-
5th June 2011, 07:25 AM
#11
Senior Member
Regular Hubber
தி எப் எம் லவர் அவர்களே,
மிக்க நன்றி "இடை கை இரண்டில் ஆடும்" வீடியோ தந்ததிற்காக. அருமையான பாடல். தேன் நிலவு பாடல் இந்த பாடலிற்கு பிறகு வந்ததாகும்.
ஸ்ரீதர் சிவாஜிக்கு அறிமுகமான படம் "எதிர்பாராதது" என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் கலந்து இடம் பெற்ற படங்கள் "அமர தீபம்", "உத்தம புத்திரன்" ஆகியவை. என்ன ஆச்சரியம் என்றால் அந்த கால கட்டத்தில் ஸ்ரீதர் சிவாஜியை வைத்து டைரக்ட் செய்த படம் "விடிவெள்ளி" ஒன்றுதான். மற்றவை எல்லாம் ஜெமினி கணேசன், முத்துராமன் இவர்களை அல்லது புதிய நடிகர்களை வைத்து ஸ்ரீதர் டைரக்ட் செய்ததுதான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்கள் மீண்டும் இணைந்தார்கள் விடிவெள்ளிக்கு பிறகு. என்ன காரணம்?
விடிவெள்ளி சிவாஜியின் சொந்த தயாரிப்பு அல்லவா?
அன்புடன்
Ramaswamy
-
5th June 2011 07:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks