நன்றி ஜெய். 1979 பாடல்களை நினைவு கூர்ந்ததற்கு. கதம்பமாக கலந்து கிடக்கும் ராஜாவின் பாடல்களை இனி ஆண்டு வாரியாக பிரித்துக் கேட்கும் ஆசையை தூண்டி விட்டிருக்கிறீர்கள். இதுவும் அவரின் அளப்பரிய ஆற்றலை எண்ணி மலைக்க உதவும்..

1979 -ல் வெளிவந்த ராஜாவின் இசைப்பாடல்களில் எத்தனைப் பாடல்கள் என்னிடம் உள்ளது எனக் கணக்கெடுத்து பார்த்தால்.. (தினமும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது பேருந்து பயணத்தில் கேட்டு பரவசமடையும் பாடல்கள் நீல நிறத்தில் )
-------
ஏதோ நினைவுகள் கனவுகள்
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
கீதா சங்கீதா
சின்ன புறா ஒன்று
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை
நானே நானோ யாரொதானோ
கண்மணியே காதல் என்பது
அழகிய கண்ணே
மயிலே மயிலே உன் தோகை
மலர்களில் ஆடும் இளமை
பூப்போலே உன் புன்னகையில்
வாட வாட்டுது
ஆகாய கங்கை
ஒரு தங்க ரதத்தில்
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
செவ்வானமே பொன்மேகமே
ஆயிரம் மலர்களே
இரு பறவைகள் மலை முழுவதும்
முதன் முதலாக காதல்
எங்கெங்கோ செல்லும்
தேவதை ஒரு தேவதை
யாரோ நீயும் நானும் யாரோ
இதயம் போகுதே
தந்தன தம்தன தாளம் வரும்
வான் மேகங்களே
வா பொன்மயிலே
மனதில் என்ன நினைவுகளோ
ஓரம்போ ஓரம்போ
சாமக்கோழி கூவையிலே
சோலைக் குயிலே காலைக் கதிரே
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
மாமன் ஒரு நாள்
வெத்தல வெத்தல
தென்னமரத்தில தென்றலடிக்குது
-------

திரைப்பாடல் இணையத்தளத்தில் 1979க்கான பாடல்களை கேட்கும்போது, ஒரு பொக்கிஷமும் கிடைக்கப் பெற்றது.. "யார் மாமனோ" என்ற வெற்றிக்கு ஒருவன் திரைப்பட பாடல்.. தாளக்கட்டில் ஒரு அற்புதமான கலவை முயற்சி. 2.46 நிமிடங்களே பதிவாகியிருக்கிறது இத்தளத்தில். முழுப்பாடலையும் கேட்க ஆவல்.

நல்லப் பாடல்கள் ஏதேனும் இங்கு விடப்பட்டிருந்தால் தெரிவிக்கவும்.