anbu_kathir's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    451
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha.
    ஜனகர் ராஜ ரிஷியாக வழங்கப்பட்டது வேறு சிலருக்கு பொறாமையை உண்டு பண்ணியது. ஒருமுறை அவரின் குரு, ஜனகரின் பெருமையை பிறருக்கு புரிய வைக்க, சிறு நாடகமாடினார். "மிதிலை நகரம் பற்றி எரிகிறது" எனக் கூவினார். கூவிய மாத்திரத்தில், அனைத்து சிஷ்யர்களும், தங்களுக்கென இருந்த சிறு உடமைகளைக் காக்க ஓடோடி விட்டனர். ஜனகரோ அமைதியாக அதே இடத்தில் அமர்ந்தவாறு, தன் கடமையை தொடர்ந்திருந்தார். "என்னுடையதென்று எது இருக்கிறது? எனக்கென்று உடைமை ஏதும் இல்லை" என்று அமைதியாய் பதிலளித்தார். அரண்மணையே பற்றி எரிகிறது என்ற பொழுதிலும், தன் உடைமை எனக் கருதாது பற்றற்று செயல்படும் அவர் நிலையை பிறர் புரிந்து கொள்ள இச்சம்பவம் ஏதுவாக இருந்தது.
    Janaka ... his conversations with Sage Yagnavalkya became the Brhad-aaranyaka upanishad. His 'coming to light' guided by Sage Ashtavakra became the Ashtavakra geetha.

    To people of the modern (and ancient) times who have questioned the veracity of the claims made by the sages (detachment etc etc).. and the plausibility of living such a life, Janaka is the number one mythological reference (OK maybe number two.. Krishna is number one .. if we subtract his 'super-human' deeds). Present day (or recent past) references are not well known I guess.. maybe Shri Atmananda would fall in this category...

    Love and Light.

  7. #546
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "அன்பே சிவம்.

  8. #547
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    deleted
    "அன்பே சிவம்.

  9. #548
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    May 21st
    ________

    உமா அஷோக்கிடம் தன் பிரியத்தை வெளிப்படுத்துகிறாள். பொன் உருக்கப்படுவது போல், மனமும் பக்குவப்படுவதற்கு சோதனைக்கு உள்ளாக்கப்படும். ஆன்மாவைக் கட்டுக்குள் அடக்கி ஒவ்வொரு முறையும் நாம் மேலெழும் போது, புடம் போட்ட பொன் போன்று மாசுகள் களையப்பட்டு விடுகின்றோம். அன்பின் மற்றொரு வகையான வெளிப்பாடே காதல். உலகில் பொதுவாய் இருவகையான அன்பைக் காணலாம். நாம் கண்டுவரும் அனைத்து வகை அன்பும், எதிர்பார்த்து பிறர் நம்மிடம் செலுத்தும் அன்பாகும். வெறொரு வகை அன்பு உண்டு. அது உயர்ந்த வகை அன்பு. எதிர்பார்ப்பு ஏதுமின்றி சூரியன் தன் கிரணங்களை உயிர்கள் அனைத்திற்கும் ஊட்டுவது போல், அன்பை மழையாய் கருணையாய் காதலாய் செலுத்துவது. அன்னைத் தெரெஸாவின் அன்பு இப்பேற்பட்ட வகை. உலகில் இப்படி அன்பு செலுத்தியவர்களை விரல் விட்டு
    எண்ணிவிடலாம்.

    ப்ருஹதாரண்ய உபநிஷதத்தில் யக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் இவ்வாறு கூறுகிறார்: 'அன்பின் ஆழத்தில் நோக்கின், மனையாள் தன் மணாளனை அவனுக்காகவென்று அன்பு செலுத்துவதில்லை. அவள் தன் சுகத்திற்காகவும், சந்தோஷம், பாதுகாப்பு, முதலியவை அவனிடமிருந்து கிடைக்கப் பெறுவதினாலும் தான் அன்பு சுரக்கிறது. அதே போல் கணவனாகப்பட்ட மணாளனும் தன் மனையாளிடம் அவளால் தனக்கு கிடைக்கப்பெறும் இல்லற சுகத்திற்கும், அன்பின் வெளிப்பட்டிற்குமே அவன் அன்பு பதிலுக்கு வெளிப்படுகிறது. பெற்றோர் பிள்ளைகளிடம் செலுத்தும் அன்பும், வேறு எந்த வகையான அன்பும் இவ்வகையில் அடங்கி விடும்' என்கிறார். எதிர்பார்ப்பும் ஆசையும், இல்லாத அன்பு காண்பது வெகு அரிது.

    அஷோக் சராசரியாய் நடமாடும் பொருட்டு உமாவை தூது விடுவது அவனுக்கு விஸ்வாமித்ரர்-மேனகையை நினைவு படுத்துகிறது. பலருக்கும் தெரிந்த கதை என்பதால் அதை தாண்டிச் சென்று விடுகிறேன். தெரியாத ஒரே தகவல். மேனகை நடனமாடி மயக்கவில்லையாம். அவள் நீராடிக்கொண்டிருந்ததை கண்ட விஸ்வாமித்ரருக்கு அவள் பால் காதல் மேலிட, அந்தக் காதல் ஷாகுந்தலை வரை கொண்டு போய் விட்டது. விஸ்வாமித்ரர் தவமியற்றுவதற்கும் அதை நொடியில் வீணக்குவதற்கும் பேர் போனவர். எப்பேற்பட்ட மஹான் அவர்! காயத்ரி மந்திரத்தை நமக்கு வழங்கியவர். உக்கிரமான தவங்கள் புரியவல்லவர். ராஜாவாக இருந்ததால் யுத்த சாஸ்திரம் கற்றவர். அவர் பெருமை சொல்லி மாளாது. எனினும் மஹா கோபம் கொண்டவர் அஹங்காரம் மேலிடும் போதெல்லாம் அவர் சாபமிட்டு விட்டு, தன் தபோவலிமையை குறைத்து கொண்டு விடுவதாக புராணம் கூறுகிறது. தன்னை நம்பி வந்த த்ரிசங்குவிற்கு சொர்க்கம் வழங்கி இவரல்லவோ தவமியற்றிய பலனை துறந்து மீண்டும் தவம் மேற்கொண்டார்! மறுபடி மேனகை. அழகில் மயங்கி மீண்டும் வேதாள மரம் ஏறி வருடங்கள் வியர்த்தமாகின. அடடா அந்தோ பரிதாபம் என்று
    தோன்றுகிறதல்லவா!

    இதை விட பரிதாப நிலையில் நாம் இன்றைக்கு இருக்கின்றோம். எப்பொழுதோ தெரியாமல் செய்யும் ஒரு சில நல்ல கர்மாக்களை, பலன்களையெல்லாம் க்ஷண நேர கோபத்திலும், ஆத்திரத்திலும், பொறாமையிலும், வீண் வாத விவாதங்களிலும் செலுத்திவிடுகின்றோம். முடிவுறாத பிறப்பு-இறப்பு தளைகளிலிருந்து விடுபட இன்னும் எத்தனை எத்தனை படிகள் ஏறவேண்டியுள்ளது என்ற யோசனையே ஆயாசமாக உள்ளது.

    அஷோக்கிடம் உனக்கும் உமாவிற்கும் திருமணத்திற்கு நாள் பார்க்கலாமா என்று வசுமதி எரிச்சலாய் கேட்க, அவனோ "அப்படி ஒரு கர்மா பாக்கி இருந்தால் அதை யாரால் தடுக்க முடியும்" என்று கூறிவிடுகிறான்


    நீலகண்டனிடம் சாம்பு விவாதிக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. வார்த்தைகளுக்கு ஏன் எண்ணங்களுக்கே அலைகளும் வண்ணங்களும் அதிர்வுகளும் உண்டு. அப்போது மந்திரங்களுக்கும் அதிர்வுகள் ( say postive vibes) இருக்கும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. நீர் இத்தகைய அதிர்வுகளை மின் அலைகளை தேக்கிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது என்பது விஞ்ஞானமே ஒப்புக்கொண்ட ஒன்று. கங்கை போன்ற நீர்நிலைகள் அதிகமான புண்ய ஸ்தலங்களையும் அங்கு ஸ்தாபிக்கப்பட்ட கோவில்களையும் தொட்டு வருவதால் அங்கு ஒலிக்கும் மந்திரங்களை தேக்கி வைக்கும் தன்மை வாய்ந்தது. இதற்கு பதில் சொல்ல முடியாது நீலகண்டன் மௌனம் சாதிக்கிறார்.

    அடுத்து அவர்கள் இறைவடிவங்களின் வாஹனங்களைப் பற்றி பேசினார்கள். இறைவடிவங்களே ஒருவகையான symbolism என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் வாஹங்களும் அவ்வாறே. துர்கை, காளி போன்ற உக்கிர வடிவங்கள் personification of good over evil. உக்கிர வடிவம் கொண்டு தீய ஷக்திகளை அழிப்பதாக மரபு. அதே போல் க்ருஷ்ணனின் குழல் இறைவனின் அழைப்பு என்றும், அதற்கு மயங்கி அவன் வசம் செல்லும் ஜீவாத்மாக்களே பசுக்கள் என்றும் பேசப்படுவதுண்டு. பிள்ளையாரின் வடிவம் வினோதமாக இருந்தாலும் அதனுள் உறையும் தாத்பர்யம் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. நல்ல விஷயங்களை கேட்க வேண்டி பெரிய காதும், அதைக் சிந்திக்க பெரிய தலையும் உடைத்தாம். நாம் வாழ்வில் சந்திக்கும் சுகமான அல்லது சுகமற்ற அனுபவங்களை ஜீரணிக்கும் பெரிய தொந்தி (man shouldn't be perturbed by those but digest these and still stay able and fit) தும்பிக்கை வினோதமான ஒரு இயந்திரமாக செயல்படுவதை குறிக்கிறது. தும்பிக்கையால் பெரிய மரங்களை தகர்த்த முடியும். சிறு ஊசியையும் எடுக்க முடியும். மனிதனும் அவ்வாறு ஆன்மீகத்திலும் இல்லறத்திலும், (pondering on subtle and gross realities and experiences) ஈடுப்படத் தகுந்தவன் என்பதை குறிக்கும். சரி இவ்வளவு பெரிய சரீரத்திற்கு எப்படி மூஞ்சூறு வாஹனமாகியது? இதுவும் கூட குறிப்பாலுணர்த்தும் தாத்பர்யமே. மூஞ்சுறு அலைபாயும் தன்மை வாய்ந்தது. நம் மனதைப் போல. எதைக் கண்டாலும் அதை அறிந்து, ஆவலுற்று, ஆசையுறும் மனது மூஞ்சுறுவைப் போன்றது. அதை புத்தியால் (பிள்ளையார்) அடக்கி ஆளவேண்டும் என வலியுறுத்துதே நோக்கம்.

    அதே போல் மயில், கர்வம் அஹங்காரத்தைக் குறிக்கும். முருகன் அதை ஆள்வதும் குறிப்பாலுணர்த்தும் செயலே. இதையெல்லாம் பேசி முடித்து, (தேடுவோம்) என்று போட்ட பிறகு, "நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே, நாணங்கள் என் கண்ணிலே" என்ற பாடலின் பின்னணி இசை வாசிக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

    (வளரும்)

  10. #549
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    May 22nd
    ________

    இன்றைய தொடரில் எழுத முக்கியமான விஷயம் ஏதுமில்லை. நாதனின் மனவருத்தத்தை தாளாது வசுமதி, தானே உமாவை பெண் கேட்டு விட துணிகிறாள். பர்வதம் இந்த சம்பந்தத்தை தட்டி கழித்துவிடுவாள் என்ற நம்பிக்கையின் பேரில் ஒப்புக்கு பெண் கேட்கிறாள். நீலகண்டனுக்கும் பர்வதத்திற்கும் இந்த வரனின் துளியும் மகிழ்ச்சி இல்லை. உமா மட்டும் பிடிவாதமாய் அஷொக்கைத் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாய் அறிவித்து விடுகிறாள்.

    வசுமதிக்கு நாதன் மேல் இருக்கும் பிரியம் அழகாக எடுத்துக்காட்டியிருந்தனர். அவள் தன் தோழியின் துணையுடன் எப்படி தந்திரம் செய்து நிலைமையை சமாளிக்கிறாள் என்ற பேச்சின் நடுவே கைகேயியின் குணம் அலசப்பட்டது. நம் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் எல்லோருமே நல்ல/தீய
    குணங்களின் சேர்க்கையே. சதவிகித மாற்றம் மட்டுமே ஒருவனை நல்லவன் என்ற அடையாள முத்திரையுடன் அறிமுகப்படுத்துகிறது. கைகேயி மிகவும் நல்லவள், அவள் கூனியின் போதனையால் தன் வசம் இழந்து செயல்பட்டாள் என்றே நாம் படித்திருக்கிறோம். இவர்கள் கூறிய தகவல்கள்
    புதிதாய் இருந்தன.

    கூனி கைகேயியிடம் பேசும் போது " உன் நிலைமையை யோசித்துப் பார், உன் பிரிய ராமன் நாட்டை ஆண்டால், சக்களத்தியான கோசலையின் கரம் உயர்ந்து விடும். நீ எப்படியெல்லாம் அவளை இழித்து பேசியிருக்கிறாய்! எப்படி எல்லாம் துன்புறுத்தி பழித்திருக்கிறாய், உன் நிலைமை இனி என்னவாகும் என்று யோசி" என்று கூறுகிறாளாம். ஆக கைகேயி, கர்வமும், பொறாமையும், இன்ன பிற குணங்களும் கொண்ட சாதாரண மங்கையாகவே சித்தரிக்கப்படுகிறாள். கைகேயி தசரதனின் ஆசை மனைவி. மற்ற ராணிகளை விட அழகு மிகுந்தவள் என்ற கர்வம் அவளுக்கு இருந்ததாகக் கூறுகின்றனர். (இதுநாள் வரை கைகேயியின் பேரில் பிறரைக் காட்டிலும் தனி விருப்பம் கொண்டிருந்தேன் . இந்த தகவல் சற்றே என்னை வருத்தமுறச் செய்தது. என் பிரிய கைகேயி என் மனதின் ஆசனத்திலிருந்து சற்றே வீழ்ந்து விட்டாள் )

    இன்னொன்றும் நாம் யோசிக்க வேண்டும். மனதை அடக்கி ஆள முடியதவர்கள் நல்லவர்களாக சந்தர்ப்ப வசத்தால் முத்திரை குத்தப்படுகின்றனர். சந்தர்பங்கள் வேறு வகையாய் செயல் படும் போது, அவர்கள் தங்கள் இச்சைக்கும் ஆசைக்கும் செவி சாய்க்க, மனம் குடைசாய்ந்து விடுகிறது. கூனி எத்தனை முறை ஓதினாலும், மனதை அடக்கிய நல்ல மனிதனோ, அல்லது நல்லது இன்னவென்று வரையறுத்து அதன்படி செயல்படும் கொள்கை மிகுந்தவனையோ தகர்க்க முடியாது. Someone who can be toppled by just wrong advices aren't actually strong in their principles. அவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை இது காட்டுகிறது.


    (வளரும்)

  11. #550
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    May 21st
    ________
    . நாம் வாழ்வில் சந்திக்கும் சுகமான அல்லது சுகமற்ற அனுபவங்களை ஜீரணிக்கும் பெரிய தொந்தி (man shouldn't be perturbed by those but digest these and still stay able and fit) தும்பிக்கை வினோதமான ஒரு இயந்திரமாக செயல்படுவதை குறிக்கிறது. தும்பிக்கையால் பெரிய மரங்களை தகர்த்த முடியும். சிறு ஊசியையும் எடுக்க முடியும். மனிதனும் அவ்வாறு ஆன்மீகத்திலும் இல்லறத்திலும், (pondering on subtle and gross realities and experiences)
    (வளரும்)


    மூஷிக வாகனம்

    கணபதியின் வாகனம், மூஷிகம் எனும் மூஞ்சூறு. கஜமுகாசுரனுடன் கணேசர் போரிட்டபோது, அசுரன் பெருச்சாளியாக மாறி எதிர்த்தான். கணபதி அவனுடைய பகை உணர்வை மாற்றி அவனை தன்
    வாகனமாக ஆக்கிகொண்டார்.
    பெருச்சாளி எதையும் குடைந்து வழி ஏற்படுத்திக் கொள்ளும். குண்டலினி யோகத்திலும், மூலாதாரத்தை அடைய வழி ஏற்படுத்தும் ஒரு ஆற்றலாகவே மூஷிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மூலாதாரரான கணபதிக்கு மூஷிக வாகனம் அமைந்ததும் இதனால்தான் எனலாம்.

    ரிஷப வாகனம்.

    அமுதைப் பிறருக்குத் தந்துவிட்டு ஆலகால நஞ்சை உண்ட
    சிவபெருமான், மாளிகைகளை விடுத்து, மயானத்தில் வாழ்பவன்.
    இப்படித் தன்னலமற்ற தியாகராஜனாக விளங்குகிறான் ஈசன்.
    காளை மாடுகள் வயல் வெளிகளில் ஓயாது உழைத்து உற்பத்தியான
    தானியங்களின் பயனை நமக்கு அளித்துவிட்டு,
    நாம் ஒதுக்கும் உமி, தவிடு, தோல்,
    வைக்கோல் முதலிய பகுதிகளையே தன் உணவாகக் கொண்டு மகிழ்கிறது.
    உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் அத்யந்த விருப்பம். இதனை உணர்த்தவே சிவனும்
    சக்தியும் காளை வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்

    மயில் வாகனம்.

    முருகனை எதிர்த்துப் போரிட்ட சூரன் இறுதியில்
    சேவலும் மயிலுமாகி முருகனின் கொடியிலும்,
    வாகனமாகவும் நீங்காத இடம் பிடித்தான்.
    சூரனோடு போரிடச் சென்றபோது முருகனின் வாகனமாக
    இருந்த மயில் அண்ணன் கணபதியால் அருளப்பட்டது
    என்றும் புராணங்கள் கூறுகின்றன.
    மயில் தோகை விரித்தாடும் போது’ஓம்’கார வடிவில்
    காட்சி தரும். தான் பிரணவத்தின் வடிவானவன் என்பதை
    உணர்த்தவும் முருகன் மயிலைத் தன்
    வாகனமாகக் கொண்டிருக்கிறான்.

    ஆட்டுக்கிடா வாகனம்

    நாரதர் நிகழ்த்திய ஒரு வேள்வியில் தவறான மந்திரங்கள்
    உச்சாடனம் செய்ததால் யாக குண்டத்திலிருந்து மூர்க்கமான ஒரு ஆட்டுக்
    கிடா வெளிவந்து உயிர்களுக்கு ஊறு செய்தது. முருகன் வீரபாகுவை அனுப்பி அந்த
    ஆட்டுக்கிடாவை அடக்கி தன்னிடம் கொணரச் செய்தார். பின், அதன் மீது அமர்ந்து வலம்
    வந்து தம் ஆற்றலைக் காட்டினார். ஆடு, அறியாமையின் சின்னமாகும்.
    கடவுள் திருமுன்னர் அறியாமை அடங்குகிறது என்பதே இவ்வாகனத்தின் உட்கருத்து.
    ஆட்டுக்கிடா வாகனம் முருகனுக்கே உரிய சிறப்பு வாகனம்.

    நாக வாகனம் (சேஷ வாகனம்)

    நாகம் (பாம்பு) விநாயகருக்கு உதர பந்தனம் என்னும் அரைஞாண் கயிறாகவும்,
    சிவனுக்கு ஆபரணமாகவும், திருமாலுக்குப் பள்லிகொள்ளும்
    சயனமாகவும், முருகனுடைய மயிலின் காலில் பந்தனமாகவும் விளங்குகிறது.
    அம்பிகை உமையவளின் சிறுவிரல் மோதிரமாகத்திகழும் நாகமே,
    சிறப்பு நாட்களில் வாகனமாகிறது.
    மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி,
    சுருண்டு மண்டலமிட்டுப் படுத்திருக்கும் பாம்பு போலத் தோன்றும்.
    குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல்
    நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே வாகனமாகவும் ஆகிறது.
    அம்பிகைக்கும் சிவனுக்கும் வாகனமாகும் போது நாக வாகனம் என்றும் திருமாலுக்கு வாகனமாகும்
    போது சேஷவாகனம் என்றும் பெயர் பெறும்.

    ஹம்ஸ வாகனம்.

    கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை ‘ஹம்ஸம்’ என்பர்.அன்னப் பறவை ,
    நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் திறமை படைத்தது.
    அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய
    கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள். மேலும் சில மந்திரங்களை ‘ஹம்ஸ
    மந்திரங்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள்.
    அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை.
    அவளை உணர்ந்த சான்றோர்களை’பரம ஹம்ஸர்கள்’ என்று அழைப்பார்கள்.
    அத்தகைய சான்றோர்களின் உள்ளத்தில் இருப்பவள் என்பதை உணர்த்தவே
    அம்பிகை ஹம்ச வாகனத்தில் பவனி வருகிறாள்..

    கருட வாகனம்

    விஷ்னு ஆலய விழாக்களில் கருட சேவை மிகவும் முக்கியமானது.
    வைணவ நெறியில் கருடனை கருடாழ்வார் என்றும், பெரிய திருவடி என்றும்
    சிறப்பித்துக் கூறுவர்.
    பறவைகளில் வலிமையும்,கூர்மையும் உடையது கருடன்.
    பட்சி ராஜன் என்று அழைக்கப்படுகிறான்.
    நீண்ட தொலைவு பறந்து செல்லக்கூடியவன்.
    பாம்பின் விஷத்தை இறக்கும் ஆற்றல் கருடனின் இறகு வீசும்
    காற்றுக்கு உண்டாம். இராம இலக்குமணர்கள் மீது எய்யப்பட்ட நாக பாசக்
    கட்டுகளை, கருடனின் காற்று அறுத்தது. பாம்பு தீண்டி இறந்த தில்லைவாழ் அந்தணச் சிறுவன்,
    கம்பர் தமது ராமாயணத்திலுள்ள நாக பாசப்படலத்தைப் படித்தவுடன் உயிர்
    பெற்று எழுந்தான் என்றும் கூறுவர். அத்தகைய ஆற்றல் மிக்க கருடனை,
    காக்கும் கடவுளாகிய திருமால் தமது ஊர்தியாகக் கொண்டுள்ளார்.

    குதிரை வாகனம்

    அம்பிகை தனது பாச ஆயுதத்திலிருந்து தோற்றுவித்த சக்தி,’பரிஊர்வாள்’
    என்று பொருள்படும். ‘அச்வாரூடா தேவி’ எவராலும் வெல்லப்படாத,
    வெல்ல முடியாத ‘அபராஜிதம்’ என்ற குதிரை, அச்வாரூடாவின் வாகனமாயிற்று.
    இவள், அம்பிகையின் குதிரைப்படையின் தலைவியாவள். எண்ணற்ற ஆசைகளே குதிரைப்படையாகும்.
    அவற்றை நன்னெறிப் படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப் படைத் தலைவி. மாணிக்கவாசகருக்காக
    சிவபெருமான் குதிரை வணிகராகக் கோலங்கொண்டார். அப்போது ஈசன் குதிரை மீது ஆரோகணித்தார்.
    அந்தக் கோலத்தில் சிவபெருமானை, ’அச்வாரூடமூர்த்தி’ என்பர். பாமரர் ‘குதிரைச்சாமி’ என்பர்.
    கள்ளழகர் சித்திரா பௌர்ணமி நன்னாளில் கம்பீரமாய் பூப்பல்லக்கினின்று மிறங்கி தங்கக்
    குதிரையில் ஆரோகணித்து வைகை நதியின் வட கரைவழியே இறங்கி அன்பர்களின் வொவ்வொரு
    மண்டகப்படியிலும் அருள் பாலித்து, ராமராயர் மண்டகப்படியில் வட்ட வடிவாய் நீர் பாய்ச்சும்
    கள்ளர்களின் நீர் பிரயோகம் ஏற்று வைகை வழியே சென்று, வண்டியூரில் சில மண்டகப் படிகளில் அருள் பாலித்து,
    துலுக்கச்சி நாச்சியார் மண்டகப்படிவரைசென்று அழகர் கோயிலுக்கு மீளவும் செல்ல வரும் காட்சிகண்கொளாத ஒன்றாகும்.
    அந்தக் குதிரை மீதேறி வரும் மாயோன் ஆறு மாத காலம் தேவியை நினைந்து
    தவமியற்றி வெளியே மண்டபத்தில் தங்கி அருள்பாலிக்கும் தன்மை வேறெங்கும் காணக்
    கிடைக்காததாகும்.

    காமதேனு வாகனம்.

    காமதேனுவின் உடலில் அனைத்து தேவ சக்திகளும் இடங்கொண்டுள்ளன என்பது ஐதீகம்.
    சத்வகுணம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பசு. காமதேனு விரும்பிய அனைத்தையும்
    அளிக்கும் ஆற்றல் உடையது. அனைத்து தேவர்களையும் தனது மேலாண்மையால் கட்டுப் படுத்துபவள் அம்பிகை.
    அடியார்களின் விருப்பங்களை அவள் நிறைவேற்றி வைக்கிறாள்.
    இக்கருத்தை உணர்த்தவே அம்பிகை, காமதேனுவையும் ஊர்தியாகக் கொண்டிருக்கிறாள்.

    கஜவாகனம்

    அம்பிகை பண்டன் என்ற அசுரனுடன் போர்தொடுக்கப் புறப்பட்டாள். அப்போது தன்னுடைய
    அங்குசத்திலிருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்தாள். குரோதம் மற்றும் ஞானத்தின்
    வடிவான அங்குசத்திலிருந்து தோன்றிய அச்சக்தியை,’ஸம்பத்கரி’ என்று அழைத்தனர்.
    இவளே அம்பிகையின் யானைப் படையின் தலைவி.
    ’ரணக்கோலம்’என்ற யானையே இவளுக்கு வாகனமாயிற்று.
    மயில் போன்று, யானையும் தன் முகப்புத் தோற்றத்தால் ஓம் என்ற பிரணவத்தை நினவுபடுத்துகிறது.
    சிவன், திருமால், முருகன், அம்பிகை, அய்யனார் போன்ற பல கடவுளருக்கு யானை வாகனம் உண்டு.

    காக்கை வாகனம்.

    காக்கை சனிபகவான்னின் சிறப்பு வாகனம். திரு நள்ளாறில் சனிப்பெயர்ச்சி நாட்களில் பொன் காக்கை
    வாகனத்தில் சனிபகவான் உலாவரும் உற்சவம் நடைபெறுகிறது.
    காக்கையிடம் ஒற்றுமைக் குணம் உண்டு. அது பேதம் பார்ப்பதில்லை.
    அதே போல், அதன் செயல்களுக்காக அதனை விரும்புவோரும் உண்டு. வெறுப்பவறும் உண்டு.
    போற்றலும் தூற்றலும் இரண்டுமே காகத்திற்கு உண்டு.
    சனி பகவானுக்கும் அப்படித்தான். அவரைப் போல் கொடுப்பவரும் இல்லை;
    கெடுப்பவரும் இல்லை என்று போற்றல் தூற்றல் இரண்டுமே உண்டு. சனி பகவான் அவர்
    பார்வையால் மக்களுக்கு கஷ்டம் கொடுத்து பக்குவம் அடையச் செய்கிறார். பிறகு செல்வங்களை
    வாரி வழங்குகிறார். பிறருக்கு உதவுபவனை பெருந்துன்பம் அணுகாது என்பதை உணர்தும் விதமாகவே சனி
    பகவான் காகத்தைத் தன் வாகனமாகக் கொண்டுள்ளார்.

    சிம்ம வாகனம்.

    சிங்கம் அம்பிகைக்கு உரிய சிறப்பு வாகனமாகும். ‘சிங்கத்திலேறிச் சிரித்தெவையும் காத்திடுவாள்’
    என்கிறார் பாரதியார். தனது கர்ஜனையினாலேயே அனைத்தையும் அடக்கியாளும் திறமையும், கம்பீரமும்,
    யாரும் எளிதில் அண்ட முடியாத வீரமும் உடையது சிம்மம். அதே நேரத்தில் தருமம் தவறாதது.
    பசியில்லாத வேளையில் வீணாக வேட்டையாடி பிற உயிர்களை மாய்க்காது.
    அம்பிகை, தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்திடவே சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.
    முருகன் சூரனைத் தமக்கு வாகனமாக்கிக் கொண்டார் அல்லவா? அதே போல சூரனின் தம்பி சிங்கமுகனை சிம்ம
    வாகனமாக்கித் தன் தாயிடம் அளித்துவிட்டார் முருகன். அம்பிகை அமரும் ஆசனமும் ஸ்ரீமத் சிம்மாசனம்
    என்றே போற்றப்படுகிறது.துர்க்கை முதலான சக்திகளின் சிம்ம வாகனம் சிறப்பு வாகனமாக விளங்குகிறது.

    புலி வாகனம்.

    ஐம்புலன்களும் சீறிப்பாயும் அடங்காத புலியைப் போன்றவை.
    பிரம்மச்சரியால் அப்புலிக¨ளௌம் வெற்றி காணமுடியும்.
    மணிகண்டன், தன் தாயின் தலைவலி தீர புலிப்பால் வேண்டும்
    என்று சொல்லப்பட்டதற்காக வம்புலியை அடக்கி அதன் மீது ஆரோகணித்துவந்தார்.
    பிரம்மச்சாரியான ஐயப்பன், புலி வாகனத்தில் ஏறிவந்து அடங்காப் புலன்களை அடக்கும் நெறியினை உணர்த்தினார்.


    "அன்பே சிவம்.

Page 55 of 80 FirstFirst ... 545535455565765 ... LastLast

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Nayakan" among "Time" mag's 100 best
    By arun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 264
    Last Post: 20th June 2008, 09:36 PM
  3. Movies of "E" and "Raam" Jeeva
    By girishk14 in forum Tamil Films
    Replies: 184
    Last Post: 13th January 2007, 08:32 PM
  4. Use of word "Mythological" or "Myth" for
    By torchbearer in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 11:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •