-
23rd March 2011, 02:13 PM
#471
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
lakshmirad
how to install tamil fonts?
for what purpose?
-
23rd March 2011 02:13 PM
# ADS
Circuit advertisement
-
24th March 2011, 06:47 PM
#472
Senior Member
Seasoned Hubber
enjoy what you earn
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். 1001.
வாய் சான்ற = இடம் நிறைந்த ; பெரும்பொருள் = அதிகச்
செல்வத்தை; அஃதுண்ணான், வைத்தான் = அதை நுகராது,
சேமிப்பில் கிடத்தினான் ஒருவன்; செத்தான் = அவன்
இறந்தவனுக்கு ஒத்தவனே; செயக்கிடந்தது = (பின்னர்,
அப்பொருளைக் கொண்டு ) அவன் செய்தற்கு உள்ளவை; இல்
=ஒன்றுமில்லை என்றவாறு.
செத்தான் - செத்தபின்னர் என்றும் உரை கூறுவதுண்டு.
-
25th March 2011, 05:48 PM
#473
-
27th March 2011, 11:26 AM
#474
Senior Member
Seasoned Hubber
மறப்பினும்

Originally Posted by
leons0133
kavathai is very superb
Thank you.
A review of kuRaL (supra), sufficiently referenced below:
இக்குறளை வேறு வகையாகவும் சிந்திக்கலாம்.
குறள்:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்.
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
இதில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியம்:
பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்பது.
நூல்களைப் பார்ப்பவ னொருவன், அவற்றில் ஓதற்குரிய ஒன்றை மறந்துவிட்டாலும், அதனை அறிஞர் பொருட்படுத்தமாட்டார்; (காரணம், அதனை யவன் திருத்திக்கொள்ளலாமே!)
அடுத்த வாக்கியம்: "பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்". இந்த இரண்டாவது வாக்கியத்துக்குப் பார்ப்பான் என்ற சொல்லை மீண்டும் துணைக்கழைக்க வேண்டியதில்லை. குடிக்குரிய ஒழுக்கம்
என்பது யார்க்கும் உண்டு, ஆதலால்், யாரென்றாலும், குடிக்குரிய ஒழுக்கத்தினின்று திறம்பி நடந்தால், அந்த நடத்தை, திருத்திக் கொள்ள முடியாத பெரும் பேரிடர்களை வாழ்வில்
விளைத்துவிடும்.
இதுவே சிறந்த விளக்கம் எனலாம்.
திருவள்ளுவர் காலத்தில் ";" குறி இல்லை. இப்போது அச்சிடப்பட்டவற்றில் அது இருக்கிறதென்பதை உணர்க. பிறப்பொழுக்கம் என்பது எச்சாதியானுக்கும் உண்டு. ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் ஒரு குடியில் பிறத்தலால், அக்குடிக்குரிய ஒழுக்கமே அந் ந(ண்)பருக்குப் பிறப்பொழுக்கமாகும்.
-
27th March 2011, 08:55 PM
#475
Senior Member
Seasoned Hubber
meanings vary....
(Puram 166) it is clear that the word “paarppaan” can also refer to “uurpaarppan”, a person who looks after a village or region of several villages.
One has to be careful in interpreting.
-
29th March 2011, 04:05 PM
#476
Senior Member
Seasoned Hubber
பிறப்பொழுக்கம்
பிறப்பொழுக்கம் - பிறந்த குடிக்குரிய ஒழுக்கம் என்று பல உரையாசிரியன்மார் உரைத்துள்ளனர். அவர்களை ஒருவகை-
யில் பின்பற்றியே நானும் " பிறப்பு ஒழுக்கம்" - குடிப்பிறப்புக்குரிய ஒழுக்கம் என்று உரைத்துள்ளேன்.
இதிலும் நாம் சற்று கருத்தைச் செலுத்தலாம்.
குடிக்குரிய ஒழுக்கம் என்று தமிழ் நாட்டில் ஓர் ஒழுக்க நெறி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பது நிறுவப்படுதல் வேண்டும்்.
குடிக்குரிய ஒழுக்கம், சாதிக்குரிய ஒழுக்கம், பிறப்புக்குரிய ஒழுக்கம் என்பவெல்லாம் ஒரு பொருளனவா என்பதும்
தெளிவுறுத்தப்படுதல் வேண்டும். வள்ளுவர் ஒவ்வொரு சாதிக்கும் அல்லது குடிக்கும் அல்லது பிறப்புக்கும் ஒரு விதந்து கூறத்தக்க
ஒழுக்கம் இருந்தது என்று நம்பினாரா அல்லது அவ்வாறு இருந்ததா என்பதும் ஆய்ந்து நிறுவப்படுதல் வேண்டும்.
பிறப்பொக்கும் என்பது வள்ளுவர் கருத்தாகலின், பிறப்பொழுக்கம் என்பது ஏன் ஒத்த பிறப்பினரான மக்களிடையே
பொதுவாக நிலவிய ஒழுக்க நெறிகளின் தொகுப்பு என்று பொருள் படலாகாது என்பதையும் தெளிவு படுத்தவேண்டும்.
"சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்றதனால், ஏன் சிறப்பொழுக்கம் என்ற தொடர் ஆளப்பெறவில்லை என்றும்
கடாவ வேண்டும். குடிக்கும் செய்தொழிலுடையோருக்கும் இடையே வழங்கி வரும் ஒழுக்க நெறிகள் எனின் சிறப்பொழுக்கம்
குன்றக் கெடும் என்று குறளில் ஏனோ வரவில்லை என்றும் குடைய வேண்டும்.
(குடி என்று இங்கே கூறப்பட்டது ஒரே தொழிலில் அல்லது அக்கறைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு இணைந்தியங்கும்
குடும்பங்கள் என்று பொருள்படும். )
்
Last edited by bis_mala; 29th March 2011 at 05:45 PM.
Reason: to supply omitted words
B.I. Sivamaalaa (Ms)
-
1st April 2011, 06:03 PM
#477
Senior Member
Seasoned Hubber
சரியான உரை
இருவகையில் பொருள் கொள்ளுதல்.
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பதை:
1. பிறப்பு, ஒழுக்கம் குன்ற, கெடும் அதாவது: பிறப்பானது, ஒழுக்கம் குன்றுமாயின், கெட்டுப் போகும் என்று கொள்ளுதல். இங்கு, பிறப்பு ஒழுக்கம் என்பன தனித்தனியாக நிற்கும்படி பொருள்கொள்ளப்பட்டது. பிறப்பு (எழுவாய்), கெடும் (பயனிலை). எப்போது கெடும்? என்ற கேள்விக்கு, ஒழுக்கம் குன்றினால் கெடுமென்றவாறு. இதைத் தற்கால உரைநடை இலக்கணத்தில், "கிளவியம்" (clause ) என்பர். இங்ஙனம் கொள்ளுங்கால், "பிறப்பொழுக்கம்" என்று ஒன்று விதந்து கூறுவதற்கு இல்லையாயிற்று.
2. அடுத்து, "பிறப்பொழுக்கம்" என்பதை ஒரு கூட்டுச்சொல்லாகக் கொண்டு, பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் எனக் கொள்ளுதல். இப்படிக் கொண்டால், பிறப்பொழுக்கம் குன்றினால், (எது) கெடும்? என்று கேள்வியை எழுப்பி, அதற்கு உரையாசிரியர் விடை சொல்வார். எது கெடும் என்றால் அவன் குலம் கெட்டுப்போகும், மேற்குலத்தினின்று கீழிறக்கப் பெறுவான்.. என்பார். ஆகவே, குலம் என்பதை வருவித்து உரைகூறுவார். கெடும் என்ற பயனிலை மட்டும் இருக்கிறது, எழுவாய் இல்லை. அதைப்படிப்பவரே வழங்கிக்கொள்ளவேண்டும். இப்படியும் உரை கூறலாம்.
சரியான உரை என்று எதுவும் இல்லை. சரியில்லாத உரையும் எதுவும் இல்லை. வள்ளுவர் காலத்தின்பின் ஈராயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையில், அவரை முற்றும் அறிந்தவர் யார்? அவரே உரை வகுத்திருந்தால் இத்தகைய தொல்லைகள் இரா. ஆனால் அவரெழுதிய காலத்தில் மொழி நிலை மேம்பட்டு நின்று விளங்கிய காரணத்தால், உரை தேவைப்பட்டிருக்காது. ஈராயிரம் ஆண்டுகளின் பின் வாழும் நமக்குத் தேவைப்படுகிறது. உரையாசிரியர் அனைவருக்கும் நன்றி நவிலும் அதே வேளையில், வேறுபடும் உரைகளில் எது உங்கள் அறிவிற்கும் பொருத்தமாகப் படுகிறதோ, அதையே நீங்கள் மேற்கொள்வது, உங்கள் பொறுப்பும் கடனுமாகும்.
Last edited by bis_mala; 1st April 2011 at 06:37 PM.
Reason: paragraph justify
B.I. Sivamaalaa (Ms)
-
1st April 2011, 07:18 PM
#478
Senior Member
Seasoned Hubber
Reasons for my interpretation....
Other things being equal, reasons for my interpretation of the word paarppaan in kuRaL.
நிற்க, யான் ஏன் "பார்ப்பான்" என்ற சொல்லுக்குப் பிராமணன் என்று பொருள்கூற வில்லை என்று கேட்கக்கூடும். பிராமணன் என்பது பொருளாயின், அக்காலத்தில் சரியாகப் பயிற்சி பெறாத பிராமணர் பலர் இருந்தனர் என்றும் அவர்களில் பலர், அடிக்கடி மறதிவாய்ப்பட்டு மந்திரங்களை மீண்டும் பயின்று வந்து தம்மைத் திருத்திக்கொண்டனர் என்றும் பொருள்படக் கூடும். முறையான பயிற்சி முற்றுப்பெறாமல் களமிறக்கப் பட்டனர் என்பதாம். இது தேவையும் ஆதாரமும் அற்றதாகும்.
அடுத்து, பிறப்பொழுக்கம் பிராமண சாதியாரின் பிறப்பொழுக்கம் என்று எடுத்துக்கொண்டால், பிறருக்கு ஒழுக்கம் என்பது விதிக்கப்படவில்லை, அவர்கள் ஒழுக்கம் தவறினால் ஒன்றும் இல்லை என்று கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே, பார்ப்பான் என்ற சொல், இக்குறளில் பிராமணனைக்குறிக்கவில்லை என்பதே நேர்படுகிறது. ஒழுக்கம் என்பது யாவர்க்கும் உரியது, பிறப்பு என்பதும் உயர்திணையாகிய அனைத்து மக்களுக்குமே உரியது என்று கோடலே பொருத்தமும் சிறப்பும் அமைந்ததாம்.
Last edited by bis_mala; 2nd April 2011 at 05:34 AM.
Reason: typo
B.I. Sivamaalaa (Ms)
-
5th April 2011, 12:35 PM
#479
Senior Member
Devoted Hubber
Thanks Lathaji for your bringing the truths.
// For the Benefit of all Viewers - I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by
Dr. Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books
1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.
The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible. Now let me come to the references of Anthanar in this.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30
The author of the book analysises the Relligious situation in Tholkappiyam to and takes all references of every song in Sangam Literature, Tholkappiyam, Silapathikaram and Manimekhalai and confirms the research view.
I QUOTE:
அந்தணர் நு¡ற்கும் அறத்திற்கும் தியாய்
நின்றது மன்னவன் கோல். 543
அந்தணர் என்னும் சொற்கு எவ்வுயிர்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என வள்ளுவர் கூறினாராயினும் இங்கு அச்சொல் பிரமாணரைக் குறிப்பதாகக் கொள்வதெ பொருந்தும். அந்தணர் நூல் என்பதும் வேதம் முதலிய சமயனூல்களையே எனலாம். இவ்வாறே பழைய உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் கொண்டனர்.
அறுதொழிலோர் என சிரியர் குறிபிட்டதும் பிரமாணர்களையே யாதால் வேண்டும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் என்னும் று தொழில்கள் அவர்க்குரிய என்பது சங்க காலத்தில் முன்பெ வகுக்கப்பட்டது. இவ்வாறு தொழில்கள் பதிற்றுபத்தினுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று றுபுரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் .. .. பதிற்றுபத்தது 24.
தொல்காப்பியரும்
“ அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் சொல்-75
எனப் பார்ப்பனரின் அறுதொழிலைக் குறிப்பிட்டார். வேதம் முதலிய சமயநூல்களைக் கற்பது சிறப்பாக அந்தணர் (பிரமாணர்) கடமை என அக்காலத்து நிலவிய கருத்தை வள்ளுவரும் ஏற்றுக் கொண்டார் போலும்.
ஓதுவித்தலும் அவர்கள் தொழில் கையினால் அந்தணர் அல்லாத பிறர்க்கும்
(மன்னவர் வணிகர் குலத்தவரா?) வேதம் முதலிய நூல்களைக் கற்பித்த்வர் எனக் கருதலாம்.
பயன் குன்றும் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560
மக்கள் வாழ்க்கையில் வேதம் முதலிய சமையநூற்கல்விக்கு இடம் உண்டு, அவை மக்கட்கு நன்மை பயப்பன என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் படுவதனாலேயே அவற்றை தரிப்பது மன்னனின் கடமையாயிற்று.
காவலன் காவானெனின் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர் என எச்சரிக்கப் படுவதும் சமய நூல்கள் மறக்கப் படுதல் சமுதாயத்திற்கு கேடு எனக் கருதப் படுவதனாலேயே.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134
இக்குறள் பார்ப்பாரையும் அவர் ஓதும் வேதத்தையுமே குறிக்கிறதென்பது தெளிவு. “மறப்பினும் ஓத்துக் கொளலாகும்” (134) என்ற தொடரும் பார்ப்பான் ஓத்தை(வேதம் ஓதக்கற்றதை) மறத்தலாகாது. ஒருகால் மறப்பினும் விரைவில் திரும்ப ஓதிக் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்ற் கருத்தைத் தரும்
பக்கம்-194,195.
On Kural which was interpreted as Valluvar being against Vedas, the Peedam Author again confirms
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259
தீ மூட்டி செய்யப் படும் வேள்வியைக் ரிய வழிபாடு முறையையே குறிப்பிடப் படுகின்றது. தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடபடும் பொருளையே வடமொழியில் ஹவிஸ் என்பர், அதுவே தமிழில் “அவி” யாயிற்று, .. அவிப்பொருள்களை நெருப்பில் சொரிந்து யிரம் வேள்வி செய்வதை விட ஒன்றின் உயிர் செகுத்து அதன் ஊனை உண்ணாமை நன்று என வள்ளுவர் இங்கு கூறினார். இதனால் வேள்வி தீயது என வள்ளுவர் கருதினார் எனல் குமா? வேள்வியையும் நல்லதாகக் கருதித்தானே வேள்வி செய்தலை விடக் கொல்லாமை நன்று என்றார். .. .. ரிய வேள்விக்களத்திலுமே உயிர்க்கொலையும் விலங்குபலியும் இல்லை. பசுயாகம் எனப்படும் சில வேள்விகளில் மட்டுமே விலங்குபலியளிப்பர். நெய், பால், தானியங்கள் தானியங்களினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கியவற்றை நெருப்பிலிட்டும் வேள்விகள் செய்வர் ( Author quotes this from " INDIA OF THE AGE OF THE BRAMANAS" book-iii, CHAP-2, The forms of Sacrifice- by Basu, Dr.Jogiraj.). எனவே உயிர்க் கொலையின்றி இவ்வாறு செய்யப்படும் வேள்விகள் வள்ளுவர்க்கு உடன்பாடு என்றே கொள்ளலாம். பக்கம் - 192,193.//
From Page-14 by Devapriya//
I further add
நாம் எல்லா நூல்களை படித்து ஓதி கற்கிறோம். ஆனால் வேதங்கள் ஏட்டில் எழுத்ப்படுவது கிடையாது. இது ஏன் எனில், bce 5000 -bce 1000 இடையே எழுத்ப்பட்டவை வேத உபநிஷதங்கள். வால்மிகி இராமாயணம் bce1000, மகாபாரதம் bce 600 வாக்கில், இதன் பின் வரையப்பட்ட பாணினியின் அஷ்டாத்யாயி மேலுள்ள இதிகாசங்களை அதில் அடக்கினார், ஆனால் இதன் வரைமுறையில் வேதங்கள் இல்லை, எனவே குரு பரம்பரையாக வாய்வழியே சொல்லித்தர இவை ஓதப்படும். ஓதாமல் ஒத்து சொல்லி தருவதாலும் பலரும் சேர்ந்து ஒத்து இவற்றை ஓதுவதாலும் வேதங்கள் ஓத்து என்னும் அற்புதமான தமிழ்பெயர் கொண்டது.
நாட்டிற்கு மழையின்மையை விட அறுதொழிலர் நூல்-வேதங்களை மறப்பர் எனவும் வள்ளுவர் தமிழர் மேன்மைக் கூற எதற்காக இப்படி பல தேவையற்ற பொருந்தாத விளக்கங்கள்.
-
8th April 2011, 06:38 AM
#480
Senior Member
Seasoned Hubber
கல்வியும் கசடும்.
கற்க கசடற கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்: ஒருவன் கற்கும்போது, ஐயப்பாடுகள் நீங்கும்படியாக, தெளிந்த கல்வியைப் பெறவேண்டும்; அதன்பின், கற்ற கல்விக்கு ஏற்பச் செயல்படுதல் வேண்டும். .
என்னதான் கசடறக் கற்றுவிட்டதாகக் கூறிக்கொண்டாலும், ஐயப்பாடுகள் சிலருக்குத் தலைகாட்டவே செய்கின்றன. அவற்றை அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் கண்டுகொள்வது
எளிது. "அப்படிக் கருதலாம்", "இப்படித் தோன்றுகிறது". "இப்படிப் போலும்", "என்று கொள்ளலாம்" என்பனவெல்லாம் ஐயத்தின் அறிகுறிகள். கூறுவோர் ஐயமுறக் கூறியதை, நாம்
திட்டவட்டமாகக் கருதவும் வழியில்லை. ஓர் ஆசிரியன் ஐயுறவுடன் அறைந்ததை, இன்னொருவன்
தெளிவுரையாகக் கொள்வானானால், அந்த இன்னொருவனை உலகோரும் ஏற்பது கடினமே ஆகும்.
Last edited by bis_mala; 8th April 2011 at 09:32 PM.
Reason: para justify n typo
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks