-
2nd February 2011, 10:41 AM
#41
Senior Member
Diamond Hubber
ஜெயமோகன் படைத்த "அறம்" சிறுகதையை இன்று பஸ் பிரயாணத்தில் வாசித்தேன். மனதைத் தொட்டது..
http://www.jeyamohan.in/?p=11976
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd February 2011 10:41 AM
# ADS
Circuit advertisement
-
2nd February 2011, 12:16 PM
#42
Moderator
Platinum Hubber
சுமாரான கதை.
monologue-இல் சிக்கி உள்ளிழுக்கப்பட போதுமான வசீகரம் இல்லை.
உக்கிரமான மனநிலை என்பதை நம்பவைக்க கொஞ்சம் பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனால் அது அவ்வளவு சிறப்பாக வெற்றிபெறவில்லை. உற்றுநோக்கும் பறவை சிறுகதையில் பங்கஜகாக்ஷன் நம்பி தன் நம்பிக்கையை ஆவேசமாக எடுத்துரைக்கும் ஒரு இடம் வரும். படிக்கும்பொழுது நெருடலாகவே தோன்றாது. இங்கு என்னதான் 'எங்கிருந்துதான் ஆவேசம் வந்ததோ தெரியவில்லை' என்ற ரீதியிலெல்லாம் எழுதினாலும் அந்த நம்பகத்தன்மையைக் கொண்டு வர முடியவில்லை.
வழக்கம்போல சூழல் சித்திரங்கள் அழகாகவும், lead up conversations நன்றாகவும் வந்திருந்தன. (எனக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலை). பிற்பகுது fizzle ஆகி விட்டது.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
3rd February 2011, 09:03 PM
#43
Senior Member
Diamond Hubber
One feedback from a reader
திரு ஜெ,
அறம் கதை எனக்கு சரியாகப் படவில்லை. அதில் மனிதர்களின் சுயம் தான் தெரிகிறது. அந்த செட்டி பெண் தன் வம்சம் பற்றின கவலையும் அவளின் மூட நம்பிக்கையையுமே சுயத்தை அதீதம் ஆக்கி விட்டு இருக்கிறது. அந்த புலவர் தப்பானவனாக இருந்தாலும் அவள் இந்த முடிவையே எடுத்து இருக்க கூடும். இங்கே எங்கே அறச்சிந்தனை தோன்றியது.
முத்துகுமார்
முத்துக்குமார்,
தெரியவில்லை. நான் அந்த அளவுக்கு பகுத்தறிவுடன் சிந்திப்பதில்லை. கொஞ்சம் மூடநம்பிக்கை உண்டு. பொதுவாக இலக்கியம் வாசிக்க கொஞ்சம் மூடநம்பிக்கை தேவை. நீங்கள் செய்தித்தாள்கள் வாசிக்கலாமே
ஜெ
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
3rd February 2011, 11:42 PM
#44
Senior Member
Seasoned Hubber
venkiram
ஒரு குசும்பர்யா நீர்
-
3rd February 2011, 11:44 PM
#45
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். முடித்த கொஞ்ச நேரத்திற்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை
-
4th February 2011, 01:23 AM
#46
Senior Member
Diamond Hubber
"நான் ‘மூணுநாளிலே ஒரு புக்கா?’ என்றேன். ‘எழுதினேன். இப்ப எனக்கே ஆச்சரியமா இருக்கு. பையனுக்கு ஒரு லெட்டர் போடணும்…ஏழுநாளாச்சு. இன்லண்டிலே நாலுவரி எழுதி அப்டியே வச்சிருக்கேன்…ஆனா அப்ப சாமிவந்தவன் மாதிரி எழுதினேன். ராமுழுக்க உக்காந்து எழுதுவேன். ஒரு நாளிலே நூறுபக்கம்வரை கூட எழுதியிருக்கேன். கை சலிச்சு ஓஞ்சிரும். காலம்பறபாத்தா புறங்கை வீங்கி மெதுவடை மாதிரி இருக்கும். அப்ப நான் சொல்லி என் பொண்ணும் பையனும் எழுதுவாங்க. மூணுநாளைக்கு ஒரு புக்கு வீதம் கொண்டுவந்து கொடுப்பேன். காலையிலே பிரஸுக்கு போயி புரூஃப் பாத்துட்டு மத்தியான்னம் பிரஸ்லேயே ஒரு தூக்கம். நேரா நடந்து லைப்ரரி போயி அடுத்த புக்குக்குண்டான மூலபுத்தகத்த எடுத்துட்டு வீட்டுக்கு போனா ஒரு காபிய சாப்பிட்டுட்டு எழுத உக்காந்திருவேன். படிக்கிறதும் எழுதறதும் எல்லாம் ஒரே சமயம் நடந்திட்டிருக்கும். சிலசமயம் விடிஞ்சாத்தான் எந்திரிக்கிறது…"
"ஆனாலும் கடைசி ரெண்டுவரியும் ஞாபகத்திலே இருக்கு.’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’
"கடனை வாங்கி தொழில்செய்றவன்கிட்ட போயி மொத்தமா பணத்தை கேட்டது என் தப்புதானேன்னு நினைப்பு ஓடுது’"
"அன்னிக்கு படி எறங்கினவன் அதுக்கு முன்னாடி இருந்த நான் இல்ல. செத்து பொழைச்சேன். அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்"
--------------
The above portions really moved me.. what a great narration Jeyamohan brings into?
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th February 2011, 01:33 AM
#47
Senior Member
Diamond Hubber
During second reading, I found a logical mistake. You people can confirm it.
At the time periyavar cursed the chettiyar wife with a harsh veNbaa, it says "நான் எழுதின முதல்செய்யுளும் அதுதான். கடைசிச் செய்யுளும் அதுதான். பாட்டு நினைவில இல்ல. அதை மறக்கணும்னுதான் இருபத்தஞ்சு வருஷமா முயற்சிசெய்றேன். ஆனாலும் கடைசி ரெண்டுவரியும் ஞாபகத்திலே இருக்கு.’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’ "
But at the end of the story, periyar says "தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா. தர்மபத்தினின்னு சும்மாவா சொன்னாங்க.ட்டுன்னு வெண்பா வந்துட்டுது. சடசடன்னு பேப்பரை எடுத்து எட்டு பாட்டு எழுதிட்டேன். அத ஆச்சி கையிலே குடுத்தேன். ரெண்டு கையாலே வாங்கி கண்ணுலே ஒத்திக்கிட்டா’".
So he actually wrote 2 poems in his life.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th February 2011, 02:46 AM
#48
Senior Member
Diamond Hubber
கடைசி சந்திப்பில் எட்டு வெண்பா வந்துருச்சுன்னு சொல்லிருக்கார். அப்போ மொத்தம் ஒன்பதா?
ஒரு வேளை அது எட்டு வெண்பாக்கள் அடங்கிய செய்யுளோ என்னமோ. அப்படி பார்த்தாலும் ரெண்டு செய்யுள் எழுதிட்டார்.
Last edited by Nerd; 4th February 2011 at 02:55 AM.
-
4th February 2011, 03:11 AM
#49
Senior Member
Diamond Hubber
நம்ம ரொம்ப பிளிற ஆரம்பித்தால் ஜெமோ உடனே "பெருசுக்கு அல்ஸைமர் வியாதி"ன்னு பிளேட்டை மாத்திடுவார்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th February 2011, 02:42 PM
#50
Senior Member
Seasoned Hubber
http://www.jeyamohan.in/?p=12144
somebody please post here what A.muthulingam said about aRam?
Bookmarks