எல்லா பெரியவ்ங்களுக்கும் இந்த பாமரனின் விண்ணப்பம்...
படத்தின் தலைப்பான 'படித்துறை' என்பதை 'படித்து + உறை' என்று தவறாக பிரித்து வைத்துக்கொண்டு, 'உறை'யைப்பற்றிய பொருளையெல்லாம தேடி அலைந்து கொண்டு வருகிறீர்கள்.
அது 'படித்து + உறை' இல்லை ஐயாக்களே...
'படி + துறை' என்பதன் கூட்டின்போது ஒரு 'த்' என்ற ஒற்றெழுத்து சேர்ந்து படித்துறை ஆகிறது. இதன் பொருள் ஆற்றில் அல்லது குளத்தில் இறங்க கரையோரம் கட்டப்பட்டிருக்கும் படிகள்.
அதுவே வீட்டு வாசலிலோ அல்லது மாடிக்குச்செல்லவோ கட்டப்பட்டிருந்தால் அது படித்துறை அல்ல. அதற்குப்பெயர் 'படிக்கட்டு'. அதையே ஆற்றங்கரை, அல்லது குளத்துக்கரைகளில் கட்டினால் அதற்குப்பெயர் 'படித்துறை'.
மீண்டும் சொல்கிறேன் அது 'படித்து உறை' அல்ல, 'படித் துறை'.
(சொல்வது என்பதற்கான வார்த்தை 'உரை'. உதாரணமாக உரைநடை, உரையாடல், உரை நிகழ்த்தினார், எடுத்துரைத்தார்... என்பன போன்றவை).




Reply With Quote
Bookmarks