-
5th June 2009, 02:38 PM
#591
Senior Member
Veteran Hubber
vr,
தென்கலை, வடகலை - இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசுவதில் வல்லவர்கள்.
andha kovil yaanaikku enna naamam potta enna! podatti enna! viboothi potta enna! veruma vitta enna
???!?!?
Its not new with thenkalai vadakalai alone. Its prevelant amidst,
* athiest- theists
* advaitha-dwaita-other philosoical schools
* vadama, vathima, bruhacharanam sects
* mudhaliyar, chettiyar, brahmins,other sects
* hindus muslims, sikhs, christians
* north india - south india
* india , pakistan
* racisms black-white
Does it ever stop? To belittle others in the name of sects or caste or creed or race?
Any given member of "a" sect feels he is superior to "b" sect. Its sad such differentiation and ego of superiority follows even when in spiritual enquiry, leave alone religious discrimination of forgettign the goal and catch the path. Like IVe mentioned in another thread, its similar to holding the leaves and forgetting the root.
But,
This is the way world would function. This is the way its designed to function. We have to live with it 
Unless one is a yogin who is UNAFFECTED by these or lives a secluded life (theoritically or practically)
-
5th June 2009 02:38 PM
# ADS
Circuit advertisement
-
5th June 2009, 02:47 PM
#592
Senior Member
Veteran Hubber
-
5th June 2009, 02:52 PM
#593
Senior Member
Veteran Hubber
////Vadakalai, Thenkalai - they both belong to same religion, they follow same god, but still the fight exists////
Fights nnu solla mudiyathu vr, its
*nee periyavana naan periyavana?
*en karuthu usandhadha un karuthu usandhadha?
*Am I superior in knowledge or are u superior in knowledge?
Its there even in our very house!... orE veedu...orE religion, orE cult, orE analogy and beliefs (almost) irunthaalum...analyse and see. Dont 2 brothers fight? naan usathiya nee usathiya? even 2 kids... say 3 year olds? bommai enakku unakku! naan sonnathu thaan right, nee solrathu thappu!...
it goes on n on. It happens right from INDIVIDUAL to INDIVIDUAL, then a bigger clan of sect, religion, country, race... (anything else?)
Mind/ego plays the maaya, and NO being can escape the falter unless he is beyond these.
-
5th June 2009, 02:58 PM
#594
Senior Member
Veteran Hubber
-
5th June 2009, 09:05 PM
#595
Senior Member
Veteran Hubber
03-06-09
________
சமஸ்க்ருதம் தேவ மொழி / தெய்வ மொழி என்று சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. எல்லா மொழியுமே உயர்ந்த மொழிகள் தாம். எல்லா மொழியிலும் உயர்ந்த இலக்கியங்கள் புனையப்பட்டிருக்கின்றன. மொழி என்பது உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனம் என்பதைத் தாண்டி உயிரினும் மேலாக மதிப்பதற்கு இது தான் காரணம். கலைகளை இலக்கியங்களை கருத்துக்களை அவரவர் தாய் மொழியில் அறியும் பொழுது, புரியும் பொழுது, மொழி உயர்ந்த இடத்தில் அமர்த்தப்படுகிறது. அப்புறம் சமஸ்க்ருதத்திற்கு மட்டும் ஏன் தேவ மொழி என்று பெயராம்?
தேவர்களை கீர்வாணர் என்று விளிப்பதுண்டு. அவர்களால் பேசப்படும் சமஸ்க்ருதத்திற்கும் கைர்வாணி என்ற பெயர் உண்டு. தேவ ரகசியங்களும் மனிதனுக்கு சொல்லப்பட்ட மொழி சமஸ்க்ருதம். வேதங்கள் உபநிஷதங்கள் ப்ரம்ம ஞானங்கள், பாகவதம், கீதை முதலியவை உணர்த்தப்பட்ட மொழி சமஸ்க்ருதம். சமஸ்க்ருதம் என்றால் நன்றாக சொல்லப்பட்டது என்று பொருளாம். பேசு தொனிகள் அத்தனையும் எழுத்தில் வந்து விடுவதால், ஒவ்வொரு அசைவிற்கும் அக்ஷரத்திற்கும் மாத்திரைக்கும் எழுத்து வடிவம் உண்டு. இந்த சிறப்பு பல மொழிகளில் இல்லை (IF I am not wrong, I supp, hindi also has its script intact with the way its pronounced
I dont know about any other language and my knowledge is limited).
இவ்வாறாக ஹிந்து மதத்திற்குறிய ஸ்லோகங்களும் பலவும் சமஸ்ருதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதால், யாகங்கள் யக்ஞங்களுக்கு சமஸ்க்ருதம் ஏதுவான மொழியாய் திகழ்கிறது. ஸ்லோகங்கள் சொல்லப்படும் போது த்வனி மாறினால் அர்த்தங்கள் மாறுபடும். அதனால் அதை திரும்பச் சொல்லவும் சரியான மொழியாய் சமஸ்க்ருதமே திகழ்கிறது. இருப்பினும், தாய்மொழியில் ஒருவனுக்கு இருக்கும் வன்மையோ புரிதலோ உணர்வோ மகிழ்ச்சியோ மற்ற மொழி பேசும் போது மட்டுப்படுகிறது.
இதனாலேயே சம்ஸ்க்ருதத்தைத் தவிர தாய்மொழி கற்பதும் அதைப் படித்து உணர்வதும் மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் சமஸ்க்ருதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் இன்னமும் உணர்வு பூர்வமாய் அறிவு பூர்வமாய் விளங்கும் வாய்ப்பு உண்டு. அதே போல் தாய்மொழி மட்டும் கற்றுக்கொண்டு சமஸ்க்ருதத்தை கற்காமல் இருப்பதால் நட்டம் அதிகம். உயர்வான பல இலக்கியங்கள் உண்மைகள் கருத்துக்கள் விளங்காமலே போய்விடும்.
நம் தாய்மொழியாம் தமிழிலும் உயர்ந்த பக்தி இலக்கியங்கள் மெத்த நிரம்பியுள்ளன. திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் அரிய கருத்துக்களை, ஞானத்தை, பக்தியை முன் வைக்கிறது.
பாரதி தம் கவிதையில் தமிழையும் சமஸ்க்ருதத்தையும் ஒன்றாய் உயர்த்தியதாய் கவிதை வருகிறது.
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே
நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளினுள்ளே உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”
வேதத்தை மதித்த தமிழ்நாடு என்பதாலேயே பாரதி "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று பாடியுள்ளான். கல்வெட்டுக்களில் சிலது சமஸ்க்ருதத்தில் அரசர்கள் புகழ் பாடுவதையும், அவர்கள் சரித்திரம் சொல்வதையும் காணலாம். திருவள்ளுவர் பல இடங்களில் வேதம் சொல்லும் கருத்துக்களுக்கு ஒப்பு குறள் வழங்கியுள்ளார். மஹாபாரதப்போர் காலத்திலும் கூட பாண்டியனும், சோழனும் பாண்டவர்களுக்காக போரிட்ட செய்தி வரலாறு உண்டு. பல தமிழ் மன்னர்கள் யாகங்களும் வேள்விகளும் செய்ததாகவும், யாகம் செய்தவர்களைக் காத்ததாகவும் வரலாறு கூறுகிறது. பெருஞ்சோற்று ஊதியன் என்ற பெயர் சேரலாதன் என்ற சேர மன்னனுக்கு உண்டாம். அவன் மஹாபாரதப் போரில் இரு தரப்புப் படையினருக்கும் உணவு வழங்கியதால் இது காரணப்பெயர் ஆகியது.
சமஸ்க்ருதத்தில் அந்தந்த தேவதைக்குறிய ஸ்லோகங்கள் பல இருப்பினும் கோவில்களிலோ வீடுகளில்லோ பூஜைகளுக்குப் பின் பொதுவான மந்த்ரம் ஒன்றைச் சொல்வது வழக்கம். இம்மந்திரம் எல்லார் நன்மையின் பொருட்டும் உலக நன்மையின் பொருட்டும் ஓதப்படுவது. இந்த ஸ்லோகம் தைத்ரிய உபநிஷதத்தில் வருகிறது. இதன் பொருளைப் பற்றி நேற்றைய தொடரில் விளக்கினார்கள்.
"மித்ரதேவனும், வருணனும், இந்திரனும், அரியமானும், நன்மை புரியட்டும். நான் விஷ்ணுவை, ப்ரம்மனை, வணங்குகிறேன். எம்மையும் எமது ஆச்சார்யரையும் காப்பாற்றுவாயாக. வாயுதேவனே உன்னையே நான் பிரம்மமாக நினைக்கிறேன். உன்னையே சத்தியமாகவும் ருதமாக காண்கிறேன். எல்லோர் / (உலக) நன்மைக்காகவும் வணங்குகிறேன்."
ஷம்னோ மித்ரஸ்யம் வருண:
ஷம்னோ பவத்வர்யமான்
ஷம்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி:
ஷம்னோ விஷ்ணு ருருக்ரமஹ:
நமோ ப்ரம்மணே
நமஸ்தே வாயு
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி
ருதம் வதிஷ்யாமி
சத்யம் வதிஷ்யாமி
தன்மாமவது தத்வக்தாரமவது
அவதுமாம்
அவதுவக்தாரம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:
{மித்ரன் என்பவன் பகலுக்கு அதிபதி
வருணன் இரவுக்கு அதிபதி
இந்திரன் வலிமைக்கு அதிபதி
அரியமான் சூரியனின் தேவன் - எனக் கருதப்படுகிறார்கள். }
(வளரும்)
-
5th June 2009, 09:21 PM
#596
Senior Member
Veteran Hubber
Sp akka
யுவன் இசை ராஜா...

-
5th June 2009, 09:58 PM
#597
Senior Member
Veteran Hubber
04-06-09
மெல்ல மெல்ல வலை பின்னப்பட்டு எல்லா கதாபாத்திரங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துயிருக்கிறார்கள். நடேச முதலியாரின் இரண்டாவது பெண் ஷோபனா வையாபுரியின் மகன் பெருமாளைக் காதலிக்கிறாள். ஜாதிவிட்டு ஜாதி கல்யாணத்தை நடேச முதலியார் எதிர்க்கிறார். இது தொடர்பாக முதலில் வையாபுரியைப் பார்த்துப் பேச சார்யார் விழைகிறார்.
உமாவின் வருங்கால கணவனாக வரவிருக்கும் ரமேஷ், முறைப்படி திருமணம் செய்விப்பதற்கு முன்பே திருமணத்தை பதிவு செய்ய ஆவன செய்கிறான். அதற்கு சற்றே குழப்பத்துடன் நீலகண்டன் தம்பதியர் உடன்படுகின்றனர். உமா திருமண விஷயத்தில் அபிப்பிராயம் பெற நாதனை நாடுகிறார் நீலகண்டன். நல்ல காரியங்கள் பேச வரும் போது தடை சொல்வது பெரும்பாலும் நடவாது. முன்பொரு பகுதியில் இக்ஷிணி தேவதைகளைப் பற்றி குறிப்பிட்டிருந்ததைப் போல், எண்ணங்களுக்கும் சொல்லுக்கு பலம் அதிகம். அதனாலேயே "நல்லதை நினை, நல்லதையே பேசு" என்று வலியுறுத்திகிறார்கள். நல்ல விஷயங்கள் பேச வரும் போது அல்லதாக பேசுவதை அபசகுனமாக கருதுகிறார்கள். நல்ல வாக்கு பிறருக்கு மகிழ்ச்சி தரக்கூடும் என்பதால் நல்லது நடக்குமா நடக்காதா, சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமலே பேசுவிடுகிறோம். உடல் நலம் குன்றிய ஒருவரிடம், அவர் மரணப்படுக்கையிலும் "நீ பூரண குணம் பெறுவாய்" என்று ஆறுதல் வழங்குவதும் இவ்வகையைச் சார்ந்தது. ரமேஷின் போக்கும் செய்கையும் திருப்தியாக இல்லை என்பதை பலர் உணர்ந்திருப்பார்கள். (நிறைய சினிமா பர்த்தாகிவிட்டது!!) என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
சார்யாருடன் அஷோக் வேதபாடசாலைக்குச் செல்கிறான். அந்த சூழலும் இருப்பும் அவனுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. ஷங்கர் என்ற வேதபாடசாலை மாணவனை நண்பனாகப் பெறுகிறான். அவன் உயர் அதிகாரி ஒருவரின் மகன் என்பதை நாதனாலோ வசுமதியாலோ எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. இளம் வாலிபன் வேதம் கற்கிறான் என்றால், "உங்கப்பா எங்க குருக்களா இருக்கார்? அனாதையா? வைதீக பிராமணரா? வசதி போதாதவனா" போன்ற "அய்யோ-பாவ" தொனியில் கேள்விகள் இன்றைய காலகட்டத்தில் பலரின் மனதிலும் எழும்புகிறது. வேறு துறைகளைக்கு கல்விகற்க செல்வதால் வருமானம் ஈட்ட முடிகிறது, இத்துறையில் வருமானம் குறைவு, பொது அங்கீகாரமும் மரியாதை மதிப்பும் குறைந்து விட்டது என்பதாலேயே பலரும் ஒதுக்கி வரும் நிலைக்கு இன்றைக்கு வேதம் தளர்ந்து நிற்கிறது வேதனைக்குறியது.
(வளரும்)
-
5th June 2009, 10:52 PM
#598
Moderator
Diamond Hubber

Originally Posted by
Shakthiprabha
03-06-09
________
ஸ்லோகங்கள் சொல்லப்படும் போது த்வனி மாறினால் அர்த்தங்கள் மாறுபடும்.
...
திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் அரிய கருத்துக்களை, ஞானத்தை, பக்தியை முன் வைக்கிறது.
(வளரும்)
SP
-
5th June 2009, 10:53 PM
#599
Moderator
Diamond Hubber

Originally Posted by
Shakthiprabha
04-06-09
மெல்ல மெல்ல வலை பின்னப்பட்டு எல்லா கதாபாத்திரங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துயிருக்கிறார்கள்.
(வளரும்)
again
SP
-
5th June 2009, 10:53 PM
#600
Moderator
Diamond Hubber
Shakthiprabha
Senior Hubber
Joined: 21 May 2009
Posts: 565
Location: Vagabond
what happened ????
Bookmarks