Page 32 of 197 FirstFirst ... 2230313233344282132 ... LastLast
Results 311 to 320 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #311
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    03.07.2011 அன்று மற்றொரு படம் 30 ஆண்டுகளைக் கடந்து 31வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல விமர்சனங்களைப் பெற்ற ஆனால் பொருளாதார ரீதியில் வெற்றி கண்ட லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படமே அது., நல்ல கதையம்சம் இருந்தும் சில தவிர்த்திருக்க வேண்டிய காட்சிகளின் காரணத்தால் சற்றே விமர்சனங்களை அதிகம் சந்தித்த படம். ஆனால் அதில் இடம் பெற்ற அண்ணன் தங்கை பாசப் பாடல் மெல்லிசை மன்னரின் புகழை காலந்தோறும் பரப்பிக் கொண்டிருக்கும். எஸ்.பி.பி. மற்றும் வாணி ஜெயராம் குரலில் என்னென்பதோ என்ற பாடல் என்றும் இனியதாகும். இதோ நம் பார்வைக்கு



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #312
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    04.07.2011 அன்று 53 ஆண்டுகளைக் கடந்து 54வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது அன்னையின் ஆணை வெற்றிக் காவியம். அதன் நினைவாக ஒய்யாரத்தோற்றத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் தூள்கிளப்பும்



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #313
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அதே போல் 04.07.2011 அன்று 14வது ஆண்டைக் கடந்து 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் படம் ஒன்ஸ் மோர். இதை அனைவரும் அறிந்திருப்பர். இதன் விளம்பரம் இதோ


    இப்படத்தில் நடிகர் திலகம் தன் 70வது வயதில் தூள் கிளப்பிய சின்ன சின்ன காதல் பாடல் ...



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #314
    Senior Member Regular Hubber Mahesh_K's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    186
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில் நம்மவரும் பார்வதி திரைஅரங்கில் நம்நாடு திரைப்படமும் வெளியானது இரண்டு நாட்கள் இடைவெளியில் தினசரி இரண்டு ரசிகர்களுக்கும் குடுமிபிடி சண்டைதான் சிவந்தமண் சுமார் 12 வாரங்கள் ஓடியதாக நினவு நம்நாடு 100 தினங்கள் ஓடியதாக நினவு
    இரண்டு படங்களுமே ஒரே அளவில்தான் ( 1969 தீபாவளி முதல் 1970 பொங்கல் வரை) ஓடியிருக்கின்றன..

  6. #315
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    ஹும்ம்ம்ம்... எத்தனை நாளாயிற்று இந்தத் திரிக்கு வந்து? பல்வேறு - அலுவலக மற்றும் சொந்த வேலைகள் நிமித்தமாக நீண்ட ஆய்வு எதையும் பதியாமல் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது! இருப்பினும், ஒரு நாள் கூட இந்தத்திரியைப் பார்க்காமல் இருக்கவில்லை. அதற்குள் தான் எத்தனை எத்தனை அற்புதமான பதிவுகள். நடிகர் திலகத்தின் படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள், அரிய பாடல்கள், பட விளம்பரங்கள், "பரீட்சைக்கு நேரமாச்சு" படத்தின் மிகச் சிறந்த காட்சி என்று பல அற்புதமான பதிவுகளைப் பதிந்த திரு. ராகவேந்தர், நடிகர் திலகத்தின் சாதனைச் சரித்திரங்களை, வழக்கம் போல புள்ளி விவரங்கள் மட்டுமல்லாது, அந்தந்த செய்தித்தாள் விளம்பரங்களையும் அரங்கேற்றி அத்தனை ரசிகர்களின் நெஞ்சிலும் பால் வார்த்து விட்ட திரு. பம்மலார், திரு. முரளி அவர்களின் மிகச் சிறப்பான பதிவு, திரு. ராகேஷ், திரு.நவ், திரு. ஜோ, திரு. பாலகிருஷ்ணன், திரு. கார்த்திக், சாரதா மேடம், திரு. மகேஷ், திரு. கிருஷ்ணாஜி, திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் பல நண்பர்களும் நிறைய விஷயங்களைப் பதிந்துவிட்டீர்கள். நன்றிகள் பல.

    நேற்று, விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த வாரம் தெய்வீகப் பாடல்கள் சுற்று. வழக்கமான நடுவர்கள் போக, திரு. டி.எல்.மகராஜன், திரு. சீர்காழி. சிவசிதம்பரம் போன்றோரும், பிரத்தியேக நடுவர்களாக வந்திருந்தார்கள். முதல் பாடல், "தெய்வ மகன்" படத்தில் வரும் "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..." பாடலை, சாய் பிரகாஷ் என்பவர் பாடி முடித்தவுடன், அதற்கு, திரு. டி.எல்.மகராஜன் விமர்சனம் செய்யத் துவங்கியவுடன் சொன்னது - " எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. தெய்வ மகன் 1969-இல் முதலில் வெளிவந்தபோது, முதல் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து சாந்தியில் பார்த்து, தந்தையிடம் திட்டு வாங்கியது (இதிலிருந்தே, இவரும் நடிகர் திலகத்தின் ரசிகர் என்று புரிந்து விடுகிறது.) (அவரது தந்தை திரு. திருச்சி லோகநாதன் அவர்கள்). இந்தப் பாடலில் சிவாஜியின் நடிப்பு இன்னும் கண்ணில் இருக்கிறது. அதிலும், குறிப்பாக கடைசியில் "எண்ணெய் இல்லாதொரு தீபம் எரிந்தது..." என்று பாடுவதற்கு முன் "கிருஷ்ணா...." என்று ஒரு நீண்ட சங்கதியுடன் துவங்கி மறுபடியும் "கிருஷ்ணா..." என்னும்போது, அவருடைய கழுத்தை ஒரு வெட்டு வெட்டி பாடுவார். அவ்வளவு நன்றாக இருக்கும். இந்தப் பாடலை நினைக்கும்போது, முதலில், சிவாஜியின் நடிப்புதான் நினைவில் வரும்" என்று கூறி நெகிழ்ந்தார். "தெய்வ மகன்" படத்தில், படம் நெடுகிலும் நடிகர் திலகம் கைத்தட்டலை வாங்கிக் கொண்டே இருப்பார். ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும், அத்தனை இடமும் மனப்பாடம். அவைகளில், டி.எல்.மகராஜன் அவர்கள் குறிப்பிட்ட நடிப்பும் ஒன்றல்லவா?

    சிறிதும் தாமதிக்காமல், "தெய்வ மகன்" dvd-ஐ போட்டு அந்தப் பாடலையும், அதில், அந்தக் குறிப்பிட்ட முக பாவனையை மறுபடியும் ரசித்து, அதை என் மகள்களுக்கும் போட்டுக்காட்டி, அவர்களையும் ரசிக்க வைத்த பின்னர் தான், அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 6th July 2011 at 02:35 PM.

  7. #316
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சவாலே சமாளி நினைவுகள்....

    முரளி சார், பம்மலார் சார், சாரதா மேடம், ராகவேந்தர் சார்... நால்வரும் சவாலே சமாளி வெளியானபோது நடந்த சம்பவங்களை அள்ளி வழங்கி, என் நினைவலைகளை பின்னோக்கி தட்டிவிட்டுவிட்டீர்கள். அன்று நடந்தவை அனைத்தும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

    ஜனவரியில் 'கோட்டம்' வெளியான பின்னர் பொதுத்தேர்தலுக்குப்பின் மே 29 அன்றுதான் சைக்கிள் ரிக்ஷா ஓடத்துவங்கியது. இந்தப்பக்கம் நடிகர்திலகத்துக்கு புற்றீசல்கள் போல நான்கு மாதத்தில் ஆறுபடங்கள் வெளியாகி, நடிகர்திலகத்தின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். அதில் சுமதி என் சுந்தரி பெயரைத்தட்டிக்கொண்டு போனது. குடும்பக்கதையை விரும்பியவர்களுக்கு கே.எஸ்.ஜி.யின் படம் புகலிடமானது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சாவித்திரியின் இயக்கத்தில் வந்த படம் பின் தங்கியது. 50 நாட்கள் கடந்த நிலையில் பிராப்தம் மாற்றப்பட்டு மிட்லண்டில் 'அவளுக்கென்று ஓர் மனம்' வெளியானது.

    இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தணியாத தாகம்.

    சவாலே சமாளி பட வெளியீட்டையொட்டி 'மதி ஒளி' பத்திரிக்கை சிறப்பு மலர் வெளியிட்டது. முன்பக்க அட்டையில் நடிகர்திலகம் தீப்பந்தத்தை கையில் ஏந்தி நிற்பது போன்ற தோற்றமும் (கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகுமாரியிடமிருந்து பறித்த தீப்பந்தம்) மறுபக்க அட்டையில் மல்லியம் ராஜகோபாலின் அடுத்த படமான 'கிழக்கும் மேற்கும்' படத்தின் இரட்டைவேட தோற்றமும் இடம்பெற்றிருந்தன. (அப்படம் தயாரிக்கப்படவில்லை).

    இந்நிலையில் இன்னொரு வேடிக்கை, அந்தப்பக்கம் தலைவருக்கும் தலைவிக்கும் கொஞ்சம் லடாய். 'கோட்டம்' வரையில் தான் தொடர்ந்து ஜோடியாக நடித்திருக்க, இப்போது தலைவர் ரிக்ஷா ஓட்ட புதிதாக 'மஞ்சள்' நாயகியைப் போட்டதோடு, அப்படம் ஓட்டத்திலும் வெற்றிமுகமாக இருக்கவே, தான் நாயகியாக நடித்திருக்கும் நடிகர்திலகத்தின் 150வது படம் மாபெரும் வெற்றியடைந்து தலைவரின் முகத்தில் கரி பூச வேண்டும் என்பதும் தலைவியின் ஆசையாக இருந்ததுதான்.

    அண்ணாசாலையில் மட்டுமல்ல பதட்டம். வடசென்னை தங்கசாலைப்பகுதியிலும் ஸ்ரீகிருஷ்ணாவில் ரிக்ஷா ஓட, அருகாமை தியேட்டரான கிரௌனில் சவாலே சமாளி ரிலீஸ். (புரசைவாக்கத்தில் மட்டும் சரவணாவுக்கும் புவனேஸ்வரிக்கும் சற்று தொலைவு). வடசென்னை ஏழுகிணறு பகுதி 'கர்ணன் கணேசன் கலை மன்ற'த்தினர்தான் கிரௌனில் வெளியாகும் நடிகர்திலகத்தின் படங்களுக்கு, தியேட்டர் அலங்காரம் மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை பிரதானமாக நின்று செய்வார்கள்.

    இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது. அப்போது எதிர் அணியினரின் பிரதான பத்திரிகையாக இருந்த 'திரை உலகம்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, (திருச்சி மாநாட்டை கிண்டல் செய்து) "சவாலே சமாளி படத்துக்கு சென்னையில் சமாதி, திருச்சியில் கருமாதி" என்று செய்தி வெளியிட்டு மிகவும் கேவலமாக எழுதியிருந்தனர். இதைப்பார்த்து கொதித்தெழுந்த வடசென்னை தங்க்சாலைப்பகுதி ரசிகர்கள், குறிப்பாக 'கர்ணன் கணேசன் கலை மன்றத்தினர்' ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டரில், அங்கிருந்த எதிர் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அது வன்முறையாக மாறி பெரிய கலவரத்தில் முடிந்தது. அப்பகுதி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையம் வெறிச்சோடிப்போக காவல் துறையினர் வந்து இரு தரப்பிலும் சிலரைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். (இப்போது அரசியலில் கீரியும் பாம்புமாக இருக்கும் இரு அணியினரும் அப்போது (பெருந்தலைவர் சொன்னது போல) ஒரே குட்டையில் ஊறிக்கொண்டிருந்த நேரம். நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கெதிராக காவல்துறை நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும் என்பதைச்சொல்லத் தேவையில்லை).

    நினைக்க நினைக்க நினைவலைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ராசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 'சவாலே சமாளி' பெரும் வெற்றியடைந்து, 1972ன் ராஜ பாட்டைக்கு வித்திட்டது.

  8. #317
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    சவாலே சமாளி நினைவுகள்....


    நினைக்க நினைக்க நினைவலைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ராசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 'சவாலே சமாளி' பெரும் வெற்றியடைந்து, 1972ன் ராஜ பாட்டைக்கு வித்திட்டது.
    திரு. கார்த்திக் அவர்களே,

    என்ன ஒரு வேகம் உங்களுடைய விவரணையில்! அற்புதம்!! நீங்கள் எவ்வளவு வேகத்தோடு எழுதினீர்களோ, அதை விட வேகமாகப் படித்து விட்டுதான் வேறு வேலையை பார்க்க முடிந்தது.

    திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், சாரதா மேடம் மற்றும் ஏனைய அன்பர்கள் எழுதுவது போல், உங்களுடைய எழுத்துகளும் ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பது மட்டுமல்லாது, அவர்களது நினைவலைகளையும் கிளறி விடுகின்றன.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 6th July 2011 at 06:20 PM.

  9. #318
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    சவாலே சமாளி நினைவுகள்....


    இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தணியாத தாகம்.

    நினைக்க நினைக்க நினைவலைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ராசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 'சவாலே சமாளி' பெரும் வெற்றியடைந்து, 1972ன் ராஜ பாட்டைக்கு வித்திட்டது.
    Karthik sir,

    You have written about each and every NT's fans feelings, thanks a lot for that.

    Cheers,
    Sathish

  10. #319
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சதீஷ்,

    1970 அக்டோபர் 1,2 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாள் விழா, 1971 ஜூலை 10,11 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற 150-வது படவிழா நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகள் இப்போதும் இருக்கிறதா என்பதையும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பதிவுகளை வெளிக் கொண்டுவரும் முயற்சி ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது என தெரிய வருகிறது. அதே நேரத்தில் தற்காலிகமாக அவ்விழாக்களைப் பற்றிய பத்திரிக்கை செய்திகளை இங்கே கொடுக்க முயல்கிறோம். ராகவேந்தர் சார் அதை உங்கள் பார்வைக்கு வைப்பார்.

    சதீஷ் உங்களுக்கு மேலும் ஒரு செய்தி. வரும் 15 அல்லது 22 அன்று நமது மதுரை சென்ட்ரலுக்கு நடிகர் திலகம் விஜயம் செய்ய இருக்கிறார். இரண்டு சாய்ஸ் இருக்கின்றன எனக் கேள்விப்படுகிறோம். ஒன்று நமது நண்பர் ராகேஷ் மற்றும் சாரதா போன்றவர்களுக்கு மிகவும் பிடித்த ஆக் ஷன் அவதாரம். அல்லது எனக்கு மிகவும் பிடித்த ஒரு குடும்ப நாயகன் பாத்திரம். இவ்விரண்டில் எதுவென்று இன்னும் சில நாட்களில் தெரியவரும். தகவல் உபயம் நண்பர் சுவாமி.

    பதிவை பாராட்டியதற்கு நன்றி சுவாமி & சாரதி.

    சாரதா,

    நன்றி. 1971 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற 43-வது பிறந்த நாள் விழா படமாக்கப்பட்டு பாபு திரைப்படத்தின் இடைவேளையின் போது காண்பிக்கப்பட்டது.

    அவன்தான் மனிதன் விழா அவசர நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது உண்மை. அது மதுரை ரசிகர்களை மிகுந்த ஏமாற்றதுக்குள்ளாக்கியது. அதன் காரணமாகவே பின்னாளில் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு திரிசூலம் விழா மதுரையில் நடத்தப்பட்டது.

    ராகவேந்தர் சார்,

    என்னென்பதோ ஏதேன்பதோ அருமையான பாடல். மன்னர் அருமையாக போட்டிருப்பார். அதிலும் முதல் இரண்டு சரணங்களை எஸ்.பி.பி. அனுபவித்து பாட, வாணி ஜெயராம் பாடும் அந்த இறுதி சரணம் பிரமாதமாக இருக்கும். அந்தவரிகள்

    என்றும் நீ எந்தன் அண்ணன் என்றால்
    கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்
    நன்றி நான் சொல்ல வார்த்தையேது
    நாளும் நீயின்றி வாழ்க்கையேது
    அன்பில் அலைமோதும் நெஞ்சம்
    அண்ணன் திருப்பாதம் தஞ்சம்

    மதுரையில் படவெளியீட்டின் போது நோட்டிஸ் அடிக்கும் பழக்கும் மட்டுமே இருந்தது. அது போஸ்டர் கலாச்சாரமாக மாறியது 1982 மார்ச் ஏப்ரல் முதல்தான்.இந்த படம் வெளியான ஒரு 9,10 மாதங்களுக்கு பின்தான். அந்நேரத்தில் முதன்முதலாக அடித்த போஸ்டரில் மேற்சொன்ன வரிகளில் குருடாக என்ற வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு ரசிகராக என்ற வார்த்தையை பதிலுக்கு பயன்படுத்தி ஒட்டியிருந்தது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

    அன்னையின் ஆணை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கிளாசிக்.

    ஒன்ஸ் மோர் படம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நான் ஓபனிங் ஷோ பார்த்த கடைசி நடிகர் திலகத்தின் படம். மதுரைக்கு தற்செயலாக சென்றிருந்த நான் மதுரை சிவம் தியேட்டரில் ஜூலை 4 அன்று காலை ஓபனிங் ஷோ பார்த்தேன். அதற்கு முதல் நாள்தான் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படும் அறிவிப்பு வெளியாகியிருந்ததால் படக் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் கரை புரண்டு ஓடியது. ஒன்ஸ் மோர் வெளியான 20 நாட்களுக்குள்ளாகவே நடிகர் திலகத்தின் மலையாள படமான ஒரு யாத்ரா மொழி வெளியானது. அதை கேரளாவில் பார்த்தேன்.

    கார்த்திக்,

    1971 ஜூலை மாத மோதல் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். நான் ஒரு விஷயத்தை எப்போதும் குறிப்பீட்டு சொல்வது உண்டு. அது இப்போது சுவாமி வெளியிட்டிருக்கும் விளம்பரத்தை கவனித்தாலும் தெரியும். முரசொலி பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுத்திருப்பதை எந்த தடையும் செய்யாமல் அனுமதித்திருக்கிறார். தனக்கு தீங்கு செய்தவர்களுக்கு கூட நடிகர் திலகம் நன்மையே செய்திருக்கிறார். ஒரு திருப்பதி பயணத்தை வைத்து தன்னை அரசியலிலிருந்து விலக்கி வைக்க முயற்சித்தவர்கள் புதையல் எடுக்கவும் குறவஞ்சி பாடி மகிழ்ச்சியடையவும் [இத்தனைக்கும் அவர்களின் லட்சிய குரல் குறவஞ்சி பாடியும் வாங்குவார் இல்லாமல் போனது] உதவியவர் நடிகர் திலகம். தன்னை பொறுத்தவரை நட்புக்கு இருவர் உள்ளம் என்றே உதவினார்.

    1967-க்கு பிறகு அமைந்த அரசு மாற்றந்தாய் மனப்பான்மையோடு செயல்படுவதையும் தன்னுடைய படங்கள் சரியான விருதுகளுக்கு பரிசிலீக்கப்படாமல் போவதையும், ஆஸ்கார் விருதுக்கு போக இருந்த தெய்வ மகனை தடுத்து நிறுத்தியதையும், மன்ற பிள்ளைகள் போலீசாராலும் எதிர் அணியினராலும் தாக்கப்பட்டபோதும், அரசின் வெள்ள மற்றும் புயல் நிவாரண நிதிக்காக மற்றும் அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக தானே முன்னின்று நாடகம் நடத்தி உதவி செய்தவர் நடிகர் திலகம். சிவாஜிக்கு அரசியல் தெரியாது என்று கேலி பேசியவர்களுக்கு, அவரது ஆட்சி இயந்திரத்திற்கு அவரது கட்சி பொருளாளர்களே பொருள் உதவி செய்யாதபோது உதவி செய்தது நடிகர் திலகத்தின் கைகளே. திருப்பி கிடைத்ததோ ?

    இதைதான் மார்ச் ஏப்ரல் மாதங்களில் வேறு ஒரு திரியில் குறிப்பிட்டு உங்களிடமும் சாரதவிடமும் நீங்கள் ஆதரிக்கலாமா என்று கேட்டேன். சரி விடுங்கள் எதற்கு நமக்கு அரசியல்?

    மீண்டும் பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

    அன்புடன்

    சந்திரசேகர் சார்,

    முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்-கள் சரியாகத்தான் வேலை செய்கிறது. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.

  11. #320
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear Mr.Satish,

    My sincere thanks for your praise. With regard to the 1971 'Savale Samali' Trichy function, as of now, there is no Softcopy / DVD copy available in the Web / Market. If this treasure is found, it will definitely attain a DVD Status. As Murali Sir said, We will keep our hopes alive & kicking.

    டியர் mr_karthik,

    தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! "சிவந்த மண்" மற்றும் "தெய்வமகன்" சாதனை விளம்பரங்களை அடியேன் அளிப்பதற்கு தூண்டுகோலாய் விளங்கிய தங்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகளும் உரித்தாகுக ! "சவாலே சமாளி" நினைவுகள் சூப்பர். பார்த்தசாரதி சார் கூறியது போல் தங்களது தெளிவான எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது. பாராட்டுக்கள் !

    டியர் மகேஷ் சார்,

    தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் !

    சகோதரி சாரதா,

    தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அளித்தமைக்கு பசுமையான நன்றிகள் ! சாதனைப் பொக்கிஷங்கள் செவ்வனே தொடரும் !

    டியர் கிருஷ்ணாஜி,

    பாராட்டுக்கு நன்றி !

    டியர் ஜேயார் சார்,

    பாராட்டுக்கு நன்றி !

    டியர் ராகவேந்திரன் சார்,

    பாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் பிரமாதம். "சவாலே சமாளி" வெளியான தினத்தன்று, தங்களுக்கு சென்னை சாந்தியில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவையானவை மட்டுமல்ல, சுவாரஸ்யமானவையும் கூட.

    டியர் பார்த்தசாரதி சார்,

    தங்களது பாராட்டுக்களை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •