-
6th April 2011, 11:39 PM
#1551
ராகவேந்தர் சார்,
பாடல்களுக்கு நன்றி. குறிப்பாக பலே பாண்டியா மற்றும் அவன் ஒரு சரித்திரம் படப் பாடல்களுக்கு. ஒரு மாவட்ட ஆட்சி தலைவர் நேர்மையாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை அன்றே நமது நடிகர் திலகம் திரையில் வடித்திருக்கிறார். அது போல சிறையில் உள்ளே இருப்பவர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வெளியே சிலர் தங்களை பணத்தை எண்ணும் காட்சியும் இன்றைக்கு சுமார் 49 வருடங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டப்பட்டு விட்டது என்பது ஆச்சரியமான விஷயமே.
சுவாமி,
திருவருட்செல்வர் பற்றிய நல்ல தகவலுக்கு நன்றி. தகவல் உறுதியாகும் என நம்புவோம்.
சாரதி,
ஆண்டவன் கட்டளை பற்றிய செய்திகள் உணர்வு பூர்வமாக இருந்தது. நான் உங்களிடம் குறிப்பிட்டது போல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றாக ஆண்டவன் கட்டளையை குறிப்பிடுவேன். அதன் காரணமாகவே படத்திற்கு ஒரு முறை விமர்சனமும், பிறகு சென்ற அக்டோபரில் நடராஜ் தியேட்டரில் பார்த்த போது தோன்றியதையும் மீண்டும் ஒரு பதிவு செய்தேன். ராகவேந்தர் சார் கூட ஒரு முறை வேறொருவரிடம் பேசும் போது என் எழுத்துக்களின் மூலமாக பல பேரை ஆண்டவன் கட்டளை படத்திற்கு ரசிகர்களாக மாற்றி விட்டேன் என சொன்னார். இந்த படம் முதல் வெளியீட்டில் 100 நாட்கள் ஓடவில்லை என்ற வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு [அதன் காரணங்களை, பாரகனில் புதிய பறவை ரிலீஸ் போன்றவற்றை பற்றி நான் எழுதியதையும் படித்திருப்பீர்கள்].
அண்மையில் மகாலட்சுமி அரங்கில் நண்பகல் காட்சியாக வெளியான போதும் நல்ல வரவேற்பு என்று சுவாமி சொன்னார். இதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சுவாமி ஒரு முறை ஒரு விஷயம் சொன்னார். பி.எஸ்.வீரப்பா தயாரித்த ஆலயமணி மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களை எடுத்துக் கொண்டால் ஆலயமணிதான் பெரிய வெற்றிப் படம். ஆனால் மறு வெளியீடு என்று பார்த்தால் சென்னையில் ஆண்டவன் கட்டளை வெளியான, வெளியாகிற அளவில் நான்கில் ஒரு பங்கு கூட ஆலயமணி மறு வெளியீடு கண்டதில்லை என்பதை சுட்டிக் காட்டினார். முதல் தடவை கொடுக்க தவறிய ஆதரவை வட்டியும் முதலுமாக சேர்த்துக் கொடுகிறார்கள் மக்கள் என நான் அவருக்கு பதிலளித்தேன். சென்னை என்றல்ல அனைத்து ஊர்களிலுமே ஆண்டவன் கட்டளைக்கு கிடைக்கும் வரவேற்பே தனி.
அன்புடன்
-
6th April 2011 11:39 PM
# ADS
Circuit advertisement
-
7th April 2011, 10:47 AM
#1552
Senior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் சிறந்த ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த திருமதி. சுஜாதா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமடைய வைக்கிறது. பத்மினி, தேவிகா, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா வரிசையில் நடிகர்திலகத்தின் மிகப்பொருத்தமான ஜோடி சுஜாதா. வயது 58 தான் என்பது இன்னும் வருத்தமடைய வைக்கும் விஷயம்.
சென்ற மாதம்தான் இருவரும் நடித்த 'வா கண்ணா வா' படத்தை மீண்டும் பார்த்தேன். என்ன ஒரு பொருத்தமான ஜோடியென்று வியந்தேன். நேற்றிரவு இச்செய்தி கேட்டதும் அந்த நினைவுகள்தான் என்னைச்சூழ்ந்தன.
அவர் விட்டுச்சென்றிருக்கும் அவர் நடித்த படங்கள்தான் இனி அவரது நினைவுச்சுவடுகள்.
-
7th April 2011, 03:58 PM
#1553
Senior Member
Devoted Hubber
-
7th April 2011, 04:40 PM
#1554
Senior Member
Veteran Hubber
மறைந்த நடிகை திருமதி சுஜாதா அவர்களுக்கு எனது அஞ்சலிக் கட்டுரை. இங்கே...
http://ennangalezuththukkal.blogspot.com/
-
8th April 2011, 12:04 AM
#1555
சுவாமி,
ராஜாமணியின் மைந்தன் சிவகாமியின் செல்வனாக உருமாறி மீண்டும் விஜயம் செய்தபோது மதுரை மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. சூடு பிடித்திருக்கும் தேர்தல் களம் மட்டுமல்ல, உலகக் கோப்பையின் இறுதி ஆட்டமும் குறுக்கிட்ட போதும் எங்கள் மதுரை வாழ் மக்கள் அசோக்கிற்கும், ஆனந்திற்கும் அள்ளி அளித்த வசூல் வியக்க வைக்கிறது. ஒரு வாரத்தை இன்றோடு நிறைவு செய்யும் போது அரை லட்சத்தை தாண்டிய வசூல் வந்திருக்கும் என நம்புகிறேன்.
சிவகாமியின் செல்வனைப் பற்றி நினைக்கும்போது என் நினைவுகள் பின்னோக்கி பறக்கின்றன. ஆராதனா -இந்தி திரைப்பட வரலாற்றிலேயே ஒரு சாதனையை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மீண்டும் இந்திப் படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பை உருவாக்கி கொடுத்த படம். சென்னை லிட்டில் ஆனந்தில் ஒரு வருடம் ஓடிய படம். அந்தப் படம் தமிழிலே ரீமேக் செய்யப்படுகிறது அதுவும் நடிகர் திலகத்தை வைத்து என்று செய்தி வந்த போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி ரசிகர்களிடையே ஒரு தயக்கம் இருந்து என கூறலாம்.
மாற்று முகாமில் நின்று இரண்டு படங்களை தயாரித்து விட்டு இந்த படத்தின் ரீமேக் உரிமையோடு ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை நமது முகாமிற்கு வந்தார். சி.வி.ஆர் அவர்கள் இயக்குனராக பொறுப்பேற்று படத்தை ஆரம்பித்தார்.
ஆராதனா படத்தை பார்த்தோம் என்றால் கதை அப்படி ஒன்றும் பிரமாதமான கதை என்று சொல்ல முடியாது. படத்தின் பாடல்களும் திரைக் கதையை கொண்டு சென்ற நேர்த்தியுமே படத்தை மக்களிடையே ஒரு பெரிய அளவிற்கு கொண்டு சேர்த்தது என சொல்லலாம். மெல்லிசை மன்னர் பாடல்களில் குறை வைக்க மாட்டார் என்ற போதினும் ஒரிஜினல் பாடல்களுக்கு ஈடு கொடுக்குமா என சந்தேகம் இருந்தது.
1974 ஜனவரி 26 அன்று படம் வெளியானது. நமது படங்களுக்கு ராசியான சனிக்கிழமையும் ஜனவரி 26-ம் ஒன்று சேர்ந்த வந்த நாள். மதுரை ஸ்ரீதேவியில் ரிலீஸ். மதுரையில் முதன் முறையாக ஓபனிங் ஷோ ரசிகர் மன்ற காட்சியாக நடைபெற்றது இந்தப் படத்திற்குதான். அது மட்டுமா அந்த ஓபனிங் ஷோ அதிகாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதும் இந்தப்படத்திற்குதான். அந்தக் காட்சிக்கு நான் சென்றிருந்தேன். சரியான கூட்டம்.
படம் தொடங்கும் வரை ஒரு விதமான apprehension இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த தவிப்பு தேவை இல்லை என புரிந்து விட்டது. மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே ஒரிஜினல் பாடல்களின் எந்த சாயலும் இன்றி அமைந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம். சி.வி.ஆரும் பாடல் காட்சிகளை நல்ல ரசனையோடு படமாக்கியிருந்தார். வாணிஸ்ரீ வசந்த மாளிகைக்கு பிறகு இணைந்த படம். இனியவளே பாடலும் சரி [மாற்று முகாமின் கட்சி உறுப்பினரான புலமை பித்தன் இந்த பாடலை எழுதியிருந்தார். நடிகர் திலகம் என்றைக்கு பாரபட்சம் பார்த்திருக்கிறார்?] மேள தாளம் கேட்கும் காலம் பாடலும் சரி நன்றாக எடுத்திருப்பார் சி.வி.ஆர். அதிலும் மேள தாளம் பாடலில் வாணிஸ்ரீ சேலை தலைப்பை இடுப்பில் சொருகி கொண்டு ஆடும் ஆட்டம் வசீகரமாய் இருக்கும்.
[ஒரிஜினலின் சாயலே இல்லை என சொல்லும் போது இதன் ஒரிஜினலான Gun Gunaare [குன் குனாரே] என்ற பல்லவியின் ட்யுனை மட்டும் எடுத்து அருணோதயத்தில் தனது, "எங்க வீட்டு தங்க தேரில் இந்த மாதம் திருவிழா" என்று பல்லவிக்கு மட்டும் மாமா பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முறையாக எஸ்.பி.பி. பாடியதும் (முத்துராமனுக்காக) அப்போதுதான். பிறகு குலமா குணமா படத்தில் உலகில் இரண்டு கிளிகள்(ஜெய்), பிறகு சுமதி என் சுந்தரி].
எத்தனை அழகு பாடலை சி.வி.ஆர். ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார். இவ்வகை டெக்னிகல் விஷயங்கள் பரவலாக அன்று மக்களை சென்று அடையவில்லை. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடலில் மன்னரின் அந்த குரல் சொல்ல முடியாத சோகத்தை மனதில் விதைக்கும். அதை போக்கும் விதமாக இறுதி சரணத்தில்
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ! நாளை
இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ!
என்ற வரிகள் வரும்போது அரங்கமே ஆர்ப்பரிக்கும்!
என் ராஜாவின் ரோஜா முகம் பாடலில் சுசீலா பின்னியிருப்பார். அதிலும்
மன்னன் பெயரை மண்ணை தொட்டு விண்ணை அளக்க
அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க! அள்ளி அணைக்க!
என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார், அப்படியே இனிமையின் உச்சத்திற்கே நம்மை கொண்டு போய் விடும். படத்தின் நடுவில் அடிக்கடி ஒரு ஹம்மிங் வரும். haunting என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்தது. அதிலும் எம்.எஸ்.வி முத்திரை பதித்திருப்பார்.
இந்தி படம் பார்த்தவர்களுக்கு நடுவில் நாயகன் சிறிது நேரம் வரமாட்டார் என்பது தெரியும். ஆனால் தமிழில் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நடிகர் திலகம் திரையில் தோன்றாத அந்த 35 நிமிடங்களை ரசிகர்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பார்த்தார்கள். வாணிஸ்ரீ தங்கியிருக்கும் வீட்டிற்கு உறவினராக வரும் மனோகர் அடிக்கடி சொல்லும் "எங்க அமெரிக்காவிலே" என்ற வார்த்தைக்கு மட்டுமே எதிர் சவுண்ட் வரும்[அப்படி மக்களை கடுப்பேற்றுவதில் மனோகர் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்].
ஓபனிங் ஷோ முடிந்து காலை 10 மணிக்கு வெளியே வருகிறோம். அடுத்த காட்சிக்கு கடல் போல கூட்டம். எனக்கு தெரிந்து ஸ்ரீதேவியில் மிகப் பெரிய கூட்டம் என்றால் அது முதலில் தர்மம் எங்கே படத்திற்கு, அதன் பிறகு சவாலே சமாளி மற்றும் சிவகாமியின் செல்வன் படங்களுக்குதான். அந்தக் காலத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கள் Farewell விழா நடக்கும் நாளன்று ஒரு திரைப்படத்திற்கு செல்வது வழக்கம். மதுரையில் 1973-74ஆண்டு இறுதி ஆண்டு படித்த பல கல்லூரி மாணவ மாணவியர் தேர்ந்தெடுத்து சென்றது சிவகாமியின் செல்வன் படத்தைதான். இத்தனைக்கும் அதே நேரத்தில் மீனாட்சி திரை அரங்கில் Bobby ஓடிக் கொண்டிருந்தது.
மதுரையில் வெளியான முதல் 31 நாட்களில் நடைபெற்ற 104 காட்சிகளும் தொடர்ந்து ஹவுஸ் புல். இத்தனைக்கும் கெளரவம் சிந்தாமணியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரலில் ராஜபார்ட் ரங்கதுரையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருந்த படம் என்ன காரணத்தினாலோ 69 நாட்களில் மாற்றப்பட்டது. சென்னையில் தேவி பாரடைசில் 76 நாட்களை நிறைவு செய்தபோது வாணி ராணிக்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழல். இந்தப் படம் இலங்கையிலும் பெரிய வெற்றி அடைந்து சில உலக புகழ் பெற்ற படங்களை விட அதிக வசூல் பெற்றது.
1974-ல் பார்த்த பிறகு மீண்டும் தியேட்டரில் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன திரையிலும் டி.வி.டியிலும் கூட பார்க்கவில்லை. மதுரையில் தற்போது இப்படத்தின் வெற்றி ஓட்டத்தை குறிப்பிட்டதன் மூலம் பழைய நினைவுகளை இந்த பதிவின் வாயிலாக அசை போட வாய்ப்பளித்த சுவாமிக்கு நன்றி!
அன்புடன்
-
8th April 2011, 07:48 AM
#1556
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி,
சிவகாமியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் அனுபவங்கள் மிகவும் சுவையாக விவரித்துள்ளீர்கள். கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களுக்கும் உள்ள அனுபவங்களே. சென்னை நகரில் இப்படத்தைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு சாரார் தவறாக பிரச்சாரம் செய்ததையும் மீறி நன்றாக போனது. மற்றொரு பக்கம் ஹிந்தி ரசிகர்கள் வேண்டுமென்றே நடிகர் திலகத்தைக் குறை கூறியும் மெல்லிசை மன்னரின் பாடல்களைக் குறை கூறியும் பிரச்சாரம் செய்ததும் நடந்தது. இப்படி எதிர்ப்புகளை மீறித் தான் இப்படமும் ஓட வேண்டியிருந்தது. ஆனால் ரசிகர்கள் மனதில் நடிகர் திலகத்தின் தோற்றமும் நடிப்பும் இப்படத்திற்கு தனியிடத்தை நிரந்தரமாக தரத் தான் செய்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ரசிகர்கள் முதலிடம் தருவது, மேளதாளம் பாடலுக்குதான், நான் உட்பட. நீண்ட நாட்களாக இப்படத்தைப் பார்க்க வில்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படம் தற்பொது நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
இருப்பினும் நம் அனைவருக்காக நம் அபிமான பாடல் இதோ பார்வைக்கு
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th April 2011, 07:49 AM
#1557
Senior Member
Seasoned Hubber
Last edited by RAGHAVENDRA; 8th April 2011 at 07:51 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th April 2011, 11:08 AM
#1558
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
சுவாமி,
ராஜாமணியின் மைந்தன் சிவகாமியின் செல்வனாக உருமாறி மீண்டும் விஜயம் செய்தபோது மதுரை மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. சூடு பிடித்திருக்கும் தேர்தல் களம் மட்டுமல்ல, உலகக் கோப்பையின் இறுதி ஆட்டமும் குறுக்கிட்ட போதும் எங்கள் மதுரை வாழ் மக்கள் அசோக்கிற்கும், ஆனந்திற்கும் அள்ளி அளித்த வசூல் வியக்க வைக்கிறது. ஒரு வாரத்தை இன்றோடு நிறைவு செய்யும் போது அரை லட்சத்தை தாண்டிய வசூல் வந்திருக்கும் என நம்புகிறேன்.
சிவகாமியின் செல்வனைப் பற்றி நினைக்கும்போது என் நினைவுகள் பின்னோக்கி பறக்கின்றன. ஆராதனா -இந்தி திரைப்பட வரலாற்றிலேயே ஒரு சாதனையை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மீண்டும் இந்திப் படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பை உருவாக்கி கொடுத்த படம். சென்னை லிட்டில் ஆனந்தில் ஒரு வருடம் ஓடிய படம். அந்தப் படம் தமிழிலே ரீமேக் செய்யப்படுகிறது அதுவும் நடிகர் திலகத்தை வைத்து என்று செய்தி வந்த போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி ரசிகர்களிடையே ஒரு தயக்கம் இருந்து என கூறலாம்.
மாற்று முகாமில் நின்று இரண்டு படங்களை தயாரித்து விட்டு இந்த படத்தின் ரீமேக் உரிமையோடு ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை நமது முகாமிற்கு வந்தார். சி.வி.ஆர் அவர்கள் இயக்குனராக பொறுப்பேற்று படத்தை ஆரம்பித்தார்.
ஆராதனா படத்தை பார்த்தோம் என்றால் கதை அப்படி ஒன்றும் பிரமாதமான கதை என்று சொல்ல முடியாது. படத்தின் பாடல்களும் திரைக் கதையை கொண்டு சென்ற நேர்த்தியுமே படத்தை மக்களிடையே ஒரு பெரிய அளவிற்கு கொண்டு சேர்த்தது என சொல்லலாம். மெல்லிசை மன்னர் பாடல்களில் குறை வைக்க மாட்டார் என்ற போதினும் ஒரிஜினல் பாடல்களுக்கு ஈடு கொடுக்குமா என சந்தேகம் இருந்தது.
1974 ஜனவரி 26 அன்று படம் வெளியானது. நமது படங்களுக்கு ராசியான சனிக்கிழமையும் ஜனவரி 26-ம் ஒன்று சேர்ந்த வந்த நாள். மதுரை ஸ்ரீதேவியில் ரிலீஸ். மதுரையில் முதன் முறையாக ஓபனிங் ஷோ ரசிகர் மன்ற காட்சியாக நடைபெற்றது இந்தப் படத்திற்குதான். அது மட்டுமா அந்த ஓபனிங் ஷோ அதிகாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதும் இந்தப்படத்திற்குதான். அந்தக் காட்சிக்கு நான் சென்றிருந்தேன். சரியான கூட்டம்.
படம் தொடங்கும் வரை ஒரு விதமான apprehension இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த தவிப்பு தேவை இல்லை என புரிந்து விட்டது. மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே ஒரிஜினல் பாடல்களின் எந்த சாயலும் இன்றி அமைந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம். சி.வி.ஆரும் பாடல் காட்சிகளை நல்ல ரசனையோடு படமாக்கியிருந்தார். வாணிஸ்ரீ வசந்த மாளிகைக்கு பிறகு இணைந்த படம். இனியவளே பாடலும் சரி [மாற்று முகாமின் கட்சி உறுப்பினரான புலமை பித்தன் இந்த பாடலை எழுதியிருந்தார். நடிகர் திலகம் என்றைக்கு பாரபட்சம் பார்த்திருக்கிறார்?] மேள தாளம் கேட்கும் காலம் பாடலும் சரி நன்றாக எடுத்திருப்பார் சி.வி.ஆர். அதிலும் மேள தாளம் பாடலில் வாணிஸ்ரீ சேலை தலைப்பை இடுப்பில் சொருகி கொண்டு ஆடும் ஆட்டம் வசீகரமாய் இருக்கும்.
[ஒரிஜினலின் சாயலே இல்லை என சொல்லும் போது இதன் ஒரிஜினலான Gun Gunaare [குன் குனாரே] என்ற பல்லவியின் ட்யுனை மட்டும் எடுத்து அருணோதயத்தில் தனது, "எங்க வீட்டு தங்க தேரில் இந்த மாதம் திருவிழா" என்று பல்லவிக்கு மட்டும் மாமா பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முறையாக எஸ்.பி.பி. பாடியதும் (முத்துராமனுக்காக) அப்போதுதான். பிறகு குலமா குணமா படத்தில் உலகில் இரண்டு கிளிகள்(ஜெய்), பிறகு சுமதி என் சுந்தரி].
எத்தனை அழகு பாடலை சி.வி.ஆர். ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார். இவ்வகை டெக்னிகல் விஷயங்கள் பரவலாக அன்று மக்களை சென்று அடையவில்லை. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடலில் மன்னரின் அந்த குரல் சொல்ல முடியாத சோகத்தை மனதில் விதைக்கும். அதை போக்கும் விதமாக இறுதி சரணத்தில்
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ! நாளை
இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ!
என்ற வரிகள் வரும்போது அரங்கமே ஆர்ப்பரிக்கும்!
என் ராஜாவின் ரோஜா முகம் பாடலில் சுசீலா பின்னியிருப்பார். அதிலும்
மன்னன் பெயரை மண்ணை தொட்டு விண்ணை அளக்க
அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க! அள்ளி அணைக்க!
என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார், அப்படியே இனிமையின் உச்சத்திற்கே நம்மை கொண்டு போய் விடும். படத்தின் நடுவில் அடிக்கடி ஒரு ஹம்மிங் வரும். haunting என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்தது. அதிலும் எம்.எஸ்.வி முத்திரை பதித்திருப்பார்.
இந்தி படம் பார்த்தவர்களுக்கு நடுவில் நாயகன் சிறிது நேரம் வரமாட்டார் என்பது தெரியும். ஆனால் தமிழில் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நடிகர் திலகம் திரையில் தோன்றாத அந்த 35 நிமிடங்களை ரசிகர்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பார்த்தார்கள். வாணிஸ்ரீ தங்கியிருக்கும் வீட்டிற்கு உறவினராக வரும் மனோகர் அடிக்கடி சொல்லும் "எங்க அமெரிக்காவிலே" என்ற வார்த்தைக்கு மட்டுமே எதிர் சவுண்ட் வரும்[அப்படி மக்களை கடுப்பேற்றுவதில் மனோகர் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்].
ஓபனிங் ஷோ முடிந்து காலை 10 மணிக்கு வெளியே வருகிறோம். அடுத்த காட்சிக்கு கடல் போல கூட்டம். எனக்கு தெரிந்து ஸ்ரீதேவியில் மிகப் பெரிய கூட்டம் என்றால் அது முதலில் தர்மம் எங்கே படத்திற்கு, அதன் பிறகு சவாலே சமாளி மற்றும் சிவகாமியின் செல்வன் படங்களுக்குதான். அந்தக் காலத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கள் Farewell விழா நடக்கும் நாளன்று ஒரு திரைப்படத்திற்கு செல்வது வழக்கம். மதுரையில் 1973-74ஆண்டு இறுதி ஆண்டு படித்த பல கல்லூரி மாணவ மாணவியர் தேர்ந்தெடுத்து சென்றது சிவகாமியின் செல்வன் படத்தைதான். இத்தனைக்கும் அதே நேரத்தில் மீனாட்சி திரை அரங்கில் Bobby ஓடிக் கொண்டிருந்தது.
மதுரையில் வெளியான முதல் 31 நாட்களில் நடைபெற்ற 104 காட்சிகளும் தொடர்ந்து ஹவுஸ் புல். இத்தனைக்கும் கெளரவம் சிந்தாமணியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரலில் ராஜபார்ட் ரங்கதுரையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருந்த படம் என்ன காரணத்தினாலோ 69 நாட்களில் மாற்றப்பட்டது. சென்னையில் தேவி பாரடைசில் 76 நாட்களை நிறைவு செய்தபோது வாணி ராணிக்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழல். இந்தப் படம் இலங்கையிலும் பெரிய வெற்றி அடைந்து சில உலக புகழ் பெற்ற படங்களை விட அதிக வசூல் பெற்றது.
1974-ல் பார்த்த பிறகு மீண்டும் தியேட்டரில் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன திரையிலும் டி.வி.டியிலும் கூட பார்க்கவில்லை. மதுரையில் தற்போது இப்படத்தின் வெற்றி ஓட்டத்தை குறிப்பிட்டதன் மூலம் பழைய நினைவுகளை இந்த பதிவின் வாயிலாக அசை போட வாய்ப்பளித்த சுவாமிக்கு நன்றி!
அன்புடன்
Thanks Mr. Murali sir. You always come with detailed message. One more information about Sivagamin Selvan, only movie Latha has acted with our NT.
Cheers,
Sathish
-
8th April 2011, 01:06 PM
#1559
Senior Member
Veteran Hubber
டியர் முரளி,
'சிவகாமியின் செல்வன்' பற்றிய மலரும் நினைவுகள் அருமை. நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மிகவும் ரம்மியமான படங்களில் இதுவும் ஒன்று. நடிகர்திலகம் பின்னியிருப்பார். 'ஆராதனா' ஓடியதற்கான காரணங்கள் அவற்றில் இடம்பெற்ற அருமையான பாடல்களும். அப்படத்தில் ராஜேஷ் கன்னா புதுமுகம் என்பதுமே. ராஜேஷ் ஷர்மிலா தாகூர் இணை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
நீங்கள் சொன்னது போல சிறிய கதை மட்டுமல்ல, எந்தவிதமான பெரிய திருப்பங்களும் இல்லாத கதையும் கூட. கிட்டத்தட்ட சென்னை மற்றும் பெரு நகரங்களில் மட்டுமல்ல இடைப்பட்ட சிறு நகரங்களில் கூட ஆராதனா நன்றாக ஓடியிருந்த வேளையில், படத்தின் கதை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் பாடல்களே அப்படத்தை தூக்கி நிறுத்தியிருந்ததால், தமிழில் மெல்லிசை மன்னர் எப்படி செய்திருக்கிறார் என்பதையும், இளமைத்துடிப்புள்ள (குறிப்பாக பையன் ரோல்) நடிகர்திலகம் எப்படி செய்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தனர்.
ஆனால் மெல்லிசை மன்னர் யார்?. அசகாய சூரராச்சே. 'உன்னுடைய ஒரிஜினல் ட்யூன்களை நீயே வைத்துக்கொள். கதைக்கும் காட்சிக்கும் ஏற்றவாறு நான் போடுகிறேன் பார் ட்யூன்' என்று, ஒவ்வொரு பாடலுக்கும் நிகராக போட்டிருந்தார் பாருங்கள் மெட்டு. ரசிகர்கள் அதிசயித்துப்போயினர். என்னடா இது, இப்படத்தில் மெல்லிசை மன்னர் இன்னொரு 'வேதா'வாக மாறுவார் என்று பார்த்தால், நான் நான்தான் என்று காட்டிவிட்டாரே என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.
'Mere sapnom ki rani' பாடலுக்கும் 'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று' பாடலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கிறததா...
'Kora kagaz ka ye man mera' பாடலுக்கும் 'இனியவளே என்று பாடி வந்தேன்' ட்யூனுக்கும் எந்த வகையிலாவது சம்மந்தப்படுத்த முடியுமா. இதே போல
'Gungugna rahe' பாடலின் இடத்தில் 'மேள தாளம் கேட்கும் காலம்' பாடலையும்,
'Chanda he thum' பாடலின் இடத்தில் 'என் ராஜாவின் ரோஜா முகம்' பாடலையும்
எல்லோரும் எதிர்பார்த்த
'Roppu thera masthana' படல் காட்சியில் 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது பாடலையும் ஒரிஜினல் இந்தி சாயல் கொஞ்சமும் இல்லாமல் தன் வழியில் ('என் வழி தனி வழி') மெட்டமைத்து அசத்தியிருந்தார்.
அதுபோலவே, எஸ்.டி.பர்மன் பாடியிருந்த சிச்சுவேஷன் பாடலைவிட, தன் குரலில் 'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே' பாடலை ஒருபடி மேலே தூக்கி நிறுத்தியிருந்தார் மெல்லிசை மன்னர். சுசீலாவின் தனிப்பாடலான 'என் ராஜாவின்' பாடலும், இந்திப்பாடலைவிட அருமை.
நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை, இளமை இயக்குனரோடு சேர்ந்து அட்டகாசம் பண்ணியிருப்பார். இரண்டு ரோல்களுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். (ஆரதனாவில் மீசை மட்டுமே வித்தியாசம்).
சென்னை லிட்டில் ஆனந்த் திரையிடப்பட்ட ‘ஆராதனா’, அங்கே 50 வாரங்களைக்கடந்த பின்னர், நகரின் பல்வேறு தியேட்டர்களில் தொடர்ச்சியாக மாறி மாறி திரையிடப்பட்டு 99 வாரங்கள் கழிந்த பின்னர் மீண்டும் 100-வது வாரமாக அதே லிட்டில் ஆனந்தில் திரையிடப்பட்டபோது மீண்டும் கூட்டம் அலை மோதியது. (தியேட்டர் அமைந்திருந்த அண்ணாசாலைப்பகுதி கல்லூரி வளம் செறிந்த இடம்). இதே காலகட்டத்தில் இதன் அருகேயிருந்த எமரால்ட் தியேட்டரில் 'அந்தாஸ்' இந்திப்படம் 30 வாரங்கள் சக்கை போடுபோட்டது.
அன்றைய காலகட்டத்தில் தமிழ்ப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடி சில மாதங்கள் கழித்துத்தான் இலங்கையில் திரையிடப்படும். 'சிவகாமியின் செல்வன்' தமிழ்நாட்டில் ஓடி முடிந்து எடுக்கப்பட்ட பின்னர்தான் இலங்கையில் திரையிடப்பட்டது. எந்த ஒரு படத்தையும் அற்புதமாக அறிமுகம் செய்வதில் இலங்கை வானொலிக்கு நிகர் எதுவும் கிடையாது. அந்த வகையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா இப்படம் பற்றிய சிறப்பம்சங்களைத் தொகுத்து வழங்கிய அழகைக்கேட்ட தமிழ்நாட்டினர், சிவகாமியின் செல்வனைப்பார்க்காமல் விட்டதற்காக வருந்தி, பார்க்கத்தேடியபோது it was too late. ஏனென்றால் அப்போதெல்லாம் படங்களை தியேட்டரில் பார்ப்பதல்லாமல் no other choice.
உங்களுக்கே தெரியும். நான் 1967 - 77 படங்களைப்பற்றிப் பேசுவதென்றால் என்னையே மறந்து விடுவேன். அந்த வகையில் சிவகாமியின் செல்வனைப்பற்றி இன்னும் நிறையப்பேச வேண்டும். பேசுவோம்.....
முரளியண்ணாவுக்கு மீண்டும் நன்றிகள்....
-
8th April 2011, 01:22 PM
#1560
Senior Member
Devoted Hubber
Bookmarks