-
27th May 2011, 11:43 PM
#51
Senior Member
Veteran Hubber
இன்று [மே 27] பாசமலருக்கு பிறந்தநாள் !
அவரைப் போற்றும் பாசமலருக்கும் [ராகவேந்திரன் சார்] பிறந்தநாள் !
What a very rare coincidence !
Happy Birthday Raghavendran Sir !
Many Many More Happy Returns !
With Lots & Lots of Love,
Pammal R. Swaminathan.
-
27th May 2011 11:43 PM
# ADS
Circuit advertisement
-
28th May 2011, 12:21 AM
#52
ஜோ,
நேற்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய சுதந்திர போராட்ட நாயகர்களை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிய நடிகர் திலகத்தின் படங்களின் காட்சிகள் திரையிடப்பட்டன. அதை தொகுத்து வழங்கியவர் நமது ராகவேந்தர் சார். அவரின் அந்த பணிக்கு அளித்த பாராட்டுக்குதான் அவர் நன்றி தெரிவித்தார்.
மகேஷ்,
பாலாஜியின் படங்களில் ராஜா ராதா இடம் பெற்றது ராஜா படத்திற்கு பின்தான். அதற்கு முன்பு வெளியான எங்கிருந்தோ வந்தாள் படத்தில் நாயகியின் பெயர் ராதா என்ற போதிலும் நடிகர் திலகம் ஏற்ற நாயக பாத்திரத்தின் பெயர் சேகர் என்பதாகும். பொதுவாகவே தமிழ் படங்களில் ராஜா ராதா போன்ற பெயர்கள் மக்களிடையே எளிதாக சென்ற சேரும் என்பதனாலேயே வைக்கப்பட்டது. அந்த வகையில்தான் பாசமலர் படத்தில் ராஜசேகர் ராதா என்று பெயர் சூட்டப்பட்டது.
சாரதி,
பொன்னொன்று கண்டேன் பாடலுக்கு நன்றி. அதில் உள்ள ஒரு சில நுணுக்கங்களை சரியாக சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இந்த பாடலை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு சம்பவம் நினைவு வரும். 1978-ம் ஆண்டு. மதுரையில் அமைந்துள்ள வெள்ளைக்கண்ணு தியேட்டரில் படித்தால் மட்டும் போதுமா படம் வெளியாகி இருந்தது.ஒரு மாலை காட்சிக்கு நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து செல்ல முடிவு செய்தோம். ஒரு நண்பனின் அண்ணன் எங்களுடன் சேர்ந்து வருவதாக சொன்னார். இதற்கும் அவர் ஒன்றும் சிவாஜி ரசிகர் என்று சொல்ல முடியாது. அனைத்துப் படங்களையும் பார்ப்பவர். என்ன விசேஷம் என்றால் அவர் அன்றிரவு பெங்களுர் செல்கிறார். இரவு 8 மணிக்கு பஸ். அந்த காலகட்டத்தில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு ரயில் கிடையாது. மொத்தம் இரண்டு பஸ்கள் என்று நினைவு. அதுவும் தவிர வெள்ளைக்கண்ணு அரங்கம் நகரின் மய்ய பகுதியிலிருந்து சற்றே விலகியுள்ள அரசரடி பகுதியில் அமைந்துள்ள அரங்கம். அன்று மதுரையில் ஆட்டோக்களும் கிடையாது. இரு சக்கர வாகனங்களும் குறைவு.
மாலைக் காட்சி படத்திற்கு சென்றால் இரவு பஸ் பிடிப்பதற்கு இத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தே படத்திற்கு வந்த அவர் சரியாக இந்த பாடல் காட்சியில் அந்த விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ என்ற வரிக்காக, அந்த நீச்சல் குளத்தின் படியேறி நடிகர் திலகம் விண்ணோக்கி கை தூக்கும் அந்த ஸ்டைலை ரசித்து கைதட்டிவிட்டு மிகுந்த மனநிறைவோடு முக மலர்ச்சியோடு எங்களிடம் விடை பெற்று சென்ற காட்சி இப்போதும் என் கண் முன்னே நிழலாடுகிறது. நன்றி அதை அசை போட வாய்ப்பளித்ததற்கு.
அன்புடன்
சாரதி தான் கிருஷ்ணர் என்ற போதிலும் கிருஷ்ணாவை மறக்கலாமா? ஆம் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவிற்கு நமது ஹப்பர் நண்பர் கிருஷ்ணாஜியும் வந்திருந்தார்.
Last edited by Murali Srinivas; 28th May 2011 at 12:23 AM.
-
28th May 2011, 08:04 AM
#53
Senior Member
Diamond Hubber
Happy birthday, Raghavendra-sir. It'd be more appropriate to wish you here. And thank you for all the services you have done on behalf of NT's fans all over the world.
-
28th May 2011, 08:58 AM
#54
Senior Member
Seasoned Hubber
வாழ்த்து சொன்ன அன்பு மிக்க ஜோ, பம்மலார், முரளி சார், ராகேஷ் மற்றும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
தங்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு காணிக்கை இதோ
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 18
பந்த பாசம் படத்தில் தேவிகாவுடன் நடிகர் திலகம் பாடும் பந்தல் இருந்தால் பாடல். பாடல் வரிகளில் இருவருடைய மன நிலையும் புலப் பட்டிருக்கும். காதலும் உண்டு அதே சமயம் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்ற நிலைப்பாட்டில் கதாநாயகன் பாடும் சூழ்நிலையினை மாயவநாதனின் வரிகள் மிகச் சரியாக பிரதிபலிக்கும்..
அருமையான பாடல்
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th May 2011, 09:51 AM
#55
Senior Member
Seasoned Hubber
பாச மலர் படத்தின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நமது அன்பு சகோதரர் சிவாஜி சந்தானம் அவர்கள் - எம்.ஆர்.சந்தானம் அவர்களின் புதல்வர் - வெள்ளி விழா நிகழ்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும். ஒரு புகைப்படம் இங்கே தரப்படுகிறது. மற்றவை கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்.

http://www.facebook.com/media/set/?s...4682.690131809
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th May 2011, 09:52 AM
#56
Senior Member
Seasoned Hubber
பாச மலர் படத்தின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நமது அன்பு சகோதரர் சிவாஜி சந்தானம் அவர்கள் - எம்.ஆர்.சந்தானம் அவர்களின் புதல்வர் - வெள்ளி விழா நிகழ்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும். ஒரு புகைப்படம் இங்கே தரப்படுகிறது. மற்றவை கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்.

http://www.facebook.com/media/set/?s...4682.690131809
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 28th May 2011 at 09:57 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th May 2011, 01:12 PM
#57
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாசமலர் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் பற்றிய புகைப் படங்கள் கண்ணுக்கு விருந்து படைத்தது மட்டுமல்லாமல், இனிய நினைவுகளையும் மீட்டுத் தந்தது. மிக்க நன்றி.
அன்புள்ள திரு. முரளி அவர்களுக்கு,
"பொன்னொன்று கண்டேன்" பாடலைப் பற்றிய எனது பதிவுக்கான தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.
ருஷ்ய கலாசார மையத்தில் கலந்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிடும் போது, திரு. கிருஷ்ணாஜி அவர்களின் பெயர் தற்செயலாக குறிப்பிடப்படாமல் விட்டுப் போனது குறித்து வருந்துகிறேன். இடித்துரைத்தமைக்கு நன்றி கூறுகிறேன். திரு. கிருஷ்ணாஜி அவர்கள் பிழை பொறுத்தருள வேண்டுகிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 28th May 2011 at 01:17 PM.
-
29th May 2011, 03:55 AM
#58
Senior Member
Veteran Hubber
ராகவேந்தர் ஒரு ரசிகவேந்தர்
சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் 26.5.2011 வியாழன் மாலை 6:30 முதல் 7:45 வரை இந்திய-ரஷ்ய நல்லுறவை போற்றும் வகையில் திரைப்படத் திருவிழா இனிதே நடைபெற்றது. விழாத் துளிகள்:
- இந்த இனிய விழா இனிதே நடைபெற அங்கம் வகித்தவர்கள், Russian Centre of Science & Culture, Indo-Russian Cultural & Friendship Society, Sivaji-Prabhu Charities Trust மற்றும் ரசிகவேந்தரான நமது ராகவேந்திரன் சாரின் www.nadigarthilagam.com இணையதளம்.
- சோவியத் ரஷ்யாவின் மாபெரும் விடுதலைப் போரின் 66வது ஆண்டு வெற்றிவிழாவாகவும், இந்திய சுதந்திரத்தின் 64வது வெற்றிவிழாவாகவும் இந்தத் திரைப்படத் திருவிழா களை கட்டியது. இரண்டாம் உலகப் போரை, 'மாபெரும் விடுதலைப் போர்' என்றே சோவியத் யூனியனில் கூறுவது வழக்கம்.
- விழா மேடையை ரஷ்ய நாட்டுத் தூதுவர் மாண்புமிகு நிகோலாய் லிஸ்டாபடொவ், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையத்தின் இயக்குநர் திரு.விலாடிமிர் மாரி, நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் பட அதிபர் திரு.ஜி.ராம்குமார், இந்திய-ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு.பி.தங்கப்பன், www.nadigarthilagam.com அதிபர் திரு.வி.ராகவேந்திரன் மற்றும் திரு.ஜெயக்குமார் முதலிய பிரமுகர்கள் அலங்கரித்தனர். விழாப் பிரமுகர்கள் குத்துவிளக்கை ஏற்றி வைக்க விழா நல்ல முறையில் தொடங்கியது.
- இந்திய-ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு.பி.தங்கப்பன் அவர்கள் வரவேற்புரை நல்கி விழா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார். அவரது உரையில் சில அரிய செய்திகளும் பொதிந்திருந்தன. 1997-ம் ஆண்டு இதே அரங்கில் இந்திய சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடிய போது நடிகர் திலகம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதை உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்ந்தார். அன்று நடிகர் திலகம் தமிழ்மொழியில் ஆற்றிய தலைமையுரையை விரைவில் ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்த்து இங்கேயும், ரஷ்யாவிலும் ஆவணப்படுத்தப்போவதாகக் கூறினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள நடிகர் திலகத்தின் சுயசரிதையை ரஷ்ய மொழியிலும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். பராசக்தி பொன்விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் பொன்விழா ஆகிய விழாக்கள் இந்த மையத்தில்தான் சிறப்புத் தபால் உறைகள் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டன என்றும், இந்த ஆண்டு(2011) பொன்விழாக் காணுகின்ற பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், கப்பலோட்டிய தமிழன் முதலிய காவியங்களின் பொன்விழா இங்கேயே நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் சிகர செய்தியாக, உலகப்பெரு நடிகரான சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் அவர்களின் பெயரையும், ரஷ்யப் படவுலக ஜாம்பவானான போன்டர்ஜுக் அவர்களின் பெயரையும் இணைத்து "சிவாஜி கணேசன் போன்டர்ஜுக் ஃபிலிம் அகாடெமி" என்கின்ற பெயரில் ஒரு திரைப்பட அகாடெமி தொடங்க இருப்பதையும் கூறினார். அதற்கான ஆரம்ப விழா நடிகர் திலகத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினமான 21.7.2011 அன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த அகாடெமியின் ஆவணக் காப்பகத்தில் [Archives] நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் அனைத்தும் ஆவணங்களாக பாதுகாத்து வைக்கப்படும் என்ற முத்தான செய்தியை அனைவரின் செவிகளுக்கும் தேனாகப் பாய்ச்சினார்.
- ரஷ்ய நாட்டுத் தூதுவர் மாண்புமிகு நிகோலாய் லிஸ்டாபடொவ் அவர்கள் உரையாற்றும் போது ஆசிய-ஆப்பிரிக்க படவிழாவில் சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் விருது பெற்றது அவர் எப்பேர்ப்பட்ட உலகப் பெரு நடிகர் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று புகழ்ந்துரைத்தார். சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் தாய்நாட்டுப் பற்றிலும் தலைசிறந்து விளங்கியவர் என்று பாராட்டினார். இத்தகைய பெருமைகள் கொண்ட அவருடைய திரைப்படக் காட்சிகளை அரங்கிலுள்ளவர்களைப் போல தானும் காண ஆவலாக உள்ளதாகவும் கூறினார். இன்று இங்கு நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் இந்திய-ரஷ்ய உறவை மென்மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
- நடிகர் திலகத்தின் மூத்த புதல்வரும் திரைப்பட அதிபருமான திரு.ஜி,ராம்குமார் அவர்கள் இந்திய-ரஷ்ய நல்லுறவுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பாலமாக இருக்கும் என்றார். இரண்டு நாள் விழாவின் முதல் நாள் [25.5.2011] முக்கிய நிகழ்ச்சியாக திரையிடப்பட்ட "LIBERATION" திரைப்படம் 1990களில் சென்னை சஃபையர் திரையரங்கில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடியதை நினைவுகூர்ந்த திரு.ராம்குமார் தனது தந்தையாருடன் அப்படத்தை சஃபையரில் கண்டு களித்ததை மிகுந்த பூரிப்போடு எடுத்துக் கூறினார். ரஷ்ய நாட்டின் மாபெரும் விடுதலைப் போரான இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா அடைந்த வெற்றியையும், அந்த வெற்றியைப் பெற அந்நாடு செய்த போராட்டங்களையும், தியாகங்களையும் பற்றி முழுமையாக அறிய 'Anthony Beevor' எழுதிய 'Stalingrad' என்கின்ற நூலை வாசிக்குமாறு அரங்கிலிருந்தோரை அன்புடன் கேட்டுக் கொண்டார்.
- நமது ராகவேந்திரன் சார் பேசும் போது நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். புராணம், இதிகாசம், வரலாறு, தேசியம், சமூகம், குடும்பம் என எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும் அவற்றிற்கெல்லாம் சான்றுகளை அள்ளி வழங்குவதற்கு நடிகர் திலகத்தின் திரைப்படங்களே ஆதாரசுருதிகளாக திகழ்கின்றன என்று கூறிய ராகவேந்திரன் சார், அப்பேர்ப்பட்ட அவரது படங்கள் இன்றைய தலைமுறையினருக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- திரைத்துறையை சார்ந்த திரு.ஜெயக்குமார் நடிகர் திலகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தான் எழுதிய கவிதைகளிலிருந்து சில முக்கிய வரிகளை மட்டும் வாசித்துக் காட்டினார். முத்தான சத்தான வரிகளாக அவை இருந்தன. அவையோரின் ஆரவாரத்தையும் அவை பெற்றன.
- சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. அர்ச்சனா சரளமான ஆங்கிலத்தில் மிக அருமையாக ரஷ்ய நாட்டின் மாபெரும் விடுதலைப் போரினுடைய வெற்றிப்பின்னணியை எடுத்துரைத்தார்.
- ரஷ்ய நாட்டுத் தூதுவருக்கு, "Autobiography of an actor"என்ற நடிகர் திலகத்தின் ஆங்கில சுயசரிதை நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. திரு.ராம்குமார் அவர்கள் இதனை வழங்கினார். விழாப் பிரமுகர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
- நமது ராகவேந்திரன் சார் இந்த இரு தின விழா நிகழ்வுகளுக்கும் முன்னணியிலும், பின்னணியிலும் ஒரு கல்தூணாக விளங்கினார் என்பதனை பறைசாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே யாம் எழுதிய இந்த விழாப்பதிவின் தலைப்பில் அவர் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சிவனடியாரைப் போற்றினால் சிவபெருமான் அக மகிழ்வார். சிவாஜியின் அடியவரைப் புகழ்ந்துரைத்தால் நமது சிவாஜி பெருமான் உள்ளம் குளிர்வார்.
- விழாவின் சிகர நிகழ்வாக விழாவுக்கு வந்தவர்களுக்கு சிறந்த விருந்து அளித்தது போல அடுத்து வந்தது நமது ராகவேந்திரன் சார் மிகுந்த சிரத்தையுடன் தொகுத்து உருவாக்கியிருந்த தேசிய திலகத்தின் திரைப்படக் காட்சிகள் [Clippings].
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
30th May 2011, 03:18 AM
#59
Senior Member
Veteran Hubber
இன்று 29.5.2011 ஞாயிறு முதல் நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில் ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தித்திக்கும் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
30th May 2011, 04:57 AM
#60
Senior Member
Seasoned Hubber
Happy birth day Ragavendran
Dear Ragavendran,
Wish you many more happy returns of the day.
As Pammalar said, you are "Rasikavendan".....
Cheers,
Sathish
Bookmarks