-
18th June 2011, 12:09 PM
#471
Member
Junior Hubber

Originally Posted by
s ramaswamy
Hi all,
"Manapandal" padappadalgalin video thara mudiyuma, esp. "unakku mattum unakku mattum" (P Suseela) and 'Paarthu paarthu nindradile paarvai izhanden" endra arumayana PBS-PS duet (VRin melodious musickirku oru siranda sandru indha paadal esp. the beginning humming).
Anbudan
Ramaswamy
அன்புள்ள ராமசாமி அய்யா அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
மணப் பந்தல் படத்தில்
'' உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே ''
என்று E.V.சரோஜா இன்பமாக ரகசியம் சொன்னதைப் பார்த்து ரசியுங்கள் .
அடுத்து
இதே E.V.சரோஜா
'' உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் , அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே ''
என்று சோகமாகப் பாடுவதையும் பார்த்து ரசியுங்கள் .
அந்த ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை !
உங்களுக்காகவது தெரிந்ததா ?
மெல்லிசை மன்னர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலத்தில் வந்த பாடல் இது !
நல்ல இனிமையான இசையமைப்பு !
உங்களிடம் ஒரு கேள்வி !
மாலையிட்ட மங்கை படப் பாடல்களைப் பார்த்து விட்டீர்களா ?
படம் பார்த்த திருப்தி வந்து விட்டதா ?
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
18th June 2011 12:09 PM
# ADS
Circuit advertisement
-
18th June 2011, 12:23 PM
#472
Senior Member
Seasoned Hubber
யாதும் ஊரே, யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம், நண்பர் உண்டு, பகைவர் இல்லை, நன்மை உண்டு தீமை இல்லை -
இது வெறும் பாடல் வரிகள் அல்ல ... நம் பேராசிரியர் நடைமுறையில் கடைப்பிடித்து வரும் கொள்கை...அதே போன்று மது அவர்களும் ...அனைவரும்.
மணப்பந்தல் பாடலை அளித்து மனப்பந்தலில் அமர்ந்து கொண்ட பேராசிரியர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
அனைத்து நண்பர்களுக்கும் ஓர் இனிய செய்தி. VINTAGE HERITAGE என்ற அமைப்பு சென்னை மாநகரில் பல ஆண்டுகளாக மாதந்தோறும் 50களின் படங்கள், பாடல்களைப் பற்றிய ஆய்வுடன் கூடிய நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார்கள். அந்த அமைப்பின் 19வது ஆண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 19.06.2011 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் என்கின்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு மட்டும் என்றாலும் கூட பொது மக்களும் நுழைவிற்கான அனுமதியைப் பெற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் 91 44 24728396. திரு சர்வேஸ்வரன், செயலாளர், அல்லது திரு ராகப்பிரவாகம் சுந்தர் அவ்ரகளை இந்த எண்ணில் அணுகலாம்.

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th June 2011, 01:11 AM
#473
Senior Member
Seasoned Hubber
Ragasiyam in Tamil Films
அந்த ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை !
உங்களுக்காகவது தெரிந்ததா ?
யார் கண்டது புரொபஸர் ஐயா
தங்கமலை ரகசியமாக இருக்கலாம்
இல்லையேல் சிதம்பர ரகசியமாகவேனும் அமையலாம்
அது அவளுக்குள் ஓர் ரகசியம் அல்லவா
அதனால் அற்புதத் தீவு ரகசியத்தையும் மிஞ்சலாம்
ஏன் என்றால் அதைவிட ரகசியம் ஏதுமில்லை
அப்புறம் நான் சொல்லும் ரகசியம் என்று ரகசியமாய்
ஆகிவிடக் கூடாது இல்லையா
அதனால்
எங்கள் ரகசிய பொலிஸ் 115 வந்து கண்டு பிடித்து சொல்லட்டும் !
Thanks
Regards
-
19th June 2011, 01:40 AM
#474
Senior Member
Seasoned Hubber
ஆண் போலீஸ் கண்டு பிடிக்காவிட்டால் என்ன, ரகசியப் பெண் 117 சொல்வாளே சி.என்.பாண்டுரங்கன் துணையோடு...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th June 2011, 04:33 AM
#475
Senior Member
Diamond Hubber
நன்றி திரு ராகவேந்தர்ஜி. ( அருமையான வாய்ப்பு.. எனக்குதான் கிட்டாமல் போகுது
)
பேராசிரியர் ஐயா.. ரகசியத்தை இப்படி வெளிப்படுத்தி விட்டீர்களே ? நன்றி !!
hi TFML..
அந்த ரகசியம் என்னன்னு கேட்டீங்கன்னா.,. எங்க குட்டி பாப்பா சங்கத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதாவது எதை வேணுமானாலும் நம்ம பொம்மைஸ்.. கிட்டே சொல்லலாம். யாருக்கும் சொல்லாது.. ம்ம்.. தத்தி தத்தி நடந்து வரும் தங்க பாப்பா நீ இத்தனை நாள் எங்க்கிருந்தாய் சொல்லு பாப்பாவிலிருந்து... கண்ணன் என்ன சொன்னான் சிறு பிள்ளையே என்கிற கேள்வி வரை எதுக்காவது பதில் சொல்லி இருக்காங்களா ?
ம்ம்ம்.. என் கிட்டேயும் ஒரு கரடி குட்டி இருக்கு !
-
19th June 2011, 06:41 AM
#476
Senior Member
Seasoned Hubber
இது என் கடமை மது,
உங்கள் சங்க உறுப்பினர் என்ன செய்கிறார் என்று நீங்கள் அறிய வேண்டாமா... இதோ பாருங்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st June 2011, 10:00 AM
#477
Senior Member
Regular Hubber
professor அவர்களே,
மிக்க நன்றி இத்தனை வீடியோ பாடல்களை சிரமம் பாராமல் தந்ததற்கு.
அருமையான பாடல்கள் அனைத்துமே. விசு ராமு அட் தெயர் பெஸ்ட் என்று சொல்லலாம். பார்த்து ரசித்தேன் ரசித்து கொண்டு இருக்கிறேன், அதனால் தான் தாமதம் ரியாக்ட் செய்வதற்கு. மன்னிக்கவும்!
"மணபந்தல்" பாடலின் ரகசியம் எனக்கும் புரியவில்லை! அருமையான மெலடி. "ஒரே ராகம்" அண்ட் "பார்த்து பார்த்து" தர இயலுமா?
அன்புடன்
ராமஸ்வாமி
-
21st June 2011, 01:15 PM
#478
Senior Member
Seasoned Hubber
( அருமையான வாய்ப்பு.. எனக்குதான் கிட்டாமல் போகுது )
19.06.2011 அன்றைய நிகழ்ச்சியின் கவரேஜ்
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st June 2011, 04:51 PM
#479
Senior Member
Diamond Hubber
நன்றி ராகவேந்திராஜி.
அருமையான பாடல்கள் தொகுக்கப் பட்டு இருக்கின்றன.
ஆனால் நாட்டியப் பேரொளியின் பாரம்பரிய நடனம் உள்ள
காத்திருப்பான் கமல கண்ணன் அல்லது பரத நாட்டிய
அசைவுகள் உள்ள கலையே என் வாழ்க்கையின் போல இந்தப் பாடல்கள்
எதிலும் இல்லை என்று நினைக்கிறேன்.
அவற்றையும் சேர்த்திருக்கலாமே ! ஆனாலும் நேரப் பற்றாகுறை
இருந்திருக்கும். மேலும் வேறு காரணங்களும் இருந்திருக்கலாம்.
அடுத்த முறையாவது நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்தால்
நன்றாக இருக்கும்
மீண்டும் நன்றி.
-
21st June 2011, 04:53 PM
#480
Senior Member
Diamond Hubber
hi tfml
என்ன கொடுமை பாத்தீங்களா ? குப்பை தொட்டி, நாய் குட்டி, தாடி பூச்சாண்டி... ஊஊஊஊ...
வீ வாண்ட் மில்க் அண்ட் சாக்லேட்ஸ்
Bookmarks