Page 155 of 199 FirstFirst ... 55105145153154155156157165 ... LastLast
Results 1,541 to 1,550 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1541
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    ஞான ஒளி (தொடர்ச்சி...)

    தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வந்து சாரதா வந்திருப்பதை செக்ரட்டரி சொன்னவுடன், உடனே, அந்த வாஞ்சையைக் காட்டி சட்டென்று முகத்தை சாதாரணமாக மாற்றி, அவரை வரச்சொல்லு என்று கூறுவார். சாரதா வந்தவுடன் மேரி வாம்மா! என்று கூறி பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தும் தன்னை அப்பா என்று சொல்ல முடியாமல் சில நாள் தவித்து, பின்னர் இப்போது பார்க்கும்போது அடைந்த அன்பு மற்றும் நெகிழ்ச்சியினை முழுவதுமாக ஆனால் மிக மிக subtle -ஆக காண்பித்து, அவரை இதமாக அணைத்து, அவரது நெற்றியில் முத்தமிட்டு, அன்பை வெளிப்படுத்தும் விதம்; சாப்பாட்டு மேஜையின் மேல், கஞ்சிக்கலயம் இருப்பதை சாரதா பார்த்தவுடன், என்னம்மா நான் கஞ்சி சாப்பிடறேன்னு பார்க்கிறியா? நான் எப்பவும் அதே பழைய அந்தோணி தாம்மா என்று சொல்லி, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஓடிச் சென்று ப்ரிட்ஜைத் திறந்து, பழங்களை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, பிரிட்ஜைக் காலால் முதலில் மூட முயன்று, முடியாமல், மறுபடியும் முயன்று காலால் மூடி, மேஜை அருகில் வந்து அமர்ந்து, பழத் துண்டுகளை சாரதாவுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்ல, அவர் அதை மறுத்து, இல்லையப்பா, நான் உங்களோடு சேர்ந்து கஞ்சியே சாப்பிடுறேன் என்று சொன்னவுடன், ஸ்டைலாக, கைகளில் இருக்கும் பழத் துண்டுகளை வீசி எரிந்து விட்டு, கஞ்சியை அவருக்குக் கொடுக்க, இருவருக்கும் பழைய நினைவுகள் மலர்ந்து, கலங்கி நெகிழ.... பார்க்கும் அத்தனை பேரையும், இது படம்தான் என்பதை மறக்க வைத்து, அவர்களுடன் பயணம் செய்ய வைப்பார் நடிகர் திலகம், ஊர்வசி சாரதா அவர்களின் மிகச் சிறந்த ஒத்துழைப்போடு! சாரதா உண்மையில், நடிகர் திலகத்தை சந்தித்து, அவரை ஜெய கௌசல்யா திருமணத்திற்கு வரவேண்டாம், வந்தால், மேஜர் திட்டம் போட்டு அவரைக் கைது செய்து விடுவார் என்று கூறி, உடனே ஊரை விட்டுக் கிளம்புமாறு வேண்ட, முதலில் மறுத்து, பின், ஒத்துக் கொண்டு, செக்ரடரியைக் கூப்பிட்டு டிக்கெட் புக் பண்ணச் சொல்லும்போது, அங்கு வரும் மேஜர், "It 's too late உங்களை அவ்வளவு தூரம் கிளம்ப விட மாட்டேன் என்று கூற, நடிகர் திலகம் பதற, மேஜர், என் மகன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூற, ஒரு மாதிரி நடிகர் திலகம் பெருமூச்சு விடுவார். சாரதாவை வீட்டுக்குத் தன் காரில் கொண்டுபோய் விடுகிறேன் என்று சொல்ல, சாரதா இல்லை என்று கூறி தானே செல்லும் போது, வெறும் காலில் முள் தைத்துவிட, அதைப் பார்த்துக் கலங்கிய நடிகர் திலகத்தைப் பார்த்து, மேஜர் கிண்டல் செய்து பின்னர் கிளம்ப, வெறுப்பின் உச்சிக்கே நடிகர் திலகம் சென்று அங்கு perform செய்யும் அந்த "one act play " - "அலையறான் ... அலையறான்... என்னைப் பிடிக்க அலையறான் ... ஒன்கிட்ட நான் பிடிபட மாட்டேண்டா.... லாரன்ச்ச்சச்ஸ் என்று சொல்லி "you can't catch me " என்று கூறி முடிக்கும் அந்த ஸ்டைல்...... அரங்கில் கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடிக்கும்!

    கடைசியில், மாதா கோவிலில், மேஜர் அவரது பெண்ணை இழிவாகப் பேசப்பேச, நடிகர் திலகம் கோபத்தின் உச்சிக்கே சென்று, மேஜை மேல் இருக்கும், அந்த மரத்துண்டைப் பிடுங்கி (அவர் அதைப் பிடுங்கி எடுக்கும் விதம், அசலாக இருக்கும் ... அது ஏற்கனவே பிடுங்கி ஒப்புக்காக வைக்கப்பட்டிருந்தாலும்!) அந்த அளவுக்கு உக்கிரமாக நடிகர் திலகம் எடுக்கும் போது, மெய் சிலிர்க்கும். அப்படியே சென்று, மேஜரிடம், நான் யாருன்னு உனக்கு நிஜமா தெரியாது? சாரதாவைக் காட்டி இவள் யாரென்று தெரியாது? என்று கூறி கெஞ்ச, மறுபடியும் மேஜர் இல்லை நீங்கள் யார் என்று தெரியாது. அவரது பெண்ணைக் காட்டி, இவள் நடத்தை கெட்டவள் என்று மேலும் மேலும் கூற நடிகர் திலகம் கோபாவேசத்துடன் ஓடிச் சென்று மெழுகுவர்த்தி ஹோல்டரை எடுத்து மறுபடியும், மேஜரை அடிக்கப் போக, மேஜர் "ம்ம். ஏன் நிறுத்திட்ட. ஓங்கியது உன்னோட இடது கை. உன் மனசில் இருப்பது மிருக உணர்ச்சி" என்று சொல்ல, நடிகர் திலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இல்லை, நான் திரும்பவும் ஒரு தப்பு செய்ய மாட்டேன். என்று கூறி அங்கிருப்பவர்களிடம் "நான் தான் மாதா கோவில்ல மணி அடிச்சிக்கிட்டிருந்த அந்தோணி என்று ஸ்டைலாகக் கூறி மேஜரிடம் "இப்ப சொல்லு. என் பெண் களங்கமற்றவள் என்று சொல்லு" என்று கூறி, "Am I not your Friend" என்று கூறும்போது மேஜருடன் சேர்ந்து அனைவரும் (மக்களும் தான்!) கலங்கி, நடிகர் திலகமும், மேஜரும் தழுவிக் கொள்ள, இவ்வாறு மேஜரின் திட்டத்துக்கு பலியாகி மறுபடியும் கைதாகி, இருவரும் ஜீப்பின் பின் இருக்கையில், சிரித்துக் கொண்டே செல்லும்போது - ஒரு கதாநாயகன் கடைசிக் காட்சியில் கைதாகி செல்லுவதைக் கூட மக்களை ரசிக்க வைத்த படம். (சாலையிலுள்ள போர்டில் "நன்றி மீண்டும் வருக" என்று முடியும்போது, எல்லோரையும் திரும்பத் திரும்ப பல நாட்கள் ஏன் இன்னும் கூட வரவைக்கின்ற மகத்தான படமாக, ஞான ஒளி முடியும்.

    இந்தப் படம் நடிகர் திலகம் நடித்த எண்ணற்ற முக்கியமான படங்களின் வரிசையில் - அதாவது ஒரு காட்சி கூட சோடை போகாத படங்களின் வரிசையில் - மிக மிக முக்கியமான படம். (தெய்வ மகன், வசந்த மாளிகை, அவன்தான் மனிதன் வரிசையில்.)

    ஞான ஒளி, 1980 -இல் ஹிந்தியில், தேவதா என்ற பெயரில் படமாக்கபட்டபோது, சஞ்சீவ் குமார், நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும், டேனி (ஆம் ரஜினியின் ரோபோ வில்லன்தான்) மேஜர் பாத்திரத்தையும் ஏற்றனர். சென்னை தேவி வளாகத்தில், இந்தப் படம் நன்றாக ஓடியது. அதற்கான ஷீல்டை இப்போதும் அங்கு பார்க்கலாம். சஞ்சீவ் குமாரும் ஹிந்தியில், அந்தோணி பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார் என்று கூறினாலும், நடிகர் திலகத்தின் ரேஞ்சை அவரால் நெருங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும், அவர் வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனலாம். மேலும், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் நலம் விரும்பியும் கூட.

    தொடரும்,

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1542
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Kulama Gunama for Viewing Pleasure


  4. #1543
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கர வருட தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் சித்திரைத் திருநாளான 14.4.2011 வியாழன் முதல், சென்னை 'சாந்தி' காம்ப்ளெக்ஸில், கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியம் திரையிடப்பட உள்ளது.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வார இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

    இந்த அருமையான செய்தியை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1544
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் பார்த்த சாரதி,
    ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்குள்ளும் ஊறிக்கிடக்கும் ரசிப்பு வேட்கையினை மீண்டும் மீண்டும் கிளறி எழுப்பும் வண்ணம், தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. அதிலும் எண்ணிலடங்கா முறை நாம் பார்த்த படமாயிருந்தாலும் ஒவ்வொரு முறையிலும் புதிய பரிணாமத்தினை வெளிக்கொணரும் அவருடைய நடிப்பின் ரசிப்புத்தன்மை வேறு எந்த நடிகருக்கும் கிட்டாததாகும். குறிப்பாக தாங்கள் மேற்கூறிய ஞான ஒளி காட்சியினை படிக்கும் புதிய தலைமுறையினர், அதனை நேரில் காணும் போது மேலும் அதிகப் படியாக ஈர்க்கப் படுவர். அப்படி அனைவரும் அணுஅணுவாக ரசிக்கும் வண்ணம் இதோ நீங்கள் குறிப்பிட்ட காட்சி - I mean the Silver Tumbler.



    அன்புடன்
    ராகவேந்திரன்
    அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

    நான் பதிவிட்ட ஞான ஒளி படத்தின் இரண்டாவது பாகத்தைப் படித்து பாராட்டியதோடு நிற்காமல், உடன் அந்த "சில்வர் தம்ப்ளர்" காட்சியையும், அதன் பின் வரும், சாரதா - நடிகர் திலகம் சந்திக்கும் காட்சியையும் பதிவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். (இந்தக் காட்சியையும், பின்னர் வரும் க்ளைமாக்ஸ் காட்சியையும் சேர்த்து, இப்போது தான் ஞான ஒளி படத்தைப்பற்றிய பதிவை முடித்தேன்.)

    அதோடு நிற்காமல், மறுபடியும், தங்கமலை ரகசியம் படப் பாடல் "இக லோகமே இனிதாகுமே" பாடலையும் பதிவிட்டு, என்னை 1973 -க்கே கூட்டிச் சென்று விட்டீர்கள். (அப்போது தான் இந்தப் படத்தை கமலா தியேட்டரில் பார்த்தேன். என் அன்னையும், பெரியன்னையும் கூட்டிச் சென்றனர். அவர்கள் தான், என் மனதில், நடிகர் திலகத்தை ஆழமாக வேரூன்றச் செய்தவர்கள்.)

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  6. #1545
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    நடிகை சுஜாதா அமரரானார்

    அண்ணன் ஒரு கோயில், தீபம், அந்தமான் காதலி, பரீட்சைக்கு நேரமாச்சு உள்ளிட்ட பல படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகை சுஜாதா இன்று காலமானதாக செய்தி வந்துள்ளது. சிவாஜி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமின்றி தானும் ஒரு சிவாஜி ரசிகையாக வாழ்ந்தவர் திருமதி சுஜாதா ஜெயகர் அவர்கள். அன்னாரது மறைவுக்கு நமது அஞ்சலி உரித்தாகட்டும்.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1546
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. முரளி அவர்களே,

    சில நாட்களுக்கு முன், உங்களுடைய "ஆண்டவன் கட்டளை" படத்தைப் பற்றிய பதிவினைப் படிக்க நேர்ந்தது. மிக மிக அற்புதமான நுணுக்கமான பதிவு.

    நான் 1978 முதல் 1985 வரைப்பட்ட காலத்தில் தான், நடிகர் திலகத்தின் முதல் படத்திலிருந்து 1970 வரையில் வெளி வந்த அநேகமாக எல்லாப் படங்களையும் திரை அரங்கத்தில் பார்க்கும் பேறு பெற்றேன். 1970 -லிருந்து வெளி வந்த படங்களை அந்தந்த காலகட்டத்தில் பார்த்து விட்டிருந்தாலும், அவ்வப்போது பார்ப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தது வேறு விஷயம். நானும் எனது நண்பனும் சென்னையில் அப்போதிருந்த ராம் திரை அரங்கத்தில் இந்தப் படத்தை ஒரு நாள் மாலைக் காட்சியாகப் பார்த்தோம். பார்த்தவுடன் வீட்டிற்கு வந்து, எனது டயரியில் (அப்போதெல்லாம் எனக்கு டயரி எழுதும் பழக்கம் இருந்தது. இப்போது இல்லை.) "இன்று ஆண்டவன் கட்டளை பார்த்தேன். இந்தப் படத்தில் நடிகர் திலகம்தான் நடிக்க வேண்டும் என்பது ஆண்டவன் அவருக்கிட்ட கட்டளை!" என்று எழுதியது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது - கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் உருண்டோடியும்!

    மறுபடியும், இதே படத்தை, ஒரு நான்கு வருடங்களுக்குப் பிறகு நானும், எனது அலுவலக நண்பரும் சென்னை சீனிவாசா திரை அரங்கத்தில், ஒரு ஞாயிறு அன்று மாலைக் காட்சியாக (ரூபாய் 50 /- கொடுத்து ப்ளாக்கில் - கட்டுக்கடங்காத கூட்டமாதலால்!) பார்த்தோம். எனது நண்பர் உயரிய கொள்கைகளை உடையவர். என்னை விட ஒரு பத்து வயது மூத்தவர் மற்றும் அலுவலக வேலைகளில் குரு. மேம்போக்கான படங்களைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவர். இருப்பினும், நடிகர் திலகத்தை அவருக்குப் பிடிக்கும். விடுவேனா? அவரை, முறையே, "புதிய பறவை", "தெய்வ மகன்", "நவராத்திரி", "இருவர் உள்ளம்" மற்றும் "ஆண்டவன் கட்டளை" படங்களுக்குக் கூட்டிச் சென்றேன். இந்த எல்லா படங்களையுமே அவர் மிகவும் ரசித்தார் என்றாலும், "ஆண்டவன் கட்டளை" பார்த்த அனுபவம் மட்டும் என்னால் மறக்க முடியாது. இந்தப் படத்தில், "ஆறு மனமே ஆறு" பாடலுக்கு சற்று முன், அவர் ஆசையுடன் வளர்த்த நாய், அவரைக் காப்பாற்றி, பின் உயிரை விடும் காட்சி வரும். இதை நினைக்கும் போதே தொண்டை வலிக்கிறது என்றால், பார்த்தால்? நாய் இறந்தவுடன், நடிகர் திலகம் "நானா உனக்கு எஜமானன்? நீதான் எனக்கு எஜமானன்!" என்று கூறிக் கலங்கி, அந்த சடலத்தைப் புதைத்தவுடன், இந்தப் பாடல் துவங்கும். தன்னுடைய எஜமானர் பசியோடிருக்கிறார் என்றறிந்து, அந்த நாய் எங்கோ சென்று ரொட்டித் துண்டுகளைக் கொண்டு வந்து அவரிடம் வைக்க, அவரோ, "வேண்டாம் மணி! (அவர் வைத்த செல்லப் பெயர்.) நீ போய் விடு." என்று விரட்டி விடுவார். ஏனென்றால், அவருக்கு அவர் மேலேயே வெறுப்பு வந்து தற்கொலைக்குத் தயாராகி விடுவார். பின்னர் அவர் தன்னைக் கட்டிக் கொண்டு ஆற்றில் விழுந்தவுடன்தான், மணி அவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்து போட்டு, உடனே அதன் உயிரை விடும். இந்தக் காட்சி - அதாவது, நடிகர் திலகம் மணியைப் புதைக்கிற வரை, ஒட்டு மொத்த அரங்கமும், தன் சப்த நாடியையும் அடக்கி, ஒரு குண்டூசி விழுந்தால் கூட அந்த சப்தம் கேட்கும் அளவுக்கு, தங்களை மறந்த, மெய் மறந்த நிலையில் இருந்தது. (நான் ஏற்கனவே சொன்னேன், அன்று ஹவுஸ்புல் - கட்டுக்கடங்காத கூட்டம் - ப்ளாக்கில் கொடுத்துப் பார்த்தேன் என்று.) அன்று வந்தவர்களில் குறைந்த பட்சம் எழுபது சதம் ரசிகர்கள் தான் என்றாலும், இந்தக் குறிப்பிட்ட காட்சி முடியும் வரை ஒரு சிறு சப்தம் கூட இல்லை (ஐந்து நிமிடங்களுக்கு மேல் வரும் காட்சி இது.) நான் திரும்பி, என் நண்பரைப் பார்த்தேன் - நானே என் அழுகையைக் கட்டுப் படுத்த முடியாமல் அவரைப் பார்த்தால், அவர் தன் கைக்குட்டையை வைத்து விம்மிக் கொண்டிருக்கிறார்! இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

    பின், "ஆறு மனமே ஆறு" பாடல் ஆரம்பிக்க, திரை அரங்கம் மறுபடியும் அமர்க்களப்பட ஆரம்பித்தவுடன் தான், நாங்கள் அனைவரும் (அரங்கமே!) சுய நினைவுக்கு வந்தோம். அப்போதும், நடிகர் திலகத்தின் மிகப் பிரபலமான பாடல்தான் நினைவுக்கு வந்தது "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா!.

    அன்புடன்,

    பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 6th April 2011 at 05:58 PM.

  8. #1547
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அண்ணன் ஒரு கோயில், தீபம், அந்தமான் காதலி, பரீட்சைக்கு நேரமாச்சு உள்ளிட்ட பல படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகை சுஜாதா இன்று காலமானதாக செய்தி வந்துள்ளது. சிவாஜி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமின்றி தானும் ஒரு சிவாஜி ரசிகையாக வாழ்ந்தவர் திருமதி சுஜாதா ஜெயகர் அவர்கள். அன்னாரது மறைவுக்கு நமது அஞ்சலி உரித்தாகட்டும்.

    ராகவேந்திரன்
    Dear Shri Raghavendiran Sir,

    The death of Ms. Sujatha Jayakar is really shocking and a premature one too. She is not that aged. She acted in so many successful movies with NT.

    Our heartfelt condolences to the bereaved family and let us all pray to the Almighty that the departed soul may rest in peace.

    R. Parthasarathy

  9. #1548
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பல படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்து நம் மனதில் நீங்கா இடம் பெற்ற திருமதி சுஜாதா ஜெயகர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடல் அவருக்கு சமர்ப்பிக்கப் படுகிறது.

    பாடல் அம்மா ஓர் அம்பிகை போல்
    படம் தீர்ப்பு
    நடிப்பு - நடிகர் திலகம், சுஜாதா, விஜயகுமார், சரத்பாபு, நித்யா மற்றும் பலர்.



    கனத்த நெஞ்சுடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1549
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    70-களின் மத்தியில் நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த பல நடிகைகளும் பல காரணங்களால் திரையுலகிலிருந்து விலகி நிற்க கே.ஆர்.விஜயா மட்டுமே ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு ஒரு மாற்றாக வந்தார் சுஜாதா. வெகு விரைவிலேயே சிவாஜிக்கு ஏற்ற ஜோடி என்பதை நிரூபித்தார். சுஜாதா நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த பல படங்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. ஒரு சில வருடங்களுக்கு முன்பு கூட வருடா வருடம் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஒய்.ஜி.மகேந்திரா நடத்தும் விழாவில் பங்கு பெற்று சிவாஜி விருது பெற்றது நினைவுக்கு வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தின் சில காட்சிகளையும் அது போல நேற்று முன்தினம் திங்கள் அன்று பரீட்சைக்கு நேரமாச்சு படத்தின் சில காட்சிகளையும் டி.வி.யில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. சுஜாதா மறைந்து விட்டார் என்ற செய்தியே ஒரு shock ஆக தோன்றுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  11. #1550
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்துடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகை சுஜாதாவின் மறைவுக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கும் மற்றும் அவரது ரசிக-ரசிகைகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனையும், இதயதெய்வத்தையும் வேண்டுகிறோம்.

    பம்மல் ஆர். சுவாமிநாதன்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •