The response will definitely be overwhelming. The joy of watching NT in theatre amidst large gathering is always a treat.
Regards,
R. Parthasarathy
Parthasarathy sir,
Yes, the joy of watching NT inside the theatre is always a treat. I just recall how we used make so much "Allapparai" and cut outs, posters when Thangapathakkam re-released in Maduria Alankar, Chinthamani on my school days.
As your location is Trichy, can you please brief us how NT fans make "Allapparai" on re-release movies and how could be the Sunday gala on Trichy theatres? I have not heared much about Trichy and whethere there will be posters still today like Madurai, because Madurai NT fans still have big big posters on all the re-release NT movies.
ஆனால் இங்கு சிலர் ஒரு 'மோட்டிவ்'வோடு வரும்போது விடக்கூடாது. அவங்க கையைத்தூக்குவதற்கு முன் நாம அடிச்சிடணும்.
அப்படி செய்யாததால்தான் காலம் காலமாக சிவாஜியை சேத்துல போட்டு இழுத்துட்டாங்க.
அன்புள்ள நண்பர்களே,
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் அந்தந்த ரசிகனுக்கு அந்தந்த கலைஞன் ஒசத்திதான். இருப்பினும், நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி விவரம் தெரியாதவர்கள் குறைத்து மதிப்பிடும்போது, அதைத் தாங்க முடியவில்லைதான்! இருப்பினும், நாம் அனைவரும் வழக்கம்போல் நடிகர் திலகத்தை சுவாசித்து இன்புறுவோம்!
நடிகர் திலகம் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்று நிரூபித்துப் பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவருடைய சாதனைகளை திரு. முரளி அவர்கள் ஒரு தனித்திரி மூலம் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டார். திரு. ராகவேந்தர் நடிகர் திலகத்துக்காக பிரத்தியேக வலைத்தளம் அமைத்து அவர்தம் சாதனைகளையும் அவரைப்பற்றிய செய்திகளையும் தொடர்ந்து பதிந்து கொண்டிருக்கிறார். திரு. பம்மலாரும் மிகப் பெரிய அளவில் authentic புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். இது போக, நடிகர் திலகத்தின் அத்தனை படங்களும் எண்ணற்ற முறை மறு வெளியீடு ஆகிவிட்டது; குறுந்தகடுகளில் வெளிவந்துவிட்டது; தூர்தர்ஷன் முதல் சன் டிவி வரை கணக்கு வழக்கு இல்லாமல் போட்டாகி விட்டது; ஆயினும், இன்னமும், அவரது படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அதற்குக் கட்டியம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அனைத்து ஊடகங்களும் அரசியல் மற்றும் சொந்த லாபங்களுக்காக, வேறொரு மாற்றுத் தரப்பையே பெரிதாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் திலகம் குன்றின் மேலல்ல; இமயத்தின் மேலிட்ட விளக்காகிப் பலப்பல வருடங்களாகி விட்டது.
எஸ்.பி.சௌத்திரியின் பன்முக பண்புகளை பற்றிய திறனாய்வு வழக்கம் போல் அழகாய் அமைந்திருக்கிறது. வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட தகவல்களில் மலையாளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.நடிகர் திலகத்தின் ரோலில் மது அவர்களும் ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தில் மறைந்த ஜெயன் அவர்களும் நடித்து வெளி வந்தது. ஆனால் படம் [படத்தின் பெயர் எனக்கு தெரியவில்லை] தோல்வி அடைந்ததாக சொல்வார்கள்.
தங்கபதக்கத்தை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே வெற்றியைப் பெற்ற படம். படத்தின் வெற்றிக்கு மகேந்திரனின் வசனங்கள் முக்கிய பங்காற்றின. அதை நடிகர் திலகம் கையாண்ட விதமும் அதை மாதவன் திரையில் கொண்டு வந்தது நேர்த்தியும் வெற்றிக்கு வழி வகுத்தன.
இரவில் நேரம் கழித்து வரும் நடிகர் திலகம் தூங்க கொண்டிருக்கும் மகனை தோளில் சுமந்தபடி twinkle twinkle பாட்டு பாட, உங்களுக்கு ஏன் சிரமம் என்று விஜயா கேட்க நீ பத்து மாசம் சுமந்திருக்கியே நான் பத்து செகன்டாவது சுமக்கறேனே என சொல்லும் சௌத்ரி, மகன் சாப்பிடுவதை பார்த்து விட்டு அவனுக்கு ஆப்பிள் வாங்கி வச்சிருந்தேனே என ப்ரிஜை திறந்து பழத்தை எடுக்க , மகன் சாப்பிடாமல் எழுந்து போக மனவருதை முகத்தில் காட்டாமல் மறைக்கும் சௌத்ரி, அலுவலக பணம் திருடு போய்விட்டதை விசாரிக்க வரும் சௌத்ரி வெளியூருக்கு எங்கேயும் போக கூடாது என்று சொல்ல, எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க சார்,பக்கத்து ஊருக்கு போவதாக இருந்தால் கூட தனியா அனுப்ப மாட்டங்க என்று ஸ்ரீகாந்த் சொல்ல ஆனா வேலூருக்கு போறதா இருந்தா தனியாதான் போகணும் என டைமிங் பன்ச் அடிக்கும் சௌத்ரி, நல்லதொரு குடும்பம் பாடல் முடிந்ததும் வரும் கைது படலம்,சவால் காட்சி இடைவேளை அதற்கு பிறகு வரும் காட்சி, சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் மனைவி மருமகளிடம் நிதானமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம் [நானே ஒரு கொலை பண்ணிட்டா,எஸ்.பிங்கறதுக்காக என்னை சும்மாவா விட்டுருவாங்க?], அவர்களை கன்வின்ஸ் செய்ய அவர் சொல்லும் வசனம் குற்றவாளி உனக்கு மகன் அவளுக்கு கணவன் ஆனா இரண்டு பேரும் ஒரு விஷயத்தை மறந்திடீங்க அவன் எனக்கும் மகன்தான் என்று முடிக்கும் சௌத்ரி, நீங்க சாப்பிடலையா என கேட்கும் மனைவியிடம் அவர்கள் சொன்ன ஒரு நாள் சாப்பிடலேனா உயிரா போயிடும் என்ற அதே வசனத்தை திருப்பி சொல்லி விட்டு வெளியேறும் சௌத்ரி, மாயாண்டி மருமகனுக்கு உதவி செய்யறதா நினைச்சு சம்பந்திக்கு உதவி செஞ்சிருக்க என நக்கல் சிரிப்புடன் சொல்லும் சௌத்ரி, லட்சுமி நான் டெய்லி லேட்டா வருவேன் நீ தூங்காம எனக்காக முழிச்சிடிருப்ப நான் இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டேன் ஆனா நீ தூங்கிடியே, லட்சுமி என்னாலே தாங்க முடியலேம்மா என விழுந்து கதறும் சௌத்ரி, இந்தியாவிலே பெரிய குடும்பம் என்னோடதுதான் என மைனரிடம் மிடுக்காய் பேசும் சௌத்ரி, மத்தவங்களை என் பக்கம் திருப்பிதான்பா எனக்கு பழக்கம், நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கம் இல்லை என தன் நிலைபாட்டை மகனிடம் விளக்கும் சௌத்ரி,குற்றவாளிகள் தப்பித்து விட்டதால் ஐ.ஜி.யின் முன்னால் தளர்ந்து நிற்கும் சௌத்ரி,குற்றவாளிகள் பிடிபட்டார்கள் என்றவுடன் உடல் மொழியில் வரும் மிடுக்கு, உடனே மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி வந்தவுடன் அப்படியே மீண்டும் தளர்ந்து shall I என்று அனுமதி கேட்கும் சௌத்ரி, இப்படி படம் முழுக்க பிச்சு உதறும் சௌத்ரியை முதன் முதலில் பார்த்த அந்த 1974 ஜூன் 1ந் தேதி முதல் இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவேயில்லை என்பதுதான் உண்மை.
மேஜர் பேசும் ஒரு வசனமும் அரங்கில் அதிக கைதட்டலை் பெறும். எங்க அய்யா, முருகன் கையில் இருக்கற வேல் மாதிரி வளைக்க முயற்சி பண்ணா, வளைஞ்சிருவீங்க என ஸ்ரீகாந்திடம் சொல்லும் போது அரங்கம் அதிரும்.
இனியும் இந்தப் படத்தைப் பற்றியும் அதன் சாதனைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே போகலாம். அது பிறிதொரு நாளில். மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த பார்தாவிற்கு நன்றி.
அன்புடன்
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
தங்களது மனமார்ந்த பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களது எழுத்து வலிமையால்தான் நான் முதன் முதலில் இந்தத் திரிக்கு ஈர்க்கப்பட்டேன்.
நான் எழுதிய பல்வேறு காட்சிகள் இல்லாமல், மேலும் பல காட்சிகளை அற்புதமாக எழுதி தங்கப்பதக்கத்துக்கு மேலும் சிறப்பை சேர்த்து விட்டீர்கள். தாங்கள் எழுதிய அனைத்து காட்சிகளையும் நானும் - ஏன் அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் எழுத முடியும் - ஏனென்றால், நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை, அவரது அனைத்து ரசிகர்களும் ஒரே கோணத்தில் தான் சிந்திப்பார்கள். இருப்பினும், நீங்கள் எழுதும் போது, மெருகு பல படிகள் ஏறி விடுகிறது. ஆனால், அதோடு நிற்காமல், என்னைப் போன்ற புதியவர்களை மேலும் பல மடங்கு உத்வேகத்துடன் எழுதவும் தூண்டி விடுகிறது.
நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றியும் வெற்றிகளைப் பற்றியும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி பெருமையும் உவகை கொள்ளும் போது தாய்த் தமிழ்நாட்டில் அவருடைய வெற்றிகளையும் சாதனைகளையும் மறைத்து அதில் சந்தோஷமடையும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். கடல் கடந்து தமிழர்கள் அவரைப் பற்றி எந்த அளவிற்கு பாசமுடன் உள்ளார்கள் என்பதற்கு இந்த ஒளிப் படமே சான்று. இதனை அந்த அன்பர்களுக்கு நாம் அன்புடன் சமர்ப்பிப்போம்.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 29th April 2011 at 11:19 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
கடல் கடந்து தமிழர்கள் அவரைப் பற்றி எந்த அளவிற்கு பாசமுடன் உள்ளார்கள் என்பதற்கு இந்த ஒளிப் படமே சான்று.
ஆம் ராகவேந்திரா ஐயா!
நான் குடியிருக்கும் சிங்கை மண்ணின் கலைஞர்கள் படைப்பு என்பதில் எனக்கு கூடுதல் பெருமை . சிங்கை தொலைக்காட்சி , வானொலி அமைப்புகள் எப்போதும் நடிகர் திலகத்தை மறவாது போற்றி வருகின்றன ..நடிகர் திலகத்தின் பிறந்தநாள் , நினைவு நாளில் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை படைத்து வருகின்றன .. சிங்கை வசந்தம் தொலைக்காட்சிக்கும் , ஒலி 96.8 வானொலிக்கும் நன்றி!
நான் குடியிருக்கும் சிங்கை மண்ணின் கலைஞர்கள் படைப்பு என்பதில் எனக்கு கூடுதல் பெருமை . சிங்கை தொலைக்காட்சி , வானொலி அமைப்புகள் எப்போதும் நடிகர் திலகத்தை மறவாது போற்றி வருகின்றன ..நடிகர் திலகத்தின் பிறந்தநாள் , நினைவு நாளில் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை படைத்து வருகின்றன .. சிங்கை வசந்தம் தொலைக்காட்சிக்கும் , ஒலி 96.8 வானொலிக்கும் நன்றி!
Thanks Ragavendra sir for a wonderful video link.
Even in Australia hot selling DVDs on Tamil circle are of NT only and I don't see any other Tamil actors remembered like NT on his birthday and rememberence day.
பின்னி எடுத்துட்டீங்க. நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு 'தங்கப்பதக்கம்' திரைக்காவியத்தை அலசித்தள்ளி விட்டீர்கள். எத்தனை முறை எவ்வளவு விவரித்தாலும் அலுக்காத சலிக்காத படம் அது. அதிலும் 'சோதனைமேல் சோதனை' பாடலின்போது நடிகர்திலகம் , டி.எம்.எஸ்., கண்ணதாசன், எம்.எஸ்.வி. பி.என்.சுந்தரம் என எல்லோரும் சேர்ந்து அட்டகாசம் செய்திருப்பார்கள். ரத்தச்சிவப்பு நிற சட்டையில் நடிகர்திலகத்தின் தோற்றமும், அவருடைய நிகரற்ற முகபாவங்களும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதற்கேற்றாற்போல மகேந்திரனின் வசனங்களும்.
தன் மகன் மணந்துகொண்டு அழைத்து வந்திருக்கும் பிரமீளா, மேஜரின் மகள் என்றறிந்ததும், 'மாயாண்டி, என் மகன் செஞ்ச தவறுகளிளேயே அழகான தவறு உன் மகளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதுதான்யா' என்று சொல்லும் வசனமும், தொடர்ந்து தன் மனைவியிடம் 'சம்பந்தி வந்திருக்கார், கவனி' என்று சொல்லிப் போகும் இடமும்.
ஒருமுறை பத்திரிகை பேட்டியின்போது மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியிடம், கேள்வி கேட்டவர், "நீங்க பார்த்த தமிழ்ப்படங்களில் உங்களை பாதிச்ச சீன் எதுன்னு சொல்லமுடியுமா?" என்று கேட்க, அதற்கு மம்முட்டி, "தங்கப்பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா இறந்து போன செய்தி கேட்டு வீட்டுக்கு வரும் சிவாஜி சார், மாடிப்படியில் ஏறும்போது தன் வலது கையால் நெஞ்சில் ஸ்லோவாக ஆனால் பலமாக குத்திக்கொண்டே ஆசுவாசப் படுத்தியவாறு செல்வார். ஏனோ தெரியலை, அந்த குத்து ஒவ்வொண்ணும் என் நெஞ்சில் விழுந்த மாதிரி இருந்தது. இதைப்பார்த்து பின்னர் நானும் ஒரு மலையாளப்படத்தில் இதை முயற்சி பண்ணினேன் ஆனால் சரியா வரவில்லை. அவர், அவர்தான்" என்று சொல்லியிருந்தார். ஒரு உண்மையான கலைஞனைப்பற்றி இன்னொரு உண்மையான கலைஞனுக்குத்தானே தெரியும்.
அதுபோலவே, தங்கள் மகனுக்கு திருமணம் செய்விப்பது தொடர்பாக நடிகர்திலகமும், புன்னகையரசியும் பேசிக்கொண்டே ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டு, பால்கனியில் நடந்து, மாடிப்படியில் இறங்கி, இன்னொரு மாடிப்படியி ஏறி, மற்றொரு அறைக்குள் நுழைவது வரை ஒரே ஷாட்டில் படமாக்கும்படி இயக்குனர் மாதவன் சொல்ல, அதைப்படமாக்க தானே கேமராவை கையில் தூக்கிக்கொண்டு பின்னோக்கி நடந்து, அப்படி நடக்கும்போது கேமரா அசைந்து விடக்கூடாது என்பதற்காக, கைமீது ஒரு 'வாட்டர் பாக்' வைத்து அதன்மீது கேமராவை வைத்து அலுங்காமல் பூப்போல எடுத்துக்கொண்டே பின்னோக்கியே நடந்து அக்காட்சியைப் படமாக்கிய சிறப்பை மறைந்த ஒளிப்பதிவு மேதை பி.என்.சுந்தரம் அழகாக விளக்கியிருந்தார்.
கேமராவுக்கு முன் இயங்கிய கலைஞர்களும் சரி, பின்னணியில் இயங்கிய தொழில்நுட்பக் குழுவினரும் சரி, தங்கப்பதக்கம் படத்தில் எல்லோருமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருந்தனர். இப்படத்துக்கு இசைத்த தீம் மியூசிக்கை, பிற்பாடு மெல்லிசை மன்னர் 'மன்மத லீலை' படத்தில் ஒரு பாடலாகவே இசைத்திருப்பார். எல்லோரும் பட்டபாட்டுக்கு நல்ல பலன் கிடைத்தது. தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியை இப்படத்துக்கு பரிசாகத் தந்தனர். இன்றுவரை இப்படத்துக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. எக்காலத்திலும் குறையாது.
டியர் ராகவேந்தர் சார்,
தங்களின் video linkக்கு நன்றி, இதை பார்க்கும் போது மலேசியாவில் உள்ள என் நண்பரின் கூற்று நினைவுக்கு வருகிறது, என் நண்பர் மற்றும் உடன் வேலை செய்யும் சீன நண்பர்களோடு நடிகர் திலகத்தின் பாசமலர் படம் பார்க்கும் போது மொழி புரியாவிட்டாலும் நடிகர்திலகத்தின் நடிப்பை பார்த்து அந்த சீனன் குலுங்கி குலுங்கி அழுதாராம்.
ஒரு உண்மையான நடிகனுக்கு இதுவே சிறந்த அங்கீகாரம்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
Bookmarks