Page 145 of 410 FirstFirst ... 4595135143144145146147155195245 ... LastLast
Results 1,441 to 1,450 of 4092

Thread: Manidharul Punithar, Maha-Avatar RAJINIKANTH News and Update

  1. #1441
    Senior Member Seasoned Hubber SuraTheLeader's Avatar
    Join Date
    May 2010
    Location
    Chennai
    Posts
    1,051
    Post Thanks / Like
    பழைய செய்தித்தாள்களைப் புரட்டியதில் தினத்தந்தியில் வெளியான ரஜினி வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளைக் காண நேர்ந்தது.

    அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியை ஏற்கெனவே ஒரு முறை, ஒரு பத்திரிகைக்காக இயக்குநர் கே பாலசந்தர் பேட்டி எடுத்த விவரம் வெளியாகியிருந்தது. 1985-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பேட்டி அது.

    இந்தப் பேட்டியைப் படிப்பவர்கள் நிச்சயம், சமீபத்தில் ரஜினியை கேபி எடுத்த பேட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே செய்வார்கள். இந்த புதிய பேட்டியில் கேட்ட சில கேள்விகளை, கேபி அன்றே ரஜினியிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி… ரஜினியின் பதில்களில் அதே தெளிவு, நேர்மை!

    ரஜினி – கேபி நேர்காணல் (1985):

    பாலசந்தர்: நான் உன்னை நடிக்க வைத்த போதெல்லாம், நீ அமைதியில்லாமல் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தாய். இப்போது அந்த பரபரப்பு இல்லாமல், சஞ்சலமில்லாமல் அமைதியாக வேலை செய்பவனாக, கடவுள் பக்தி உடையவனாக இருக்கிறாய். பத்து ஆண்டுகளுக்கும் இந்த மாறுதல் ஏற்பட எப்படி முடிந்தது?

    ரஜினி: பத்து வருஷத்துக்கு முன்பாக ‘பெரிய நடிகனாக வேண்டும், நிறைய சம்பாதிக்கணும். கார், பங்களா வாங்கணும்’ என்ற ஆசை நிறைய இருந்தது. மனுஷன் சந்தோஷமா, நிம்மதியா இருக்க இதெல்லாம் தேவை. இதெல்லாம் இல்லாம சந்தோஷமா, நிம்மதியா இருக்க முடியாதுன்னு நம்பி இருந்தேன். அப்போது பணம் எனக்கு ரொம்பத் தேவைப்பட்டது.


    இதை எல்லாம் நான் அடைந்த பிறகு மன நிம்மதியோ, சந்தோஷமோ நிச்சயமாக பணம், புகழில் இல்லை. அப்படி யாராவது நினைச்சா அது முட்டாள்தனம். இதெல்லாம் அதிகமாக வரவர சிக்கல்களும், பிரச்சினைகளும் ஜாஸ்தியாயிகிட்டே இருக்கும்.


    சுகம், நிம்மதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இதெல்லாம் நம்ம மனசுக்குள்ளேயே இருக்கு. இதெல்லாம் கிடைக்கிறதுக்கு ஆண்டவனோட அருள் வேணும்.


    பணம், புகழ் நிலையானது இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, அதைப் பொருட்படுத்தாம நடிக்கிறதுதான் என்னோட கடமைன்னு தீர்மானிச்சேன். தவிர, பேரையும், புகழையும் என்னோட மன நிம்மதி, சந்தோஷத்தோட சேர்க்கலை. அது தனி, இது தனி.

    பாலசந்தர்: புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன். அதிக படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு மத்தியில் ஜனநாயகம் நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க பிரபல நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும் மக்களிடையே புகழ் பெற்ற தேசியத் தலைவர்கள் அதிகமில்லாத சமயத்தில். இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

    ரஜினி: நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும், அதிலிருந்து நாம் பின் வாங்கக் கூடாது என்கிற உறுதியான எண்ணம் நம் மனதில் வரவேண்டும்.


    அரசியலை சாக்கடை என்று சொல்வார்கள். நாமும் அந்தச் சாக்கடையில் ஐக்கியமாகாமல் எதிர்நீச்சல் போட்டு எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற உறுதி வேண்டும்.


    அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நம்முடைய பொருளாதார வசதி, குடும்பச் சூழ்நிலை முதலியவற்றை ஒருநிலைப்படுத்திக்கொண்டு “இனி இங்கே வேலை கிடையாது. எனவே அரசியலுக்குப் போவோம்” என்ற எண்ணமில்லாமல், உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் அந்தச் சாக்கடையை சுத்தம் பண்ண நாம் போகவேண்டும். இல்லேன்னா சாக்கடைப் பக்கமே போகக் கூடாது.

    பாலசந்தர்: என்றாவது ஒரு நாம் அரசியலில் ஈடுபடலாம் என்கிற எண்ணம் உனக்குத் தோன்றுகிறது. பெங்களூரில் நீ பேசியதைக் கேட்டபின்பு, நீயும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதுதான் என் விருப்பம் கூட. உடனடியாக இல்லாவிட்டாலும், அமிதாப்பைப் போல சில ஆண்டுகம் கழித்து அரசியலுக்கு வரலாம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?

    ரஜினி: என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த தைவிட உங்களுக்கு நிறையவே தெரியும். என்னால் அரசியலில் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும் என்றும், அதற்கான அறிவு, தகுதி, சக்தி எனக்கு இருக்கிறது என்றும் நீங்கம் நம்பினால் அதற்கு நான் நிறைய கொடுத்து வச்சிருக்கணும்.


    பாலசந்தர்: வன்முறை சம்பந்தமான படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறாயே? நீ வன்முறையில் நம்பிக்கை உள்ளவனா என்ன? சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறை நிகழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறாய்?

    ரஜினி: எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. நான் வன்முறையாளனும் அல்ல. வன்முறை சம்பந்தப்பட்ட படங்களில் என்னை நடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது என்னுடைய நிலைமை, எனக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் திரும்ப நான் பணம் வாங்கித் தரவேண்டும். அவர்கள் நடிக்க வைக்கிறார்கள், நான் நடிக்கிறேன்.


    சமீபத்தில் நாட்டில் நடந்த வன்முறைக்கெல்லாம் காரணம் “நாம் அனைவரும் இந்தியர்கள்” என்ற உணர்வு நம்மிடையே குறைந்து வருவதினால்தான்.

    பாலசந்தர்: அபூர்வ ராகங்கம் ஷூட்டிங்கில் முதல் நாளன்று நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா?

    ரஜினி: அந்த நிகழ்ச்சி அப்படியே பசுமையாக நினைவில் உள்ளது.

    பாலசந்தர்: ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது நான் உன்னைத் திட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா?

    ரஜினி: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது.

    பாலசந்தர்: ‘உனக்கு நடிப்பே வராது’ என்று உரிமையுடன் அன்று உன்னைத் திட்டியது இன்று கவனத்துக்கு வருகிறது. அகில இந்தியாவிலும் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ என்கிறப் பெயரை இன்று நீ பெற்றுவிட்டாய். அதற்காகப் பெருமைப்படுபவன் என்னைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?

    ரஜினி: அதற்குக் காரணம் நீங்கம்தான். உங்களுடைய ஆசீர்வாதம்தான்…!
    Chillax.... !!!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1442
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    nice read STL... thanks for posting...
    aana 1985 interviewla agila indhiya super stara ellaam rajini irundhaaraa enna...?
    Sach is Life..

  4. #1443
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Quote Originally Posted by SuraTheLeader View Post
    இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது,
    என்னது? ஜெய்கணேஷ்? அவள்கள் படத்தில்? தப்பிச்சோம்.

  5. #1444
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by SoftSword View Post
    aana 1985 interviewla agila indhiya super stara ellaam rajini irundhaaraa enna...?
    During that period, he played a breezy innings in indhi - andhA kanoon (1983) was possibly his first and a big success. This was sattam oru iruttarai's remake.

    Then gangvaa was a big success too IIRC, in 1984 (malayur mambattiyAn remake).

    So, in a way, he was well-known in indhi at that time.

  6. #1445
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,327
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine View Post
    During that period, he played a breezy innings in indhi - andhA kanoon (1983) was possibly his first and a big success. This was sattam oru iruttarai's remake.

    Then gangvaa was a big success too IIRC, in 1984 (malayur mambattiyAn remake).

    So, in a way, he was well-known in indhi at that time.
    I think there were few more between 1982 & 1985 like Meri Adalat, Jeet Hamari, Wafadar, Geraftar, John Johny Janadardan etc....

  7. #1446
    Senior Member Senior Hubber Movie Cop's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    1,026
    Post Thanks / Like
    Quote Originally Posted by omega View Post
    I think there were few more between 1982 & 1985 like Meri Adalat, Jeet Hamari, Wafadar, Geraftar, John Johny Janadardan etc....
    AndhA kanoon is Rajini's lone hit in Bollywood. Geraftar is KH's show all the way what with 'angry yEng man' amitOp was made to eat a "humble pie" which led him to play some "behind the scenes" act post-'Saagar' mega hit to ensure that HassaR is sent back deep down south! In a way, kood for AmitOp (@ North), kood for Kamal (@South).
    Last edited by Movie Cop; 12th February 2011 at 06:24 PM.
    Indhiya cinema = Kamal HaasaR, Indhiya cricket = Sachin TendulkaR.

  8. #1447
    Senior Member Seasoned Hubber SuraTheLeader's Avatar
    Join Date
    May 2010
    Location
    Chennai
    Posts
    1,051
    Post Thanks / Like
    I saw this in some site....
    Not sure how true these details are...

    ரஜினியின் பிளாக்பஸ்டர் / சூப்பர் ஹிட் இந்திப் படங்கள்:

    1. அந்தாகானூன் – 50 வாரங்கள்

    2.கங்குவா – 50 வாரங்கள்

    3.ஜான் ஜானி ஜனார்தன் – 25 வாரங்கள்

    4. மேரி அதாலத் – 25 வாரங்கள்

    5. ஜீத் ஹமாரி – 120 நாட்கள்

    6.கிராப்தார் – 25 வாரங்கள்

    7.தோஸ்தி துஷ்மனி – 100 நாட்கள்

    8.பகவான் தாதா – 100 நாட்கள்

    9. மஹாகுரு – 100 நாட்கள்

    10.அஸ்லி நக்லி – 100 நாட்கள்

    11.வாஃபாதார் – 125 நாட்கள்

    12.உத்தர் தக்ஷின் – 100 நாட்கள்

    13.கெர் கனூனி – 100 நாட்கள்

    14.இன்சாஃப் கோன் கரேகா – 100 நாட்கள்

    15.சால் பாஸ் – 25 வாரங்கள்

    16.பூல் பனே அங்காரே – 25 வாரங்கள்

    17. ஹம் – 25 வாரங்கள்

    ரஜினி இந்தியில் நடித்த படங்கள் மொத்தம்: 28.
    Chillax.... !!!

  9. #1448
    Senior Member Senior Hubber Movie Cop's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    1,026
    Post Thanks / Like
    STL,
    Not sure from which source yout got this info - but andhA Kanoon is lone Rajini's Bollywood hit (excluding KH's 'Geraftaar' which was a 'hit' where Rajini played a cameo).
    Indhiya cinema = Kamal HaasaR, Indhiya cricket = Sachin TendulkaR.

  10. #1449
    Senior Member Seasoned Hubber SuraTheLeader's Avatar
    Join Date
    May 2010
    Location
    Chennai
    Posts
    1,051
    Post Thanks / Like
    சில்க் ஸ்மிதா படம்: ரஜினியாக நடிக்கும் நஸ்ருதீன் ஷா!

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினியாக நடிக்கிறார் பாலிவுட்டின் பிரபல நடிகர் நஸ்ருதீன் ஷா.

    தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் எண்பதுகளில் கவர்ச்சிப் புயலாக வந்தவர் சில்க். வெறும் கவர்ச்தசி நடிகை என்பதையும் தாண்டி, ஒரு அழுத்தமான நடிகையாகவும் தன்னை நிரூபித்தவர். இன்றுவரை அவருக்கு நிகரான நடிகையைப் பார்ப்பது அரிதாகவே உள்ளது.

    சில்க் ஸ்மிதா சென்னை வானொலிக்கு அளித்த பேட்டியில் (அவரது ஒரே மீடியா பேட்டி) தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று குறிப்பிட்டது ஒருவரைத்தான். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    ரஜினி படங்களிலும் தொடர்ந்து சில்க் ஸ்மிதா இடம்பெற்றிருந்தார். அன்றைய காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான ரஜினி படங்களில்

    அவர் இடம்பெற்றிருந்தார். மூன்று முகம், பாயும் புலி, தங்க மகன், முரட்டுக் காளை, அடுத்தவாரிசு, தாய் வீடு, துடிக்கும் கரங்கள் போன்ற பல ரஜினி படங்களில் சில்க் ஸ்மிதாவின் நடிப்பு பேசப்பட்டன. அடுத்த வாரிசு படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவர் சில்க்தான்.

    1996-ல் சாலிகிராமத்தில் தனது குடியிருப்பில் மர்மமாக இறந்து கிடந்தார் சில்க் ஸ்மிதா.

    காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை இந்தியில் சினிமா படமாக தயாராகிறது. மிலன் லுத்ரியாஇயக்குகிறார். ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தி டர்ட்டி பிக்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது!

    சில்க் ஸ்மிதாவின் உறவினர்கள் நண்பர்களிடம் கேட்டும் அவர் வாழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்தும் திரைக்கதை உருவாக்கியுள்ளார். சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

    சில்க் ஸ்மிதாவுக்குப் பிடித்த நடிகரான ரஜினி வேடத்தில் நடிக்க நஸ்ருதீன்ஷாவை இயக்குனர் தேர்வு செய்துள்ளார்.

    இதுபற்றி நஸ்ருதீன் கூறும்போது, ரஜினி, சில் க்ஸ்மிதா நடித்த படங்களின் சி.டி.யை இயக்குனர் எனக்கு அனுப்பி வைத்தார். ரஜினி நடித்த எந்திரன் படத்தையும் பார்க்க உள்ளேன். அதன் பிறகு ரஜினி போல் நடிப்பேன் என்றார்.

    ரஜினியைப் போன்ற உடைகள் நஸ்ருதீனுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரஜினியின் மேனரிஸங்கள் குறித்த காட்சிகளின் தொகுப்பும் அவருக்குத் தரப்பட்டுள்ளன.
    Chillax.... !!!

  11. #1450
    Senior Member Veteran Hubber
    Join Date
    Mar 2007
    Location
    Mocity
    Posts
    1,115
    Post Thanks / Like
    Quote Originally Posted by Movie Cop View Post
    STL,
    Not sure from which source yout got this info - but andhA Kanoon is lone Rajini's Bollywood hit (excluding KH's 'Geraftaar' which was a 'hit' where Rajini played a cameo).
    MC garu , Lone hit in what sense andi.? what about chaalbaaz,hum and others?

Similar Threads

  1. Title Update test
    By hamid in forum Testing
    Replies: 0
    Last Post: 3rd February 2011, 03:31 PM
  2. sangeetha maha yuddham
    By Plum in forum TV,TV Serials and Radio
    Replies: 33
    Last Post: 15th December 2010, 10:31 AM
  3. Update your bookmarks for this forum
    By Minni in forum Indian Food
    Replies: 2
    Last Post: 1st May 2005, 11:45 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •