-
15th September 2009, 07:19 PM
#1071
Senior Member
Veteran Hubber
ஆதியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தில்லா கூட்டத்தால் தோழர் கடத்தப்பட்டு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்படுகிறார். அவரிடம் இருக்கும் வீடியோ ஆதாரத்தையும், சங்கரபாண்டியனால் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும் கேட்டு முதலில் ஆசை வார்த்தை காட்டப்படுகிறார். அதற்கு மசியாமல், கை கால் கட்டப்பட்டு, சுற்றிலும் உருக்கட்டைகளுடன் அடியாட்கள் நிற்கும் நிலையிலும் சாமர்த்தியமாகப்பேசி தப்பிக்க எண்ணாமல், அந்நிலையிலும் வீர வசனம் பேசி அடி வாங்குகிறார். அவரது வசனங்கள் கதையோடு சம்மந்தப்பட்டதாக இல்லை. இலங்கைப்போராளிகளுக்கு ஆதரவான பொதுவான வசனங்கள். தில்லாவினால் துப்பாக்கியால் அடிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்கிறார்.
தோழர் கடத்தல் பற்றி வேறொரு போலீஸ் ஸ்டேஷனில் அபி புகார் செய்ய அவர்கள் வழக்கம்போல பாராமுகம் காட்டுகின்றனர். மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுமே ஆதிக்கு ஏவல் செய்வதாக காட்டுவது ரொம்பவே நெருகிறது.
அபியின் கம்பெனியைப்பற்றிய அவதூறு செய்தி இன்னொரு புதிய பத்திரிகையில் வர, கொதிப்படைந்த அபியும் விஸ்வநாதனும் அந்தப்பத்திரிகை அலுவலகத்துக்குப்போய் விளக்கம் கேட்க, அந்த செய்தியைத்தந்த துணையாசிரியரை ஆசிரியர் அறிமுகப்படுத்த, அந்த துணையாசிரியை வேறு யாருமல்ல, அபியின் தங்கை ஆனந்திதான். அபிக்கும் ஆனந்திக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. ஆனந்தி, தான் கொடுத்த செய்தி உண்மைதான் என்று சாதிக்க, அபியின் நிலை சங்கடம்.
கதையை நீட்டிக்க அதே பழைய அரைத்தமாவு சம்பவங்களே, புதுப்பிக்கப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன. இந்தப்பத்திரிகை விவகாரம் இன்னும் கொஞ்ச நாள் ஓடும். அதற்குள் வேறு ஐடியாக்களை யோசித்துக்கொள்ளலாம்.
-
15th September 2009 07:19 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2009, 07:47 PM
#1072
Senior Member
Veteran Hubber

Originally Posted by
saradhaa_sn
மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுமே ஆதிக்கு ஏவல் செய்வதாக காட்டுவது ரொம்பவே நெருகிறது.
சரியான சொல்தானா ? அல்லது இந்தத் தொடர் தங்களுள் ஏர்ப்படுத்திய பாதிப்பின் விளைவா ?
ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய
சொல்லி ஏசும்
ஏ தில்லா டாங்கு டாங்கு
அட என்னா உங்க போங்கு 
-
16th September 2009, 03:12 PM
#1073
Senior Member
Veteran Hubber
கதையை இழுப்பதற்கு கார்த்திக்-ஆனந்தி வாக்குவாதமும் உதவுகிறது. இடையிடையே இவர்கள் வாதங்கள் பெரும்பகுதியை ஆக்ரமித்துக்கொள்கின்றன (கொல்கின்றன..?). கார்த்திக் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறான். (ஏன் ஆனந்தியை வெறுக்கிறான் என்பதற்கான காரணம் மட்டும் வலுவாக இல்லை. சந்தேகம் மட்டுமா அல்லது ஈகோவா?)
மேனகாவின் வளர்ப்புத்தந்தை ஆதியைப்பார்க்க வருகிறார். மேனகாவின் தலைமறைவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நிறைய ஐயங்களைத் தோற்றுவித்திருப்பதாகச் சொல்ல, தான் அதையெல்லாம் சரி செய்வதாக ஆதி சொல்வதுடன், நாளை கமிஷனரை சந்திக்கப்போகும்போது அவரையும் அழைத்துப்போவதாக சொல்கிறான்.
தனக்கு முன் ஜாமீன் வாங்கிக்கொடுத்த வழக்கறிஞரை அபியும் விஸ்வநாதனும் சந்திக்கின்றனர். தோழரையும் அவரிடம் உள்ள ஆதாரங்களையும் காப்பாற்ற வேண்டும் என அபி கூற, இது விஷயமாக கமிஷனரை சந்திப்போம் என்று வக்கீல் சொல்கிறார். அபிக்கு அதில் உடன்பாடில்லை. மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுமே ஒன்று பணத்துக்கோ அல்லது அச்சுறுத்தலுக்கோ விலைபோவதாகச்சொல்ல, அப்படியானால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கோருவோம் என்று வக்கீல் சொல்கிறார். அபிக்கும் விஸ்வநாதனுக்கும் முகத்தில் நம்பிக்கை ஒளி. அதற்கு முதற்கட்டமாக முதல்வருடன் அவர்களுடைய சந்திப்புக்கு அப்பாயிண்மெண்டுக்கு ஏற்பாடு செய்வதாக வக்கீல் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.
சங்கரபாண்டியன் கொலையிலாவது அட்லீஸ்ட் அவரது மகள் ரேகாவை சிறையில் வைத்துள்ளனர். ஆனால் அர்ஜுன் கொலை 'அம்போ'வாகிவிட்டது. தோழரையும் போட்டுத்தள்ளிவிடலாமா என்று தில்லா கேட்க, அவரிடம் இருக்கும் ஆதாரங்களைக்கைப்பற்றும் வரையில் அவரை கொல்லவேண்டாமென்றும், அதிகபட்சம் சித்ரவதை செய்யுமாறும் ஆதி கட்டளையிடுகிறான்.
-
17th September 2009, 10:40 AM
#1074
Senior Member
Seasoned Hubber
இந்த கொலைகள் சீரியலை பார்பதில்லை என்று முடிவெடுத்தபின் எனக்கு இங்கு என்ன வேலை என்று நினைப்பவர்களே, மன்னிக்கவும். எப்படியும் 3, 4 நாளைக்குள் 1,2 காட்சிகள் பார்க்கும் கட்டாயம் வருகிறது. (Courtesy : Guests)
Let this serial go on and on and on... While we cannot do anything to make the serial interesting, we can atleast make this thread interesting by having a contest.
Guess the end :
If the readers of this thread agree, we can run this contest here. Everyone can tap their imagination or guess how Thols would like to take the serial seriously and predict the ending.
Thereby, we will have some fun with creative, unimaginable, funny, interesting posts.
Secondly, if Thols happens to visit this thread, he can also have some ideas to finish the serial and save the viewers.
Alternative would be, you can give different ending to different characters......
For eg :
Thozhar : Will be killed by Dhilla
Adhi : Will become mental
etc.. etc...
This is only my suggestion. If you feel that this is not right and we should have only the reviews, it is fine.
However, request Saradha to continue her write up with punch comments which is more interesting to read, than watching the serial itself.
Sudha
Coimbatore
---------------------------------------------
-
17th September 2009, 02:49 PM
#1075
Senior Member
Veteran Hubber
டியர் சுதா...
உண்மையில் மிக அருமையான யோசனையத் தந்துள்ளீர்கள். இந்த திரியை கொஞ்சமாவது சுவாரஸ்யமாகக்கொண்டு செல்ல உங்கள் யோசனையும், அதைத்தொடர்ந்து வாசகர்கள் தரப்போகும் முடிவுகளும் அமையக்கூடும்.
அதுமட்டுமின்றி, நீங்கள் சொன்னதுபோல ஒருவேளை தொல்ஸ் (என்கிற திருச்செல்வம்) இவற்றைக்காண நேர்ந்தால், அவரது சின்ன மூளையைக்கசக்கி இத்தனை நாள் யோசித்து வந்ததற்குப்பதிலாக.... 'அடடா, கதையை மேலும் இழுத்துச்செல்ல இப்படியும் வழிகள் இருக்கின்றனவோ' என்று எண்ணி மேலும் சில ஆண்டுகளுக்கு இழுக்கும் ஐடியாவை மேற்கொள்ளக்கூடும்.
இப்பவே மக்கள் மத்தியில், 'கோலங்கள்' சீரியல் என்றாலே, 'ஓ.... 25 நிமிஷம் விளம்பரமும் 5 நிமிஷம் கதையும் போடுவார்களே அந்த சீரியல்தானே' என்று கேட்கின்றனர். அந்த அளவுக்கு டி.ஆர்.பி.ரேட்டிங்கில் எகிறிப்போய் நிற்கிறது. ராடான் நிறுவனம், ஏ.வி.எம் எல்லாம் முயற்சித்தும்கூட இந்த ரேட்டை எட்ட முடியவில்லை. இந்த சீரியல் விகடன் ஒளித்திரைக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாகிவிட்டதால், திருச்செல்வம் என்ன சொன்னாலும் அந்நிறுவனத்துக்கு வேத வாக்கு. சன் தொலைக்காட்சி இருக்கும் வரை இந்த சீரியலும் ஓடுமோ என்ற ஐயமும் (அச்சமும்..?) மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ('தினத்தந்தி' பத்திரிகை இருக்கும்வரை 'கன்னித்தீவு' படக்கதையும் வரும் என்பதுபோல).
இந்த கோலங்கள் சீரியலின் தனிச்சிறப்பு, நீங்கள் எத்தனை நாட்கள் பார்க்காமல் விட்டு விட்டு, மீண்டும் பார்த்தாலும் கதையை (அப்படி ஒன்று இருந்தால்) புரிந்துகொள்ள முடியும். காரணம், செக்குமாடு மாதிரி அங்கேயேதான் சுற்றிக்கொண்டு நிற்கும்.
இந்த மாதிரி 'நீ............ண்ட' நாட்களாக (மாதங்களாக, வருடங்களாக) ஓடும் சீரியல்களின் மிகப்பெரிய குறை, ஏகப்பட்ட பாத்திரங்களை அறிமுகப்படுத்தி, அவர்களைக்கொண்டு கதையில் ஏகப்பட்ட முடிச்சுகளைப்போட்டு விடுவார்கள். அந்த முடிச்சுகளையெல்லாம் எப்படி அவிழ்க்கப்போகிறார்கள் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தால், எதற்கும் தெளிவான விடை சொல்லாமல் ஒருநாள் 'பொசுக்'கென்று முடித்து 'சுபம்' போட்டுவிடுவார்கள். இதுவரை முடிந்த எல்லா சீரியல்களுமே அப்படித்தான் முடிந்துள்ளன.
'கோலங்கள்' முடிவு (ஒருவேளை முடிந்தால்) என்னவாக இருக்கக்கூடும்..?.
1) அபியின் எல்லா பிஸினஸ்களையும் ஆதி முடக்கி விட்டு, அவன் வெற்றியின் எக்களிப்பில் இருக்கும்நேரம், அபி, விரக்தியின் எல்லைக்குப்போய் கையில் துப்பாக்கி எடுத்து அவனைச்சுட்டுத்தள்ளுவதும், அதைப்பார்த்து காஞ்சனா அபியைத்திட்டும்போது, 'உன் புள்ளை, எல்லோரையும் கொன்றபோது உனக்கு இனிச்சதில்லையா?. இப்போ மட்டும் ஏண்டி கத்துறே' என்று அவளையும் போட்டுத்தளுவதுமாக இருக்குமோ.
2) எண்ணத்தாலும், செயலாலும் அபியின் உயர்வையே குறிக்கோளாகக்கொண்ட தொல்காப்பியன், ஆதியச்சுட்டுத்தள்ளிவிட்டு, சிறைக்குப்போவதாக இருக்குமோ?.
3) தன் மூத்த குடும்பத்துக்கு எதுவுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கும் ஈஸ்வரன், ஆதியையும் காஞ்சனாவையும் போட்டுத்தள்ளிவிட்டு தியாகியாக மாறுவாரோ?
முடிகிறமாதிரி இருந்தால்தானே முடிவெல்லாம் தேவைப்படும். இந்த சீரியலுக்கு எதற்கு என்கிறீர்களா?.... அதுவும் சரிதான்.
-
17th September 2009, 07:10 PM
#1076
Moderator
Diamond Hubber

Originally Posted by
saradhaa_sn
டியர் சுதா...
இந்த கோலங்கள் சீரியலின் முடிகிறமாதிரி இருந்தால்தானே .
may be Thiruchelvam as director- end up in as insane/
-
18th September 2009, 11:04 AM
#1077
Senior Member
Seasoned Hubber
Aanaa.......... Thiruselvam romba clever. Nammalathan insane akkuvaar......
Thanks Sarada.........for accepting my suggestion and giving some climax options.
I will write later.... Konjam busy
Aanaa : Thread tilte : Kolangal - Guess the end : nu mathina innum neraiya per post panna koodum... Views mattum erudhu. But no one posts here. Andha alavukku hubbers veruthu poirukanga pola
Sudha
Coimbatore
---------------------------------------------
-
18th September 2009, 01:55 PM
#1078
Senior Member
Seasoned Hubber
My thoughts :
1) Adhi Abikku melum thollai kuduthu, again Abi courtil nikka, uyir kappan thozhan endru Thols Menakavudan aajaraagi Abiya kappathalam. Menakavum Thols than annan endru solli flash backs oda vittu prove pannalam. Idharkidayil Thols Menakavaiyum aval loveraiyum sethu vaikkalam.
2) Adhiyai CM moolamaga CBI - l matti vittu avan escape aga mudiamal oru mental stage agalam. Idhai pathu Kanchana heart break agai kaN moodalam. Azhumooji Karpagam, ini ellarume en kuzhandhaigalnu solli anandha kanneer vadikkalam.
3) Rekha, Menaka, Chittappa endru ellarum Aadhikku edhiraaga maari avan seidha NALLA seyalgalai ambalapadutha, court, jail, thooku - ku bayandhu Athi thannai thaane suttukkollalam. Kanchana also following him.
Idhellam oru pakkam irundhalum Baskar track thaniyaga odanum......avanadhu kolaigalai Abi therinju avanai thookuku anuppi, etc etc....
Apram irukkave irukku Anandhi, Mano, Aarthi-yin vazhkai...... adha vechu ellarum thirundha koranjadhu 2 varusham agalam
Ezhudhave ithanai neram agudhu. Idhai ellam serialil katta innum 4 - 5 years wait pannalam.
So edhukkum indha serial pakkaravanga adhutha thalaimuraikku "idhuvarai nadandhadhu"nu....... kadhai sonnal adutha thalai murai continuousa pakkum bothu TRP rating problem varama pathukalam.
//Yosikka yosikka egappata mudivugal varudhu. i think I can also write story for serial...
(Enna Saradha solreenga ?
) //
Sudha
Coimbatore
---------------------------------------------
-
18th September 2009, 01:59 PM
#1079
Senior Member
Seasoned Hubber
Solla marandhutten .......
idharkidayil Aanaa Kolaigal list - ai innum valarthukondeeeeee pogalam.
Saradha review ezhudha pidikkaamal indha thread pakkame varaamal pogalam....
Sudha
Coimbatore
---------------------------------------------
-
18th September 2009, 03:01 PM
#1080
Moderator
Diamond Hubber
innum intha serial paarthuttu thaan irukeengalaa
Bookmarks