டியர் Joe மற்றும் பம்மலார் அவர்களுக்கு,
நடிகர் திலகத்தின் ஏராளமான படங்கள் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றாலும், குறிப்பாக குறைந்தது, ஐம்பது படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதாவது, ஒட்டு மொத்தமாக ஒவ்வொருவர் மனத்திலும் ஐம்பது. மேலும் பல படங்கள் ரசிகர் வட்டத்தைத் தாண்டி ஒரு சமூகத்தையே கட்டிப் போட்டு விடும். இருவர் உள்ளம் வந்த புதிதிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளிலும், பல இடங்களில் ஏற்படுத்திய அலை மலைக்க வைப்பதாகும். இது பெண் மனம் என்ற பெரிய வாசகர் கூட்டத்தைக் கொண்ட "லக்ஷ்மி என்ற புனைப்பெயரைக் கொண்டு கதைகள் எழுதி வந்த "திரிபுரசுந்தரி" அவர்களது நாவலாகும். இது நாடகமாகவும், நடிகர் திலகம் மற்றும் பத்மினி அவர்களால் நடிக்கப் பட்டதாகக் கூறுவார். இது படமாக எடுக்கப்படும்போது, பத்மினி திருமணம் புரிந்துகொண்டு அமெரிக்கா சென்று விட்டதால், ஒரு வேளை அவர்களால் திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த விவரங்கள், பம்மலார் மற்றும் முரளி அவர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும். ஆனால், என்னைப் போருதுஅவரை, இந்தக் கதாபாத்திரத்தில், சரோஜா தேவி தவிர்த்து (தேவிகா அவர்களும் ஒரு தொண்ணூறு சதவிகிதம்) வேறு எந்த நடிகையாலும் அந்த அளவிற்கு பொருந்தி செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இது ஒரு லவ் சப்ஜெக்ட் என்பதால், அந்த நேரத்தில் நடித்துக் கொண்டிருந்த சரோஜா தேவி மற்றும் தேவிகா மட்டும் தான் இதற்கு பொருந்தி இருப்பார்கள். ஏனென்றால், அந்த நேரத்தில் சாவித்திரியும் பத்மினியும் ஓரளவு முதிர்ந்த நடிகையாகி விட்டிருந்தனர்.
நடிகர் திலகம் ஒரு இயக்குனரின் கலைஞன் என்பதற்கு இந்த ஒரு படம் போதும் கட்டியம் கூற. எந்த ஒரு பாத்திரத்திலும், அவர் அளவிற்கு இலகுவாக பொருந்தக் கூடிய கலைஞன் இல்லை. அதனால் தான் அவருடைய versatility -ஐப் பற்றி இன்னமும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம் (YGM சோ உட்பட). இது போல் இன்னும் எத்தனையோ படங்களைப் பற்றி விரிவாக அலச வேண்டியுள்ளதால், இப்போதைக்கு சுருக்கமாக முடித்துக் கொள்ளலாம்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Bookmarks