ஸ்டெஃபி

22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர்.

ஸ்டெஃபிக்கென்றே ஓசியில் படிக்கும் SportStar இதழ்களில் வரும் புகைப்படங்களை நறுக்கியோ, அல்லது கையாலேயே கிழித்தோ திருட்டுத்தனம் செய்த பள்ளிப் பருவம் இன்றும் இனிப்பானவை..

இணையக்கட்டுரையில் ஒருவர் தனக்குப் பிடித்த பத்து பெண்களை வரிசைப்படுத்தும் போது ஸ்டெஃபியை பட்டி இவ்வாறு எழுதியிருப்பது அருமை..

---------------------------
மற்ற வீராங்கனைகளைவிட ஸ்டெஃபியிடம் என்னைக் கவர்ந்தது ஸ்டெஃபியின் மாறாத பெண்மைதான்!!! எதிர்முனையில் உடல் இறுகி, ஆஜானபாகுவாய் மிரட்டும் முரட்டுப் பெண்கள், மெல்லினங்களின் இடத்திலெல்லாம் வல்லினங்களால் நிரம்பிய* எழுத்துப்பிழைகளாய் எழுந்து நிற்க.... மெல்லினக் கவிதையாய், குதிரைவால் காற்றில் குதிக்க நளிணமாக விளையாடி வெற்றிபெறும் ஸ்டெஃபி கிராஃபை இன்னும் மறக்கவில்லை
----------------------------