-
12th February 2011, 08:56 PM
#71
Senior Member
Veteran Hubber
SoaRRu kaNakku was really good but I didnt have the patience to read "aRam" - something was lacking and I lost interests half way through and stopped reading. Let me see if I can givea another try.
-
12th February 2011 08:56 PM
# ADS
Circuit advertisement
-
15th February 2011, 02:32 AM
#72
Senior Member
Diamond Hubber
தாயார்பாதம் கதை -
என்னத்த சொல்றது .. எண்ணங்களை கொட்ட வார்த்தைகளை தேட வேண்டியிருக்கு . கதை முடியும் இடம் - கவிதையா இருக்கு . அறத்திற்கு அப்புறம் பெண் பாத்திரம் இடம் பெற்ற கதை . மனதை உலுக்கும் நிகழ்வுகள் . பல இடங்களில் மனசாட்சியிடம் பேசுகின்றன . இவ்வளவு அற்புதமா ஒரு தாத்தா பாட்டியின் குணத்தை அக்கு வேறா ஆணி வேறா எழுதிவிட முடியாது .
எனக்கு பிடித்த வரிகள்..
அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’
எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…
‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார்.
அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது.
அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது.
ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை.
தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்
அறம், சோற்றுக்கணக்கு, தாயார் பாதம் படித்த மூன்றில் - எதையுமே தாழ்த்தி சொல்லமுடியவில்லை . அந்தந்த களத்தில் பல திசைகளில் கதை விரிவடைந்து கொண்டே இருப்பதால் கதைகளை இன்னொரு முறை வாசிக்கணும் என்ற எண்ணம் தொக்கி நிற்கிறது .
இன்னும் வணங்கான் கதை படிக்கவில்லை . வணங்கான் படித்து முடிக்கையில் அடுத்து மூன்று சிறுகதைகளை ஜெமோ எழுதித் தள்ளாமல் இருக்கணும் . இப்படி ராட்சசன் போல எழுதித் தள்ளுவது , இதற்கு இடையில் அந்தக் கதைகளுக்கான கடிதங்கள் வேறு.. இதெல்லாம் படிக்கணும் என்ற எண்ணத்தையே சிதைக்கும் வகையில் மலைப்பாக இருக்கிறது . இந்த லட்சணத்துல மீள் வாசிப்பு எல்லாம் எங்கே! எப்போ!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th February 2011, 07:56 AM
#73
Senior Member
Diamond Hubber
வணங்கான் மற்றும் யானை டாக்டர் இரண்டு சிறுகதைகளையும் படிச்சு முடிச்சாச்சி. நல்லதொரு மனவெழுச்சியைத் தரும் வாசிப்பு அனுபவங்கள். மனம் கனத்துப் போகிறது. சமுத்திரத்தை சிறு துளியில் அடக்கியது போல வார்த்தைகள் பிரமிப்பை பல முறை ஏற்படுத்தியது. நல்லதொரு சினிமா பார்த்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே ஜெமோவின் கதைகளை வாசிப்பதில் கிடைக்கிறது. யானை டாக்டர் வனத்தையும், வனம் சார்ந்த வாழ்க்கையையும் கண் முன்னே நிறுத்துகிறது. நிஜ மனிதர்களை மையமாகவோ, புறத்திலோ வைத்து புனையும் உத்தி மனத்தைக் கவர்கிறது. இந்த விஷயத்தில் ஜெமோவின் நேர்மை போற்றத் தக்கது. கிருஷ்ணமுர்த்தியையும் நேசமணியையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல. அறம் முதல் யானை டாக்டர் வரை நெகிழ்ச்சியான அனுபவங்களாக இருக்கிறது. சுகானுபவம். மானுடம் வெல்லும் என்பதை வணங்கானும், யானை டாக்டரும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஒரு எழுத்தாளர் வாழும் காலத்திலேயே நாமும் அவரது படைப்புக்களை வாசித்து இன்புறுவது ஒரு தனி சுகம். மரபைப் பேணும் ஜெமோவின் தன்மைக்கு வந்தனங்கள்.
வணங்கான் கதையில் ஜெமோ அங்கங்கே வைக்கும் நகைச்சுவைக் கண்ணிகளில் மாட்டிக்கொண்டு சிரிப்பதுண்டு.
நேராக வந்து ‘என்னவே இது?’ என்று காகிதத்தை ஆட்டி காட்டினார். ‘கவர்மெண்டு பேப்பராக்கும். அப்டி ஆட்டப்பிடாது’ என்றார் அப்பா.
எதிர்பாராதவகையில் படீரென்று ஒரு சல்யூட் அடித்தார்.
அப்பா சிரித்தார் ‘போலே, அறிவுகெட்ட மூதி. ஏலே எனக்க உடம்பு முழுக்க ஆனைக்க வாசனையாக்கும். ஆனைமணம் கேட்டா ஒரு நாயிநரி அருவில வருமாலே? நான் பின்ன எப்டியாக்கும்லே ஏமானுக்க முற்றத்திலே இருந்து தப்பினென்? பன்னிரண்டு நாயாக்கும் காவலுக்கு. எல்லாம் எனக்க ஆனைவாசன கேட்டு வால கவட்டைக்கெடையிலே வச்சுகிட்டுல்லா ஓடிச்செண்ணு மூலையிலே இருந்துபோட்டு”
‘லே அவன் சொன்னா என் தலய வெட்டுவியாலே?’என்றார் கணக்குப்பிள்ளை. ‘பின்ன? சார் சொன்னா வெட்டணுமின்னுல்லா சர்க்காரு சொல்லுகான். நீரு என்ன, பூஞ்ச பிள்ளவாள். சாரு சொன்னாருண்ணாக்க வந்து சமீன் தலைய வெட்டி கீழ வச்சிருவோம்லா? ஏது?’ என்றார் தேவர்.
ரோமங்கள் எல்லாம் சிலிர்த்தெழும் கணங்களும் உண்டு.
நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா? சாவுறதுக்கு நாடாரு ரெடியாக்கும்னு போயி சொல்லும்..போவும் வே’ என்றார்
நான் செத்தா அது அப்டி தீராது வே . குளவிக்கூட்டிலயாக்கும் நீரு கைய வைக்குதீரு. கெளம்பி வருவோம் வே. அலையலையா பெத்து பெறந்து வந்துகிட்டே இருப்போம். எம்பிடு பேர நீரு சுடுவீருண்ணு பாக்குதோம்’ என்று அப்பா சொன்னார்.
ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது.
ஆ- வென வாய் பிளந்து நிற்கும் இடங்களும் உண்டு.
எனக்கு என் பிறப்பிலேயே நான் மீறமுடியாத ஆணை ஒன்றை அளித்தார்.
Last edited by venkkiram; 20th February 2011 at 08:00 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th February 2011, 10:45 AM
#74
Senior Member
Seasoned Hubber
ஜெயமொகன் எழுதிய "கட்டு"ரையான -
ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும்
http://www.jeyamohan.in/?p=10189
அதிலிருந்து சில பத்திகள் :
".....அருந்ததி ராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு. ஏன்? இந்திய ஒருமைப்பாட்டை முதல் எதிரியாகக் கொள்ளும் இரு சக்திகள் ஒன்று சீனா, இன்னொன்று கிறித்தவ மதமாற்ற அமைப்புகள். அருந்ததி எந்நிலையிலும் சீனாவுக்கோ மிஷனரிகளுக்கோ எதிரான எதையும் சொல்வதில்லை. இவ்விரு சக்திகளும் வடகிழக்கில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பரவி இடதுசாரி தீவிரவாதமாக மாறியிருக்கிறது. அருந்ததி இந்த இரு சக்திகளின் ஊடகமுகம்.
ஆம், அருந்ததியை முதலில் ‘உலகப்புகழ்’ பெறச்செய்து, பின் நம் மீது சுமத்தி, நம் சிந்தனையை ஊடுருவியிருப்பது இந்தியாவை சிதிலப்படுத்த விரும்பும் மேலநாட்டுச் சக்திகளே என்று பொதுப்பார்வையில் உணர முடியும். அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்.."
இதற்கான காத்திரமான எதிர்வினை :
http://www.keetru.com/index.php?opti...008&Itemid=263
"... அருந்ததி ராயின் பழங்குடியின மக்கள் ஆதரவு எனும் அரசியலை மறுக்கவும், வைக்கம் போராட்டத்தில் பெரியாரது பங்களிப்பை மறுக்கவும் எவ்வாறு வக்கிரமாக அவர் வாதிடுகிறார் என்பது அவரது அரசியல் அதிகாரம் நோக்கிய செயல்பாட்டுக்கான சான்றுகள் என நாம் கருத வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பிற அதிகாரப் படிநிலைகளுக்குச் சவாலாகவும் சுயாதீனமாகவும், நேரடியிலான உறவு காணப்பட முடியாமல் நழுவிச் செல்லும் பண்புகொண்ட இலக்கியம், ஜெயமோகனிடம் அதனது அனைத்து பாசாங்குகளையும் உதறிவிட்டு பிரச்சாரமாக ஆகிவிடுவதை அவரது அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த கட்டுரைகளில் பார்க்கிறோம்.
இளையராஜா இலக்கியவிருது மாதிரியானதோ அல்லது விளக்கு அல்லது இயல் விருது மாதிரியிலானதோ அல்ல விஷ்ணுபுரம்இலக்கிய வட்டத்தின்செயல்பாடுகள். அதற்குப் பின்னால் ஜெயமோகனின் ஒரு உருவக சமூகம் இருக்கிறது. அந்த உருவக சமூகம் தமிழகத்தின் திராவிட மற்றும் இடதுசாரி மரபின் எல்லாவிதமான ஆக்கக்கூறுகளையும் கேவலமாக மதிப்பிடுபவை, அவமானப்படுத்துபவை, விகாரமாக வக்கிரத்துடன் எள்ளி நகையாடுபவை. இந்தக் காரணங்களாலேயே ஜெயமோகனது அரசியல்-கருத்தியல் செயல்பாடென்பது நுட்பமாக எதிர்கொள்ளப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். "
கோல்வால்க்கரினது வாசிப்பனுபவமும், மனுவின் நிகரனுபவமும் ஒருங்கே அமையப்பெற்ற சிலாக்கியத்தை ஏற்படுத்தும் ஜெமோ மற்றும் அவரது அடியார்களினது மானுட நேசம், கருணை மற்றும் இதமான பண்பு - நந்தனாரை கொளுத்திவிட்டு - அவர் சோதியில் கலந்துவிட்டதாக அருளாசி வழங்கினவர்களது - கருணையைச் சார்ந்ததாக இருப்பது ஒரு பொருட்டில்லை(தெற்குவாசல் திறந்தாச்சா?) .
எல்லையில்லா இவர்களது பெருங்கருணையை நம்மீது இன்னும் எத்தனை காலம் பொழிவார்களோவென அச்சத்தில் இருக்க வாய்த்ததும், கருணை வேண்டாமெனச் சொன்னாலும் விடாமல் வலிந்து பொழிவதும் தான் நமக்கு வாய்த்த வீடுபேறு போலும்.
Last edited by geno; 20th February 2011 at 10:55 AM.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
20th February 2011, 11:58 AM
#75
Senior Member
Diamond Hubber

Originally Posted by
geno
அந்த உருவக சமூகம் தமிழகத்தின் திராவிட மற்றும் இடதுசாரி மரபின் எல்லாவிதமான ஆக்கக்கூறுகளையும் கேவலமாக மதிப்பிடுபவை, அவமானப்படுத்துபவை, விகாரமாக வக்கிரத்துடன் எள்ளி நகையாடுபவை. இந்தக் காரணங்களாலேயே ஜெயமோகனது அரசியல்-கருத்தியல் செயல்பாடென்பது நுட்பமாக எதிர்கொள்ளப்படவேண்டும் என நாம் கருதுகிறோம்.
மத்தளம் இதுவரை ஒரு புறத்திலிருந்தே அடிக்கப்பட்டது. இப்போ தான் எதிர்ப்புறத்திலிருந்தும் சத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. திடமற்ற கருத்தியக்கயங்கள் வரப் போகும் காலங்களில் சுவடு தெரியா வண்ணம் அழிந்தே போகும். எத்தனை நாட்கள்தான் மக்களிடம் நல்லிணக்கத்தை குலைக்கும் வண்ணம் கவர்ச்சி வார்த்தைகளால் ஏமாற்ற முடியும்? இனி வரும் காலங்கள் போலிகளை தோலுரித்து காட்டி விடும் வெகுஜன மக்களுக்கு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st February 2011, 09:15 AM
#76
Senior Member
Diamond Hubber
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st February 2011, 11:45 AM
#77
Moderator
Platinum Hubber
தொடர்ந்து படித்தால் கொஞ்சம் சுமார் தான்.
ஒரு ideaவுக்காக வலிந்து உருவாக்கும் கதை, நிகழ்வுகள், உரையாடல்கள் என்கிற format சலிப்பு தட்டுகிறது.
கதை சொல்ல வருவது 'இது தான்' என்று reduce செய்ய முடியும் ஒரு coreஐ வைத்துக்கொண்டு பின்னப்படுவதே அவ்வளவு சிறப்பாக இல்லை.
தாயார் பாதம், வணங்கான் வரை தான் இதுவரை வந்திருக்கிறேன். தா.பா இவ்வகையில் reduce செய்யப்படக்கூடிய, அதற்குத் தோதாய் புனையப்பட்டது நன்றாகத் தெரிகிறது. ஒற்றைப்பரிமாண பாத்திர வார்ப்புகள். 'நிகரனுபவம்' எல்லாம் வாய்க்கவே இல்லை.
வணங்கான் சுவாரஸ்யமான கதை. எந்த level இல் pitch செய்வது என்று அங்கும் ஒரு குழப்பம் இருந்திருக்கிறது. வணங்கானின் அப்பாவை எவ்வயதிலிருந்து intellectualize செய்வது என்று தடுமாறியதாகத் தெரிகிறது. இல்லை 'சாதாரணமாக'ச் சொல்லப்பட்டதை வணங்கான் இன்று சொல்கிறபோது அவ்வாறு தெரிகிறதா என்ற குழப்பம் நீடிக்கிறது. வணங்கானின் அப்பா/தாத்தா வேலை செய்த பண்ணையில் ஜாதி அடுக்குகள், ஒடுக்குமுறை பற்றி விவரிக்கும் அந்த matter-of-factness நன்றாக வந்திருந்தது. அதே சமயம் 'பார்த்தாயா ஒரு எளிமையான மேல்Xகீழ் இருமை அல்ல, ஒரு வகை sequential ஒடுக்குமுறையாக்கும்' என்ற undertone ஒரு வித intellectualizationஐத் தருகிறது. திடீரென்று ஒரு ரெண்டு வரிகள் கதை நின்று, கட்டுரை படிப்பது போல இருந்தது
பண்ணையார் தேவரை கோமாளியாகக் காட்ட வேண்டும், சரி. அதற்கு: கபர்தாரா!!!?? என்ன காமெடி இது?
அவருடைய 'மாடன் மோட்சம்', 'மடம்' போன்ற கதைகள் கூட 'ஒரு கருத்தை' சொல்பவை தான். ஆனால் அதில் கட்டுரையின் 'துல்லியம்' கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கும். அதனால் அவை ஈர்த்தன என்று நினைக்கத் தோன்றுகிறது.
இவற்றில் சோற்றுக்கணக்கு அளவுக்கு எதுவும் நினைவில் நிற்பவையாக இல்லை.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
21st February 2011, 10:43 PM
#78
Senior Member
Seasoned Hubber
-
22nd February 2011, 03:46 AM
#79
Senior Member
Platinum Hubber

Originally Posted by
San_K
Typical marketing thingy...see the internal contradiction :
மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை.
இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம்.
விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி!
Will any businessman do that?
-
23rd February 2011, 09:03 AM
#80
Senior Member
Diamond Hubber
P_R,
உங்களது எதிர்பார்ப்பை மயில்கழுத்து பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். Let us see.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks