Page 179 of 199 FirstFirst ... 79129169177178179180181189 ... LastLast
Results 1,781 to 1,790 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1781
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    மஞ்சுளா நவநீதன்

    ஒரு சகாப்தத்தின் முடிவு - சிவாஜி கணேசன் மறைவு

    சிவாஜி கணேசன் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. எந்த சகாப்தம் என்பதைப் புரிந்து கொள்ள முயலுவோம். அவர் வெறும் நடிகர் என்பதற்கு மேலாக திராவிட இயக்கத்தின் நிகழ்கலைக் குறியீடு என்று சொல்ல வேண்டும். ஜெயகாந்தனின் குறுநாவல் 'கை விலங்கு ' 'காவல் தெய்வ 'மாய்ப் படமாக்கப் பட்ட போது மரம் ஏறும் கிராமணி வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். அதைப் பற்றி எழுதிய போது ஜெய காந்தன் குறிப்பிட்டார். 'அவர் கிராமணியாய்ச் சிறப்பாக நடித்தாலும், அவ்வளவு கம்பீரத்தைக் காட்டியிருக்க வேண்டாமோ என்று எனக்குத் தோன்றியது. '. இது சிவாஜி கணேசன் பற்றிய மிக ஆழ்ந்த விமரிசனம். உண்மையில் திராவிட இயக்கம் கட்டுவித்த தமிழ்ப் பழமையைப் புதுப்பிக்கும் போக்கிற்கும், தமிழர் பெருமையைப் புதுப்பிக்கும் போக்கிற்கும் சிவாஜி கணேசனை விட வேறு யாரும் குரல் தந்திருக்க முடியாது. சிம்மக் குரலோன் என்ற பெயர் கூட அர்த்தம் பொதிந்தது தான்.

    திராவிட இயக்கம் தமிழின் இயல்பான நளினத்தையும், கவித்துவத்தையும், இசை தோய்ந்த இயல்பையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வீராவேசம் சேர்ந்த மேடைப் பேச்சுத் தமிழின் பாணியில் ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஒரு விதத் தமிழைக் கட்டுவிக்க முயன்றது. இந்த வகைத் தமிழின் மிகச் சிறப்பான வெளியீட்டாளராக சிவாஜி கணேசன் திகழ்ந்தார்.

    ஹிட்லர் தம்முடைய ஜெர்மானியச் சிறப்புப் பிரசாரத்திற்கு இசைவாய் ரிச்சர்ட் வாக்னரின் வீரதீர இசையை மேற்கொண்டதாய்ச் சொல்வார்கள். 'பராசக்தி ' தொடங்கி சிவாஜியின் குரல் திராவிட இயக்கத்தின் பெருங்குரலின் குறியீடாய் உரக்க முழங்கிக் கொண்டே இருந்தது. வறுமை வாய்ப்பட்ட ஒரு இளைஞனின் கோபம் பெருத்த குரலில் 'பராசக்தி 'யில் வெளிப்பட்டதே தவிர, இறைஞ்சுதல் வெளிப் படவில்லை. அரசியல் ரீதியாய் சிவாஜி கணேசன் திராவிட இயக்கத்தை விட்டு நகர்ந்ததாய் ஒரு தோற்றம் கிடைத்தாலும் அவர் திராவிட இயக்கத்தின் குறியீடாய்த் தான் கடைசி வரையில் இருந்தார். இயல்பாகவே கம்பீரத்தைக் கோரிய கதாபாத்திரங்களை அவர் மேற்கொண்ட போது அவருடைய நடிப்பு மிக மிக உயர் தரத்தில் இருந்தது. 'முதல் மரியாதை ', 'தேவர் மகன் ', 'தங்கப் பதக்கம் ', 'தில்லானா மோகனாம்பாள் ' போன்ற படங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். அவருடைய இயல்பான நடிப்பு வீச்சை கம்பீரத்திற்குச் சுருக்கி விட்டது திராவிட இயக்கத்தின் பாதிப்புக்காளான தமிழ்த் திரையுலகம்.

    இந்தப் போக்கை மீறியும் 'நவராத்திரி 'யில் தொழு நோயாளியாகவும், 'திருவருட் செல்வரி 'ல் அப்பூதி அடிகளாகவும் அவர் நடித்தது விதி விலக்கு. 'வசந்த மாளிகை 'யில் துயரமும் கழிவிரக்கமும் ஏன் வெளிப்படவில்லை ? 'ராஜ ராஜ சோழனி 'ல் ராஜ ராஜ சோழனின் போராட்டங்களும் தடுமாற்றங்களும் ஏன் வெளிப்படவில்லை என்று நாம் கேட்டுக் கொண்டால் இது தான் விடையாகும்.

    சிவாஜி கணேசனும் , எம் ஜி ஆரும் எதிரிடையானவர்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. சமூக தளத்தில் திராவிடக் கருத்தியலின் இரு முக்கியமான சரடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியதன் மூலம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமை செய்ததாகவே கொள்ள வேண்டும். தமிழ் இனத்தின் கம்பீரத்தினை, தமிழ் இனம் எட்ட வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் இலக்குப் படுத்தின பெருமிதத்தை சிவாஜி கணேசன் காட்டியது போல, தமிழ் இனத்தின் கதாநாயகப் பூசனைக்கு - ஆளுயர மாலை, இரண்டு மாடிக்கட்டடம் அளவிற்குக் கட்அவுட்- எம் ஜி ஆர் பாத்திரமானார். தமிழ் இனம் தம் பெருமையை சிவாஜி கணேசனாய் இனம் கண்டு கொண்டது. தம் வழிபாட்டுக்கு எம் ஜி ஆரை மேற்கொண்டது.

    தமிழினத்தின் வழிபாட்டு உணர்வே இறுதியில் வென்றது என்பது பற்றி யாரும் சமூகவியல் ஆய்வு மேற்கொண்டால் நல்லது.
    Yours truly

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1782
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    “எனது சுயசரிதை” – நடிகர்திலகம் சிவாஜி கணேசன்
    ஜூன் 6 2006, 10:05 அன்று மக்குசாமி, புத்தக விமர்சனம் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
    நமது வாழ்க்கையில் சில பேரால் மட்டுமே மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட மிக சிலரில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகரும் ஒருவராகும். என்னை யாரும் பாதிக்கமுடியாது என்று கர்வத்துடன் என்னை நானே பலமுறை ஏமாற்றிக்கொண்டதுண்டு. அதில் நான் கண்ட மிகப்பெரும் தோல்வி சிவாஜியிடம்தான். அவரின் மரணத்தன்றுதான் என்னுள் அவரின் பிம்பம் ஒளிந்திருப்பதை முழுமையாக உணர்ந்துகொண்டேன். அவரின் திருவாயாலேயே அவரது சுயசரிதையை சொல்லவைத்து எழுதியுள்ளனர். பொதுவாக இந்த முறையில் சுயசரிதை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இந்த முறையில் நூலின் நாயகன் தனது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சிவாஜி போன்ற திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்த, நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மனிதருக்கு இது பொருந்தவில்லை.


    Sivaji Ganesan
    சிவாஜியின் பிறப்பு, குழந்தைப்பருவம், நாடக ஆசையில் தன்னை அனாதை என்று கூறிக்கொண்டது, ராஜபார்ட் ஆசை, நாடகக் கம்பெனிகளில் பட்ட கஷ்டங்கள், சக கலைஞர்களுடன் கொண்ட நட்பு, பெரியார்-அண்ணா-கலைஞர்-எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களுடன் கொண்ட நட்பு மற்றும் மரியாதை, பராசக்தி என்ற திருப்புமுனை, அமெரிக்கப்பயணமும் அதன் பெருமைகளும், அரசியலில் ஏற்பட்ட அவமானங்கள், “ஒவர் ஆக்டிங்” என்ற விமர்சனம், தனது குடும்பம், பெரியாராக நடிக்க ஆசைப்படுவது (நிறைவேறாத ஆசை!) என்று திறந்த மனதுடன் தனது அனுபவங்களைக் கொட்டியுள்ளார்.

    இந்த நூல் மிக எளிமையான நடையில் பாமரரும் படித்து புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உயர்ந்த அச்சுத்தரம், முழுமையான தகவல்கள், சரியான அளவிலான புகைப்படங்கள், குறைந்த விலை மற்றும் நடிகர் திலகத்தின் கள்ளம் கபடமற்ற பேச்சு என்று புத்தகம் களை கட்டுகிறது. தொகுப்பாசிரியர் கேள்விகளைத் தொடுக்க, நடிகர் திலகம் பதில் அளிப்பதாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தலைப்பு: எனது சுயசரிதை
    ஆசிரியர்: அமரர் சிவாஜி கணேசன்
    தொகுப்பாசிரியர்: திரு. டி.எஸ்.நாராயணஸ்வாமி
    பதிப்பு: சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட்
    25, பெஸன்ட் ரோடு, ராயப்பேட்டை,
    சென்னை – 600014.
    தொலைபேசி: 28350126/28350127
    விலை: ரூ.135.00
    Yours truly

  4. #1783
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    அத்தியாயம் 23

    நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் சென்னை தி. நகர் சௌத் போக் ரோடில் வசித்து வருகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது கொடுக்கப்பட்டபோது, சென்னை மாநகராட்சி எங்கள் தெருவின் பெயரை “செவாலியே சிவாஜி கணேசன் சாலை” என்று மாற்றியது. பொதுவாகவே எங்கே ஆட்டோ ஏறினாலும், தி. நகர் சௌத் போக் ரோடு என்றவுடன், சிவாஜி வீட்டு கிட்டேயா?’ என்று டிரைவர்கள் கேட்கத் தவறமாட்டார்கள். சிவாஜியின் பரம ரசிகர்களான என் வயதான உறவினர்கள் சிலர், ” சிவாஜியை அடிக்கடி பார்ப்பியா? ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்; என்னை சிவாஜியைப் பார்க்க கூப்பிட்டுக்கிட்டுப் போ!” என்று கட்டளையிடுவார்கள். நான் உடனே டாபிக்கை மாற்றிவிடுவேன்.
    உண்மை என்னவென்றால் நானே முதல் மரியாதை படம் ரிலீசாகும் வரை சிவாஜி வீட்டின் பெரிய கேட்டைத்தான் பார்த்திருக்கிறேன். முதல் மரியாதை வெளியாகி, பெருத்த வரவேற்பைப் பெற்றவுடன், கல்கிக்காக அவரை சந்தித்தேன். சிவாஜி என்ற சிங்கத்தைப் பார்க்கப் அவர் வீட்டுக்குள் போன என் கண்களில் முதலில் பட்டது கம்பீரமாக ஒரு கண்ணாடி ஷோ கேசின் உள்ளே நின்றுகொண்டிருந்த ஒரு நிஜ சைஸ் புலி.
    சிவாஜி நடந்து அந்த வரவேற்பு அறைக்குள் வந்தபோது, எனக்குள்ளே ஒரு இனம் தெரியாத சிலிர்ப்பு. பொதுவாக சினிமா உலகம் பற்றியும்,குறிப்பாக முதல் மரியாதை பற்றியும் அப்போது பேசினார். “நீங்கள் இத்தனை படங்களில் நடித்ததற்கும், முதல் மரியாதையில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டதும், ” முதல் மரியாதையில நான் எங்கே நடிச்சேன்? நீங்க நடிக்கவே வேணாம்; சும்மா வந்திட்டுப் போனா போதும்னு அந்த டைரக்டர் பாரதி(ராஜா) சொல்லிப்புட்டாரில்ல. அப்புறம் எங்க நான் நடிக்கறது?” என்றார்.
    ஒரு முறை பாரதி ராஜாவை பேட்டி கண்டபோது, சிவாஜி சொன்னததை அவரிடம் சொன்னபோது, அவர் முதல் மரியாதையில் சிவாஜியை இயக்கிய அனுபவத்தை சொன்னார். ஆற்றங்கரையோர குடிசையில் ராதா கொடுத்த மீனை ருசித்தபடியே நீண்ட வசனம் சொல்ல வேண்டிய காட்சி. பாரதி ராஜா, ‘ஸ்டார்ட்’ சொன்னதும் சிவாஜி வசனம் பேச ஆரம்பித்தர். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. ஐம்பது, அறுபது வினாடிகளுக்குப் பிறகு, சிவாஜி மீண்டும் முதலிலிருந்து வசனத்தை சொல்ல ஆரம்பித்தார். பாரதிராஜாவுக்கும், மற்றவர்களுக்கும் எதற்காக மறுபடியும் வசனத்தை ஆரபித்து சொல்கிறார் என்று புரியவில்லை. ஆனாலும், அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொத்த வசனத்தையும் பேசி முடித்தபோது, பாரதி ராஜா கட் சொன்னார்.
    எல்லோரும் சிவாஜியின் முகத்தையே பார்க்க, ” எதுக்காக ரெண்டாவது தடவை முதலிலே இருந்து வசனத்தை ஆரம்பிச்சேன்னுதானே பார்க்கறீங்க? சொல்லிக்கிட்டே வரும்போது சின்ன தப்பு பண்ணனேனே? கவனிக்கலையா நீங்க? மறுபடியும் இன்னொரு டேக் எடுக்கறதுக்கு பதிலா, அதே டேக்லயே மறுபடியும் முதல்லே இருந்து வசனத்தை பேசிட்டேன்” என்று சொன்னார்.
    இந்த சம்பவத்தை சொன்ன பாரதி ராஜா, வசனம் பேசிக்கிட்டே வரும்போது ஒரு கணம் தப்பு ஏற்பட்டாலும், தடுமாறாமல், அதை புத்திசாலித்தனமா சமாளிக்க ஆன் தி ஸ்பாட் முடிவு எடுத்து, மறுபடி வசனத்தை பேசின அவன்தான்யா பிறவி நடிகன். என் டைரக்ஷன்லயும் அவன் நடிச்சிருக்கான் என்பதுல எனக்குப் பெருமை! ” என்றார் பூரிப்புடன்.
    குமுதத்தில் பத்திரிகையாளர் மணா ‘ நதி மூலம்’ தொடரில் சிவாஜியைப் பற்றி எழுதினபோது, அந்தக் கட்டுரையில் இடம் பெற வேண்டிய ஒரு பாக்ஸ் மேட்டரை என்னை எழுதும்படி சொன்னார்கள்.(உங்க ஏரியாதானே! சிவாஜி பத்தி ஒரு சின்ன மேட்டர். அவரைப் பார்த்திட்டு நீங்களே எழுதிடுங்களேன் என்று குமுதத்தில் சொல்லிவிட்டார்கள்) அதற்காக சிவாஜியை சந்தித்தேன். அப்போது சிவாஜி தன் ஆரம்ப நாட்களைப் பற்றி மிகவும் உருக்கமாகப் பேசினார். அதன் சுருக்கம்:
    “என் அப்பா மன்றாடியார் பகத்சிங் டைப் தேசியவாதி. நெல்லிக்குப்பத்துல ரயிலுக்கு வெடிகுண்டு வைக்கிறது யாருன்னு திருவுளச்சீட்டு போட்டபோது என் அப்பா பெயர் வந்தது. பிளான்படி வெடிகுண்டு வெச்சிட்டு ஓடறப்போ, பிரிட்டிஷ்காரன் சுட்டுட்டான். கால்ல பலத்த அடி. ஓடி வந்து மண்டையில் ஒரு போடு போட்டான். கேஸ் நடந்து ஏழரை வருஷ ஜெயில் தண்டனைன்னு தீர்ப்பாச்சு.” சொல்லும்போதே சிவாஜியின் குரல் கம்மியது. “ஜெயிலுக்குப் போன நாலரை வருஷத்துக்கெல்லாம் விடுதலையாகி வந்தவரைக் காட்டி என் அம்மா எனக்கு சொன்னாங்க, ” இவருதாண்டா உன் தகப்பனார்!”
    அந்த சமயத்துல நாங்க விழுப்புரத்தை விட்டுட்டு, திருச்சிக்குப் பக்கத்துல சங்கிலியாண்டபுரம் என்கிற கிராமத்துக்கு வந்திட்டோம். அந்த கிராமத்துல நான் உருண்டு விளையாடாத இடமில்லை. அங்கே வருஷா வருஷம் கட்டபொம்மன் நாடகம் நடக்கும். அதைப் பார்க்கிறப்போ, நமக்கு இஞ்செக்ஷன் போட்டாப்புல இருக்கும்.நாமளும் நடிக்கணும்னு உடம்புல ஸ்பிரிட் ஏறும். அந்த வெறிதான் என்னை நாடகக் கம்பெனியில சேர வெச்சுது. அதற்கு அப்புறமும் நான் வாழ்க்கையில சந்திச்ச கஷ்டங்கள் ஏராளம்; சோகங்களும் சொல்லிமாளாது.
    நான் இன்றைக்கு யாருக்காவது நன்றிக் கடன் பட்டிருக்கேன்னா அது ரெண்டு பேருக்குத்தான். ஒண்ணு ஆண்டவனுக்கு; இன்னொண்ணு பராசக்தி படத்தை தயாரிச்ச பார்ட்னரான பெருமாளுக்கு. ரொம்ப வெளிப்படையா சொல்லணும்னா என்னோட வாழ்க்கையும், வசதியும் பெருமாள் போட்ட பிச்சை” ரொம்ப உருக்கமாகப்பேசினார் சிவாஜி.
    1997ல், சிவாஜிக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டபோது குமுதத்துக்காக சிவாஜியை சந்தித்தேன். மனுஷர் ரொம்ப ஜாலி மூடில் இருந்தார். இரண்டு சிறுமிகள் சிவாஜிக்கு பொக்கே கொடுத்தபோது, அவர்கள் இருவரையும் உச்சி மோந்து, முத்தமிட்டுவிட்டு, ” உங்க அப்பன் உங்களுக்கு சாப்பாடே போடறதில்லையா? இப்படி இளைச்சு போயிட்டீங்களே!” என்று ஜோக் அடித்தார் சிவாஜி. அந்த இரண்டு சிறுமிகள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும்தான்! அவர்களுக்கு சோறு போடாத அப்பன் வேறு யார்? சாட்ஷாத் சூப்பர் ஸ்டார்தான்!
    ‘எனக்கு சுயநலம் குறைச்சல். மத்தவங்க சந்தோஷப்பட்டா, அதைப் பார்த்து சந்தோஷப்படற கலைஞன் நான். இவ்வளவு நாள் தகுதியான ஒருத்தன் இருக்கிறது தெரியாம இருந்து, இப்ப தெரிஞ்சு, தாதா சாஹேப் பால்கே விருது கொடுத்து கௌரவிச்சிருக்காங்களேன்னு நம் தமிழ் நாட்டு ஜனங்கள் எல்லாம் சந்தோஷப்படறதைப் பார்க்கிறபோது, எனக்கு ரெட்டை சந்தோஷமா இருக்கு.” என்று சிவாஜி சொன்னபோது அவர் முகத்தில் நிஜமாலுமே ரெட்டை சந்தோஷம்.
    தொடர்ந்து பராசக்தி நாட்களைப் பற்றி நினைவு கூர்ந்தார் நடிகர் திலகம். ‘அது ரத்தக் கண்ணீர் வடிச்ச சோகமான காலம். சினிமா உலகம் இரும்புக்கோட்டை மாதிரி இருந்தது. புதுசா ஒருத்தன் அத்தனை சுலபமா உள்ளே நுழைஞ்சிட முடியாது. என்னை பலர் ஜீரணிச்சுக்கலை. ஒரு சவுண்டு இஞ்சினியர் நான் வசனம் பேசினதைப் பார்த்துட்டு, “மீன் மாதிரி வாயை தொறந்து, தொறந்து மூடி வசனம் பேசுறானே! இவனெல்லாம் நோ கட் பாடி”ன்னு சொன்னார். (நோ கட் பாடி என்பது ‘இவனெல்லாம் எங்கே தேறப்போறான்னு அர்த்தம் கொண்ட அந்தக் கால சினிமா உலக வார்த்தை)
    ‘உங்களுடைய நீண்டகால, நிலைத்த வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?” என்றபோது, ” நான் ஆறு வயசுல நடிக்க வந்தவன். மேடையிலதான் நான் நடிப்பை கத்துக்கிட்டேன் என்பதால, என் நடிப்புல எப்போதுமே ஸ்டேஜ் இன்ஃப்ளுயன்ஸ் உண்டு. ஆனால், காலத்தோட சேர்ந்து, நானும் என்னோட நடிப்பு பாணியை கொஞ்சம், கொஞ்சமா மாத்திக்கிட்டு வந்ததுதான் பெரிய பிளஸ் பாயிண்ட். எனக்கு கடவுள் பக்தி நிறைய உண்டு. உழைப்பின் மேல் நம்பிக்கை உண்டு. ஆரம்ப காலத்துல பலரும் என்னை அங்கீகரிக்க மறுத்தபோது, டைரக்டர் (கிருஷ்ணன்) பஞ்சு, ” நீ கவலைப்படாதே! பிற்காலத்துல எல்லாரும் உன்னத்தான் ஃபாலோ பண்ணுவாங்க!” என்று அடிக்கடி சொல்லுவார்.
    இந்தியன் படத்தில் ஹாலிவுட் மேக்-அப் மேன் உதவியோடு கமல் முதியவராக நடித்தபோது, தேசிய அளவுல அங்கீகாரம் கிடைச்சது. ஆனா அவரைவிட குறைஞ்ச வயசுல அப்பர் வேஷத்துல தொண்டுக் கிழவராக நீங்க நடிச்சிருக்கீங்க. அந்தக் காலத்துலயே ஒரே படத்துல ஒண்ணுக்கொண்டு சம்மந்தமில்லாத ஒன்பது கேரக்டர்ஸ் பண்ணி இருகீங்க! அதுக்கெல்லாம் பெரிய அளவுல அங்கீகாரம் கிடைக்கலையேன்னு வருத்தப்பட்டதுண்டா?” என்று சற்றே தயக்கத்துடன் கேட்டேன். “அந்தக் காலத்துல ஏது இத்தனை வசதி? நானேதான் அப்பர்சுவாமிகளா மேக்-அப் போட்டுக்குவேன். அப்ப ஜனங்க ரசிச்சாங்க! இப்போ இருக்கறது மாதிரி நிறைய வசதிகள் இருந்தா இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்” என்று வருத்தம் கலந்த நழுவலாக பதில் வந்தது.
    இந்தக் காலத்தில் சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் பற்றிய கேளவிக்கு அவர் ஒரு பஞ்ச் பதில் சொன்னார் பாருங்கள்! ” அந்தக் காலத்துல நான் (திறமையை) வெச்சிக்கிட்டு, வஞ்சனையா பண்ணினேன்? இந்தக் காலத்துல ஏகப்பட்ட பேர் வராங்க. இவங்க எல்லாம் (திறமையை) வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணறாங்க?” அப்பப்பா! அசந்து போனேன் நான். சிவாஜி மேலும் தொடர்ந்தார்: ” நடிகன்னா நிறைய திங்க் பண்ணணும். காலையில பாத் ரூம்ல நான் நிறைய யோசனை பண்ணுவேன். பகல்ல சாப்பிட்ட பிறகு, உடம்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தாலும், திங்க் பண்ணாம இருக்க மாட்டேன். நடிக்க வந்திட்டு, தீவட்டி மாதிரி நின்னா சீக்கிரமே வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
    ‘இத்தனை வருஷ அனுபவத்துல, இப்போ எப்படி நடிக்கணும்னாலும் ஃபூன்னு ஊதிடுவீங்க இல்லை?’
    டைரக்டர் சீனை சொன்னதும், நான் செஞ்சு காட்டறேன். கொஞ்சம் கூட, குறைய இருக்கும். எப்படி வேணும்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு நடிச்சுக் காட்டுவேன். ஏதாவது சேஞ்ச் வேணுமென்றால் சொல்லுவார்கள். முதல் டேக்கில் அவர்களுக்கு முழு திருப்தி கிடைக்கலைன்னா, இன்னொரு டேக் போயிடுவேன். வீட்டுல இருந்தா வெட்டியா பொழுது போகும்; செட்டுல இருந்தா வசனம் பேசினா பொழுதுபோகும்; அதான் வித்தியாசம்.
    “இத்தனை வருடங்களின் எத்தனையோ விதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், இன்னமும் நீங்கள் ஏற்று நடிக்க விரும்பும் கேரக்டர் ஏதாவது உண்டா?” என்று கேட்டதும், “ஓ! இருக்கே! பெரியார் வேஷத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆண்டவன் அனுகிரஹம் இருந்தா நிறைவேறும்” என்றார். பதிலைக் கேட்டு நான் லேசாக சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக, ‘ எதுக்கு சிரிக்கறே? பெரியாரா நடிக்க, ஆண்டவன் அனுகிரஹம் வேணும்னு சொன்னதுக்காகவா? பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு நிறைய இருக்கே?”
    இப்போது அவர் சிரித்தார்.
    Yours truly

  5. #1784
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    ‘சிவாஜியைச் சந்தித்தேன்!’ – சிலிர்க்கும் லேகா ரத்னகுமார்

    அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒரு படமாவது எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்பது இன்றைய பல நட்சத்திரங்களின், கலைஞர்களின் ஏக்கம்.



    சமீபத்தில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை எடுத்த அருண் வைத்தியநாதனுக்குக் கூட அப்படியொரு ஏக்கம் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் லேகா ரத்னகுமார் மிகவும் அதிர்ஷ்டசாலி.

    இவர் எண்பதுகளிலேயே சிவாஜியைச் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.

    அடடா… கொடுத்து வைத்த மனிதர்தான் என்கிறீர்களா… சரி.. சிவாஜியை இவர் எப்படிச் சந்தித்தார்?

    அந்த அனுபவத்தை அவரே சொல்கிறார்:

    “தூர்தர்ஷனுக்காக இருட்டில் ஒரு வானம்பாடி என்று ஒரு தொடரை நான் எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

    அந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பண்டரிபாய். பாராசக்தி படத்தில் சிவாஜியின் முதல் ஜோடியே இவர்தானே.. ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவ, எல்லோருமே இடிந்து போனோம். அப்போது நான் பண்டரிபாயிடம் சிவாஜி மீது நான் வைத்திருந்த மரியாதை பற்றியெல்லாம் சொல்லி, அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டேன்.

    ஆனால் பின்னர்தான் சிவாஜி இறந்ததாக வந்தது ஒரு வதந்தி என்பது தெரிந்தது. இந்த விஷயத்தை சிவாஜியிடமே பண்டரிபாய் சொல்ல, “அந்த தம்பியை அழைச்சிட்டு வாயேன்” என்று கூறியிருக்கிறார் சிவாஜி. என்னிடம் இதை பண்டரிபாய் சொன்னபோது, ஆனந்தத்தில் அதிர்ந்து போனேன்.

    அவரை பார்க்கணும் என்பது என் பல நாள் கனவு. அவரே வரச் சொல்லிவிட்டதால் பயங்கர முன்னேற்பாடுகளுடன் அன்னை இல்லத்துக்கு குடும்பத்தோடு போனேன். கூடவே பண்டரிபாய் அம்மா மற்றும் போட்டோகிராபரையும் கூட்டிப் போனேன்.

    மாடியில் அவருக்காகக் காத்திருந்தபோது, என்னவெல்லாம் பேசலாம் என ஒரு ஒத்திகையே பார்த்துவிட்டேன் உள்ளுக்குள்.

    அப்போதுதான் அவர் வந்தார். கண்களில் அப்படியொரு தீட்சண்யம். அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் மறந்தே போனேன்.

    கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஸ்டைலான ஆங்கில உச்சரிப்புக்குச் சொந்தக்காரரை இதுவரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை. அப்படி ஒரு அசத்தலான ஸ்டைல் போங்க.

    பண்டரிபாய் அவர் காலில் விழுந்து ஆசி பெற்ற போது, ஒரு ராஜாவுக்குரிய கம்பீரத்தோடு அவர் வாழ்த்திய விதம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

    நாங்கள் எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

    பின்னர் அவர் என்னிடம் இப்படிச் சொன்னார்: ‘உங்க கூட போட்டோ எடுத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’

    இதை என்னவென்று சொல்வது… ஒரு இளம் கலைஞரை சந்தோஷப்படுத்த அவர் கூறிய பெருந்தன்மையான வார்த்தைகளைப் பாருங்கள். உயர்ந்த மனிதர்களின் இயல்பும் உயர்ந்ததாகத்தானே இருக்கும்!

    நாங்கள் அவர் இல்லத்தை விட்டுக் கிளம்பும்போது, “ஓய்வா இருக்கும்போதெல்லாம் அவசியமா வாங்க…” என்றவர், தனக்கே உரிய ஸ்டைலில் சற்று நிறுத்தி, நிமிர்ந்து பார்த்து, “ஐ மீன் நான் ஓய்வா இருக்கும் போதெல்லாம்!” என்று சிரிக்காமல் முடித்தார்.

    பிறவிக் கலைஞன் அவர்… உண்மையிலேயே இமயத்தை தரிசித்த அனுபவம் எனக்கு!” என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார்.

    பெருமையாகத்தான் இருந்தது!
    Yours truly

  6. #1785
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    எப்பவும் எனக்கு 'சிவாஜி அங்கிள்'தான்
    மைதிலி தேவி

    அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும் . என் தந்தையின் கைகளைப் பற்றியபடி விக்டோரியா அரங்க மேடையின் பின்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன் . 'அதுதான் அந்தச் சம்பவம்’ அரங்கேறிய மேடை . அங்கு கடுகடுப்பான முகத்தோடு ஒரு மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் நின்று கொண்டிருந்தார் . நான் 'ஆட்டோகிராப்ஃ' நோட்டை இறுகப் பற்றியவாறு அவரை நோக்கி நடந்து, அவரிடம் நோட்டை நீட்டினேன். அந்த மனிதர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

    நடிப்பில் இமயம் . சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரர். அவர் பேசிய வசனங்கள் திரை அரங்குகளை அதிர வைத்து, வானையும் கிழித்துச் செல்லும் கரகோஷத்தைப் பெற்றுத் தரும் . அத்தகையவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். ஏதோ ஒரு ஆத்திரத்தில் சில வரிகளைக் கிறுக்கிவிட்டுப் புத்தகத்தை என் கைகளில் திணித்தார்.

    எட்டே வயதான எனக்கு அந்த எரிச்சல் ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. எல்லாமே பிரமிப்பாக இருந்தது. ஆனால் , மீண்டும் நடிகர்திலகத்தை சந்தித்த போது , அவர் என்னை நினைவு கூர்ந்து மன்னிப்பு கேட்டார் . “ ஸாரிம்மா, இந்த 'மேக்கப்'பால் முகத்தில் ஒரே அரிப்பு.. எரிச்சல். அதோடு மேடையில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன் . அது என்னைப் பார்க்க சரியான நேரமில்லைம்மா ,” என்று கூறிப் புன்னகைத்தார். அந்த அன்பில், புன்னகையில், நான் வாயடைத்துப் போனேன்

    வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் நம்முடன் இரத்த பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோர் யார் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான் . 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்று சொல்வார்கள். ஆனால் மிகவும் அரிய சந்தர்ப்பங்களில் , இரத்த சம்பந்தம் இல்லா விட்டாலும் , அத்தகைய உறவுகளை விதிவசமாக நாம் சந்தித்து அன்பு காட்டும் வாய்ப்பு கிட்டும் . அவர்கள் நம் மீது காட்டும் பாசத்தையும் நேசத்தையும் காண்கையில் , நம் உறவுகள் என்று கூறிக் கொள்வோர் கூட அவமானத்தில் தலை குனிவர் .

    அப்பேற்பட்ட ஓர் அன்பு உள்ளத்தைச் சந்தித்த கௌரமும் பெருமையும் எனக்கு உண்டு. ஆமாம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் அவர் . . . நடிகர் என்ற அந்நிய மனிதனாக அல்லாமல், 'சிவாஜி அங்கிள்' என்று என்னால் உரிமையோடு அழைக்கப்படுபவர். எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்புக்கும் சம்பாஷணைகளுக்கும் சான்றாகப் பற்பல சந்தர்ப்பங்கள் எழுந்திருக்கின்றன. அவருடைய அன்புக்குப் பெரும் சான்றாக, என் மனம் உருகிக் கண்கலங்க வைத்த ஒரு சம்பவம் குறிப்பாக உள்ளது.
    அது தமிழகத்தில் நடந்த என்னுடைய திருமணம். அதற்காக நாங்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியா போயிருந்தோம். அது, என் தந்தை இல்லாத சமயம். என் குடும்பத்தில் எல்லோரும் அவர் இல்லாத வெறுமையை உணர்ந்தோம். ஆனால், சிவாஜி அங்கிள் அந்தக் குறையே தெரியாதவாறு எல்லா விசேஷங்களையும், தாலிப் படையலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு வரை, முன்நின்று செய்தார். திருமணத்தன்று, நடிகர் திலகம் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக நாற்காலியில் அமரவில்லை. குடும்பத்தில் ஒருவராகக் கல்யாண மேடையில் நின்றிருந்தார் . எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை.

    அதையும் விட , நான் மறக்கவே இயலாதபடி ஒன்று நடந்தது. திருமணத்துக்கு மறுநாள் காலையில், நடிகர் திலகம் எங்கள் வீடு தேடி வந்து, ஒரு தந்தையின் அக்கறையோடு என்னிடம்,” சந்தோஷமாக இருக்கிறாயாம்மா ?“ என்று நலம் விசாரித்துச் சென்றதை என்னால் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்க இயலாது .

    என் சொந்த பந்தங்கள்கூடச் சிங்கப்பூர் திரும்புவதில்தான் அதிகக் கவனத்துடனும் ஆர்வமாகவும் இருந்தார்கள் . இந்த சிவாஜி என்கிற இந்த அற்புத மனிதர் பெண் மனம் புரிந்து, அவருடைய முக்கிய அலுவல்களுக்கு மத்தியில் நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்று தெரிந்து கொள்வதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால், அவருடைய உயர்ந்த உள்ளத்தை என்னவென்று சொல்வது ? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்பில் மட்டும் சிகரமல்ல, குணத்திலும்தான்! அவர் என்றைக்குமே எனக்குச் சிவாஜி அங்கிள்தான் - அவர் மீது நான் கொண்டுள்ள நேசம் அத்தகையது .
    Yours truly

  7. #1786
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by Abhinaya View Post
    சாரதா மேடம்,
    ஏன் இப்படி வந்து மாட்டிக் கொள்கிறீர்கள்.

    எங்க வீட்டுப் பிள்ளை 7 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. நெல்லையில் நூலிழையில் வெள்ளிவிழாவை தவறவிட்டது. இல்லை என்றால் 8 திரை அரங்குகளாக மாறி இருக்கும்.

    அதே போல் உலகம் சுற்றும் வாலிபன் 6 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது.

    சிவாஜியின் திருவிளையாடல் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.
    அது எப்படி 7 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய எ.வீ.பியை முறியடித்தது.

    அதே போல் தங்கப்பதக்கமும் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.அது எப்படி 6 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய உ.சு.வாவை முறியடித்து.

    இப்படி நினைக்க சிவாஜி ரசிகர்களல் மட்டுமே முடியும்.

    உ.சு.வா பெங்களூரில் 3 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    மொத்ததில் 20க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி தமிழ் திரை உலக வரலாற்றில் சாதனை படைத்தது.

    எம்.ஜி.ஆர் திரை உலகில் இருந்த வரை சிவாஜியின் எந்த ஒரு திரைப்படமும் இந்த மாதிரி சாதனைப் படைத்ததில்லை.

    எனவே தான் எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தி என்று கூறுகிறார்கள்.
    nut case rajaram,

    didn't you bring up same issue earlier? Didn't Murali come back with stats such as BO power, collection and number of days run? Again, NT's thiruvilaiyadal's 150+ days run had beaten mgr's EVP 175 run BO collection. Same with NT's thangapaththakkam: its 150 days collection beaten MGR's over hyped USV. I had same argument with MGR fans in one of his blog site: after giving Murali's facts, the MGR fans finally agreed that Thangapathakkam 150 days collection in all major cities in TN indeed beaten USV collection. GO back and read those interesting debates. Who made history with B/W BO most collected movie: It is our own idol NT with pattikkada pattanama. Moreover, as per discussion, USV in Madurai was made to run for 217 days just to beat NT's record 216 run movie Bhagapirivinai. Now, tell me where the hell the BO power was - it was with NT. Your argument is half baked just like some segments of undeserved tamil media who mistakenly often portrays that MGR was the only BO hero just because he was successful in politics. You need to apply a sting of common sense how could have NT survived with out BO power for almost 50 years in Tamil cinema.

    Stop this nonsense. If you want to glorify MGR, go to his thread. if you want to Kamal, go there. Don't spend time here.

    summa summa comedy ennu solli, you are becoming a senseless comedian here.

    Moderator: intha kosuvai adichchi thorathunga paa!!

    Long live NT's fame

    Regards

  8. #1787
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புவியில் தீமையை அழித்து நன்மையைக் காக்க இறைவன் எடுத்ததே அவதாரம். ஆனால் இங்கோ ஒரு மாபெரும் கலைஞனை இழிவு படுத்தவென்றே அவதாரங்கள் எடுக்கப் படுகின்றன. இது தான் காலம் என்பதோ. அவர்களுக்காக வென்றே கண்ணதாசன் பாடல் புனைந்தாரோ...
    போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே...
    அவர்கள் தங்கள் நிலையை சரிப்படுத்திக்கொள்ளவும் உண்மையை உணர்ந்து கொள்ளவும் இறைவனே அவதாரம் எடுக்க வேண்டும்.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1788
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார், நம்ம பாட்டே இருக்கே. அதைச்சொல்லுங்க (அப்புறம் இதுக்கும் 'எங்க' பாட்டுதான் கிடைச்சதான்னு சொல்வாங்க)

    ஓகோ..கோ..கோ.. மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
    உண்மையை வாங்கி பொய்களை விட்டு உருப்பட வாருங்கள்

    உறித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
    உளறித்திரிபவர் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது

    விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
    விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது

    காற்றை கையில் பிடித்தவனில்லை
    தூற்றி தூற்றி வாழ்ந்தவனில்லை.

  10. #1789
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    மே-1 - இன்று மணநாள் காணும் புது மண தம்பதியருக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.



    அன்புடன்
    டியர் ராகவேந்திரன் சார்,

    விண்ணுலகில் மணநாள் விழாக் காணும் புதுமணத்தம்பதியரின் அரிய, அழகிய புகைப்படத்தை மே ஒன்று அன்று பதிவிட்டமைக்கு பாசத்தோடு கூடிய நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #1790
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    nut case rajaram,

    didn't you bring up same issue earlier? Didn't Murali come back with stats such as BO power, collection and number of days run? Again, NT's thiruvilaiyadal's 150+ days run had beaten mgr's EVP 175 run BO collection. Same with NT's thangapaththakkam: its 150 days collection beaten MGR's over hyped USV. I had same argument with MGR fans in one of his blog site: after giving Murali's facts, the MGR fans finally agreed that Thangapathakkam 150 days collection in all major cities in TN indeed beaten USV collection. GO back and read those interesting debates. Who made history with B/W BO most collected movie: It is our own idol NT with pattikkada pattanama. Moreover, as per discussion, USV in Madurai was made to run for 217 days just to beat NT's record 216 run movie Bhagapirivinai. Now, tell me where the hell the BO power was - it was with NT. Your argument is half baked just like some segments of undeserved tamil media who mistakenly often portrays that MGR was the only BO hero just because he was successful in politics. You need to apply a sting of common sense how could have NT survived with out BO power for almost 50 years in Tamil cinema.

    Stop this nonsense. If you want to glorify MGR, go to his thread. if you want to Kamal, go there. Don't spend time here.

    summa summa comedy ennu solli, you are becoming a senseless comedian here.

    Moderator: intha kosuvai adichchi thorathunga paa!!

    Long live NT's fame

    Thanks Mr. taccinema ,

    A small correction,

    Moderator: intha loosai adichchi thorathunga paa!!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •