"பாட்டும் நானே! பாவமும் நானே!!
பாடும் உனை நான் பாட வைத்தேனே!!!"
[html:94014a8416]
[/html:94014a8416]
என நம் எல்லோரையும் தமது ஈடு, இணையற்ற நடிப்பால், விண்ணை முட்டும் சாதனைகளால் இயக்கிக் கொண்டிருக்கும் பராசக்தி, நமது இதயதெய்வம், கலையுலகின் குலதெய்வம் நடிகர் திலகம் அவர்களின் புகழ் பாடும் இத்திரியின் ஆறாவது பாகம் இன்று முதல் மிக வெற்றிகரமாகத் தொடங்குகிறது. சிக்கல் சண்முகசுந்தரம் குழுவினர் நாதஸ்வரங்கள் இசைக்க, மேளங்கள் முழங்க, தில்லானா மோகனாம்பாளின் நாட்டியம் கண்களுக்கு விருந்தளிக்க மிக மிக மங்களகரமாக, விமரிசையாக இத்திரியின் இப்பாகம் தொடங்குகிறது.
இத்திரியும், இப்பாகமும் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க எல்லாம் வல்ல இறைவனின் இறையருளையும், கலை தெய்வம் நடிகர் திலகத்தின் நல்லாசி மலர்களையும், நல்லிதயங்களின் நல்வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்!
முரளி சாரின் தலைமையில், அவரது இணையற்ற பங்களிப்போடு, அனைவரது பங்களிப்புகளையும் எப்பொழுதும் போல் ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்! இத்திரியின் மாடரேட்டர்களும், பங்களிப்பாளர்களும், பார்வையாளர்களுமே இதனை வளர்க்கும், சீர் தூக்கி நிறுத்தும் கல்தூண்கள்! அவர்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்!
நடிகர் திலகம் திரியினுடைய ஆறாவது பாகத்தை, யாம் துவக்கி வைக்க, அனுமதியளித்த திரு. நெள அவர்களுக்கும் ஏனைய மாடரேட்டர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எமது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பல கோடி பணிவான நன்றிகள்! இதனை எமது வாழ்வில் எமக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம், பாக்கியத்திலும் பாக்கியம் என்றே கூற வேண்டும். இதை விட வேறென்ன வேண்டும் ஒரு பக்தனுக்கு! வாய்ப்பளித்த திரு. நெள அவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் மீண்டும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும்!
நடிகர் திலகம் திரியில் பங்களிப்புகளைச் செய்ய "வந்தவர்கள் வாழ்க! மற்றவர்கள் வருக!" எனக் கூறிக் கொண்டு வாருங்கள், நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் பேசுவோம், எழுதுவோம் நடிகர் திலகம் எனும் நல்லவரைப் பற்றி; மகானைப் பற்றி; தெய்வத்தைப் பற்றி. அவரைப் பற்றியே வாழ்நாள் முழுதும் பேசுவோம், எழுதுவோம் என மீண்டும் ஒரு முறை சபதமேற்போம்!
ஆம்! இது வேறுலகம், தனியுலகம், நடிகர் திலகம் எனும் நல்லுலகம்!
அன்புடன்,
பம்மலார்.
[html:94014a8416]
[/html:94014a8416]
Bookmarks