-
27th March 2011, 11:29 PM
#11
Dear Rakesh,
Nice one liners. Reminds me of NT's own one liners about his movies. As Saradhaa had rightly pointed out you had confused Deivappiravi with Kai Kodutha Deivam. So much so that even Swami has been caught napping [a very rare occasion].
ராகவேந்தர் சார்,
பாலாடை படப் பாடலுக்கு நன்றி. விரைவில் டிவிடி ஆகவும் வெளிவரும் என நம்புவோம்.
டிவிடி என்று சொன்னதும் நினைவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு ஏவிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான Sound Zone என்ற கடைக்கு சென்றிருந்தேன் [TTK சாலை]. ஒரு சில படங்களின் டிவிடி கிடைக்குமா என்று கேட்பதற்காக. நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் மும்முரமாக டிவிடிகளை எடுத்துக் கொண்டிருந்தார். சில படங்களின் பெயரை சொல்லி அவை இருக்கிறதா என்று கேட்டு கேட்டு எடுத்தார். இறுதியில் 25-க்கும் மேற்பட்ட டிவிடிகளை வாங்கியிருந்தார். பில் போடும்போது கவனித்தேன். அனைத்து டிவிடிகளுமே நடிகர் திலகம் நடித்த படங்கள். மருந்துக்கு கூட வேறு படங்கள் இல்லை.
அந்த தளத்தின் மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன செய்திகள். இப்போதெல்லாம் இது போன்ற டிவிடி கடைகள் ஓடிக் கொண்டிருப்பதே பழைய படங்கள் மூலம்தான். புதிய படங்களின் டிவிடிகள் விற்பனை மிக குறைவு. அதே நேரத்தில் பழைய படங்களின் டிவிடிகள் அமோகமாக விற்பனையாகிறது. குறிப்பாக அதில் முன்னணியில் நிற்பது நடிகர் திலகத்தின் படங்களே. அநேகமாக அவரின் அனைத்து படங்களுமே விற்று விடுகின்றன. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடிகள் சில நல்ல பிரிண்டில் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் கூட அந்த டிவிடிகளின் விற்பனையில் தேக்கம் இல்லை. அவர்களின் கடையைப் பொறுத்தவரை [ஏவிஎம் என்பதால்] டிவிடி பிரிண்ட் சரியில்லை என்றால் அதை வாங்கும் வாடிக்கையாளரிடம் முன்பே சொல்லி விடுவார்களாம். அப்படியிருந்தும் என்ன கொஞ்சம் கட் கொஞ்சம் ஜம்ப் இருக்கும் அவ்வளவுதானே பரவாயில்லை என்று சொல்லி வாங்கி போகிறார்களாம்.
பலரும் வந்து அவர்களுக்கு வேண்டிய நடிகர் திலகத்தின் படங்களை லிஸ்ட் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று சொன்னவர் ஒரு குறிப்பிட்ட ரசிகர், நடிகர் திலகத்தின் படங்களில் இதுவரை வெளிவராத டிவிடிகளை ஒரு நோட் புக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு போயிருப்பதை எடுத்துக் காட்டினார். அதில் இதுவரை டிவிடியாக வெளியாகாத நடிகர் திலகத்தின் ஆரம்பகாலப் படமான கண்கள் முதல் பூ பறிக்க வருகிறோம் வரை வரிசைகிரமமாக வருடவாரியாக வெளியான படங்கள் எழுதப்பட்டிருந்தன. நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களைகூட விடாமல் எழுதியிருந்தார். அந்த ரசிகரை பற்றி விசாரித்த போது மறைந்துவிட்ட ஒரு பிரபல தமிழக அரசியல்வாதியின் சகோதரர் என்பது தெரிந்தது. இந்தப் படங்களின் டிவிடி கிடைத்தால் என்ன விலை கொடுத்தும் வாங்க தயார் என்று சொல்லியிருக்கிறாராம். கடையை விட்டு கிளம்புவதற்கு முன் அவர் சொன்ன இரண்டு விஷயங்கள்.
டிசம்பர் இறுதியில் பெண்ணின் பெருமை மற்றும் விடிவெள்ளி டிவிடிகள் வெளியாகின. இந்த மூன்று மாதத்தில் மட்டும் அவர் இந்தப் படங்களின் 1000 டிவிடிகள் விற்றிருக்கிறார். [எண்ணிக்கையை மீண்டும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டேன்].
இரண்டாவது விஷயம் அப்படியே அவரின் வார்த்தைகளிலேயே "சார், கணேசன் இருக்கும் போது அவரின் பெருமைகள் பலருக்கும் தெரியவில்லை. இப்போது உணர்கிறார்கள். இனியும் உணர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்". இத்தனை விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்ட அவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டது தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்று.
அன்புடன்
-
27th March 2011 11:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks