-
29th May 2009, 12:27 AM
#561
Moderator
Diamond Hubber
Tuesday May 26,2009
Thanks to IsaiTamilNet - Prabhu
[html:92f36ecdb9] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13669654&vid=5168128&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9105/86291260.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13669654&vid=5168128&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9105/86291260.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:92f36ecdb9]
-
29th May 2009 12:27 AM
# ADS
Circuit advertisement
-
1st June 2009, 01:56 PM
#562
Senior Member
Veteran Hubber
May 27th
________
கிரியின் பெரியப்பா நடேச முதலியாரும் சார்யாரும் (டெல்லி கணேஷ்) ஆப்த நண்பர்கள். பேச்சின் போக்கின் ஜாதி பேதங்களைப் பற்றி தன் கருத்தையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும், பிடிப்பையும் முதலியார் முன் வைக்க, அதற்கு சார்யார் தம் போக்கில் சிறு திருத்தம் கொண்டு வர எண்ணுகிறார்.
திருமலை நள்ளான் சக்கரவர்த்தி என்று வைணவத்தில் ஒரு பகுதியினர் உண்டு. அதன் தோற்றத்தின் காரணம், வைணவர் ஒருவர் கீழ் ஜாதியினர் ஒருவரின் இறுதிக் கடனை முன்னின்று தாம் நடத்த, அதன் பின் தோன்றிய கிளை தான். இப்பகுதியினர். இந்திய அரசியல் வரலாற்றில் தம் தடத்தை பதித்த, இன்றைக்கும் நாம் மரியாதையுடன் நினைந்து மகிழும் சி. ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி இவ்வழித் தோன்றலே. அவரின் இராமாயண மஹாபாரத மொழிப்பெயர்ப்புகள் இன்றும் தமிழில் முன்னிடத்தில் விளங்கி வருகிறது.
ஜாதிகளைத் தாண்டிய மனித நேயத்தின் அடிப்படையில் எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஒன்றே என்பதை வலியுறுத்த கண்ணப்ப நாயனார் கதைகள் முதல் பல கதைகளில் இறைவன் நேரே உணர்த்தியதும், குறிப்பாலுணர்த்தியதும் உண்டு. அப்படிப்பட்ட இன்னொருக் கதை தான் பெரிய நம்பியின் கதை.
மாறநேர நம்பி என்பவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். பெரிய நம்பி உயர்குலத்தோன். மாறநேரியின் இறப்பிற்கு பெரிய நம்பி ஈமக் கடன்களை செய்தார். அதனால் அவர் தம் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டு கடுமையாய் நடத்தப்பட்டார். அவர் இருக்கும் தெருவழியே ரங்கநாதரின் தேர்வீதி உலா வந்து கொண்டிருந்தது. அது பெரியநம்பியின் தெருவிலும் வலம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பெரியநம்பியின் பெண், அத்தூழையம்மை மனையின் வீசப்பட்டிருந்த முட்செடிகளையெல்லாம் கடந்து வந்து, ரங்கநாதரின் தேர் முன், 'ஜாதிபேதங்களையெல்லாம் கடந்தவன் நீ, மாடு மேய்க்கும் குலத்தோரை சமமாய் நடத்தியவன் நீ. உன் போலவே ஜாதிபேதங்களை பாராத நடந்த எங்களுக்கு நிகழும் அநீதிக்கு ஒரு தீர்ப்பு சொல்லாது இந்த தேர் இங்கிருந்து நகராது' என ஆணையிட்டு கதறுகிறாள். அதன் பின், எவ்வளவு பேர் வலிந்து இழுத்தும், போராடியும் தேர் நகர மறுக்கிறது. தம் தவறை உணர்ந்து, பெரிய நம்பியை அர்ச்சகர் தோளில் சுமந்து கொண்டு தேரில் அமர்த்திய பின்னரே தேர் நகர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. பல சம்பவங்களை இதனை வலியிருத்த நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.
அப்படியெனில் சாஸ்திர சம்பிரதாயங்களே வேண்டாமே, எல்லாவற்றையும் தளர்த்தி விடலாம், அது தான் எழுச்சி, அது தான் மறுமலர்ச்சி என பேசுவதும் தேவையற்றது. ஜாதிக்கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும் தேவை தான். எல்லாமே தளர்த்தி விட்டால், பின் ஒழுக்கம் கட்டுப்பாடு தளர்ந்து மனிதன் 'எப்படியும் வாழலாம்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவான். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளெல்லாம் ஒழுக்கத்திற்காகவும், வழிவகுக்கும் பொருட்டும், அர்த்தமுள்ளதாக படைக்கப்பட்ட ஒன்று. அதை மீறுவது சிறந்ததன்று. "எல்லோரும் மனித ஜாதி" என்ற நிலை, மனதால் பிறரை வித்தியாசமின்றி நடத்தும் நிலை, பலருக்கு சரி வருவதில்லை. அது ஞானமார்கத்தின் பால் செல்லும் மனிதர்களுக்கு சொல்லப்பட்டது. அந்த நிலையில் இல்லாத ஒருவர் அப்படிப்பட்ட சிந்தனையை புகுத்திக்கொண்டு ஒழுக்கக்கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளுதல் வாழும் வகைக்கு ஊறு விளைவிக்கும்.
உமா ஏதோ தெளிவற்ற நிலையில் தவிப்பது போலவும் அவளுக்கு தன் உதவி தேவை என்றும் அஷோக்கிற்கு உள்ளுணர்வு தோன்றுகிறது. அதை அலட்சியப்படுத்தி அவனை சிறைவைக்கிறாள் வசுமதி. ஆனால் அஷோக் உமாவுடன் உரையாடுகிறான். நடந்தது என்ன? எப்படி நடந்தது? அஷோக் உரு-தாங்கி, உமாவிடம் உரையாடுவது எது? அஷோக் தெருவில் நடந்து செல்வதை பார்த்த சமையல் மாமி, அதே சமயத்தில் வீட்டிலும் கட்டப்பட்டிருப்பதை பார்த்து குழம்பிப் போகிறாள்.
(வளரும்)
-
1st June 2009, 02:10 PM
#563
Senior Member
Veteran Hubber
-
1st June 2009, 02:33 PM
#564
The Director has smartly inserted the " Saathirangal sonnadhillai " drama theme into Enge Brahmanan ! From now, we can expect some interesting scenes with Delhi Ganesh who will undergo acid test on how broadminded he is actually when it comes to his own matters.
Very good narration by Sakthiprabha . Keep it up . I am one of those slient readers & admireres of this thread !
-
1st June 2009, 05:40 PM
#565
Moderator
Diamond Hubber

Originally Posted by
Shakthiprabha
May 27th
________
(வளரும்)
-
1st June 2009, 05:45 PM
#566
Moderator
Diamond Hubber
May 27- 2009
thanks to IsaiTamilNet - Prabhu
[html:e29ca58f94]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13687244&vid=5176120&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9122/86355143.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13687244&vid=5176120&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9122/86355143.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:e29ca58f94]
-
1st June 2009, 06:21 PM
#567
Senior Member
Veteran Hubber
Thanks, waterloo, vr and aana.
Waterloo,
That bit of info was very interesting. Thankyou. I am eager to wait n watch .
-
1st June 2009, 06:21 PM
#568
Senior Member
Veteran Hubber
May 28th
_______
"நாமொன்று நினைத்தாலும் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பார்கள். தெய்வம் என்றால் இறைத்தீர்ப்பு. 'விதி' என்றும் சொல்வதும் இதைத்தான். இதன் வீர்யம் அதிகமாக இருக்கும் போது, நம் தனிப்பட்ட வைராக்கியத்தால் பெரிதும் சாதித்து விட முடியாது. இதைத் தான் அஷோக் உமாவிடம் எடுத்துரைக்கிறான். விதியை வெல்ல போதிய அளவு நம் வைராக்கியத்தாலும் சித்தத்தாலும் முடியாத போது, அதனுடன் எதிர்த்து விளையாடி என்ன பயன்? அதை பகைத்து, அதனுடன் மல்லுக்கு நின்று ஆவது என்ன? நம்மை நாமே வருத்திக்கொள்வது மட்டுமே கண்ட பலனாய் இருக்கக்கூடும்.
நம் வாழ்வில் பிடிக்காத ஒன்று நடக்கிறது, அதை நம்மால் தடுத்து நிறுத்தும் வலிமையில்லை என்றால் என் செய்வது, அதனுடன் மோதுவதை விடுத்து, அதனுடன் இயைந்து, ஒப்பி வாழ்வதே சிறந்தது. "When u dont get what u love, love what u get" என்ற ஆங்கில பழமொழியும் இதையே நினைவுறுத்துகிறது. ACCEPTING life as offered, is the best remedy to live a meaningful life.
இன்னொரு பெரிய கேள்வி. நாம் ஏன் அலுத்துக்கொள்கிறோம்? தன்னிரக்கத்தில் மூழ்குகிறோம் என்றால், we try to hide and bury our inefficiency to accept life, under the pretext of pain. நாளாவட்டத்தில் அந்த வலியில் வாழப்பழகிக் கொண்டுவிடுகிறோம். அந்த வலியை நேசிக்கத் துவங்குகிறோம். நம் சோதனைகளுக்கும் முயலாமை, இயலாமை போன்ற எல்லா ஆமைகளுக்கும், வெகு சௌகரியமாக இந்த வலியை பழியாக்கி, இலக்காக்கி அதை சுட்டிக்காட்டி நாம் தப்பித்துக்கொண்டு விடுகிறோம்.
விதி என்பது என்ன என்றால், நிர்ணயிக்கப்பட்ட விஷயம். எது நிர்ணயிக்கிறது? (இதற்கு விடை பலவகையில் ஆராயலாம், திரியின் நோக்கம் மாறுபட்டு விடும்). ஆனாலும் நம்மால் ஆட்டுவிக்கமுடியாத ஒன்றை விதி மாற்றி அமைத்தால், எந்த மனிதனும், படை, பலம், புத்தியுடன் கூடிய எவனும் தடுமாறிவிடுகிறான். இவையெல்லாம் ஏன் நம் புத்திக்கு எட்டுவதில்லை? புரிபடுவதில்லை? நம் புத்திக்கும் அறிவுக்கும் புலப்படாத, புரியப்படாத விஷயங்கள் பல உள்ளன. அதை ஒப்புக்கொள்வதே புத்தியின் முதல் வெற்றிப்படி. அறிவுக்கு எட்டாத விஷ்யங்கள் தினம் நம் வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறது.
ஒருவன் ஜெயிக்கவேண்டுமெனில் இன்னொருவன் மட்டுபட வேண்டும். ஒருவனின் ஜெயித்தல், இன்னொருவனின் தோல்வியால் தான் நிகழ்கிறது. ஏன் இன்னொருவன் தோற்கிறான். அவனுக்கு புத்தி மட்டு, அல்லது நேரம் சரியில்லை. ஏன் புத்தி மட்டு? ஏன் நேரம் சரியில்லை? ஏன் ஒருவன் உச்சாணிக்கொம்பில் உட்கார, இன்னொருவன் கீழே தூசிதட்டுகிறான்? இவையெல்லாம் நம்மை மீறிய விஷயங்கள். Therez always a controversy here as to why things happen? Is it destiny or Is it choice! Again thats a different topic by itself. I suppose we can safely conclude destiny and choice are inter-twined so closely, that its difficult to see them apart.
அதெல்லாம் சரி. அஷோக் எப்படி வீட்டிலும் இருந்திருக்கிறான் - உமாவுடனும் பேசிக்கொண்டிருந்தான்? பாகவதர் எப்படி அஷோக்கிடம் தோட்டத்தில் பேசினார் - அதே நேரம் காஞ்சீபுரத்திலும் இருந்தார்? இதுவும் நமக்குப் புலப்படாத விஷயம் அல்லது இறைச்செயல் எனக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அதிசயங்கள் பல மஹான்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. அவர்களும் நிகழ்த்தியுள்ளார்கள். பரமாச்சார்யாரைப் பற்றிய சுயம் அனுபவம் ஒன்றை பகிர்ந்து விளக்கத்திற்கு அப்பாற்பட்ட இவ்விஷயத்தை முடித்தார் சோ.
நீலகண்டன் அஷோக் புகழைப்பாடிக்கொண்டு மிகுந்த நன்றி தெரிவித்துப் போகிறார். உமா திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக கூறுகிறார். வசுமதியும் நாதனும் அசோக் எப்படி சென்று வந்தான் என்று புரியாது திகைத்து நிற்கின்றனர். சார்யாரை சந்திக்கும் அஷோக் வைணவத்தின் பேரில்
தனக்குள்ள ஈடுபாட்டை எடுத்துக்கூறி தன்னை வழி நடத்துமாறு கேட்டுக்கொள்கிறான். தமக்கொரு சிஷ்யன் கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் சாரியார்.
(வளரும்)
-
1st June 2009, 07:41 PM
#569
Senior Member
Veteran Hubber
May 29th
________
அஷோக்கிடம் ராம்ஜி (உமாவின் தம்பி) தன் நன்றியைத் தெரிவிக்க வருகிறான். வந்திருந்தது நான் என்றே உமா நினைக்கட்டும், அது நான் அல்ல என்று தெரிந்தால், அவள் மீண்டும் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்கிறான் அஷோக். அதாவது உண்மையை மறைத்தல். பல நூல்களும் நற்பண்பினை எடுத்துறைக்கும் நன்னெறிப் புத்தகங்களும் உண்மையை மறைத்தல், பொய் உரைத்ததற்கு ஈடாகும் என்று கூறுகிறது.
ஆனாலும்...
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
என்னும் குறளுக்கு விளக்கமே தேவையில்லை. பொய்யையோ, அல்லது உண்மையை மறைத்தலையோ அலசும் போது, அதன் நோக்கத்தையும் சேர்ந்து அலச வேண்டும். தன்னலமற்று, பிறர் நலனுக்காக பொய் உரைக்கப்பட்டிருப்பின், அது உண்மைக்கு சமம் என்பதே சான்றோர் வாக்கு.
இராமாயணத்திலிருந்து சில உதாரணங்களை எடுக்கலாம். சுமந்திரர் தேர் ஓட்டிச் சென்ற போது துக்கம் தாளாமல் தசரதர் அழுது தேரை நிறுத்தச் சொல்லி கதற, ராமனோ, தேரை செலுத்த ஆணையிடுகிறான். தந்தை கேள்வி வினவினால், உங்கள் காதுகளுக்கு அவரிடம் கூக்குரல் சத்தம் எட்டவில்லை என்று கூறிவிடுங்கள் என சுமந்திரரிடம் கூறுகிறான். இதுவும் பொய் தான், அதன் நோக்கம், தசரதரின் வாக்கு காப்பாற்றப்பட
வேண்டும் என்பதே.
அதே போன்று, பரதன் மீண்டும் ராமரை அரசாள அழைக்கும் போது, தசரதன் கைகேயியிடம் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைக்கே பட்டாபிஷேகம் செய்விப்பதாய் வாக்கு கொடுத்திருந்தார் என்று பொய்யுரைக்கிறான். பரதனை சமாதானப்படுத்தி நாடு அனுப்ப வேறுவழியின்று பொய்யுரைக்க
நேரிடுகிறது.
ராமனைப்பற்றியே ஏன் பேசுகிறோம் என்றால், மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியதிப்படி வாழ்ந்தவன் அவன். கண்ணனைப் பற்றி இங்கு பேச இயலாது. அவன் செய்கைகளை அதனால் தான் "லீலைகள்" என்று சொல்லிவிடுகிறோம்
. ராமன் மனிதனாய் வாழ்ந்தான். கண்ணனோ இறைவனாய் தீர்ப்பு கூறினான்.
ராமனின் வாழ்வை முன்னுதாரணமாய் வைத்து நாம் நம் செய்கைகளை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். அப்பேற்பட்ட ராமனும் ஓரிரு தருணங்களில் பொய்யுரைத்திருப்பதை அலசுதல் அதன் நோக்கத்தை புரிந்து செயல் பட உதவுகிறது.
ராமன் செய்கைகளில் உறுத்தும் இன்னொன்று வாலியை மறைந்து நின்று கொன்றது. இதை அறவே மறுக்கின்றன வேறு சில நூல்கள். கமபனும் துளசிதாசரும் ராமாயணத்தை பக்திததும்ப கற்பனாஷக்தியை புகுத்தி எழுதினர். வால்மீகி ராமாயணம் நடந்ததை அப்படியே எடுத்துரைக்கும் புத்தகம். அதில் ராமன் மறைந்து நின்று கொன்றதாய் கூறப்படவில்லை. "எத்தனை வலிந்து சண்டையிட்டும் ராமனின் பாணம் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று அழுது புரளும் தாரா முன் வான்ரங்கள் கூறின என செய்யுள் வருகிறது. "யுத்தத்தில் நான் உன்னை வீழ்த்தினேன்" என்கிறான் ராமன். யுத்தநீதிப்படி பார்த்தால், இவற்றை இரு கோணங்களில் அலசலாம். வாலி முதலானோரை மிருகம் என்ற ஜாதியில் சேர்த்தால், மிருகத்தை ராஜா வேட்டையாடிக் கொல்வது என்பது நிகழ்வதே. அவர்களை மனிதர்களாய் பாவித்தால், தம்பி மனைவியை களவாடியவன் என்பதால் அவனுக்கு எத்தகைய தண்டனையும் அரசன் வழங்கலாம் என்பது சட்டம்.
சார்யார் அஷோக்கின் அழைப்பை ஏற்று அவன் வீடு வருகிறார். யோக வாசிஷ்டம் போன்ற உயர்ந்த ஆன்ம விளக்கங்களை படிக்கும் அவனை உயர்த்திப்பேசுகிறார். வைணவர்கள் ஏன் மற்ற கோவில்கள் வருவதில்லை, மற்ற தெய்வங்களைத் தொழுவதில்லை என்பதற்கு விளக்குகிறார். நாரணன் ஒருவனே எல்லாம் வல்ல ஒரே கடவுள் என்ற உயர்ந்த நிலையில் அவனை வைப்பதால், அவனைத் தவிர இன்ன பிற தேவதைகளைத் தொழுதால், பக்தியின் அடர்த்தி குன்றிவிடும் என்றும், சிரத்தை மட்டுப்பட்டு விடும் என்றும் அவர்கள் தொழுவதில்லை என்று காரணம் கூறுகிறார். (பல வைணவர்கள் இதே காரணம் கூற நானும் கேட்டிருக்கிறேன்) இவர்களை "வீர வைணவர்கள்" என்று அழைப்பது வழக்கம். அதனாலேயே நவக்ரஹங்களின் சன்னிதியும் வைணவக்கோவில்களில் இருப்பதில்லை. நவக்கிரஹங்கள் பெருமாளை வழிபடுவதால், நாம் நேரடியாக பெருமாளிடம் பக்தி செலுத்தும் போது தனியாய் இன்ன பிற தெய்வங்களை வணங்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தவில்லை. எனினும் எண்ணிவிடக்கூடிய ஓரிரெண்டு வைணவக் கோவில்களில் நவக்கிரஹங்களை ஸ்தாபித்திருக்கிறார்கள்.
பொதுவாகவே வைணவன் தன்னை "அடியேன்/தாசன்" என்றெல்லாம் அழைத்துக்கொள்வார்கள். அஃதாவது பிறரிடம் பேசும் போது அவர்கள் இச்சொற்களை அடிக்கடி பயன் படுத்துவர்.
வைணவன் வலியுறுத்துவது த்வைதம். அதாவது இறைவன் எல்லாம் வல்லவன். நீ அவன் ஆணைப்படி செயல்படுத்தப்படுகிறாய். இதன் அடிப்படையில் வைணவர்களுக்கு பக்தி மார்கமும், பக்தியில் ஈடுபாடும், தன்னை தாழ்த்தி, இறையை உயர்த்தும் பண்பும் உண்டு.
சைவர்கள் அல்லது சிவனை வழிபடுவோர் வலியுறுத்துவது "அ-த்வைதம்" அதாவது இரண்டற்ற நிலை. நீயே அது. அதுவே நீ என்ற நிலை. இதனால் அவர்கள் போக்கு ஞான மார்கமாக அமைவது இயற்கை.
பி.கு: சிறு வயது முதல் எனக்கு வைணவத்தை பின்பற்றும் பலர் நண்பர்களாய் அல்லது பழக்கமானவர்களாய் இருந்திருக்கின்றனர். சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலும் "தாசன்/அடியேன்" என்ற சொல்லை பேச்சில் அடிக்கடி பயன்படுத்துவர். I thought it was psudo-humility, infact I used to find it too irritating. முதன் முறையாக எனக்கு விளக்கம் கிடைத்தது. Now I see, where it comes 
(வளரும்)
-
1st June 2009, 07:50 PM
#570
Senior Member
Veteran Hubber
SP akka 

Originally Posted by
Shakthiprabha
பி.கு: சிறு வயது முதல் எனக்கு வைணவத்தை பின்பற்றும் பலர் நண்பர்களாய் அல்லது பழக்கமானவர்களாய் இருந்திருக்கின்றனர். சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலும் "தாசன்/அடியேன்" என்ற சொல்லை பேச்சில் அடிக்கடி பயன்படுத்துவர். I thought it was psudo-humility, infact I used to find it too irritating. முதன் முறையாக எனக்கு விளக்கம் கிடைத்தது. Now I see, where it comes
(வளரும்)
யுவன் இசை ராஜா...

Bookmarks