-
20th July 2011, 11:15 AM
#551
Senior Member
Veteran Hubber
இதற்கு முன் வரை திரு. பம்மலார் சார் தந்த செய்தித்தாள் தொகுப்புக்கள் மகிழ்ச்சியைத் தந்தனவென்றால், இப்போது அளித்துள்ள செய்தித்தாள்களின் முதல் பக்கங்களின் அணிவகுப்பு நம்மைக் கலங்கடித்தன, கண்ணீர்க்கடலில் மூழ்கடித்தன.
சகாப்தங்கள் சாய்வதில்லை
சரித்திரங்கள் ஓய்வதில்லை.
வாழ்ந்த வரை ஒரு அன்னை இல்லத்தில் வாழ்ந்தாய், மறைந்தபின்னோ கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்கின்றாய்.
இந்த உலகத்தில் கடைசி தமிழன் இருக்கும் வரை நீ வாழ்ந்துகொண்டிருப்பாய்.
-
20th July 2011 11:15 AM
# ADS
Circuit advertisement
-
20th July 2011, 01:27 PM
#552
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
saradhaa_sn
டியர் பம்மலார்,
'கௌரவக் களேபரங்கள்' கொஞ்சம் குறைந்தபின் இதைப்பதிவிடலாம் என்று தாமதித்தேன்.
'தர்மம் எங்கே' படத்தின் நிறைவுப்பகுதியாக அப்படம் பற்றி நடிகர்திலகம், கலைச்செல்வி, மற்றும் இயக்குனர் ஏ.சி.டி. ஆகியோரின் கட்டுரைகளைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் மட்டுமல்ல, அதில் பணியாற்றியோரும் அப்படத்தின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர் என்பது தெளிவாகிறது. படம் வெளியாகும் முன் வந்த இந்தக் கட்டுரைகளையும் அவற்றுடன் இருந்த ஸ்டில்களையும் பார்த்துதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிப்போனது. அந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான 'ராஜா'வை இப்படம் வசூலில் மிஞ்சும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டதாம்.
அது (1972) நமது நடிகர்திலகம் சாதனைகளைப்புரிந்த ஆண்டு மட்டுமல்ல, அந்த சாதனைகளை இன்று இங்கு உரக்க பறைசாற்றிக்கொண்டிருக்கும் நீங்கள் பிறந்த ஆண்டும் கூட அல்லவா?.
'கைகொடுத்த தெய்வம்' வெளியீட்டு நாளையொட்டி உங்களின் விளம்பர அணிவகுப்பு அருமை. தேடிக்கொணர்ந்து குவிக்கும் உங்களை எப்படி பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது?. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு போய்விட்டீர்கள்.
அட, ராஜபார்ட் ரங்கதுரையில் 'பகத் சிங்'கை கைதி உடையில் ஒரு படம் பிரசுரித்தீர்கள். நண்பர் அவர் தொப்பியணிந்த போஸில் உள்ள படம் வேண்டும் என்றதும் உடனே பதிக்கிறீர்கள். Google Search பகுதியில் தேடினால் கூட இவ்வளவு விரைவில் கிடைக்காது. அவ்வளவு வேகம், சுறுசுறுப்பு. நீங்கள் எங்களுக்குக்கிடைத்த பெரிய GIFT.
No Doubt.
Exactly said madam - No doubt
-
20th July 2011, 03:20 PM
#553
Senior Member
Platinum Hubber
+1 Joe. Middle of office, tears in eyes. I am running to the rest room right now to avoid embarassment
-
20th July 2011, 03:39 PM
#554
Senior Member
Veteran Hubber
-
20th July 2011, 04:37 PM
#555
gauravam
மன்னனின் கெளரவம் சாந்தி திரை அரங்கிலே
ரசிக்கின்ற சேனையோ பிள்ளைகள் வடிவிலே
தவிர்க்க முடியாத சில காரணத்தால் திரை அரங்கிற்கு வர முடியவில்லை . தாம்பரம் மண்ணிவாக்கம் அருகே மாட்டி கொண்டு விட்டேன் .
என்னால் உடனடியாக திரு முரளி சார் அவர்களை மெசேஜ் மூலமாகதான் தொடர்பு கொள்ள முடிந்தது . திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில்
திருநெல்வேலி சென்று விட்டேன் இப்போது எல்லாவற்றையும் கண்டு களித்தேன் simply superb
சில இழப்புகள் என்றுமே மனதில் வலி கொடுத்து கொண்டுஇருக்கும் அதேபோல் தான் சண்டே evening ஷோ
25 /10 /1973 தீபாவளி நோக்கி நினைவுகள் சென்றன நெல்லை சென்ட்ரலில் ரிலீஸ் காலை 6 மணிக்கு தீபாவளி கொண்டாடி விட்டு திரை அரங்குக்கு சென்றால் பெட்டி வரவில்லை. மதியம் சுமார் 12 மணி அளவில் பெட்டி வந்ததாக நினவு. நோ இண்டர்வல் தொடர்ச்சி ஆக 2 1 /4 மணி நேரம் படம் பார்த்தோம் . ஏன் என்றால் அன்று 5 காட்சிகள் இரவு 10 மணிக்குள் 4 காட்சிகள் ஓட்டிவிட்டார்கள். முதல் காட்சி மற்றும் இரவு காட்சி
இரண்டு காட்சிகள் பார்த்தோம். அந்த கால கட்டத்தில் நாகேஷ் புகழ் சற்று குறைந்த நேரம் . நம்மவர்க்கு எதிராக சற்று வில்லன் கலந்த பாத்ரத்தில் நாகேஷ் (தில்லான மோகனம்பாள் போல் ) மேலும் நீலு அவர்கள் சேர்ந்து கலக்கி இருப்பார்கள்
பண்டரி பாய் அவர்கள் சின்னவர் கண்ணனிடம் கோயில் கும்பாபிசேகம் கொடுப்பதற்கு பணம் கேட்கும் போது நாகேஷ்,நீலு,மகேந்திரன் மற்றும் சமையல் காரர் அடிக்கும் லூட்டிகள் காண கண் போதாது . அதிலும் பண்டரி பாய் பணம் கேட்டு நம்மவர் மறுக்கும் போது நாகேஷ் அடிக்கும் வசனம் மறக்க முடியாது
"வெள்ளியில் சாவி கொத்து செய்து கொண்டு அதை வெளியில் தெரியும் படி கட்டி கொண்டு வேண்டும் என்கிறபோது செலவு செய்ய வேண்டிய மாமி நிலைமை பார்த்தீரா மகாலக்ஷ்மியே மார்வாடிகிட்ட கடன் கேட்ட மாதிரி இருக்கு"
அப்போது பண்டரி பாய் அவர்கள் "கண்ணன் கெடுபிட்யாக இருப்பது நல்லது இல்லனே எல்லோரும் சேர்ந்து அவனை கிளோஸ் பன்னிருவீர்கள் "
என்று கூறுவார் . அதே போல் "நீலு பொடி போடும் போது என்னவோய் நீலகுண்டம் பொடி போடுகிரீரா அல்லது பீரங்கிகு மருந்து செளுதரீரா "
மேலும் கோர்ட் ஒத்திகை காட்சியில் பெரியவர் நாகேஷிடம் "Mr கோபாலன் நீர்தான் ஜட்ஜ்" என்றவுடன் அதற்கு நாகேஷ் "வேண்டாம் அண்ணா உங்களுக்கே கிடக்கலை எனக்கு எப்படி " என்று சொன்னவுடன் "யோவ் ஜட்ஜ் மாதிரி act பண்ணும் ஐய" என்று NT சொல்வதும் காட்சிகள் கண் முன்னால் ஓடி கொண்டு இருக்கிறது .
நம்மவர்,மேஜர், ராமசாமி நாகேஷ் பண்டரிபாய்,செந்தாமரை போன்றோர் மறைந்து விட்டனர் . திரு மகேந்திரன் மற்றும் நீலு உள்ளனர் அவர்களுடைய நினைவுகள் கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் . திரு முரளி சார், பம்மலர் சார்,ராகவேந்தர் சார் நினைத்தால் நிச்சயம் முடியும்
என்றும் அன்புடன்
கிருஷ்ணா G
-
20th July 2011, 04:46 PM
#556
Senior Member
Devoted Hubber
-
20th July 2011, 05:33 PM
#557
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
abkhlabhi
Super super....
How will be the response if Gowravam or Vasantha Maligai released in Natraj or Pallavi theatre?
Cheers,
Sathish
-
20th July 2011, 05:38 PM
#558
Senior Member
Senior Hubber
கௌரவம் - இந்தப் பெயர் நடிகர் திலகம் நடித்த காவியத்திற்குப் பெயராக வந்தபின், வந்தபின்னர் தான், அந்தப் பெயருக்கே ஒரு கெளரவம் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. இந்தக் காவியத்தை கடந்த ஞாயிறன்று நம் ஹப் நண்பர்கள் திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், திரு. ராதாகிருஷ்ணன், திரு. மோகன் ரங்கன், திரு. மகேஷ், திரு. பாலா (திரு. கிருஷ்ணாஜி இந்த முறை வர இயலவில்லை) போன்றோருடன் நம் எல்லோருடைய மனதுக்கும் மிக நெருக்கமான சாந்தியில் அமர்ந்து பார்க்கும் பேறு கிடைத்தது பெரும் பேறு! இந்த முறை திரு. சந்திரசேகர் அவர்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது இன்னமும் பெரிய பேறு!
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு அனைத்து தரப்பினரையும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப் பட வைத்தது. அந்த விவரங்கள் அனைத்தையும் நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து ஏற்கனவே விரிவாக பகிர்ந்து கொண்டனர். அன்று படம் பார்த்து வெளியில் வந்ததும் எழுந்த குமுறல் - நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டேன் - இன்னமும் இருக்கிறது - இந்த மீடியா காரர்கள் ஏன் இன்னமும் பெரிதாக எழுத மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றனர். அவர் வாழ்ந்த போதும், பத்து ஆண்டுகள் கழித்தும், இந்த ஓரவஞ்சனை ஏன் இன்னும் தொடர்கிறது? ஒரு வருடத்துக்கு முன்னர், ஆல்பர்ட் தியேட்டரில் மாற்று அணியினரின் படம் மறு வெளியீடு செய்யப்பட போதும், அதன் பின்னர் அவரது மற்றொரு படமும் (இரண்டும் அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் இரண்டு படங்கள்), அதற்குக் கொடுக்கப்பட்ட விளம்பரம், அந்தப் படத்தைப் பார்க்கச் சென்ற காக்கை கூட்டம் (அதாவது அவர் பெயரைச்சொல்லியே பல வருடங்கள் திரைவானில் காலத்தை ஓட்டி விட்ட சிலர்) கரைந்த கரையலும்!! நான் அந்தப் படங்களையோ அந்தப் படத்தில் நடித்தவரையோ குறை சொல்லவில்லை! அவரும் பெரிய சாதனையாளர்தான்! இந்த மீடியாகாரர்களுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை இன்னமும் போக மாட்டேன் என்கிறது?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
20th July 2011, 05:54 PM
#559
Senior Member
Senior Hubber
ஜூலை 21, 2001 - நாம் அனைவரும் மறக்க வேண்டிய நாள். நம் எல்லோர் மனத்திலும், என்றும் நிரந்தரமாகக் குடிகொண்டு அல்லும் பகலும் நம்மை ஆக்கிரமித்த நடிகர் திலகம் மறைந்த நாள்!
அன்று, நான் அப்போது வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் குடும்ப விழா. அந்த விழாவில், நானும் ஒரு பொறுப்பை ஏற்று எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தோம். விழா முடிந்து அறுசுவை உணவு எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இந்த விழாக் கமிட்டிகாரர்கள் எல்லோரும் சாப்பிட்டவுடன், நிறுவனத்தின் மூத்த இயக்குனர்களை வழியனுப்புவதற்காக செல்லும் போது, இரவு சுமார் எட்டரை மணிக்கு, என்னுடைய பேஜரில் (அப்போதெல்லாம் பேஜர் தான்), நடிகர் திலகத்தின் மறைவுச் செய்தி வர, உடனே, திக்பிரமை பிடித்தது போல் ஆகி விட, ஒரு இயக்குனர் என்னிடம் "என்ன பார்த்தா, ஒரு மாதிரி இருக்கே" என்று கேட்க, நான் அந்தப் பேஜர் செய்தியை அவருக்குக் காண்பிக்க, அவரும் உடனடியாக "அடடா! எப்பேர்பட்ட நடிகன் ..." என்று கூற, அப்புறம் எல்லோரும் புறப்பட்டுச் சென்றோம். சாப்பிட மனம் ஒப்பாமல், கண்களில் உருண்டோடும் கண்ணீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் பின்னிரவில் வீட்டுக்குத் திரும்பி - மறு நாள் - போக் சாலை சென்று கூட்டத்தில் திணறி அவரைப் பார்க்க முடியாமல், ஏமாந்து, பின்னர் வீட்டிலிருந்து பேஜரில், சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு என்று தகவல் வர - வீட்டிற்கு ஓடி - நாள் முழுக்க எந்த வேலையும் பார்க்காமல் - டிவிப் பெட்டி முன்னால் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தது - எப்போதும் நினைவில் இருக்கும்.
நீங்காத நினைவுகளுடன்,
இரா. பார்த்தசாரதி
-
20th July 2011, 06:06 PM
#560
Senior Member
Senior Hubber
கடந்த சில வாரங்களாக, நம் திரிக்கு ஏற்பட்டிருக்கும் வேகமும், உற்சாகமும் - பஞ்ச கல்யாணிப் பாய்ச்சல்!
திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களின் பங்களிப்பும், அவர்களது முனைப்பும் - கோடானு கோடி நடிகர் திலக ரசிகர்களுக்கு, அவர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த, அவரது படச் சாதனைகள், மற்றும் வெளியீட்டு விவரங்கள் அடங்கிய பல் வேறு பத்திரிகைச் செய்திகள் மற்றும் விளம்பரங்களைப் பதிவிட்டு - அத்தனை ரசிகர்களின் ஒட்டு மொத்தப் பாராட்டுகளையும் நெகிழ்ச்சி கலந்த நன்றிகளையும் பெற்றுக் கொண்டீர்கள். இந்த வேக வேகமான வியாபார உலகில், ஒவ்வொருவருக்கு எத்தனை எத்தனையோ வேலைகள் மென்னியைப் பிடித்துக் கொண்டிருக்கும் காலத்தில், எத்தனை அலுவல்களுக்கிடையேயும், நடிகர் திலகத்திற்காக நேரம் ஒதுக்கி இத்தனை சிறப்புகளைச் செய்து கொண்டிருக்கும், உங்களை நான் சந்தித்ததையும், உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்வதையும், பெருமையாகக் கருதுகிறேன். வாழ்க/வளர்க உங்கள் தொண்டு!
மேலும், கெளரவம் படம் பார்த்ததைப் பற்றிய செய்திகளையும், அப்படத்தின் சிறப்புக் கண்ணோட்டத்தையும் பதிவிட்ட, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. முரளி, திரு. மகேஷ், திரு. ரங்கன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. பாலா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. சாரதா மேடம் மற்றும் திரு. கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் ஏனைய அன்பர்களும் அவர்களது பதிவுகளுக்கும் மிக்க நன்றி.
என்றும் நம்மில் வாழும் நடிகர் திலகத்தின் நினைவுகளைப் போற்றுவோம்!
இரா. பார்த்தசாரதி
Bookmarks