Page 19 of 197 FirstFirst ... 917181920212969119 ... LastLast
Results 181 to 190 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #181
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    எங்க ஊர் ராஜா - Part III

    கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் பிரபலம்.

    1. அத்தைக்கு மீசை வச்சு - எல்.ஆர்.ஈஸ்வரி.

    ஜெயலலிதா தன் தோழியருடன் சேர்ந்து பாடும் பாடல். இந்தப் பாடலின் முடிவில்தான் நடிகர் திலகத்துடன் ஜெஜெ மோதுவது ஆரம்பிக்கும்.

    2. என்னடி பாப்பா சௌக்கியமா - டி.எம்.எஸ்.

    தன்னை அவமானப்படுத்திய ஜெஜெவிற்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதற்காக அவரை ஆசை வார்த்தை பேசி அழைத்து நீச்சல் குளத்தில் நீந்த வைத்து அவர் அணிந்து வந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என பாடும் பாடல். தற்போதைய அரசியல் சூழலை எல்லாம் விட்டு விடுங்கள். அப்போதே [1968-ல்] இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ என்ற வரிக்கு தியேட்டரில் கைதட்டல் விசில் பறக்கும்.

    3. பரமேஸ்வரி ராஜேஸ்வரி, ஜகதீஸ்வரி -- டி.எம்.எஸ் சுசிலா.

    எம்.எஸ்.வி சில நேரங்களில் ஒரே பாடலில் slow beats மற்றும் fast tune களை பயன்படுத்தி இசையமைத்திருப்பார். அந்த வகையை சேர்ந்தது இந்தப் பாடல். சாரதா அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படத்தில் extraordinaryயாக ஒரு பாடல் அமைந்து விட்டால் அதே படத்தில் வேறு சில நல்ல பாடல்கள் கூட பெற வேண்டிய புகழை பெறாமல் போய் விடும். பரமேஸ்வரி பாடலை அந்த வகையிலும் சேர்க்கலாம். ஈஸ்வரியின் ரேஞ்சு பாடலை சுசிலா அனாயசமாக பாடியிருப்பார். பூபதி என்ற பாத்திரத்தின் குழந்தைத்தனமான காதல் தவிப்பை நடிகர் திலகம் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பீச்சிலே போய் பீச்சிலே போய் என்ற வரி பாடும் போது அது தூக்கலாய் தெரிய பதிலுக்கு சுசிலா பாச்சிலர் பாய் பாச்சிலர் பாய் என்று பதிலுக்கு பாடும் போது ரசிக்க முடியும்.

    4. ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை - டி.எம்.எஸ் - சுசிலா

    சேதுபதியின் 60-வது பிறந்த நாளன்று பாடும் பாடல். ஏற்கனவே சொன்னது போல நடிகர் திலகம் இளமையாக சிக்கென்று இருப்பார். இதிலும் சுசிலா பின்னியிருப்பார். அதிலும் ரெண்டு வெள்ளி கொலுசுகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே என்ற வரியில் பொறந்த நாளையிலே என்பதை ஒரு folk பாணியில் அவர் உச்சரிக்கும் இடம் பிரமாதமாக இருக்கும். பாடல் முடிவில் விழா நாயகன் சேதுபதியே எழுந்து ஆட ரசிகர்களின் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா!

    5. யாரை நம்பி நான் பொறந்தேன் - டி.எம்.எஸ்.

    படத்தின் உயிர் நாடியான பாடல். கவியரசர்- மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ். நடிகர் திலகம் கூட்டணியில் வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு தனியிடம் இந்த பாடலுக்கும் உண்டு. நடிகர் திலகத்தின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். கண்ணதாசன் அற்புதமாக எழுதியிருப்பார். அதிலும் தேவையான நேரங்களில் உறவுகள் உதவி செய்யாமல் கைவிடுவது பற்றிய சூழல் என்றால் கவியரசரின் பேனா மடை திறந்த வெள்ளம் போல் சீறி பாயும். குறிப்பாக

    தென்னையை பெத்தா இளநீரு
    பிள்ளையைப் பெத்தா கண்ணீரு


    பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
    சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே


    போன்ற வரிகள் சாகவரம் பெற்றவை. இந்தப்படம் இந்தியில் தில் கா ராஜா என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போது மாதவனே இந்தியிலும் இயக்கினார். பாடல் எழுத வந்த ஆனந்த் பக் ஷி தென்னையை பெத்தா இளநீரு வரிகளுக்கு எவ்வளவு முயன்றும் தமிழில் வந்த அந்த உணர்வை கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.

    எளிமையான ஆனால் வலிமையான வரிகளுக்கு அதே போல் மெல்லிசை மன்னர் எளிமையாய் போட்டிருந்த ட்யுன் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தது. இந்த பாடலின் உள்ளார்ந்த அனைத்து உணர்வுகளையும் தன் வெண்கல குரலின் பாவத்தில் வெளிக் கொணர்ந்து டி.எம்.எஸ். மெருகேற்ற வழக்கம் போல் தன் நடிப்பால் அனைத்து கைதட்டல்களையும் நடிகர் திலகம் அள்ளிக் கொண்டு போனார்.

    படம் 1968 அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களே எப்படி போட்டியாக வந்தது என்பதைப் பற்றி லட்சுமி கல்யாணம் விமர்சனத்தில் சொல்லியிருந்தோம். அதன் சுருக்கம் மீண்டும்.1968-ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியான தில்லானா மிக வெற்றிகரமாக 86 நாட்களை கடக்கும் போது தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியானது. எங்க ஊர் ராஜா வெளிவந்து 25 நாட்களே ஆகியிருந்த நிலையில் நவம்பர் 15 அன்று லட்சுமி கல்யாணம் வெளியானது. அதற்கு அடுத்த 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியானது. ஆக ஒரே நேரத்தில் நான்கு சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

    மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.

    படத்தில் சேதுபதி தன் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஒட்டி செல்லும் போது வேறொரு சைக்கிள் அவரை முந்த முயற்சிக்க தனி ஆளாக செல்லும் அந்த நபரை குழந்தைகளோடு செல்லும் சேதுபதி முந்தி சென்று வெற்றி கொள்வதாக ஒரு காட்சி வரும். இந்த படம் வெளியான போது சேதுபதி என்ற சைக்கிளை முந்தி செல்ல சிலர் வாகனத்தில் வந்தனர். ஆனால் மக்கள் ஆதரவு என்னும் எரிபொருள் கிடைக்காததால் வாகனம் நின்று போக, மக்கள் ஆதரவு எனும் காற்று அனுகூலமாய் வீச சேதுபதியின் சைக்கிள், வெற்றி எனும் destination -ஐ அடைந்தது.

    தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா

    அன்புடன்

    Tail Piece: 1996-ம் வருடம் மத்தி. இந்தியன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம், கமலை நேரில் சந்தித்த ஒரு சின்னத்திரை பெரிய திரை நடிகர் அதைப் பற்றி பாராட்ட, படத்தைப் பற்றி பேசிய கமல், படம் நாம் பிறந்த மண் படத்தின் inspiration -ஆக இருந்தாலும் இந்தியன் தாத்தா பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில் அதன் inspiration எங்க ஊர் ராஜா விஜய ரகுநாத சேதுபதி என்றாராம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #182
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள் - 02

    "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் / சிந்தனை செய் மனமே / வடிவேலும் மயிலும் துணை"



    நடிப்பு : நடிகர் திலகம், பி.பானுமதி, எம்.கே.ராதா, எம்.என். நம்பியார், வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி மற்றும் பலர்

    பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

    இசை : ராகதேவன் ராமநாதன்

    படைப்பு : கவிஞர் கே.டி.சந்தானம் [சிந்தனை செய் மனமே & வடிவேலும் மயிலும் துணை]

    திரைக்காவியம் : அம்பிகாபதி(1957)


    அன்புடன்,
    ராகவேந்திரன் &
    பம்மலார்.
    pammalar

  4. #183
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    படத்தின் முத்தாய்ப்பான காட்சி. மகன்கள் இருவரும் கோபித்துக் கொண்டு சென்று விட இரண்டு கை தட்டினா சத்தம்னு சொன்னேன். ஆனா இப்போ சொல்றேன் ஒரு கை தட்டினாலும் சத்தம் வரும் என்று சொல்லி விட்டு ஒரு கையால் மற்றொரு கையை தட்டுவது, தொடையை தட்டுவது, தோளை தட்டுவது என்று தன் மன உறுதியை வலிமையை வெளிக்காட்டும் அந்த காட்சி, எந்த சூழ்நிலையிலும் தன் லட்சியத்தை அடைய வேறு யார் தயவும் தேவையில்லை என்பதை பொங்கி வரும் வெள்ளமாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று சீறி பாய்வாரே அது படத்திற்கே சிகரமான காட்சி.


    முழுப்படமும் காண



    அன்புடன்
    Last edited by RAGHAVENDRA; 18th June 2011 at 12:03 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #184
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    As usual, you outdid yourself, Murali-sar. Makes one wonder if the name Sethupathi was inspiration for the daddy Kamals in Apoorva Sagotharargal.

    One thing though, I find myself rooting enjoying son's performance, rather than dad (likewise in Kamal's Indian). But I guess things are about to change .

    Still, son NT is very entertaining and was funny enough for us to fast forward Nagesh comedy scenes. That one song alone would be the one that fans remember in the movie, those immortal lines by Kannadhasan. Absolute gem!
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  6. #185
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    எங்க ஊர் ராஜா - Part III


    மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.
    தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா

    அன்புடன்
    Thanks a lot Murali sir for your extraordinary writeup about Enga Oor Raja, you made me to watch this movie again, may be today itself at least for 15 minutes.

    Wow four movies within short period and that all the movies big hit, only NT can do like this and truly he is "Vasool King".

    Cheers,
    Sathish

  7. #186
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் எங்க ஊர் ராஜா பற்றிய முரளி சாரின் திறனாய்வு, அப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்கு சரியான வழிகாட்டியாகும். குறிப்பாக யாரை நம்பி பாடல் தமிழ்த்திரையுலக இசை வரலாற்றில் சாகாவரம் பெற்ற பாடலாய் அமைந்து விட்டது. அது மட்டுமல்ல, இப்பாடலின் ஒரு சிறிய பகுதியை ராமன் எத்தனை ராமனடி படத்தில் இணைத்து சாந்தியில் வெளியான அன்று அதாவது 15.08.1970, பார்த்த போது, மிகப் பெரிய கைதட்டலை இப்பாடல் பெற்றது. 1970 காலகட்டத்தில் அசைக்க முடியாத ராஜாவாக நடிகர் திலகம் உச்சியில் ஏறி விட்ட நேரம், இன்றும் பசுமையாக நினிவில் உள்ளது. அப்பாடல் எங்க ஊர் ராஜாவில் இடம் பெற்ற வரவேற்பை விட ராமன் எத்தனை ராமனடியில் அந்த ஒரு சிறிய பகுதிக்கே விண்ணைத் தொடும் ஆரவாரத்தைப் பெற்றது பிரமிக்கத் தக்கது. அன்று முதல் அந்த உச்சியைவிட்டு நடிகர் திலகம் இறங்கவே யில்லை என்பது தான் நிதர்சனம், இதற்கு சான்று தற்போது அவருடைய படங்கள் மறு வெளியீட்டில் பெற்று வரும் வரவேற்பு. 80 ரூபாய் என்ன, 800 ரூபாய் டிக்கெட் கட்டணம் வைத்தாலும் நாங்கள் நடிகர் திலகத்தின் படங்களை ஓடி வந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் சொல்லாமல் சொல்லி வெற்றி பெற வைப்பதே அவருடைய வசூல் சாதனைக்கு சான்றாகும். தற்போதைய கால கட்டத்தில் எங்க ஊர் ராஜா மறு வெளியீடு செய்யப் பட்டால்... ஆஹா ... நினைத்துப் பார்க்கும் போதே உவகை பொங்குகிறது.
    எதிர்பார்ப்போம்.

    நன்றி முரளி சார்

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #187
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பக்திப் பெருக்கில் எந்தன் ஊர் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளே உயி்ர் உருக என்று கண்ணதாசன் மட்டுமல்ல நாம் அனைவருமே கூறும் வண்ணம் அம்பிகாபதி பாடலைத் தந்தமைக்கு பம்மலாரே நன்றி.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #188
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு முரளி சார்,
    தங்களது எங்க ஊர் ராஜ பட ஆய்வு வழக்கம் போல் பிரமாதம்,அற்புதம் .தாங்கள் குறிப்பிட்ட அனைத்து காட்சிகளையும் மீண்டும் ஒரு முறை டிவிடி யில் பார்த்தேன்

    இளைய திலகம் பிரபு டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி பெங்களூர் சிவன்செட்டி கார்டன் பகுதியில் 12 -6 -11 அன்று நடந்த நிகழ்ச்சியில் கர்னாடக மாநில பிரபு ரசிகர்மன்ற தலைவர் திரு குமரேசன் ,சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் திரு தேவா ஆகியோர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்
    நன்றி :தினக்கரன் 13 -6 -11
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  10. #189
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி,

    நமது திரியில் சிறிது இடைவெளிக்குப்பிறகு மீண்டும் 'எங்க ஊர் ராஜா' என்ற ஒரு அருமையான படத்தின் அற்புதத் திறனாய்வு வழக்கம்போல கலக்கலாக அமைந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகத் துல்லியமாகக் கவனித்து எழுதியுள்ளீர்கள். பலமுறை பார்த்த படமென்றபோதிலும், உங்களின் ஆய்வுக்கட்டுரை படித்த பின் மீண்டும் பார்க்கும்போது, மீண்டும் புதிய பரிமாணம் கிடைக்குமென்பது உண்மை.

    போதிய இடைவெளி அளிக்கப்பட்டு வெளியாகியிருந்தால் நிச்சயம் பல ஊர்களில் 100 நாட்களைக்கடந்து ஓடியிருக்க வாய்ப்பான படம். நான் ஏற்கெனவே சொன்னது போல அந்த ஆண்டில் நடிகர்திகத்துக்கு திருமால் பெருமை, அரிச்சந்திரா, கலாட்டா கல்யாணம், என் தம்பி, தில்லானா மோகனாம்பாள், எக்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம், உயர்ந்த மனிதன் என எட்டு படங்கள். அந்த ஆண்டில் அதிசய வசமாக 'அந்தப்பக்கமும்' எட்டு படங்கள். வண்ணங்கள் மூன்று மட்டுமே வெற்றி பெற்றன.

    முன்பு ஏற்கெனவே ஒருவர் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது போல (ஸாரி, அவர் பெயர் நினைவில்லை), திரு எம்.ஜி.ஆர். தனது படங்களில் 'அண்ணா' என்ற வார்த்தையை தனக்கு வசதியாகப் பயன்படுத்தியது போல, பெருந்தலைவரைக்குறிக்க நடிகர்திலகத்துக்கு கிடைத்த பெயர் 'ராஜா'. (காமராஜர் என்ற பெயரின் செல்லமான சுருக்கம்). அதை முடிந்தவரை தனது படங்களின் தலைப்புக்களில் பயன்படுத்தினார். ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, தர்மராஜா.... இப்படி. (இதுபோக படிக்காத மேதை, சிவகாயின் செல்வன் என்ற தலைப்புகளும்).

    காட்சிவாரியாக துல்லியமாக விமர்சித்துள்ளீர்கள். அந்த ஆண்டில் நடிகர்திலகத்துடன் நம்பியார் காம்பினேஷனில் அமைந்த நான்கு படங்களுமே (திருமால் பெருமை, தில்லானா, எ.ஊ.ராஜா, லட்சுமி கல்யாணம்) நம்பியாருக்கு புகழை வாரிக்கொடுத்த படங்களே. (நீங்களே முன்பு விமர்சித்த 'சுருட்டு சுந்தரம் பிள்ளை'யை மறக்க முடியுமா). அதுபோலன் ஜெயலலிதாவுக்கும் இரண்டு படங்களிலும் (கலாட்டா மற்றும் இப்படம்) நல்ல கிளாமரஸ் ரோல்கள். நடிகர்திலகத்துடன் பொருத்தமாக அமைந்தார்.

    சிலநேரங்களில் சுசீலாவும் ஈஸ்வரி டைப் பாடல்களை அநாயாசமாகப் பாடுவார் என்பதற்கு இன்னொரு உதாரணம், தெய்வமகனில் இடம்பெற்ற 'காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' பாடல், குறிப்பாக இறுதியில் வரும் 'உல்லுல்லோய்... உல்ல்லுல்லோய்' என்ற பிட்.

    எங்க ஊர் ராஜாவில் நடிகர்திலகத்தின் பாடி லாங்குவேஜுக்கு பெரிதும் துணைநின்ற அப்போதிருந்த அவரது 'சிக்'கென்ற உடல்வாகு. (இது அந்த காலகட்டத்தில் வெளிவந்த எல்லாப்படங்களுக்கும் நான் சிலாகித்துச்சொல்வது).

    மொத்தத்தில் இதுவரை எங்க ஊர் ராஜாவைப் பார்க்காதிருந்தவர்களை தேடிப்பிடித்துப்பார்க்கும்படி செய்துவிட்டது உங்கள் ஆய்வுக்கட்டுரை. (தேடியலைய வேண்டாம் என்று, அதற்கான இனைப்புகளைத் தந்து விட்டார் சகோதரர் ராகவேந்தர்).

    நன்றியுடன்... சாரூ...

  11. #190
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Not sure if this was discussed earlier here.....

    It has become a routine for the current crop of heroes (and affordable for the producers / directors) to do one film at a time that makes it easier for them to dedicate themselves to that role, study their character, make the appropriate changes to their physique, voice modulation etc and deliver a good performance on screen. While even this is pretty hard and takes a lot out of the particular actor...... it is really hard to imagine that NT while doing multiple films at the same time was able to do the same kind of homework and prepare himself both mentally and physically..and that too to switch between diametrically opposite roles and fit into that character (from a icy cool Madhan character in Galatta Kalyanam to a egoist talented nadhaswara expert shanmuga sundaram)....... to think of it today, it is humanely impossible but NT was able to pull it off for a very long time......... The Hardwork he had put in while commendable could also be shared for the general public to take cue from NT on what it takes to excel in each one's field.
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •