பாடல்: ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
திரைப்படம்: வண்டிச்சக்கரம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி

மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி
மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
அள்ளி அணைக்க சொல்லாதோ
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
அள்ளி அணைக்க சொல்லாதோ
அணைச்ச பக்கம் சிலிர்க்குதுன்னு
மயக்கம் கொள்ளாதோ...ஓ

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து

மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா
மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா
புது ரவிக்கை தந்தானா
அதை ரசிக்க வந்தானா
புது ரவிக்கை தந்தானா
அதை ரசிக்க வந்தானா
ரவிக்கை தந்த ரகசித்தை
உனக்கு சொன்னானா...ஆ

ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து