Results 1 to 10 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சகோதரி சாரதா அவர்களுக்கு,

    எம்மைப் பாராட்டிய தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி !

    தாங்கள் எழுதியது போல் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை பிராட்வே யில் 176 நாட்களும், மேகலா வில் 176 நாட்களும் ஓடியது. காஸினோ வில் மட்டும், ஒரு வாரம் குறைவாக, 211 நாட்கள் ஓடியது. அதே காஸினோ வில் , முந்தைய ஆண்டில், 210 நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் சாதனையை, 211 நாட்கள் ஓடி எங்க வீட்டுப் பிள்ளை முறியடித்தது.

    அடுத்ததாக, மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பின், எம்.எஸ்.வி. அவர்கள் தனித்து இசையமைக்கத் தொடங்கிய முதல் படம் மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம். எனினும், அவர் தனித்து இசையமைத்த மக்கள் கலைஞரின் நீ , முதல் திரைப்படமாக வெளிவந்தது.

    மற்றொன்று, முருகன் திரையரங்கைப் பற்றி தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை. அதில் ஒரு கூடுதல் தகவல். நடிகர் திலகத்தின் நானே ராஜா திரைப்படம் தான் , அவரது திரைப்படங்களில், முருகன் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் (வெளியான தேதி : 25.1.1956). நடிகர் திலகத்தின் நானே ராஜா சென்னை மாநகரில் முதன்முதலில் 6 திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனையை ஏற்படுத்தியது. அசோக், சன், முருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன் ஆகிய 6 திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது.

    குழந்தையும் தெய்வமும் குறித்த ஒரு அபூர்வ தகவல் :

    ஏவிஎம் தயாரிப்பில், மக்கள் கலைஞரின் ஹீரோ நடிப்பில், பெண் குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி இரு வேடங்களில் கலக்கிய குழந்தையும் தெய்வமும் , மதுரையில் உள்ள சந்திரா திரையரங்கில் 99 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மதுரையில் உள்ள ஏனைய பெரிய அரங்குகளைப் போன்றே , மிகப் பெரிய திரையரங்கமான சந்திரா , 1550 இருக்கைகளைக் கொண்டது.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •