-
18th February 2011, 12:32 AM
#1171
Dear Parthsarathy,
Superb posts! Your posts have an attractive flow and the language is lucid. Infact, I was telling the same things to Swami yesterday, while we were talking. No wonder, being a literature student [combined with your passion for NT],it brings out your true feelings in style. Keep them coming!
Regarding typing in Tamil, either you can use any soft ware or use the google transliteration window. The URL is http://www.google.com/transliterate/Tamil. You will get the window, where you have to type the Tamil words with English spelling. For example if you type Anbulla and press space bar you will get அன்புள்ள. You have to type the words with phonetic spelling. If you want மாளிகை, the spelling should be Maaligai. Once you are done you can cut paste the Tamil post into the thread and submit. Once you get used to it, things will be more easier.
Regards
-
18th February 2011 12:32 AM
# ADS
Circuit advertisement
-
18th February 2011, 09:17 AM
#1172
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு ராகவேந்தர் மற்றும் திரு முரளி அவர்களுக்கு,
உங்களது மறுமொழி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. திரு முரளி அவர்களின் பதிலும் திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, திரு Goldstar (தங்களது பெயர்?) திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால் மன்னிக்கவும்) அனைவரது வாழ்த்துகளும் இனிமையான ஊக்கமும் என்னை மேலும் எழுத வைக்கும்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
18th February 2011, 10:09 AM
#1173
Senior Member
Seasoned Hubber
திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, <b>திரு Goldstar (தங்களது பெயர்?) </b>திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால்
Dear Partha,
My name is Sathish, native of Madurai. Goldstar is our NT student wing name. We had Goldstar NT student wing on my school time (1986 to 1993) and Goldstar is very popular among Madurai NT fans group, because we used to carry out big big posters on NT re-release movies.
Cheers,
Sathish
-
18th February 2011, 10:46 AM
#1174
Senior Member
Senior Hubber

Originally Posted by
goldstar
திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, <b>திரு Goldstar (தங்களது பெயர்?) </b>திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால்
Dear Partha,
My name is Sathish, native of Madurai. Goldstar is our NT student wing name. We had Goldstar NT student wing on my school time (1986 to 1993) and Goldstar is very popular among Madurai NT fans group, because we used to carry out big big posters on NT re-release movies.
Cheers,
Sathish
Dear Sathish,
Thank you. I am born and brought up in Chennai but; my native is near Chingleput.
Even though I have never been part of a Rasigar Manram, we (about 10) from our area (Virugambakkam in Chennai) were (are too!) ardent fans of NT.
Cheers to you too,
Partha
-
18th February 2011, 10:57 AM
#1175
Senior Member
Senior Hubber
நடிகர் திலகம் - சில எண்ணங்கள்
நடிகர் திலகம் - சில எண்ணங்கள்
என்னுடைய முதல் ஏழு இடுகைகள் என்னுடைய நினைவுகளை அசை போடுவதாக அமைந்தது. இது மேலும் தொடரும். அந்த அளவிற்கு நடிகர் திலகம் எனது வாழ்வில் ஊனும் உணர்வுமாக (எனது வாழ்வில் மட்டும்தானா?) கலந்து விட்டிருக்கிறார். என் தாயார் நான் அவரின் ரசிகராக சரஸ்வதி சபதம் படத்தில் இருந்தே ஆகி விட்டதாகக் கூறினாலும், எனக்கு நினைவு தெரிந்தபிறகு, அதாவது, ஓரளவு புத்தி தெரிந்த பிறகு சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு, நான் அவருடைய ரசிகனானது, முதலில், ராஜா. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அவரது ரசிகர்கர் கூட்டம் - படை என்று கூட சொல்லலாம் - ஏராளமாகப் பெருகிக் கொண்டிருந்த காலம் அது. முக்கியமாக, சுமதி என் சுந்தரி அவருக்கு நிறைய காலேஜ் Students ரசிகர்களாக வழி வகுத்தது என சொல்லுவர்.
அவருடைய பல அற்புத நடிப்பில் உருவான கணங்களைப் பற்றி அனேக அன்பர்கள் ஏராளமான இடுகைகளை பதிவிறக்கம் செய்து விட்டீர்கள். ஒரு ஒற்றுமை அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் என்னவென்றால் (நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்) எல்லோரும் ஒரே மாதிரியாகத் தான் சிந்திப்போம். அவருடைய ஒவ்வொரு படத்திலும் சிறந்த பல/சில காட்சிகள் ஒரே மாதிரியாக அனைவரும் நினைவு கூர்வதுதான். அதனால்தான், ஒவ்வொரு படமும் திரை அரங்கில் பார்க்கப் படும் பொழுதும், குறிப்பிட்ட சில கட்சிகளில் ஆரவாரம் மொத்த அரங்கில் இருந்தும் இந்த நிமிடம் (இனி எப்பொழுதும் கூடத்தான்) வரை இருக்கிறது. இனி வரும் இடுகைகளில், நான் ரசித்த பல தருணங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
இது வரை ஆறு திரிகள் முடிந்து ஏழாவது திரியின் நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது திரியின் ஆரம்பத்தில் இருந்து நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்களைப் பற்றி பெரிய கருத்துக் கணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்கள் என்று அடக்குவதைக் காட்டிலும் இந்த முறை சரியாக இருக்குமா என்று பாருங்களேன்.
முதலில், நடிகர் திலகத்தின் பங்களிப்பை ஒரு பத்து படங்களில் அடக்குவது என்பது மிகச் சிரமம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இருப்பினும், இந்த முறை சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் உருவான பத்து படங்கள்
நடிகர் திலகம் நடித்த படங்களில் பத்து அற்புதமான படங்கள்
உதாரணத்திற்கு, முதல் வகையில், தெய்வ மகன் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, gauravam, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.
இரண்டாவது வகையில், தில்லானா மோகனாம்பாள் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, கை கொடுத்த தெய்வம் (நாங்கள் இந்த படத்தை போர்வை படம் என்று சொல்லுவோம் - ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை மயிர் கூச்செறியும் அளவிற்கு நடிப்பும் காட்சி அமைப்புகளும் ஒருங்கே அமைந்த மிகச் சிறந்த படம் - இன்று எத்தனையோ பேர் காமெடி track இல்லாத படம் என்று ஏதோ கூருகிகார்கள், இந்த படத்தில் தனி காமெடி track இல்லை. In fact அவருடைய ஏராளமான படங்கள் தனி காமெடி track இல்லாமல் வெற்றியும் அடைந்திருக்கிறது.), பாச மலர், படிக்காத மேதை, அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.
மூன்றாவது வகை ஒன்று உண்டு. அது, நடிகர் திலகத்தின் பிரத்யேக ரசிகர்ளின் நினைவில் நீங்காத படங்கள் - அதாவது அவருடைய ஸ்டைல் தூக்கலாக அமைந்து - அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்த படங்கள்.
இந்த மூன்றாவது வகையில் முதல் இடம் எப்போதும் வசந்த மாளிகை (இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?), ராஜா, என் தம்பி போன்ற படங்கள் வரலாம்.
நடிகர் திலகம் என்ற அந்த அற்புதக் கலைஞனை இப்படி வரிசைப் படுத்தி ஒன்று இரண்டு கூண்டுகளுக்குள் அடைத்து விட முயல்வது முடிகிற காரியம் இல்லை. அப்படி முயன்றால், அது என்னைப் பொறுத்த வரையில் தவறாகக் கூட இருக்கலாம்.
இப்படி முயலும் பொழுதே, அவருடைய சிறந்த படங்கள் குறைந்தபட்சம் ஐம்பதைத் தாண்டும் என்றால் இது மலைக்க வைக்கும் விஷயம்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
18th February 2011, 12:05 PM
#1176
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி,
தங்களின் முதல் ஆராய்ச்சிக்கட்டுரையே அட்டகாசமாக அமைந்துள்ளது. இதுவரை அவரது சிறந்த பது படங்கள் / 25 படங்கள் என்ற அளவிலேதான் அலசப்பட்டு வந்திருக்கிறது. முதன்முறையாக அவற்றை பலவகைப்படுத்தி, வகைக்கு பத்து படங்களாக அல்லது 20 படங்களாக அலசும் முறை சற்றே புதுமையானது மட்டுமல்ல, சிறப்புக்குரியதும் கூட.
அந்த வகையில் என்னைப்பொறுத்தவரை முதலிரண்டு பிரிவுப்படங்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் மூன்றாவது வகைப்படங்களுக்கும் உண்டு என்பது எனது பதிவுகளைப்படித்த அனைவருக்கும் தெரியும். காரணம் நடிகர்திலகத்தின் பொழுதுபோக்குப் படங்கள் மற்ற எந்தப்படங்களுக்கும் குறைவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
உங்கள் பதிவுகளின் துவக்கமே, இனிவரும் அற்புத ஆய்வுகளின் அச்சாரமாக விளங்குகிறது. உங்கள் பதிவுகள் எங்களை அசத்தப்போவது நிச்சயம்.
அசரக் காத்திருக்கிறோம்.
டியர் ஜோ,
கட்டபொம்மன் நாடக / மற்றும் திரைப்படத்தின் புகைப்படங்கள் அருமை. அதிலும் நாடகக் காட்சி கிடைத்தற்கரியது. நன்றி.
-
18th February 2011, 01:08 PM
#1177
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
parthasarathy
Dear Sir,
Thank you. It really requires monumental and dedicated efforts to do so many activities to remember NT, which you have been doing. I cannot imagine such dedication from my side. I can only enjoy / recollect / share various performances/moments.
Regards,
Partha
Thanks for your appreciation.
-
18th February 2011, 02:49 PM
#1178
Senior Member
Senior Hubber
திருமதி சாரதா மேடம் அவர்களுக்கு,
நன்றிகள் பல. நடிகர் திலகத்தின் படங்களை பலவகைப்படுத்தி ஏற்கனவே திரு முரளி அவர்கள் கட்டுரை எழுதியதாக நினைவு. இருப்பினும், இது சற்றே வித்தியாசமான முயற்சி.
இதற்க்கு தீவிர சிந்தனை அவசியமில்லை. ஏனெனில், நடிகர் திலகத்தைப் பற்றி நினைத்தவுடன் எண்ணங்கள் அவைகளாக வந்து விழும். நேரம் மற்றும் தமிழ் தட்டச்சு தான் தேவைப்படுகிறது. எனக்கு பொதுவாக ஏதோ ஒரு பாட்டின் முணுமுணுப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அது போல எப்போதும் நடிகர் திலகத்தின் ஏதோ ஒரு படம் அல்லது காட்சி எப்போதும் என் சிந்தனையில் இருந்து கொண்டே இருக்கும். நான் என் துறை நிமித்தமாக திடீர் திடீர் என்று ஏதோ ஒரு டீம்-க்கு எதாவது ஒரு சுப்ஜெக்ட்-ஐ பெற்றி பேச வேண்டி உள்ளது. அதற்கு எப்போதும் நடிகர் திலகத்தின் வெவ்வேறு திறமையான காட்சிகளையும் கவியரசு (ஒருவன்தான்) கண்ணதாசன் பாடல்களையும் பயன்படுத்துவது வழக்கம். அதனால், சுலபமாக என்னால் எழுத முடியும் என்றே தோன்றுகிறது. ஏழு திரிகளில் எக்கச்சக்கமாக எழுதிவிட்டதால் சிறிது மலைப்பாக இருந்தாலும், நடிகர் திலகத்தின் படங்களைப் போருதுவரையில், ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிய புதிய பல எண்ணங்களும் மலைப்பும் மேலோங்கிக்கொண்டே போவதால், சுலபமாக எழுதி விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நன்றி,
பார்த்தசாரதி
-
18th February 2011, 04:09 PM
#1179
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்த சாரதி,
அருமையான அலசல்கள். சகோதரி சாரதா அவர்கள் கூறியது போல் இந்த மூன்றாவது வகை தான் முதல் இரண்டு வகைகளிடம் நம்மை ஈர்த்தது என்றால் மிகையில்லை. இதில் ஒரு சிறப்பென்ன வென்றால், இந்த மூன்றையுமே அவர் தன் முதல் படத்திலேயே சித்தரித்து விட்டார் என்பது தான். மற்ற 304 படங்களும் நமக்கு போனஸ்.
இப்படி 304 படங்களை ரசிகர்களுக்கு போனஸாகத் தந்து அதிலும் சாதனை படைத்துள்ளார். எப்படிப் பட்ட தொய்வான படமாயிருந்தாலும் அவருடைய நடிப்பு நம்மை அமர வைத்து விடும். அப்படிப் பட்ட படங்களை ஒரு வகைப் படுத்தினால் நான்காக ஒரு வகை உருவாகும்.
சமீபத்தில் வசந்த் தொலைக்காட்சியில் மகேந்திரா அவர்கள் கூறியிருப்பது எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றி மிகவும் சிலாகித்து அவர் கூறியது. எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், அல்லது எவ்வளவு சுமாரான படமாயிருந்தாலும் ஏற்றுக் கொண்ட தொழிலில் பாகுபாடு காட்டாது ஒரே மாதிரி தன் உழைப்பை கொடுத்தவர் என்று கூறினார். சிலர் கூறலாம் அவர் இப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கக் கூடாதோ என்று, ஆனால் எனக்குத் தெரிந்த வரை, அதிலும் தன்னுடைய உழைப்பை 100 சதவீதம் சிரத்தையுடன் தந்தவர் என்று மகேந்திரா அவர்கள் கூறினார்.
தாங்கள் கூறிய மூன்றாவது வகையை மட்டுமே அவர் அதிகம் செய்திருந்தால், பலர் இந்தத் தொழிலில் மிகப் பெரிய விளம்பரத்தையும் பெயரையும் அடைந்திருக்க முடியாது. வர்த்தக நோக்கிலான கதைகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து சமுதாய பிரச்சினைகளை அலசும் படங்களை அதிகம் தந்ததனால் தான் அவருடைய படங்கள் காலங்கடந்து நிற்கின்றன.
தங்களுடைய தொடர்ந்த பதிவுகளுக்காக காத்திருக்கும்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th February 2011, 05:48 PM
#1180
Senior Member
Senior Hubber
டியர் திரு ராகவேந்தர்,
நன்றி. உங்கள் அனைவரது ஆதரவான பதில்கள் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது. உண்மையில், நேற்று முன்தினம்தான் நான் பராசக்தி படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என்னுடைய சக NT ரசிக நண்பர்களுக்கும் எப்போதும் நடக்கும் விவாதம் - நான் எப்போதும் சொல்வது அவர் முதல் படத்திலேயே முழுவதும் திறமையை காண்பித்து விட்டார் மற்ற எல்லா படங்களும் கொசுறு என்று. அந்த மறக்க முடியாத கோர்ட் சீன் வசனக் காட்சியில் - வெறுமனே வசனம் பேசுவதோடு மட்டுமில்லாமல் - அவர் கைகளை அந்த பிடிகளில் வைத்துக் கொண்டு பேசும் அந்த casual way அந்த கோர்ட் சிப்பந்தி (?) அவர்தான் பின்னாளில் அவருடைய பல படங்களிலும் மற்றும் நாடகங்களிலும் கூட நடித்தவர் - மற்றும் பல நாடகங்களின் இயக்குனர் - ஏன்- சத்யம் திரைப்பட இயக்குனரும் கூட - திரு S A கண்ணன் அவர்கள். (இது உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக தெரியும்) - அவர் நடுவில் குறுக்கிடும் பொழுது - கிண்டலாக narration - ஐ தொடரும் லாகவம். ஒவ்வொரு வசனத்திற்கும் அதற்கேற்றார்போன்ற முக பாவனை மாற்றங்கள். எந்த நடிகனால் இது முதல் படத்திலேயே சாத்தியம். அவர் ஒரு வற்றாத நீரூற்று மற்றும் எப்போதும் தன் கலையையும் அதன் மூலம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்களும் அடையும் மகிழ்ச்சி இது ஒன்றே தன் வாழ்க்கையாக நினைத்து கடைசி நிமிடம் வரையிலும் இருந்த அந்த அர்ப்பணிப்பு. நீங்கள் சொன்னதுபோல் எந்த படத்திலேயும் - regardless of his importance in the movie - அவரின் பங்களிப்பு இம்மி கூட குறைந்ததில்லை. மேம்போக்காக அவர் எந்த படத்தையும் எடுத்துக் கொண்டதில்லை தான்.
நன்றி,
Parthasarathy
Bookmarks