-
11th May 2011, 04:44 PM
#11
Senior Member
Senior Hubber
From Orkut Group:
இளையராஜாதான் கடவுள் !
- பாடகர் ஆலாப்
“பாடகராவேன்னு கனவுலகூட நினைச்சதில்லை. எதிர்காலத்துலயும் பாடகரா தொடர்வேனான்னு தெரியலை” என்கிற ஆலாப் அடிப்படையில் பேஸ் கிடார் கலைஞர்.
“பேஸ் கிடார்னா நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. சிம்பிளா சொல்லணும்னா, 80கள்ல வந்த இளையராஜா சார் பாடல்கள் எதைக் கேட்டாலும், அதுல பேஸ் கிடாருக்கு முக்கியத்துவம் இருக்கும். “பனி விழும் மலர்வனம்”, “மன்றம் வந்த தென்றலுக்கு...”னு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்...” – வாசித்துக் காட்டி விளக்கம் தருபவரின் பாட்டி சாந்தா நாயர், அம்மா லதா ராஜு, அப்பா ராஜு என எல்லோருமே இசைக்கலைஞர்களாம்!
“சங்கீதக் குடும்பத்துல பிறந்த்தாலதான் எனக்கு “ஆலாப்”னு பேர். அப்பாவோட கச்சேரி எங்க நடந்தாலும் அவரோட ஒட்டிக்கிட்டே போவேன். லயோலால அடியெடுத்து வைக்கிற வரைக்கும் சங்கீதம்தான் எதிர்காலம்னு கனவுகூட கண்டதில்லை. காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல யதேச்சையா பாடப் போக... ஃப்ரெண்ட்ஸ் என்கரேஜ் பண்ண... அப்படியே எனக்குள்ள மியூசிக் ஆசை துளிர்விட்டது. அந்த நாட்கள்ல வந்த இளையராஜா சார் பாடல்கள்தான் எனக்குள்ள இசையை வளர்த்ததுன்னு சொல்லலாம். குறிப்பா அவர் இசைல பிடிச்ச பேஸ் கிடார்... யாரும் சொல்லித் தராம, நானாவே அதை வாசிக்கக் கத்துக்கிட்டேன்.
” பேஸ் கிடார்னா என்னன்னே தெரியாமா இருந்த மக்களுக்கு இப்பத்தான் அதைப்பத்தித் தெரிய வருது. முன்னல்லாம் நான் ஸ்டேஜ்ல வாசிச்சிட்டு இறங்கினா, இவ்ளோ நேரம் என்ன பண்ணீங்கனு கேட்பாங்க. இப்ப ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு.
மியூசிக்கை பொறுத்தவரை எனக்கு இளையராஜா சார்தான் கடவுள். அவர் முன்னாடி வாசிச்சு, அவர் கையால பொன்னாடையும் வாங்கிட்டேன். இன்னும் அவர் மியூசிக்ல வாசிக்கிற கனவு மிச்சமிருக்கு... காத்திட்டிருக்கேன்....” – ஆசையைச் சொல்கிறார் ஆலாப்.
- பாடகர் ஆலாப் நேர்காணல், குங்குமம் 16.05.2011
-
11th May 2011 04:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks