Page 193 of 199 FirstFirst ... 93143183191192193194195 ... LastLast
Results 1,921 to 1,930 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1921
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களுக்கு,
    எந்த வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வெறும் வாழ்த்து செய்தி பதிவிட்டதற்கு இந்த அளவிற்கு பெரிய பிரச்சினை ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பல முறை சொல்லிய படி எனக்கென்று தனிப்பட்ட சார்பு எதுவும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஒரே சார்பு நடிகர் திலகம் மட்டும் தான். என்னுடைய ஒரே தலைவர் நடிகர் திலகம் மட்டும் தான். நடிகர் திலகத்தைப் பற்றிய திரியில் அவர் வாழ்வில் ரசிகர் என்ற முறையில் நாம் சந்தித்த அல்லது கேள்விப் பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவருடைய இயக்கமே அவருடைய முதுகில் குத்திய போது அவருடைய ரசிகர்கள் உள்ளம் நோகாமல் இருந்திருக்க முடியாது. அதே போல் அவருடைய வாழ்வில் பல விதமான ஏளனங்கள், ஏச்சுக்கள், கேலிகள் அத்தனையும் தாண்டி எதிர் கொண்டு தான் அவர் வளர்ந்திருக்கிறார். அரசியலில் தூய்மையான வராக நடந்து நிரூபித்திருக்கிறார். அவர் சந்தித்த பிரச்சினைகளை இங்கு சொல்லாமல் வேறு எங்கு சொல்வது. நடிகர் திலகமும் அரசியலும் பிரிக்க முடியாதவை. அவர் ஒரு தேச பக்தராக நடித்தது மட்டுமன்றி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். இளைஞர்களையும் மக்களையும் நல்வழியில் திருப்ப உழைத்திருக்கிறார். இவையெல்லாம் தவறா. அல்லது இவற்றைப் பற்றிப் பேசக் கூடாதா. அவரை பல இயக்கத்தினரும் தான் ஏசியிருக்கிறார்கள். கலை உலகில் பலர் அவரை ஏசியிருக்கிறார்கள். பின்னர் அவருடன் பணியாற்றியிருக்கிறார்கள். சினிமாவை வெறும் பணத்திற்கான இயந்திரமாக அவர் பயன் படுத்த வில்லை. இந்த நாட்டின் தேச பக்தி, விடுதலைப் போராட்டம் போன்ற பல நல் விஷயங்களைப் பற்றிப் போதித்திருக்கிறார். அப்படி தன்னுடைய அரசியலை இந்த நாட்டிற்காக பயன் படுத்திய அந்த மகானின் நாட்டுப் பற்றையும் மேன்மையையும் அவர் சந்தித்த பிரச்சினைகளையும் விவாதிக்கக் கூடாதென்றால்,
    வருத்தத்துடன் நானும் இந்தத் திரியிலிருந்து விடைபெற வேண்டிய மன நிலைக்குத் தான் ஆளாக வேண்டியிருக்கும்.
    இவர் அவர் என்று பாராமல் நடிகர் திலகத்திற்கு மேன்மை செய்யும் யாராயிருந்தாலும் பாராட்டுவதும் அவருடைய புகழுக்கு மாசு கற்பிக்கும் நிலை வரும் போது எதிர்புக்குரல் கொடுப்பதும் என்னுடைய கடமையாக நான் எண்ணுகிறேன்.
    மீண்டும் சொல்கிறேன். நடிகர் திலகம் மட்டும் தான் என்னுடைய ஒரே தலைவர்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1922
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    இங்கே என்ன நடந்துக்கிட்டு இருக்கு இப்போ?.

    என்னமோ டி.வி.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதிரி ஆளாளுக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?.

    முதலில் அவங்கவங்க சர்ச்சைக்குரிய போஸ்ட்களை வாபஸ் வாங்குங்க, எல்லாம் சரியாயிடும்.

  4. #1923
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Dear Raghavendra sir, Dhanus, Karthik, Joe and all NT Fans,

    யாருடைய கண் திருழ்டி பட்டதோ ? நடிகர் திலகம் அரசியலக்கு பதவிக்காக / பணத்துக்காக வரவில்லை. பராசக்தி காலத்திருந்தே அரசியலில் இருந்தவர். அவரை பற்றி பேசும் பொது, நடிப்பை பற்றி மட்டும் அல்ல, அரசியலும் கூடவே வரும். தவிர்க்க முடியாதது.

    நாம் என்ன கூட்டணியா வைத்துகொண்டு இருக்கிறோம். குறை கூறினால் விலகி செல்ல ? நாம் அவருடைய ரசிகர்கள். ராகவேந்திர சார் , கார்த்திக், எழுதியது எல்லாம் அவர்ளுடைய தனி பட்ட கருத்துகள்.

    I too have my opinion, JJ is one of the reason for NT deatlh. I STILL STAND ON THIS AND BELIEVE.

    இதை பெரிது படுத்த வேண்டாம். இந்த திரியில் இருந்து விலகி செல்லவும் வேண்டாம்.


    மீண்டும் உங்களுடைய பணி தொடருட்டும் .

    Mr.Raghavendra sir, I met you and spoke only few minitues at Shanti last month. I hope you will not leave and should not . Your valuable service is needed not only NT Website but here also.

    Mr.Dhanus, you have done a wonderful job in this thread.

    Hope you reconsider your decision and back and YOU SHOULD

    I HOPE AND WISH NO ONE SHOULD LEAVE FROM THIS THREAD AT ANY COST.

    abkhlabhi
    Last edited by abkhlabhi; 18th May 2011 at 06:20 PM.

  5. #1924
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post
    முதலில் அவங்கவங்க சர்ச்சைக்குரிய போஸ்ட்களை வாபஸ் வாங்குங்க,
    என் பங்குக்கு நான் முதலில் செய்கிறேன்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #1925
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    என் பங்குக்கு நான் முதலில் செய்கிறேன்.
    நானும் நீக்கிவிட்டேன்.

  7. #1926
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,
    என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள். இங்கே நடந்தவை கருத்துப் பரிமாற்றம் தான். கார்த்திக் அவர்கள் தன்னுடைய பதிவினை நீக்கிய போதே நான் அவரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தேன். வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கும் பதிவுகளை நீக்குவதில் எனக்கு உடன் பாடில்லை. என்னுடைய பதிவில் நான் யாரையும் குற்றம் சொன்னதாகவோ அல்லது சார்பாக பாராட்டியதாகவோ நான் எண்ணவில்லை. அவற்றில் எந்த சர்ச்சையும் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக நான் கருதவில்லை. அப்படி மாடரேட்டர்கள் கருதினால் அவர்கள் தாராளமாக என் பதிவினை நீக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
    இதற்கு மேலும் என் நன்றி கூறும் பதிவினை நீக்கும் வகையில் எந்தத் தவறும் செய்ததாக எனக்கு தோன்றவில்லை.
    அதே போல் இனியும் இத்திரியில் தொடரும் மனம் எனக்கு வரும் என எனக்குத் தோன்றவில்லை.
    முடிக்கும் முன் ஒரு சில செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
    இது எப்போதோ நடந்த நிகழ்ச்சியல்ல. தற்போதைய சூழ்நிலையில் நடந்தது. என் காது பட சமீபத்தில் தோல்வியுற்ற ஒரு இயக்கத்தினைச் சார்ந்த சிலர் ஒரு பேருந்தில் பேசிக் கொண்டது. அவர்களுடைய இக்கருத்து பரவலாக அவர்கள் இயக்கத்தில் உள்ள அனைவரும் கருதுவதாக அவர்களே பேசிக் கொணடது.

    தலைவர் சிவாஜி சிலை எப்போது திறந்து வைத்தாரோ, பிரச்சினை மேல் பிரச்சினை ஆரம்பிச்சுடுச்சப்பா. அந்த ஆளு தான் ராசியில்லாதவராச்சே, இவர் ஏன் அவரைக் கட்டிக் கொண்டு அழுகிறார். இனிமேலும் தலைவர் சிவாஜி பத்தி பேசினா அவ்வளவுதான்
    இது ஒருவரின் கூற்று. இதற்கு மற்றவர் கூறியது அதைவிட மனம் நோகச் செய்வதாகும்.
    ஆமாம்பா, இன்னொரு தடவை இவரு சிவாஜி பத்தி பேசினா, நான் கட்சியிலேயே இருக்கமாட்டேன். அந்தாளுடைய ராசி நம் எல்லோருக்கும் பிரச்சினையை உண்டாக்கி விடும். இதை நான மட்டும் சொல்ல வில்லை என்னிடம் பேசிய மத்த மாவட்டக் காரர்களும் இதையே தான் சொன்னார்கள்.
    நான் மேலே குறிப்பிட்டவை நாகரீகமான வார்த்தைகள். அவர்கள் பயன் படுத்திய வார்த்தைகளை இங்கே குறிப்பிட முடியாது. இந்தப் பகுத்தறிவாளர்கள் தான் நம் நடிகர் திலகத்தை ராசியில்லாதவர் என்று அந்தக் காலத்திலிருந்து இன்று வரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள். இவற்றையெல்லாம் இங்கே சொல்ல வேண்டும் என நான் விரும்பியதில்லை. ஆனால் என்னை ஒரு சார்பானவன்,பிரச்சாரம் செய்பவன் என்று கூறுபவர்களுக்கு நடைமுறையை சொல்ல ஆசைப்பட்டேன்.

    எனவே நண்பர்களே, நடிகர் திலகத்தின் தேர்தல் வெற்றி தோல்வி எப்படி யிருந்தாலும் அப்பழுக்கற்ற மனிதராக அவர் கடைசி வரை வாழ்ந்தார். அவர் இறந்தாலும் அவரை மட்டுமே நான் தலைவராக ஏற்றுக் கொண்டு இறக்கும் வரை நான் அவருடைய தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் எனக்கும் இல்லை. எனவே நான் இங்கே அவருடைய அரசியலைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அதைப் பற்றி விவாதித்தால் பலருக்கு கோபம் வருகிறது.
    இந்த சூழ்நிலையில் இதற்கு மேலும் தொடர என் உள்மனம் அனுமதிக்க மறுக்கிறது.
    தங்கள் அனைவருடைய அன்பிற்கும் என் உளமார்ந்த நன்றி.
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1927
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    நீங்கள் மீண்டும் மீண்டும் விலகிச்செல்லும் முடிவில் பிடிவாதமாக இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த திரியில் இவ்வளவு ஒற்றுமையாக விவாதித்து வரும் இவர்களுக்கிடையே எப்போது பிரச்சினை வரும், அதைப்பார்த்து கைகொட்டி சிரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருப்போருக்கு உங்கள் முடிவு கொண்டாட்டமளிப்பதாக அமைந்து விடும்.

    நடிகர்திலகத்தின் அரசியல் ஈடுபாட்டையும், அதில் அவருக்கு நேர்ந்த தொல்லைகளையும் பற்றி விவாதிக்க யாருக்கும் இங்கு கருத்து வேறுபாடு இல்லை. ஏற்கெனவே விவாதித்துக் கொண்டுதானிருக்கிறோம். குறிப்பாக அதில் முரளி சார் அவர்களுடைய பங்களிப்பு அபாரமானது. அது இங்கே தொடருவதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த திரியில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மூலமாகத்தான், நடிகர்திலகத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டிருந்த சிலரின் மனதில் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. அப்படியிருக்க அதை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.

    தற்போது மேடம் ஜெயலலிதா அவர்கள் முதல்வரானதற்கு தாங்கள் வாழ்த்துச்சொல்லியதிலும் எந்த தவறும் இல்லை.

    ஆனால் நடிகர்திலகத்தைக் குறை சொல்வதில், அவர் ஓடி ஓடி உழைத்த காங்கிரஸ் கட்சி உள்பட, எந்த இயக்கத்தினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை. 1996-ல் சட்டமன்ற தேர்தலில், தன் தோழி குடும்ப அடாவடியால் ஒரு கட்சி படுதோல்வி அடைந்து 4 இடங்களை மட்டுமே பெற்றபோது, வளர்ப்பு மகன், மகாமகம் என்று எவ்வளவோ காரணங்கள் இருக்க, அக்கட்சியினர் அப்பாவியான நடிகர்திலகத்தைக் குறிப்பிட்டு, 'போயும் போயும் அந்த ஆள் கூட அம்மா சம்பந்தம் வச்சுக்கிட்டாங்க. அவருடைய தரித்திரம் அம்மாவையும் பிடித்து ஆட்டுது' என்று பேசினார்கள். இது அப்போது ஆனந்த விகடனிலும் வந்தது.

    மேடம் ஜெயலலிதாவுக்கு தாங்கள் வாழ்த்துச்சொன்னது போல, நடிகர்திலகத்துக்கு சென்னை கடற்கரையில், பல இடற்பாடுகளைக் கடந்து சிலையெடுத்த கலைஞருக்கு, அவர் பதவியை விட்டு நீங்கிச்செல்லும் நேரத்தில் நன்றி சொல்வது தவறில்லை என்று என் நன்றிக்கடிதத்தைப் பதிந்தேன். அதன்பின்னர்தான் சில நண்பர்கள் எனக்கு தனிமடல் அனுப்பி, 'கருணாநிதியைப் பற்றி நடிகர்திலகத்தின் திரியில் குறிப்பிட்டால், இதுதான் சாக்கு என்று கருணாநிதியைக்குறை சொல்வதற்கென்றே அலையும் ஒரு கூட்டம் இங்கும் படையெடுத்து அவரைப்பற்றி பதிவுகள் இட்டு திரியைக் களங்கப்படுத்தக்கூடும். அவர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல, கருணாநிதியையும் திட்டியது போல் ஆச்சு, நடிகர்திலகத்தையும் வம்புக்கிழுத்து அவர் திரியையும் களங்கப்படுத்தியது போல் ஆச்சு என்று மகிழ்ச்சியடைவார்கள். அவர்களுக்கு இடம் கொடுக்காதவண்ணம் உங்கள் பதிவை நீக்கிவிடுங்கள்' என்று தனி மடலில் சொன்னதற்கிணங்க என் பதிவை நீக்கி விட்டேன். நீக்கிய வரையில், பெரிய திசை மாற்றத்திலிருந்து திரியைக் காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதியாக இருந்தது.

    ஆகவேதான், நீங்கள் மீண்டும் அதை பதிவிடச்சொன்னபோதும் நான் பதியவில்லை. அதன் பின்னர் இங்கு நடந்த எந்த விவாதங்களுக்கும் நான் பொறுப்பல்ல என்பது திரியில் ப்ங்கேற்கும் அனைவருக்கும் தெரியும்.

    தனுஷ் அவர்கள் மனக்குறை பட்டு எழுதிய பதிவுக்கு நான் எழுதிய பதில் கூட உங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டதை அறிந்து, அதையும் சாரதா அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கி விட்டேன். சாரதா அவர்களின் சொல்லை ஏற்று 'ஜோ' அவர்களும் தன்னுடைய சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கி விட்டார். அதன்பின்னரும் நீங்கள் இந்த திரியை விட்டு நீங்கும் முடிவில் பிடிவாதமாக இருந்தால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

    தாங்கள் (ராகவேந்தர் சார்) மற்றும் திருவாளர்கள் பம்மலார், முரளி சீனிவாஸ், ஜோ, சாரதா, பார்த்தசாரதி, தனுஷ், ராகேஷ், பாலா, சதீஷ், செந்தில், மகேஷ் போன்றோர் இத்திரியை முன்னெடுத்த்ச்செல்லும் ஜாம்பவான்கள். நான் எப்போதாவது வந்து எட்டிப்பார்ப்பவன். என் பொருட்டு இங்கு ஒரு பிரளயம் ஏற்பட்டு, அதன் காரணமாக திரியின் முக்கிய பங்களிப்பாளர்கள் விலகிச்செல்ல முடிவெடுப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

    ஆகவே தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்து, இத்திரியில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது விலகல் அதற்கு வகை செய்யுமானால் இங்கிருந்து விலகிக்கொள்ளுகிறேன்.

  9. #1928
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    a small suggestion..... Why cant this thread be devoted one and only to the film / acting related aspects of NT and political and general discussions on NT be moved to a seperate new thread? that way this thread will continue to live upto the high standards that it has set for itself by the honourable contributors to this thread
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  10. #1929
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. ராகவேந்தர் மற்றும் திரு. கார்த்திக் அவர்களுக்கு,

    நான் இந்த அற்புதமான திரியில் நுழைந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. மிகவும் நன்றாகப் போய்க் கொண்டிருந்த இந்தத் திரியில் ஒரு சிறிய தடுமாற்றம்.

    நம் எல்லோரின் அன்புக்குரிய நடிகர் திலகமே சண்டை சச்சரவுகளை விரும்பாதவர் என்பது எல்லோருக்கும் தெரியும். கூடுமானவரை சுமுகமாகவே எல்லோருடனும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர். இருந்தாலும், அவர் மீது இன்னும் சிலர் புழுதி வாரித் தூற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    இந்தத் திரி மட்டும் தான் கருத்துள்ள பல ஆரோக்கியமான விஷயங்களை சிறப்பாகத் தாங்கி வெற்றிகரமாக ஏழு திரி வரை போய்க் கொண்டிருக்கிறது. அதுவும், திரி துவங்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நிறைந்து. அதற்கு காரணம் நடிகர் திலகத்தைப் பற்றி - அதாவது - அவரது நடிப்பாற்றலை, அவரது பல்வேறுபட்ட திறமைகளை - அவைகளைத் தாங்கி வெளிவந்த படங்களைப் பற்றி - மட்டும்தான் இந்த அளவுக்கு - ஏன் வரும் வருடங்களுக்கும் - வருடக்கணக்காகப் பேசி விவாதிக்க முடியும். அந்த அளவுக்கு அற்புதமான கலைஞர் அவர் என்பதால். அது மட்டுமல்ல - அவருக்கு வாய்த்த ரசிகர்கள் கூட்டம் மட்டும் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் - யார் வந்தாலும் போனாலும் - அவர் ஒருவரையே கடைசி வரை தனக்குப் பிடித்த கலைஞராக ஏற்றுக்கொண்டது. அதனால் நாம் அனைவரும், ஏன் வரும் வருடங்களில் மேலும் பலரும் இதில் நுழைந்து கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியும் - செய்வார்கள்.

    இப்படியிருக்க, உங்களைப் போன்ற சீனியர்களும் அனுபவஸ்தர்களும், இந்தத் திரியில் இருந்து விலகுவதாக சொல்வது தகாது. நம் அனைவருடைய நோக்கமும் ஒன்றே தான் - அதாவது நடிகர் திலகத்தைப் பற்றி போற்றி அந்த இனிய நினைவுகளில் மூழ்குவது - அதன் மூலமாக, அவரைப் பற்றியும் அவரது ஒப்புயர்வற்ற சாதனைகளைப் பற்றியும் இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினருக்கு சரியாக எடுத்துச் செல்வது.

    அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நானும் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தயை கூர்ந்து இந்தத் திரியில் இருந்து விலகாதீர்கள். உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பைப் பார்த்துவிட்டுத் தான் என்னைப்போன்றவர்கள் புதிதாக இந்த அற்புதமான திரியில் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். நாம் அனைவரும் நம்முடைய வேலையை - நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்து இன்புறும் அந்தப் புனிதப்பணியை - தொடர்ந்து செய்வோம். இனியும், யாரும் சண்டையிடாமல், தொடர்ந்து நம்முடைய பங்களிப்பைத் தொடர்வோம். இது போன்ற திரியில் இருந்து விலகுகிறேன் போன்ற வார்த்தைகளைப் பேசாமல் இருப்போம்.

    இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அவரது சொந்தக் கருத்தை தைரியமாகக் கூறலாம் என்றாலும், சில விஷயங்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு சர்ச்சைக்குரிய விஷயங்கள் வாதிடப்படாமல் இருப்பதே நல்லது. நானும் என்னுடைய பல கட்டுரைகளை எழுதும் போதும், இது போன்ற சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் தற்செயலாக இடம் பெறும் போது, கவனமாக அதை நீக்கி விட்டுத் தான் தொடர்கிறேன். சுவாரஸ்யத்தை விட சுமுகமான சூழ்நிலை தான் முக்கியம் என்பதற்காக. ஒரு வேளை நானும் கவனக்குறைவாக எழுதினால், தயை கூர்ந்து எல்லோரும் அதை பெரிது படுத்த வேண்டாம். மாறாக இடித்துரைத்து, என்னை சரி செய்யுங்கள். சரி செய்யப் படுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்.

    கண்டிப்பாக என்னுடைய வேண்டுகோளை ஏற்று இன்றே நடிகர் திலகத்தைப் பற்றிய ஏதோ ஒரு நல்ல செய்தியையோ, கருத்தையோ எழுதி மீண்டும் தொடர்வீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையுடன்,

    திரு. தனுசு அவர்களுக்கு, நான் ஏற்கனவே உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று, உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து பதிந்து, எல்லோரையும் இன்புறச் செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 19th May 2011 at 01:37 PM.

  11. #1930
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு தனுசு அவர்களே
    தயவு செய்து தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டி கேட்டுகொள்கிறேன் .நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பெருமைப்படும்படியும் மற்றவர்கள் பொறாமை படும்படியும் அபாரமாக போய்கொண்டிருந்த இந்த திரி சில மனச்தாபத்தால் ஒரு பின்னடைவை சந்திப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?
    திரு ராகவேந்தர் சார்,
    என்ன ஆயிற்று சார் உங்களுக்கு ?இந்த திரியின் தூணை போன்ற நீங்களா விலகி செல்வது ?பாசமலர் ராஜூ பாணியில் சொல்வதானால் "இந்த திரியில் உள்ள அத்தனை ஹப்பர்களும் விலகிவிட்டாலும் ஒருவர் மட்டும் ஓயாமல் இந்த திரியின் முன்னேற்றத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்,அவர்தான் நடிகர்திலகத்தின் ரசிகர்திலகம் ராகவேந்தர்" ,
    என்று நாங்கள் நம்பிகொண்டிருக்கும் நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா?
    தயவு செய்து முடிவை கைவிடுங்கள்.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •