-
23rd May 2011, 06:04 AM
#11
Senior Member
Regular Hubber
சென்னை,மே 22: நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
சுவாசப் பாதை நோய்த்தொற்று, நிமோனியா காய்ச்சல் உள்ளிட்டவை காரணமாக நடிகர் ரஜினி காந்த் கடந்த 13-ம் தேதி சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஹீமோ டயாலிஸிஸ் (ரத்த சுத்திகரிப்பு) உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன.
பார்வையாளர்களைத் தவிர்க்கவும், சுவாசத்தை மேம்படுத்தவும் கடந்த 18-ம் தேதி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இட்லி, வடை உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட்டு வருகிறார். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் நான்கு தினங்கள் கழித்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பார்வையாளர்கள் எவருக்கும் அனுமதி கிடையாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவரது உடல் நிலையில் முழுமையான முன்னேற்றம் ஏற்படும் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினி காந்த் நலம் பெற வேண்டி ஆவடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
-
23rd May 2011 06:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks