-
21st February 2011, 12:57 PM
#1521
Senior Member
Veteran Hubber
watched the NDTV award function.... trisha romba Over panraa
Ajay tried to pull down thalaivar by saying, all these heroines mothers are fan of Rajini... pranab covered by saying, even their kids will become fan of Rajini.
and Pa Chi's comment about thalaivar saying, "even now, Rajini will sweep the election"
ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய
சொல்லி ஏசும்
ஏ தில்லா டாங்கு டாங்கு
அட என்னா உங்க போங்கு 
-
21st February 2011 12:57 PM
# ADS
Circuit advertisement
-
22nd February 2011, 07:35 PM
#1522
Senior Member
Diamond Hubber
From junior vikatan about Kuselan.
சாய்மீரா... 'மர்மயோகி'
பல கோடிகள் சுருட்டப்பட்டதா?
சென்னை மண்டலம்
ஒரே நேரத்தில் 10 படங்களுக்குப் பூஜை,
கமல்ஹாசனின் 'மர்மயோகி’க்கு அட்வான்ஸ் தொகையாக மட்டும் 14 கோடி... இப்படி தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய சாதனை செய்தது பிரமிட் சாய்மீரா நிறுவனம். பட பூஜையின்போது அதன் நிர்வாக இயக்குநர் சாமிநாதன், ''இந்த நிறுவனத்தில் பணம் கொட்டிக்கிடக்கிறது. செலவு செய்யத்தான் வழியில்லாமல் தவிக்கிறோம்!'' என்றார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே நஷ்டக் கணக்குக் காட்டி அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதில் பணியாற்றிய 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக்கூட சம்பளம் கொடுக்கவில்லை. இந்நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த பணம் கிட்டத்தட்ட 1,000 கோடிகள், சப்தம் இல்லாமல் எங்கே போனதோ தெரியவில்லை. அது பற்றி யாருக்கும் கவலை இல்லை!
பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் குரூப் ஊழியர்கள் நல சங்கத் தலைவர் நரசிம்மன், பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம், சட்ட ஆலோசகர் பழனிவேல் ஆகியோரைச் சந்தித்தோம். '' 'சங்கமம்,’ 'மிஸ்டர் ரோமியோ’ படங்களைத் தயாரித்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நடராஜனின் பிரமிட் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சென்னை மடிப்பாக்கத்தில் கேபிள் டி.வி. நடத்திவந்த சாமிநாதன் என்பவரின் சாய்மீரா நிறுவனமும் இணைந்து 2004-ம் ஆண்டு, 'பிரமீட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை உருவாக்கியது. இந்த நிறுவனம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்தில் தனது தொழிலை நடத்தியது. சினிமா தியேட்டர்களைக் குத்தகைக்கு எடுப்பது, சினிமா தயாரிப்பு, கண்காட்சி நடத்துவது, தியேட்டரில் கேன்டீன், விளம்பரப் பணிகளை மேற்கொள்வது போன்ற வேலைகளை இந்த நிறுவனம் செய்தது.
'தொழிலை விரிவுபடுத்த பங்குச் சந்தையில் நிதி திரட்டப் போகிறேன்...’ என்று 2007-ம் ஆண்டு, பங்குச் சந்தையில் நுழைந்தனர். 100 கோடிகள் அளவுக்கு நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் இருந்து 2,000 கோடிகள் அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. பங்குச் சந்தை மூலம் 100 கோடிகள், வெளிநாட்டு முதலீடாக 400 கோடிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் இருந்து 520 கோடிகள் என்று மொத்தம் 1,020 கோடிகளுக்கும் மேல் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தினர். இல்லாதததை எல்லாம் இருப்பதுபோல காட்டித்தான் இந்தப் பணத்தை, இவர்கள் பெற்றனர் என்பது எங்கள் குற்றச்சாட்டு.
பணம் வாங்கியதும் இவர்களின் போக்கு மாறிவிட்டது, இந்தியாவின் பல பகுதிகளிலும், அயல்நாட்டிலும் முதலீடு செய்துள்ளதாகக் கூறினார்கள். 2008-09-ம் ஆண்டில், இந்த நிறுவனத்தின் விற்பனை வருவாய் 1,200 கோடி என்று கணக்குக் காட்டினர். ரஜினி நடித்த 'குசேலன்’ படத்தின் விநியோக உரிமையை சுமார் 60 கோடிக்கு வாங்கினார்கள். ஆனால், அந்தப் படம் சுமாராகப் போனதால், 30 கோடிகளே வருவாயாக வந்தன. விளம்பரதாரர்கள் மூலம் சில கோடிகள் கிடைத்தன. ரஜினியும், படத் தயாரிப்பாளரும் சில கோடிகளைத் திரும்பக் கொடுத்தனர். இதனால், பிரமிட் சாய்மீராவுக்கு நஷ்டம் ஒரு சில கோடிகள்தான்... ஆனால், 'குசேலன்’ படத்தால் நிறுவனமே நொடிந்துவிட்டதுபோல ஊரை ஏமாற்றிக் கடைசியில் நிறுவனத்தையே மூடிவிட்டனர்.
இவர்கள் முதலீடு செய்த நிறுவனங்கள், வாங்கிய நிறுவனங்கள் எல்லாம் 2008-ம் ஆண்டிலேயே காணாமல் போய்விட்டன. இவர்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் சிலவற்றில் சாமிநாதனின் மனைவி இயக்குநராக இருந்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தை பல கோடி கொடுத்து வாங்கினார்கள். கடைசியில் அதில் நஷ்டம் என்று வாங்கியவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டார்கள். இப்போது இந்தத் தொகை எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. இந்த நிறுவனத்தில் வேலை பார்த்த 400 ஊழியர்களுக்கு சம்பள பாக்கி மட்டுமே 4.5 கோடி. இதுதவிர எங்கள் பி.எஃப். பணத்தைச் செலுத்தாமல் 2.5 கோடி மோசடி செய்துள்ளனர்.
'பங்குச் சந்தையில் திரட்டப்பட்ட 800 கோடியில் ஒரு ரூபாய்கூட லாபம் இல்லை’ என்று சொல்லி மொத்தத்தையும் இந்தக் கும்பல் சுருட்டிவிட்டது. இவர்கள் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 'பங்குச் சந்தைக்குள் நுழையக்கூடாது’ என்று செபி அமைப்பு சாமிநாதனுக்கும், அவரது மனைவிக்கும் தடைபோட்டுள்ளது. கம்பெனியின் இயக்குநர்களாகப் பணியாற்றிய சிலர் பணியில் இருந்த காலத்தில், புதிதுபுதிதாக சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய சில கோடிகளை ஹவாலா முறையில் பெற்றுக்கொண்டார்கள் என்பது எங்கள் சந்தேகம். அதை, இயக்குநர் கூட்டத்தில் வாராக் கடனாக தள்ளுபடி செய்யப்படுவதாக சொல்லித் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கிடையே சாமிநாதனும், மோசடியில் உடந்தையாக இருந்த பிரபல சமூகத் தலைவர் ஒருவரும் சேர்ந்து பினாமி ஒருவரின் பெயரால் மீண்டும் வேறு பெயரில் நிறுவனம் தொடங்கி, பங்குச் சந்தையில் இறங்கி மக்களிடம் இருந்து பணம் திரட்டுவதற்கான வேலையில் இருக்கிறார்கள். இதைத் தடுத்தால்தான் மக்கள் பணம் மேற்கொண்டும் கொள்ளை போகாமல் தடுக்க முடியும்!'' என்று படபடத்தனர்.
சாமிநாதனின் கருத்தை அறிய பல முறை தொடர்புகொண்டோம். ஆனால், முடியவில்லை. பணம் மறைந்துபோன மர்மங்களுக்கு விளக்கம் தருவாரா சாமிநாதன்? அவர் விளக்கத்தை வாசகர்களிடம் கொண்டுசெல்ல நாம் தயாராக இருக்கிறோம்!
-
22nd February 2011, 07:59 PM
#1523
Senior Member
Veteran Hubber
If I quote something here about the NDTV award it won't go well with fellow members . For once I felt. This was a fabricated award.
Lets be honest I would say last decade belongs 1 entertainer "Mr. amir khan saab"
2001 Lagaan Aascar nominated
2001 Dil Chahta Hai
2006 Rang De Basanti
2007 Taare Zameen Par
2008 Ghajini
2010 3 Idiots
compared to that thaliavar's 2 movies Shivaji / Enthiran , remember they were talking about whole India and not South India alone.
Last edited by Dilbert; 22nd February 2011 at 08:29 PM.
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
22nd February 2011, 08:06 PM
#1524
Senior Member
Diamond Hubber
I agree that this award does not mean anything and NDTV was desperate to win some audience in SI but, Aamir Khan makes films to a wide audience. Bolly films are national events and even in the international arena bolly films >>> tamil films. Given all that, Robot beating the Aamir's 3I is unbelievable and deserves awards. Even the BOSS was a huge blockbuster.
-
22nd February 2011, 08:29 PM
#1525
Senior Member
Veteran Hubber
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
23rd February 2011, 03:38 PM
#1526
Senior Member
Senior Hubber
In my opinion, its not just the film release and its sucess that counts ... its the popularity (craze) of a person in that specific field. Rajini sir is far ahead than Amir or anyone in the Indian Film Industry. And the award is selected not by a (NDTV) panel, but by the common people thru internet + magazine. Its like a opinion Poll.
-
23rd February 2011, 03:55 PM
#1527
Senior Member
Diamond Hubber
Nerd,
I was desperate to post the Ju.Vi article. Thanks for the share. 
Keep a copy of this. We may need it in the future.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
23rd February 2011, 06:00 PM
#1528
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ajaybaskar
Nerd,
I was desperate to post the Ju.Vi article. Thanks for the share.
Keep a copy of this. We may need it in the future.

As one of the former Employees of Saimira (Before their misadventure with Pyramid), I very well expected this when I quit them 8 years ago.
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
23rd February 2011, 06:01 PM
#1529
Senior Member
Veteran Hubber

Originally Posted by
sathya_1979
As one of the former Employees of Saimira (Before their misadventure with Pyramid), I very well expected this when I quit them 8 years ago.
itha solla vendiya avasiyam illaiye
Come back strong.. Come back soon..
-
23rd February 2011, 06:08 PM
#1530
Senior Member
Veteran Hubber

Originally Posted by
hamid
itha solla vendiya avasiyam illaiye

Reason for my post - Their original business goals when they started the company were entirely different. Had they succeded in that, they would have done really well. But, when they vechified agala kaal, my premonitions came true.
Senior, my post was not a reply to AB, but a generic one.
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
Bookmarks