-
21st November 2010, 02:58 AM
#831
Moderator
Diamond Hubber
இறுதிக் கட்டத்தில் `கறுப்பு ரோஜா'
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வண்ணம் தயாராகி வந்த `கறுப்பு ரோஜா' தொடர், இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த தொடரில் பயன்படுத்துவதற்காக காமராஜரின் ஒரிஜினல் ஆடியோ, வீடியோ காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் மறைந்த அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு, காமராஜரின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவரின் உதவியாளர் வைரவன் போன்றவர்களின் அரிய பேட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. மறைந்த புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரத்தின் சேகரிப்பில் இருந்து மேற்கண்ட சந்திப்புகளும், அரிய புகைப்படங்களும் இடம் பெறுகின்றது.
இந்த தொடருக்காக விருதுநகர் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணம் செய்து காமராஜ் வாழ்க்கையை விவரிக்கிறார், சின்னத்திரை நட்சத்திரம் மோனிகா.
இறுதிக்காலத்தில் காமராஜ×டன் நெருக்கமாக இருந்த குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி போன்ற தலைவர்களின் பேட்டியும், பிரபல பேச்சாளர்கள் நெல்லை கண்ணன், பழ.கருப்பையா, தியாகு போன்றவர்களின் அனுபவமும் இடம்பெற உள்ளது.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் பெருந்தலைவர் காமராஜருக்கு இருந்த நெருக் கத்தை நடிகர் ராதாரவி விவரிப்பது நிகழ்ச்சிக்கு இன்னொரு அழகு.
இந்த தொடருக்கான வரலாற்று சம்பவங்களை எஸ்.கே.முருகன் எழுத, கே.எஸ்.சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்.கணேசன் இசை அமைக்க, படத்தொகுப்பு கேசவன்.
பார்ச்சூன் நெட்வொர்க் நிறுவனத்திற்காக ஆர்.பிரபாகரன் தயாரித்துள்ள `கறுப்பு ரோஜா' தொடர், விரைவில் சென்னை தொலைக்காட்சி, மற்றும் பொதிகையில் சனிக்கிழமை தோறும் இரவு 7.30-க்கு ஒளிபரப்பாக உள்ளது.
[html:5baed54f90]<div align="center">
</div>[/html:5baed54f90]
நன்றி: தினதந்தி
-
21st November 2010 02:58 AM
# ADS
Circuit advertisement
-
21st November 2010, 03:03 AM
#832
Moderator
Diamond Hubber
முந்தானை முடிச்சு-150
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் `முந்தானை முடிச்சு' தொடர், தற்போது 150 எபிசோடுகளை எட்டி இருக்கிறது.
சமீபத்தில் பல திருப்பங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த கந்தசாமி வீட்டு கல்யாணமே பட்டிதொட்டி எங்கும் நெகிழ்ச்சியுடன் பேசப்பட்ட நிலையில், கல்யாணத்திற்கு பிறகு நிகழும் சம்பவங்கள் பரபரப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்ல இருக்கின்றன.
சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் சதாசிவத்தின் சதி திட்டத்தால் லாரி விபத்திற்கு ஆளாகி உயிர் பிழைத்த முத்துக்குமாரை கொல்ல சதாசிவம் ஆஸ்பத்திரிக்கே ரவுடியை அனுப்பியிருக்க.. கணவனை நெருங்கியிருக்கும் ஆபத்தை அறியாமல் கவிதா அப்பாவியாய் அருகில் இருக்க... ஆஸ்பத்திரியில் நகரும் காட்சிகள் டென்ஷன் முடிச்சுக்களாக்கப் பட்டிருக்கின்றன.
ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்றுபோன நிலையில் காதலித்த பிரகாஷின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழரசி இன்னொரு புறம். அவள் பிரகாஷை சந்திக்கும் போது ஏற்படும் திருப்பங்கள், அதைத் தொடர்ந்து தோழி பிரியாவின் மூலமாக வரும் துரோகம், அதே தோழிக்கு நியாயம் கிடைக்க தமிழரசி நடத்தும் போராட்டம், அதற்காக அவள் படும் துயரங்கள் சுவாரஸ்ய முடிச்சுகளாக்கப்பட்டிருக்கின்றன.இன்னொரு பக்கம் கந்தசாமி வீட்டிற்கு மருமகளாக சென்று பழிவாங்கத் துடிக்கும் பிரேமா தன் திட்டத்தின் உச்சகட்டமாய் கந்தசாமி குடும்பத்திற்குள் உறவுக் காரியாய் நுழைகிறாள். தன் வாழ்க்கையையே பணயமாக்கி அவள் எடுத்திருக்கும் முடிவு ஆச்சர்ய முடிச்சாக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்து சைலஜாவின் மிரட்டலுக்கு பயந்து கொண்டிருந்த சரவணன், வெறுப்பின் உச்சத்தில் சைலஜாவுக்கு எதிராக திரும்பும் ருசிகரங்கள் அதிரடி முடிச்சுக்களாக்கப்பட்டிருக்கிறது.
தொடரின் கிரியேட்டிவ் ஹெட் மெட்டி ஒலி எஸ்.சித்திக்கிடம் தொடர் பற்றி கேட்டபோது,
``தமிழக மக்கள் விளக்கேற்றும் நேரத்தில் வழிபடும் திருப்தி யையும் தாண்டி இந்த தொடரானது மக்களுக்கு நிறைவை தரவேண்டும் என்பதே ஆசை'' என்கிறார்.
[html:58e9a6b081]<div align="center">
</div>[/html:58e9a6b081]
நன்றி: தினதந்தி
-
21st November 2010, 03:06 AM
#833
Moderator
Diamond Hubber
காஞ்சி மகா பெரியவரின் கடைசி விருப்பம்
ஸ்ரீ சங்கரா டிவியில் ஞாயிறு முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி, `காஞ்சி மகா பெரியவரின் கடைசி விருப்பம்.'
காஞ்சி மகா பெரியவரான சந்திரசேகரேந்திர சுவாமிகளின் தாயார் வாழ்ந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஈச்சங்குடி கிராமம். அவர் வசித்த வீட்டை பலர் வாங்கி மாற்றி மாற்றி விற்றபடி இருந்தனர்.
இந்நிலையில் மகா பெரியவர் `சித்தி ஆவதற்கு' சில மணித்துளிகள் முன்னதாக, பெங்களூரை சேர்ந்த வி.எஸ்.ஹரி என்பவர் மகா பெரியவரை தரிசிக்க அனுமதி வேண்டினார். அவருக்கு தரிசனம் தர சம்மதித்த பெரியவர், அவரிடம் தனது தாயார் வசித்த வீட்டை வாங்கி புனரமைத்து, அங்கே ஒரு வேத பாடசாலையை நிறுவி வேதம் கற்க விரும்பும் அனைவருக்கும் இலவசமாக சொல்லித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி ஆசிர்வதித்தார். அதன் பின்னர் மகா பெரியவர் யாரையும் சந்திக்கவில்லை என்பதும், தமது அறையிலேயே `சித்தி ஆனார்' என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகா பெரியவர் பணித்ததற்கு ஏற்ப தற்போது அவரது தாயார் வசித்த வீட்டை வாங்கி புனரமைத்து, அங்கே வேத பாடசாலையை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வின் தொகுப்பு ஸ்ரீ சங்கரா டிவியில் `காஞ்சி மகா பெரியவரின் கடைசி விருப்பம்' என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.
நன்றி: தினதந்தி
-
21st November 2010, 03:08 AM
#834
Moderator
Diamond Hubber
சிங்கப்பூரில் `மன்மதன் அம்பு'
கமல்ஹாசன் நடித்த `மன்மதன் அம்பு' படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ கலையரங்கில் இன்று மாலை நடக்கிறது. பிரபலங்களின் நடனங்களும், பாடல்களும்,இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் பிரத்யேக இசை நிகழ்ச்சியும் உண்டு. நடிகர் மாதவன், நடிகைகள் திரிஷா, சங்கீதாவின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கமல்ஹாசனின் பங்களிப்பும் முக்கிய அம்சங்கள்.
இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகிறது.
[html:a02726a605]<div align="center">
</div>[/html:a02726a605]
நன்றி: தினதந்தி
-
21st November 2010, 03:12 AM
#835
Moderator
Diamond Hubber
காதல் மீட்டர்
பல சுவையான மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ள விஜய் டி.வி.யில் இப்போது ஒளிபரப்பி வரும் புது நிகழ்ச்சி "காதல் மீட்டர்'. இந்நிகழ்ச்சியை "ஐடியல் குக்வேர் அன்ட் அப்ளையன்சஸ்' நிறுவனம் வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சி வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சின்னத்திரையின் பிரபல தம்பதியர்கள் பங்குபெறும் புதுமையான நிகழ்ச்சி இந்த "காதல் மீட்டர்'. திருமணமான ஜோடிகள், ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துள்ளனர்? இருவருக்கும் பிடித்த பொதுவான விஷயங்கள் என்ன? என்பதை அவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து தெரிந்து கொள்ளப்படும். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். புதுமையான இந்த நிகழ்ச்சியைத் திரைப்பட நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்கி வருகிறார்.
நன்றி: தினமணி
-
21st November 2010, 03:13 AM
#836
Moderator
Diamond Hubber
ஆதிபராசக்தி
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் புதிய பக்தித் தொடர் "ஆதிபராசக்தி'. நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கும் இந்தத் தொடரில் தமிழகத்தில் உள்ள சுமார் 108 அம்மன் பீடங்கள் எவ்வாறு உருவானது? என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு உற்சவ மாரியம்மனின் உக்கிரம்தான் காரணம் என முடிவு செய்தனர் மக்கள். இதன் காரணமாக விஜயநகர கோவில் உற்சவ மாரியம்மனை தந்தப் பல்லக்கில் ஏற்றி வெளியூருக்கு வழியனுப்பி வைத்தனர். இதனைத் தூக்கி வந்த அரச காவலர்கள் சமயபுரம் வந்ததும் தந்தப் பல்லக்கை தரையில் இறக்கி பசி, தாகம் தீர்த்துக் கொண்டனர்.
மீண்டும் பல்லக்கைத் தூக்க முயற்சித்தபோது அதை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. எனவே உக்கிரம் தீர்க்க மாரியம்மன் விக்கிரமபுரத்தில் அதாவது தற்போது சமயபுரத்தில் வீற்றுள்ளார் என்று நினைத்தவர்கள், பல்லக்கை அப்படியே விட்டுச் சென்றார்கள். சமயபுரம் மாரியம்மன் இன்றுவரை அவ்விடத்தில் இருந்து அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறாள் என்பது நம்பிக்கை.
இத்தொடரில் ஓ.ஏ.கே.சுந்தர், பிரவீணா, ஆனந்த், மோகன் வைத்தியா, டாக்டர் ஷர்மிளா, ராஜசேகர், மீரா கிருஷ்ணன், சஞ்சய், நந்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை : சரத், பாடல் : கவிஞர் முத்துலிங்கம், பாடியவர் : சித்ரா, திரைக்கதை, உரையாடல் : கே.பி. அறிவானந்தம், இயக்கம் : ஆர்.கோபிநாத்.
இத்தொடர் வெள்ளிக்கிழமைதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
நன்றி: தினமணி
-
27th November 2010, 10:28 PM
#837
Moderator
Diamond Hubber
ஜெய் அனுமான்
ஸ்ரீராமனின் பக்தனான வீர அனுமனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புராணத் தொடர் ஜெய் அனுமான். இலங்கையை அழிக்க குலகுரு சுக்ராச்சாரியார் உருவாக்கிய மூர்காசூரனிடமிருந்து, இலங்கையை காப்பாற்றும் ஜெய் அனுமானின் வீர, தீர செயல்கள் தொடராகியிருக்கிறது.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 6 மணிக்கு மெகா டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
நிகழ்ச்சியின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் எழுதி அனுப்பும் நேயர்களுக்கு தங்ககாசு பரிசும் உண்டு.
நன்றி: தினதந்தி
-
27th November 2010, 10:29 PM
#838
Moderator
Diamond Hubber
காதலிக்க நேரமில்லை
தகவல் தொடர்பு வேலை செய்யும் இரண்டு நண்பர்கள். நடுவே ஒரு அழகான பெண். அதில் ஒரு நண்பன் அவள் மீது காதல் கொள்கிறான். இன்னொரு நண்பன் வஞ்சனையில்லாது அவளுக்கு உதவுகிறான். இந்த உதவியில் பல உபத்திரவங்கள் வருகின்றன. முதல் நண்பனின் காதல் என்ன ஆயிற்று என்பதே சூர்யா பாலகுமாரன் இயக்கியிருக்கும் `காதலிக்க நேரமில்லை' டெலிபிலிமின் கதை.
நகர்ப்புறத்து இளைஞர்களின் குதியல் கதையாக்கப்பட் டிருக்கிறது. ஒரு புதிய, அதிகம் பேசப்படாத வாழ்க்கை பேசப்பட்டிருக்கிறது. படிப்பும் திறமையும் இருக்கின்றன. ஆனால் பக்குவப்படவில்லை என்பது காட்டப்படுகிறது. இரு நண்பர்களாக ப்ரவீன், சரத் நடித்திருக்கிறார்கள். காதல் பெண்ணாக ப்ரியா.
கதை: சிவா. கேமரா: ஈஸ்வரன். இசை: சத்யன் மகாலிங்கம். பாடல்கள்: சிம்மன், சூர்யா பாலகுமாரன். திரைக்கதை, வசனம், இயக்கம்: சூர்யா பாலகுமாரன். இவர் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தனியார் சேனலில் இந்த டெலிபிலிம் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
-
27th November 2010, 10:31 PM
#839
Moderator
Diamond Hubber
விளக்கு வச்ச நேரத்திலே..!
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `விளக்கு வச்ச நேரத்திலே தொடர் 175 எபிசோடை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மனநல சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப் படுகிறான், செல்லத்துரை. அவன் பெயரில் இருக்கும் திரண்ட சொத்துக்கு ஆசைப்படும் அவன் தாய்மாமாவோ அவனை கொல்ல ரவுடிகளை அனுப்புகிறார்.
செல்லத்துரை போலவே அச்சுஅசலாக இருக்கும் ஜானி கண்ணில் பட்ட பெண்களை தன் காதல் பார்வையில் வீழ்த்தி அவர்களை வெளிநாட்டுக்கு விற்கும் `பிம்ப்' வேலையை செய்து கொண்டிருந்தான். இந்த ஜானியின் கண்ணில் இப்போது படுகிறான், அவன் போலவே உருவ ஒற்றுமையுடன் இருக்கும் செல்லத்துரை. அவன் குடும்பபின்னணி பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளும் ஜானி, செல்லத்துரையின் இடத்துக்கு வர விரும்புகிறான். இதற்குள் தாய்மாமா அனுப்பிய ரவுடிகள் செல்லத்துரையை கடத்தி விட, அது ஜானிக்கு வசதியாகி விடுகிறது.
செல்லத்துரையின் வீட்டுக்கு வரும் ஜானி மீது யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் எழ வில்லை. இது ஜானிக்கு வசதியாகி விடுகிறது. சொத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும் தருணத்துக்காக காத்திருக்கிறான்.
இதற்கிடையே வந்திருப்பது செல்லத்துரை அல்ல என்பதாக ஒரு சந்தேகம் பிரதாப்புக்கு ஏற்படுகிறது. செல்லத்துரையின் மனைவி பவித்ராவின் நல்வாழ்வு ஒன்றையே மனதில் கொண்டு வாழ்பவன் பிரதாப். அவன் தன்னை சந்தேகிப்பது ஜானிக்கும் தெரிகிறது. அவன் பிரதாப்பிடம் இருந்து தப்பினானா? கடத்தப்பட்ட ஒரிஜினல் செல்லத்துரை என்னஆனான்? ஏற்கனவே ஜானியால் தற்கொலை செய்துகொண்ட சாவித்திரியின் மரணம் இப்போது ஜானியின் தலைக்கு இன்னொரு கத்தியாக வந்து கொண்டிருக்க, திருப்பங்களுடன் தொடர்கிறது தொடர் என்கிறார், இயக்குனர் சி.ரங்கநாதன்.
தொடரில் பவித்ராவாக சுஜிதா, பிரதாப்பாக சஞ்சீவ் நடிக்க, செல்லத்துரை, ஜானி என இரு வேடத்தில் கவுசிக் நடிக் கிறார். மற்றும் கலாரஞ்சனி, சிவன் சீனிவாசன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, இளவரசன், நித்யா, `தேனி'ராஜேஷ், `ஊர்வம்பு' லட்சுமி , பயில்வான் ரங்கநாதன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், மோகன் வைத்யா நடிக்கிறார்கள்.
கே.பாக்யராஜ் கதை, வசனம் எழுத, இயக்கம்: சி.ரங்கநாதன். எவர்ஸ்மைல் நிறுவனத்துக்காக தயாரிப்பு ஒருங்கிணைப்பு ஈ.ராம்தாஸ்.
நன்றி: தினதந்தி
-
27th November 2010, 10:32 PM
#840
Moderator
Diamond Hubber
இதயம் தொட்ட இரட்டையர்கள்
இரட்டைக் குழந்தைகள் எப்போதுமே ஆச்சரியம். ஒரேசாயலில் இருந்து கொண்டு பெற்றவர்களைக் கூட பலநேரங்களில் குழப்பி விடுவார்கள்.
இரட்டைக் குழந்தைகளிடம் உள்ள உணர்வுபூர்வ வித்தியாசங்கள் இன்னமும் பிரமிக்க வைப்பதாக இருக்கும். பல இரட்டையர்கள் இருவரும் ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ இருப்பார்கள். அபூர்வமாக ஒரு ஆண்- ஒரு பெண் என்ற விகிதத்திலும் இருப்பார்கள். பிறந்ததும் வீட்டையும் வளரவளர சுற்றுவட்டாரத்தையும் தங்கள் ஒரேமாதிரியான செயல்களால் ஆச்சரியப்படுத்தும் இவர்கள் பற்றிய சுவாரசியக்கதைகள் திரைப்படங்களாகவும் வந்திருக்கின்றன.
இப்படி ஒரே சாயலில் அமைந்த 30 இரட்டையர்களை 6 முதல் 16 வயது வரை தேடிப்பிடித்து வசந்த் டிவியில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியே `இதயம் தொட்ட இரட்டையர்கள்'. சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்த இரட்டையர்கள் தங்களையும் சுற்றுப்புறத்தையும் புரிந்து கொண்டு எப்படி தங்கள்வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள், ஒருவருக்கு நேரிடும் உணர்வு இன்னொருவரை எந்த விதத்தில் பாதிக்கும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத் தொகுப்பாக தருகிறார்கள்.
வசந்த் டிவியில் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி
Bookmarks