Page 126 of 199 FirstFirst ... 2676116124125126127128136176 ... LastLast
Results 1,251 to 1,260 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1251
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 182

    கே: 150 படங்களை முடித்து மேலே நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் பற்றி...? (கவிதாசன், சென்னை-21)

    ப: நடிப்புத்துறையில் ஈடிணையற்றவர். செயல் வீரர். ஒரு உலக ரெக்கார்டையே ஏற்படுத்தியிருக்கும் ஒரே தமிழ் நடிகர்.

    (ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1252
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பம்மலார் குறிப்பிட்ட திருவருட்செல்வர் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1253
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மற்றும் பிரம்மாண்டமான அளவில் இடம் பெற்றிருக்கும் நடிகர் திலகத்தின் பேனர்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1254
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum View Post
    Parthasarathy, excellent posts. suvaarasyamAga ezhudhugiRIrgaL. One small nit pick - nata samrat in telugu actually means nadippu chakravarthy. The other facts you mentioned about trade mark dance moves of ANR are quite true.
    Dear Mr. Plum (your name please),

    Thanks for your appreciation and correction. You are exactly right. Nata Samrat means nadippuch chakkaravarthi in Telugu. I stand corrected.

    Regards,

    R. Parthasarathy

  6. #1255
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    அன்புள்ள பார்த்தசாரதி,

    நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். சில நாள் வெளியூர் சுற்றுப்பயணம் சென்றிருந்ததால் உடனே பங்கு கொள்ள முடியவில்லை. சில குறிப்பிட்ட படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அலசியது என்றாலும் கூட அதை செம்மையாக செய்திருந்தீர்கள். மேலும் இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீங்கள் எழுதியவற்றில் ஒரு சில திருத்தங்கள் மட்டும்.

    பாசமலர் ஒரிஜினலா என்று ஒரு கேள்விகுறி எழுப்பியிருந்தீர்கள். அது அக்மார்க் ஒரிஜினல். மூலக்கதை கொட்டாரக்கரா என்பதனால் உங்களுக்கு அந்த சந்தேகம் வந்திருக்கலாம். அவர் அந்த கதையை சொல்வதற்காக வெகுநாட்கள் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தாராம். ஆனால் வி.சி.எஸ். அவர்களை சந்திக்க முடியவில்லை. மோகன் ஆர்ட்ஸ் மோகன்தான் அவரை வி.சி.எஸ்.ஸிடம் அழைத்து சென்றார். பிறகு நடந்தது சரித்திரம். இதே கொட்டாரக்கரா மாற்று முகாமிற்கும் 1963-ல் ஒரு கதை கொடுத்தார்[பரிசு].

    அது போல ஓடயில் நின்னு படத்திற்கு சத்யன் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நமது நடிகர் திலகம் போலவே சத்யன் அவர்களுக்கும் ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்பட்டதில்லை.

    1971-ம் வருட தேசிய விருதிற்கு பாபு பங்கெடுக்கவில்லை. காரணம் அது ரீமேக் படம். சவாலே சமாளி படம்தான் விருதிற்கு அனுப்பப்பட்டது. அந்த "மாணிக்கத்தை" விட வேறு ஒரு நடிப்பு சிறந்தது என்று விருது கொடுத்தார்கள். 1967 முதல் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்ததை டெல்லியிலும் அரேங்கேற்றினார்கள்.

    மற்றப்படி மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

    அன்புடன்

    இருவர் உள்ளம் பற்றிய செய்திகள் சுவை.
    அன்புள்ள திரு முரளி அவர்களுக்கு,

    மற்ற எல்லா நண்பர்களும், எனது இந்த ரீமேக் படங்கள் பற்றிய பதிவுகளுக்கு பதிலளித்து, ஊக்கப்படுத்திவிட்டாலும், உங்களிடமிருந்தும் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நன்றி.

    இந்த பாகத்தைப் பொறுத்தவரை, எல்லா விதங்களிலும், சிறந்த பத்து படங்களை மட்டுமே (இந்த விஷயத்தில், சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.) எடுத்துக் கொண்டேன். மேலும், ஒவ்வொரு படத்தைப் பற்றியும் அநேகமாக எல்லா தகவல்கள் மற்றும் கருத்துகளையும் இங்கு ஏற்கனவே பலரும் பகிர்ந்து விட்டீர்களாதலால், ஒவ்வொரு படத்தைப் பற்றியும், சுருக்கமாகவே எழுதும்படியாகி விட்டது. இருந்தாலும், சில வித்தியாசமான எல்லோராலும் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சிகளை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.

    திரு அப்கலாபி (பெயர்?) அவர்கள் எனது பதிவிற்கு பதில் கூறும்போது, நடிகர் திலகம் நடித்த படங்கள் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்டு அங்கு அவை வெற்றி பெற முடியாமல் போனதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது, அவை நடிகர் திலகம் அளவிற்கு மற்ற மொழி நடிகர்ளால் நடிக்க முடியாமல் போனதனால்தான் என்று. நூற்றுக்கு நூறு உண்மைதான். அதில், பாசமலர் (மூலம் மலையாளம்?) என்ற வினாவை எழுப்பியிருந்தார். இதன் மூலக் கதைதான் மலையாளமே தவிர, அந்தக் கதை படமாக எடுக்கப்பட்டது, முதலில் தமிழில்தான் என்பது தெரிந்திருந்தாலும், இதையும் சேர்த்து, நடிகர் திலகத்தின் படங்கள் வேற்று மொழிகளில் எடுக்கப்பட்டது குறித்து விரிவாக இந்தப் பதிவின் இரண்டாவது பாகத்தில் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.

    ஓடையில் நின்னு பற்றிய திருத்தத்திற்கு நன்றி. தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது இந்தியாவில் வழங்கப்பட ஆரம்பித்தது முதன் முறையாக 1968 -இல் தான் என்னும்போது, சத்யன் ஓடையில் நின்னுவுக்காக விருது வாங்கியிருக்க வாய்ப்பில்லை தான். ஏனென்றால், ஓடையில் நின்னு 1965-லேயே வெளிவந்து விட்டது. (முதலில், உத்தம் குமார் தான் பாரத் விருதை ஒரு வங்காளப் படத்திற்காக வாங்கியிருக்கிறார். இவரது "அமானுஷ்" ஹிந்திப் படம்தான் 1978 -இல் நடிகர் திலகத்தின் ஜனரஞ்சகமான ஆனால், ஆழமான நடிப்பில், தியாகம் -ஆனது).

    இன்னொரு திருத்தத்திற்கும் நன்றி - அதாவது - பாபுவுக்காக பாரத் விருது வழங்கப் படாதது குறித்து. ஆனாலும், அந்த வருடம், நடிகர் திலகத்திற்குத்தான் அது கிடைத்திருக்க வேண்டும், கமிட்டி உறுப்பினர் ஒருவர் செய்த குளறுபடியால், அது மாற்று முகாமுக்குச் சென்று விட்டது என்று கூறுவர். (இது பற்றிய தகவலையும், முன்னொரு திரியில், படித்த ஞாபகம் இருக்கிறது.)

    நடிகர் திலகத்தின் 306 படங்களில், 250-க்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்து (இன்புற்று) விட்டதால், அத்தனை படங்களையும் விரிவாகவே அலசி விட முடியும். அதற்கு ஒரு பிறவி போதாதே!

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  7. #1256
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் அவர்களுக்கு,

    நீங்கள் பதிவிறக்கம் செய்த திருவருட்செல்வர் பட ஸ்டில்களும் இந்தப் படம் சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் வரப்போகிறது என்பதையும் அறியும்போது, உடனே படம் வெளியிடப்பட்டுவிடக்கூடாதா என்ற ஏக்கம் மேலிடுகிறது.

    எழுபதுகளில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருககும்போது, மாலை பள்ளி விட்டதும், சாந்தி அரங்க பஸ் நிறுத்தத்திற்கு தான் வருவேன். அங்கு வந்துதான் நான் அப்போது வசித்துக் கொண்டிருந்த விருகம்பாக்கத்திற்கு பஸ் பிடிக்க முடியும். அப்போதெல்லாம், அநேகமாக, தினந்தோறும், சாந்தி அரங்கத்தின் வெளியில் உள்ள பெரிய இடத்தில், நானும், எங்கள் குழுவும் (அவ்வளவு பேரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தானே!) குறைந்தது, அரை மணி நேரமாவது அந்த நேரத்தில் வெளியிடப்படவிருக்கும் நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களைப் பற்றி பேசி விட்டுத் தான் பஸ் படித்து அவரவர் வீட்டிற்குச் செல்வோம்.

    சமீபத்தில், புதிய பறவை, சாந்தியில் திரையிடப்பட்டபோது, ஞாயிற்றுக்கிழமை மாட்னி ஷோவிற்கு நானும் எனது சில நண்பர்களும் சென்று பார்த்தபோது, எங்கள் நினைவுகள் எங்கெங்கோ சென்றது.

    மறுபடியும், சாந்தியில், கூடுவதற்கு ஆவலாக இருக்கிறோம்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  8. #1257
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    டியர் பம்மலார் அவர்களே,

    தாங்கள் அளித்த தகவல்களுக்கு மிக்க நன்றி. பல்வேறு நுணுக்கமான தகவல்களையும் தங்களிடத்தில் எப்போதும் எதிர்பார்க்கிறோம்.

    இருவர் உள்ளம் படத் தகவல்கள் என் அன்னையிடமிருந்து கிடைத்தவை. நான் ஏற்கனவே குறிப்பிட்ட, ஆந்திராவிலுள்ள எனது கசின்கள் இந்தப் படம் 1961 -இல் நாகேஸ்வரராவும் கிருஷ்ணகுமாரியும் (சௌகாரின் தங்கை) நடித்து வெளிவந்த பார்யா பர்த்தலு என்ற படத்தின் தழுவல் தான் இது என்று வாதம் செய்து கொண்டிருந்தனர். இல்லை, இந்தப் படத்தின் மூலம் தமிழ் என்றும், இதை எங்கள் நடிகர் திலகம் ஏற்கனவே நாடகமாக நடித்து வெற்றி பெற்றார், எங்களிடமிருந்துதான் அது உங்களுக்குச் சென்றது என்றும், அப்போதுதான் இந்தத் தகவலை அவர்களுக்குத் தெரிவித்தேன்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  9. #1258
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர் பார்த்த சாரதி,
    எப்படி மதுரை நண்பர்கள் மதுரையைப்பற்றி சிலாகிக்கிறீர்களோ, அதே போன்று ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சென்னை சாந்தி திரையரங்கினைப் பற்றித் தன் வாழ்க்கையில் நினைக்காத நாட்களே இருக்க முடியாது. கிட்டத் தட்ட நமது வீடு போன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே திகழ்ந்தது, திகழ்கிறது சாந்தி திரையரங்கு. தாங்கள் தினந்தோறும் சாந்தி திரையரங்கு வருவதாக கூறியிருந்தீர்கள், அவ்வாறானால், என்னை நீங்கள் நிச்சயம் சந்தித்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். நேரில் பார்த்தோமானால் நினைவூட்டிக் கொள்ளலாம். சமீபத்தில் முரளி சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது தங்களை நான் சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறினேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் சந்திக்கலாம் என நம்புவோம்.
    ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்...

    அது வரை, சமீபத்திய சாந்தி திரையரங்கினை பட வடிவில் காணுங்கள்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1259
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அன்பு நண்பர் பார்த்த சாரதி,
    எப்படி மதுரை நண்பர்கள் மதுரையைப்பற்றி சிலாகிக்கிறீர்களோ, அதே போன்று ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சென்னை சாந்தி திரையரங்கினைப் பற்றித் தன் வாழ்க்கையில் நினைக்காத நாட்களே இருக்க முடியாது. கிட்டத் தட்ட நமது வீடு போன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே திகழ்ந்தது, திகழ்கிறது சாந்தி திரையரங்கு. தாங்கள் தினந்தோறும் சாந்தி திரையரங்கு வருவதாக கூறியிருந்தீர்கள், அவ்வாறானால், என்னை நீங்கள் நிச்சயம் சந்தித்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். நேரில் பார்த்தோமானால் நினைவூட்டிக் கொள்ளலாம். சமீபத்தில் முரளி சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது தங்களை நான் சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறினேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் சந்திக்கலாம் என நம்புவோம்.
    ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்...

    அது வரை, சமீபத்திய சாந்தி திரையரங்கினை பட வடிவில் காணுங்கள்.

    அன்புடன்
    டியர் ராகவேந்தர் அவர்களே,

    மிக்க மகிழ்ச்சி. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு நான் எழுதிய பதிலில், சாந்தி திரை அரங்கத்தில் நாம் அனைவரும் சந்தித்தால் என்ன? என்று எழுதலாம் என்றிருந்தேன். இருந்தாலும், விட்டு விட்டேன். ஆம். நாம் அனைவரும் சந்தித்தால் அது மிகவும் சுவையானதொரு சந்திப்பாகத்தான் இருக்கும்.

    மற்ற நண்பர்களிடமிருந்தும் இதற்கான பதிலை எதிர்நோக்கும்,

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  11. #1260
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அன்பு நண்பர் பார்த்த சாரதி,
    எப்படி மதுரை நண்பர்கள் மதுரையைப்பற்றி சிலாகிக்கிறீர்களோ, அதே போன்று ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சென்னை சாந்தி திரையரங்கினைப் பற்றித் தன் வாழ்க்கையில் நினைக்காத நாட்களே இருக்க முடியாது. கிட்டத் தட்ட நமது வீடு போன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே திகழ்ந்தது, திகழ்கிறது சாந்தி திரையரங்கு. தாங்கள் தினந்தோறும் சாந்தி திரையரங்கு வருவதாக கூறியிருந்தீர்கள், அவ்வாறானால், என்னை நீங்கள் நிச்சயம் சந்தித்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். நேரில் பார்த்தோமானால் நினைவூட்டிக் கொள்ளலாம். சமீபத்தில் முரளி சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது தங்களை நான் சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறினேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் சந்திக்கலாம் என நம்புவோம்.
    ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்...

    அது வரை, சமீபத்திய சாந்தி திரையரங்கினை பட வடிவில் காணுங்கள்.
    ராகவேந்தர் சார்,

    உங்களின் இந்தப்பதிவைப்படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னால் அது பொய். உண்மையில் ஏக்கமாக இருக்கிறது. நம் வாழ்வோடு ஒன்றிணைந்துவிட்ட சாந்தி திரையரங்க நிகழ்வுகளை எப்போது நினைத்துப்பார்த்தாலும் ஏற்படும் ஒன்று. சாந்தியுடனான எனது நினைவுகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து வருகிறேன் என்பது நீங்கள் அறிந்த ஒன்று.

    (சமீபத்தில்கூட சாந்தியின் பொன்விழா நிறைவன்று எழுபது என்பதுகளில் எனது மலரும் நினைவுகளை இந்த பதிவில் சொல்லியிருந்தேன். அதற்கு நீங்கள் பதிலும் அளித்திருந்தீர்கள். http://www.mayyam.com/talk/showthrea...Part-7/page104 )

    தற்போது உங்களுடையதும் நண்பர் திரு பார்த்தசாரதியுடையதுமான பதிவுகள் மீண்டும் மனதை கிளறி விட்டுவிட்டன. (நாம் சாந்தியில் வளையவந்த காலத்திலும் ஒரு பார்த்தசாரதி (என்கிற பட்டு), சேப்பாக்கம் சிவாஜி மன்ற தலைவராக இருந்தார். உங்களுக்கு நினைவிருக்கலாம்). இத்தகவல்களை உங்களுக்கு தனிமடலில் பதிவதே நியாயம் என்றாலும், ஒருவேளை இவர்களில் யாரேனும் ஒருவர் இப்பதிவுகளைப்படித்துவிட்டு நம்முடைய திரியில் கலந்துகொள்ளக்கூடும் என்பதாலேயே இந்த ஓப்பன் போஸ்ட். 1975 - 85 காலகட்டத்தில் கோவை சேது, தி.நகர் வீரராகவன், வடசென்னை நாதன் வாத்தியார், பாம்குரோவ் சந்திரசேகர், மாரீஸ் சந்திரசேகர், மந்தைவெளி ஸ்ரீதர் மற்றும் விஜி, பல்லவன் ட்ரான்ஸ்போர்ட் விஜி, சிவா, குருஜி, L&Tசெல்வராஜ், குடந்தை ஸ்ரீதர், புரசை 'புவனேஸ்வரி' ஆனந்த்... (இவ்ர்களோடு நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட செயல்வீரர் சீதக்காதி) உள்பட நாற்பதுக்கும் மேற்பட்டோர் தினமும் சாந்தியில் கூடி நாள்தோறும் எவ்வளவு விஷயங்களை விவாதித்திருப்போம்...!!!!. எவ்வளவு பசுமையான நாட்கள் அவை.

    படவெளியீட்டன்று கட்-அவுடகளுக்குப் போடப்படும் மாலைகள் பெரும்பாலும் சாந்தி வளாகத்தில் கூடும் ரசிகர்கள் ஏற்பாடு செய்யும் மாலைகளாகத்தான் இருக்கும். அவற்றை நாம், வடசென்னை ஏழுகிணறு பகுதியில் இருக்கும் ஒருகுழுவினரிடம்தான் ஆர்டர் கொடுப்போம். நிஜமான மாலைபோலவே காகித மாலைகள் செய்வதில் எக்ஸ்பர்ட் அவர்கள். பஸ்ஸில் பிராட்வே போய், அங்கிருந்து மாலைகளை இரவோடு இரவாக ஆட்டோவில் கொண்டுவந்து, தியேட்டரில் கட்-அவுட் அமைக்கப்படும் வரை காத்திருந்து, அதன்பின்னர் மாலைபோட்டு காற்றில் பறக்காமல் செக்யூர் பண்ணிவிட்டு, நள்ளிரவில் நடந்தே ஐஸ் அவுஸ் வரை வீட்டுக்கு சென்ற நாட்கள் பசுமையாக நினைவில் உலவுகின்றன. (மொழிமாற்றப்படமான 'வாழ்க்கை அலைகள்' படத்துக்கு, பாரகன் அரங்கில் காலை வரை கட்-அவுட் வைக்கப்படாததால், அவசரத்துக்கு, வேறு படத்துக்கு (புண்ணிய பூமி..?) தயாராயிருந்த கட்-அவுட்டைக் கொண்டுவந்து அரங்க முகப்பில் கட்டி, மாலை போடப்பட, மறுநாள்தான் படத்துக்கான ஒரிஜினல் கட்-அவுட் வந்தது).

    (காலச்சக்கரம் பின்னோக்கி சுழல்வதாக கதைகளில் மட்டும் எழுதுகிறார்களே அது நிஜத்திலும் நடக்கக்கூடாதா?).

    இப்போது மீண்டும் சாந்தியில் சந்திக்கப்போகிறீர்கள் என்பது நிச்சயம் ஏக்கம் தரத்தக்கதாக உள்ளது. இதற்காகவே சென்னை வந்துவிடலாமா என்றுகூட தோன்றுகிறது. ஆனால், நான் சென்னை வரும் சமயங்களில் உங்கள் அனைவரையும் நிச்சயம் சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கியிருக்கிறது.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •