-
9th June 2011, 05:45 AM
#421
Senior Member
Seasoned Hubber
Dear TFMLover,
முதல் முறையில் பாதியில் நிற்கும் பாடல் மறுமுறை முழுதும் இயங்குகிறது. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.
மர்பி ரேடியோ விளம்பரம் பழைய நினைவுகளைக் கிளறுகிறது. மெக்கோட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது சாந்தி திரையரங்கு அருகில் வி.ஜி.பி. நிறுவனம் இயஙகி வரும் கட்டிடத்தில இயங்கியதாகவும் பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் வந்த பிறகு தற்போது தேவி திரையரங்க வளாகத்தின் நுழைவாயிலில் ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கும் இடத்தில் இருந்ததாகவும் நினைவு. தற்போது அந்தக் கட்டிடத்திற்கு மெக்கோட்ரானிக்ஸ் பெயர் வைக்கப் பட்டுள்ளது. அந்த மர்பி குழந்தையின் படம் அச்சிட்ட விளம்பரம் நிறுவனத்தின் வாயிலில் வைக்கப் ப்ட்டிருக்கும்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th June 2011 05:45 AM
# ADS
Circuit advertisement
-
9th June 2011, 08:30 AM
#422
Senior Member
Seasoned Hubber
Dear TFMLover,
நிச்சயமாக சிறு வயது நிகழ்வுகள் நெஞ்சில் இறுதி வரைக்கும் நிலைத்திருக்கும் என்பது என் எண்ணம். அந்தக் காலத் சென்னை திரையரங்குகளில் தற்போது இயங்கி வருபவை - 1960 கால கட்டத்தவை
அண்ணா சாலை - சாந்தி, காசினோ, தேவி வளாகம்
திருவல்லிக்கேணி - ஸ்டார்
ராயப்பேட்டை - பைலட், மெலோடி (பழைய ஓடியன்)
மேற்கு மாம்பலம் - ஸ்ரீநிவாசா
பிராட்வே - பாட்சா (பழைய மினர்வா)
ஓட்டேரி - மகாலட்சுமி, சரவணா, பாலாஜி
வில்லிவாக்கம் - ராயல் - தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது, நாதமுனி - தற்போது இயங்குகிறதா என்று தெரியவில்லை
சைதாப்பேட்டை - ராஜ் (பழைய நூர்ஜஹான் )
தண்டையார்பேட்டை - அகஸ்தியா
வண்ணாரப்பேட்டை - மகாராணி, பாண்டியன் (பழைய மகராஜா) தற்போது இயங்குகிறதா என்று தெரியவில்லை
பெரும்பாலான சென்னை திரையரங்குகள் காலத்தின் பிடியில் சிக்கி மூடப்பட்டு விட்டன என்பது வருத்தத்திற்குரிய விஷயம். அப்படி மூடப்பட்ட திரையரங்குகளின் பட்டியலைப் படித்தால் நிச்சயம் மனம் வருந்தும். இருந்தாலும் நினைவுக்கு எட்டிய வரை பட்டியலிட்டுப் பார்ப்போம்
பிளாசா, கெயிட்டி (தற்பொழுது வணிக வளாகமாக உருவாகி வருகிறது), வெலிங்டன், பாரகன், நியூ எல்பின்ஸ்டன் (தற்போதைய ரஹீஜா காம்ப்ளெக்ஸ்), பாலர் அரங்கம் பின்னர் கலைவாணர் அரங்கமாக மாறி தற்போது அதுவுமில்லை, குளோப் - பின்னர் அலங்கார் - தற்போது வணிக வளாகம், மிட்லண்ட், பின்னர் லியோ என்ற சின்ன அரங்கு கட்டப்பட்டு அதில் அந்தமான் காதலி மாபெரும் வெற்றி பெற்று, பின்னர் அதுவும் வணிக வளாகமாகியுள்ளது, ஆனந்த், லிட்டில் ஆனந்த், காமதேனு, கபாலி, மேற்கு மாம்பலம் நேஷனல், சைதை ஜெயராஜ் - தற்போது இயங்குகிறதா தெரியவில்லை, ஓட்டேரி சரஸ்வதி - தற்போது இயங்குகிறதா தெரியவில்லை, கிரௌன், கிருஷ்ணா, பிரபாத் - தற்போது இயங்குகிறதா தெரியவில்லை, சயானி,
இப்படி இன்னும் சில உள்ளன.
இந்தத் திரையரங்குகளின் நிழற்படங்கள் கிடைத்தால் இங்கு வேறொரு சந்தர்ப்பத்தில் பதியலாம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th June 2011, 08:30 AM
#423
Senior Member
Seasoned Hubber
RAGHAVENDRA sir !
இன்னுமொன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன்
தங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
என்னிடம் இருக்கும் நடிகர் திலகத்தின் நரசு ஸ்டூடியோ 'ஸ்ரீவள்ளி
கருப்பு வெள்ளை யில் தான் இருக்கிறது
அது ஆரம்பத்தில் கலர் வண்ணப்படமாக படமாக வந்ததா ?
நன்றி
Regards
-
9th June 2011, 08:43 AM
#424
Senior Member
Seasoned Hubber
ஜெயப்ரதா -

சமீபத்தில் மூடப்பட்ட லிபர்டி

புவனேஸ்வரி

அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 9th June 2011 at 09:42 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th June 2011, 08:55 AM
#425
Senior Member
Seasoned Hubber
RAGHAVENDRA sir !
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஓடிய அதே சயானி தானா ?
amazing !
Regards
-
9th June 2011, 09:45 AM
#426
Senior Member
Seasoned Hubber
மன்னிக்க வேண்டும், அது புவனேஸ்வரி திரையரங்கு என எண்ணுகிறேன். சயானி அரங்கின் நினைவில் மூழ்கி விட்டதால் அதையே எழுதி விட்டேன். இருந்தாலும் சயானியும் கிட்டத் தட்ட இதே போல் தான் இருக்கும். சாலையிலிருந்து கிட்டத்தட்ட 100 அடி உள்ளே தள்ளி இருக்கும். என்னிடம் சயானியின் நிழற்படம் இருந்தால் அதைப் பதிவேற்ற முயற்சிக்கிறேன்.
புவனேஸ்வரி திரையரங்கும் தற்போது இயங்கவில்லை என எண்ணுகிறேன்.
அதே பகுதியில் 70களின் கடைசியில் வசந்தி திரையரங்கு துவங்கப் பட்டது. தற்போது அது இயங்குகிறதா தெரியவில்லை.
அன்புடன்
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th June 2011, 11:26 AM
#427
Senior Member
Seasoned Hubber
அந்த வானொலிப் பெட்டி கண்களுக்கு மிகவும் ரம்மியமாகக் காட்சி தரும். ஒலி துல்லியமாகக் கேட்கும். அந்தக் குழந்தையோ உள்ளத்திலே நிரந்தரமாகத் தங்கி விடும். அது தான் மர்பி முசாபிர். 60களின் மத்தியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான வானொலிப் பெட்டி. பேட்டரியிலும் இயங்கக் கூடியது. மின்சாரத்தில் இயங்கிக் கொண்டிருந்த நேஷனல் எக்கோ ரேடியோ பெட்டியின் ஆதிக்கத்தை குறைத்து பேட்டரியிலும் மின்சாரத்திலும் இயங்கக் கூடியதாக வந்த மர்பி முசாபிர் பெருத்த வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை. மெல்லிசை மன்னர் 60களின் பிற்பகுதியில் தன் ஆளுமையை ஆழமாக விஸ்தரித்துக் கொண்டிருந்த போது இந்த வானொலிப் பெட்டியின் உதவியில் தான் நம்மைப் போன்ற பல ரசிகர்கள் உருவாகக் காரணமாயிருந்தது இந்தப் பெட்டி. இதோ அந்த விளம்பரம்.

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th June 2011, 11:49 AM
#428
Member
Junior Hubber

Originally Posted by
tfmlover
raghavendra sir !
இன்னுமொன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன்
தங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
என்னிடம் இருக்கும் நடிகர் திலகத்தின் நரசு ஸ்டூடியோ 'ஸ்ரீவள்ளி
கருப்பு வெள்ளை யில் தான் இருக்கிறது
அது ஆரம்பத்தில் கலர் வண்ணப்படமாக படமாக வந்ததா ?
நன்றி
regards
அன்புள்ள தபம் லவர் ( tfm lover ) அவர்களுக்கு .
எனது நண்பகல் வணக்கம் .
சிவாஜி, பத்மினி நடித்த நரசுவின் ஸ்ரீ வள்ளி வண்ணப் படம் தான் !
அந்தப் படத்தை எந்த நிறுவனமும் வெளியிடவில்லை !
அதனால் அது சந்தைக்கு வரவில்லை .
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை நான் மதுரைக்கு சென்ற பொழுது மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்துக்கு வெளியே ஒரு கடையில் யாரும் சீந்துவாரில்லாமல் இந்தப் படத்தின் மூன்று குறுந்தகடுகள் எனக்குக் கிடைத்தன .
படம் முழுமையாக இருந்தது . ஆனால் அவ்வளவாகத் தெளிவில்லாத வண்ணம் .!
நல்ல சிறந்த பாடல்கள் இருந்தும் படம் நன்றாக ஓடவில்லை என்று நினைக்கிறேன் .
இந்தப் படத்தின் பாடல்கள் தங்களுக்குத் தேவையா ?
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
9th June 2011, 11:54 AM
#429
Member
Junior Hubber

Originally Posted by
tfmlover
mullaivanam ! Ennidamillai s ramaswamy
proff idam irukkumaa ?
Regards
அன்பு நண்பர்களே,
உங்கள் இருவருக்கும் எனது நண்பகல் வணக்கம் .
முல்லை வனம் படம் என்னிடம் இல்லை !
தேடிக் கொண்டு இருக்கிறேன் .
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
9th June 2011, 12:12 PM
#430
Senior Member
Seasoned Hubber
அன்புமிக்க பேராசிரியர் அவர்களின் பதிவு மிக்க மகிழ்வூட்டுகிறது. உதவுதற்கென்றே உள்ளவர் அவர்.
அவர் கூறியது போல் ஸ்ரீவள்ளி வண்ணப் படம் தான். ஆனாலும் வெளியான புதிதில் சில பிரதிகள் கருப்பு வெள்ளையிலும் வந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இது ஊர்ஜிதமான தகவல் அல்ல.
தற்போது ஒரு நிறுவனம் இப்படத்தை நெடுந்தகட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனாலும் பேராசிரியர் கூறியது போல் வண்ணம் பல இடங்களில் பிசிறடிக்கிறது. அதை கருப்பு வெள்ளையிலேயே வெளியிட்டிருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது. இதோ தங்கள் பார்வைக்கு அந்த நெடுந்தகட்டின் முகப்பும் பின் அட்டையும்


இதில் இடம் பெற்றுள்ள நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் ஸ்ரீவள்ளி படத்தினுடையதல்ல.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks