Page 17 of 23 FirstFirst ... 71516171819 ... LastLast
Results 161 to 170 of 221

Thread: Azhagarsamiyin Kudhirai - Suseendharan - Ilaiyaraaja

  1. #161
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    படமா இது?!? காவியம், கவிதை, கலை! கலக்கியிருப்பது ஒட்டுமொத்த டீமுமே ( நந்தலாலா, அழகர்சாமியின் குதிரை போன்ற தரமான படங்கள் பெங்களூரில் ரிலீஸே ஆகாது ஏதோ "கண்டேன்" என்று ஒரு படம், சந்தானம் தவிர ஒரு முகமும் தெரியவில்லை, அது 5 தியேட்டர்களில் ஓடுகிறது. இந்தப்படம் ஒசூரில் ஓடுகிறதா என்றும் இணையம் மூலம் தெரிந்துகொள்ளமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி திருட்டுத்தட்டிடம் சரணடைந்தேன் )

    கதை ஆரம்பத்தில் சற்று தினுசு, சற்று பழசு என மாறிமாறிச் சென்றபோது நிறைய சந்தேகங்கள் வந்தன, இப்படி கதை இருந்தால் பின்னால் எப்படி சுவாரசியம் கூடும் என. அதற்கேற்றார்போல் சமீபகாலமாக வரும் கிராமிய படங்களுக்கே உரிய ஊர்த்திருவிழா, ஊர்ப்பெருசுகளின் வெட்டிச்சண்டை, மூடநம்பிக்கை, ரகசிய காதல் இப்படி பல. ஆனால் குதிரை தொலைந்தபின் சற்றே போக்கு மாறுவது, நீண்டநேரம் கதைநாயகன் அப்புகுட்டி அறிமுகமாகாமல் இருப்பது எல்லாம் நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. அப்புகுட்டி வந்தபின்னர் சூடுபிடித்துவிடுகிறது.

    கதாபாத்திர தேர்வு, கதை செல்லும் தினுசு, இடையிடையே சொல்லப்படும்/வெளிப்படும் கருத்துக்கள், கருத்தாக்கங்கள், எல்லாமே டாப்கிளாஸ். அவ்வப்போது வேகம் குறைவதுபோல் இருந்தாலும் கிளைமேக்சும், பரவலாக வரும் பின்னணி இசையும் என்னை கடைசி வரை ஆர்வத்துடன் வைத்துருந்தன. ஆரம்பம் முதல் கடைசிவரை, இயல்பு குறையாமல் இருந்தது, மூல நாவலும் அதை வெகு திறமையாக படமாக்கிய விதமுமே காரணம். அதே சமயம் ஈயடிச்சான் காப்பி இல்லை என்பதற்கும் சிலபல சாம்பிள்கள் இருந்தன. உதாரணம், அந்த அதீத-நக்கல் சிறுவன், புரோட்டா காமெடி போன்றவை. சிறுவன் காமெடி எனக்கு உறுத்தலாகவோ போரடிக்கவோ இல்லை! புரோட்டா காமெடியும் கலந்து நன்றாகவே இருந்தது!

    பொதுவாக மிருகங்களை தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரமாக மதித்து பயன்படுத்துவது வெகு-குறைவு. கடைசியாக என்ன படம் என தெரியவில்லை. மும்பை எக்ஸ்ப்ரெஸ், அன்பேசிவம், மகாநதி போன்ற படங்களில், நாய் குதிரை எல்லாம் கதாபாத்திரம் தான் என்றாலும் ஜஸ்ட் வந்துபோகும் அளவுதான். ஆனால் இதில் படம்முழுக்க குதிரை வருகிறது, ஆனால் எந்த இயல்புமீறலிம் இல்லை. இதற்காகவே தனி பாராட்டு!

    பாஸ்கர் சக்தி, வசனெம்ல்லாம் தனியாக எழுதினாரா தெரியவில்லை, ஒவ்வொரு வரியும் கலக்கல்! அப்புகுட்டி போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயின் செய்யவரும்போதும்கூட ஒரு சின்ன காமெடி!

    இன்னுமா கிராமங்களில் பாரதிராஜா படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது?!? சரி, எம்ஜியார் சிவாஜி கருப்புவெள்ளை படங்கள் ரேஞ்சிலிருந்து இது நல்ல முன்னேற்றம் தான்! அந்த பகவதி பெர்ஃபாமென்ஸ் இன்னும் இம்ப்ரூவ்மென்ட் தேவை! பெர்ஃபார்மென்சில் இவரைத்தவிர அனைவருமே அசத்துகிறார்கள்

    படம் முழுக்க, சமீபகாலமாக வரும் கிராமியப்படம் போலவே தோற்றமளித்தாலும், கொஞ்சமும் தொய்வில்லாமல் இருப்பதே படத்தின் பிளஸ் பாயின்ட். Hats off to Suseendran's Hatrick! சைலென்டா சாதிச்சிருக்கார்!

    மொட்டைபாஸின் இசை பற்றி
    திருவிழா பாட்டு சுமார்தான் என்றாலும், அடுத்துவரும் காதல் பாட்டு, சற்று புதிதாகவும், அதே நேரம் பழைய ராஜாவை இனிமையாக நினைவூட்டும் விதமாகவும் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தபாடல் இதுதான்.

    'குதிக்கிர' பாடலை புத்திசாலித்தனமாக ரெண்டாய் பிரித்திருக்கிறார்கள். இந்தப்பாட்டில் ராஜாவின் வாய்ஸ் மாடுலேஷன் ஆச்சர்யம்! ஆனால், அந்த காதல் பாட்டும் சரி, 'குதிக்கிர'வும் சரி, பின்னணியில் ஓடவிட்டு, உதட்டசைவு இல்லாமல் படமாக்கியிருக்கிரார்கள். ஆனால் அப்படி உதட்டசைவு இருந்தால் வழக்கமான பாடல்களாகிவிடும், இப்போது இரண்டு பாடல்களுமே மிகமிக இயல்பாக படத்துடன் பொருந்தக்காரணமே பின்னணி ஓட்டல் தான்!

    டைட்டில் மைய இசை, அப்புகுட்டி அறிமுகமாகும்போது ரிப்பீட் ஆகிறது. இந்த படத்தின் பின்னணி இசையில், இருப்பதிலேயே டாப் கிளாஸ் இதுதான். பின்னணி இசை, பக்காவாக அதே சமயம், கவனத்தை ரெம்பவும் கலைக்காமல், காட்சியோடும் பொருந்தி உள்ளது. முழு கிராமியமாக இல்லாமல், மிகவும் நவீனமாக, நிறைய ஷெனாய் வாசிப்புடன் இருப்பது வரவேற்கவேண்டிய புதுமை.

    மற்ற பளிச் பின்னணி இசைத் துணுக்குகள்:-
    - புரோட்டா காமெடியனின் அறிமுகம்(இவர் பேர் என்ன? "கள்ளாட்டம்" சூப்பரா ஆடுகிறார் )
    - பகவதியிடம் அஸிஸ்டென்டாக சேருமிடம்( காமெடியனின் ஏக்கமும், காட்சியின் குசும்பும் சேர்ந்த இசை, சிறியதென்றாலும் நச் )
    - கதாநாயகி வீட்டிலிருந்து கீழே இறங்கி வரும்போது ( சாதாரண காட்சி போல் தோன்றும், ஆனால் ஷெனாய் வழியே உசிரை உருக்குகிரார் )
    - கடைசியில் அந்தக் குதிரை ஓடியபடியே பாதி கிளைமாக்ஸை முடித்துவிடுகிறது, அப்போது வரும் இசையும் கிராமியமாக இல்லாமல் மிக நவீமான கலக்கல்!
    - கடைசியில், மழை வரும் அறிகுறியை காட்டும் சிறு பின்னணி இசை உலகத்தரம்! இந்தாளுக்கு இதுபோன்ற சிச்சுவேசனையே குடுங்கப்பா
    - கடைசியில், அப்புகுட்டி, ராஜா மாதிரி குதிரை மேல் உட்கார்ந்துவரும் காட்சி

    (coudn't differentiate shenai & oboe at places)
    ஆக, இந்த வருடத்தின், உருப்படியான படம், இசை. ஐயம் வெரி ஹாப்பி, ஸ்டார்ட் மியூசிக்
    Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 23rd May 2011 at 04:56 AM.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #162
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    sakala.... nice review...
    best thing is the screenplay... i never felt like the movie was slowing down anytime... i don mind it until things are happening, slower or faster...

    remembering one good moment...
    in the theatre, a moment she tells him not to touch her... and the next moment she leans on his shoulder...
    cho chweet.
    Sach is Life..

  4. #163
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Softsword,

    அட, ஆமாம்ல, கதை வசனம் பாஸ்கர் சக்தியின் அசத்தல் என்றாலும், திரைக்கதை சுசீந்திரன் தானே. அனேகமாக, நாவலை மிகத்திறமையாக திரைக்கதையாய் மாற்றி இருக்கிரார் என நினைக்கிறேன். அதனால் தான் நமக்கு சமீப கிராமியப்படங்களின் ட்ரெண்ட்/பாணி இருப்பதாகத் தோன்ருகிரது. அதுதான் ஒரு பரிச்சியமும் தந்து நம் ஆர்வத்தை படத்தின்பால் பிடித்துவைக்கிரது.

    அதேபோல் அந்த "பூவைக்கேளு" பாடல், நீங்கள் சொன்னது மட்டுமின்றி பாடல் முழுக்க ஒரு அழகான சிறுகதை தான்! சுசீ இவ்ளோ திறமைக்காரரா?! அந்தப்பாடலி, வரும் கோயில் காட்சியில், நாயகி கோயில் வாசலில் கால்வைக்க யோசிப்பதுபோல் வைத்து ஜாதி மேட்டரையும் காட்டியிருக்கிறார்.

    அந்த கடவுள் மறுப்பு நாயகன் கொள்கை என்றெல்லாம் பேசாமல் யதார்த்த வாழ்வில் உள்ள மூடநம்பிக்கைகளை மட்டும் நக்கலக்கடிப்பது அழகு!

    இதுபோன்ற, மாறுபட்ட, வித்யாசமான கதானாயகனை(அப்புகுட்டி) கொண்ட படத்தை இப்பெல்லாம் நாம் எந்த மறுப்புமின்றி, சகஜமாக எதிர்நோக்குகுறோமே, நம்ம ரசனையும் நல்லா தேறிவிட்டது இல்லையா

    இன்றைய இயக்குனர்களுக்கு கதைப்பஞ்சம், brain-drain இருந்தால், வெளிநாட்டுப்படங்களை சுடுவது, பக்கத்துமாநில படங்களை ரீமேக்குவது, இதைவிட, நம் தமிழ் இலக்கியங்கள் கதைகளில் நோண்டினாலே இதுபோன்ற முத்துக்கள் கிடைக்கும். இலக்கியம் வாயிலாக திரையுலகில் சுத்தமான காற்றும் வீசும். உலகத்தரம் எல்லாம் இங்கேயே கொட்டிக்கிடக்கிரது. சரியான கதையை இம்ப்ரூவைஸ் செய்து திரைக்கதையாக்கும் திறன் இருந்தாலே போதும்! சுசீந்திரன் அதற்கு ஒரு பளிச்சிடும் உதாரணம். வாழ்த்துக்களும் பாரட்டுகளுக்கும் உரியவர் அவர்
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  5. #164
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    sakala... i was also wondering why she is reluctant to keep her foot on the temple steps....
    but i never thought its cos of the caste difference.. idha dhaan... sila visayam ellaam matthavanga paatthutu solunganu sonen....
    initially i was thinking that way, but i thot like it would not be that way as her father is also a temple priest...

    also in the scene where they go that temple, the guy resists to keep thiruneer in his forehead... so he is kinda against god too... but yeah he doesn get into propoganda mode...
    after all, functions and festivals are blessing in disguise for lovers right...

    apram.... one another thing i liked in this movie is... the heroine... kannu summaa pesudhu.... note place where she says nee munnaala po, naan varen....
    Sach is Life..

  6. #165
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    இன்னுமா கிராமங்களில் பாரதிராஜா படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது?!?
    The film is set in 80s.

    புரோட்டா காமெடியனின் அறிமுகம்(இவர் பேர் என்ன? "கள்ளாட்டம்" சூப்பரா ஆடுகிறார் )
    Suri. I didn't like his track. Some of the additions to the original story didn't work well for me (Azhagarsami's wedding issue, Villain and most importantly climax). Other than these quibbles, this is a solid film.

  7. #166
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    master oru complete review pls. with + and -
    Sach is Life..

  8. #167
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Quote Originally Posted by SoftSword View Post
    master oru complete review pls. with + and -
    Idhukku mela enakku ezhudha varaadhu Also, whatever I write will be a comparison between the short story and the film, which wouldn't do any justice to this film.

  9. #168
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    ada summa unga observations eludhunga...
    naanum story padichuttu dhaan padam paatthaen... so i could relate to ur pov.
    Sach is Life..

  10. #169
    Senior Member Diamond Hubber directhit's Avatar
    Join Date
    Feb 2008
    Posts
    5,848
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    புரோட்டா காமெடியனின் அறிமுகம்(இவர் பேர் என்ன? "கள்ளாட்டம்" சூப்பரா ஆடுகிறார் )
    திருமாறன்
    Till the full stop doesn't come, the sentence is not complete - MSD

  11. #170
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    unnigurukkaL sArE, summA ezhudhunga boss. Comparing the shortstory and the movie-yum oru review POV dhAnE - adhaiyum padhivu paNNa vENAvA?

Page 17 of 23 FirstFirst ... 71516171819 ... LastLast

Similar Threads

  1. Ilaiyaraaja - The Singer
    By crajkumar_be in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 230
    Last Post: 13th September 2012, 11:47 AM
  2. Ramana geetham-Ilaiyaraaja
    By nbp in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 10th February 2012, 01:26 PM
  3. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  4. VARALAATRU SUVADUGAL - ISAIGNANI ILAIYARAAJA
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 309
    Last Post: 5th December 2007, 10:55 PM
  5. Ilaiyaraaja and JSBach
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 8th October 2006, 09:34 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •