Page 70 of 197 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #691
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    For those friends who might be interested to hear NT's interview to BH Abdul Hameed:-
    http://www.bhabdulhameed.com/archives/siva.wma
    http://www.bhabdulhameed.com/english/home.html

    The youtube link for the video tribute to NT through the song "Singam Endral" from Asal-
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #692
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    thank u raghavendra sir

    it would be greatful if u could add some more links of NT in you tube

    regards
    kumareshan prabhu

    hi murali thank you boss

  4. #693
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    பம்மலார் சார்,
    அப்பர் வேடத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பை பார்த்து வியந்திருக்கின்றேன், ஆனால் அந்த மேக்கப் போட அவர் எவ்வளவு சிரமப்பட்டு உள்ளார் என்பதை தங்கள் பதிவை பார்க்கும் போது தானே தெரிகிறது?

    தொடரட்டும் தங்கள் திருப்பணி!!!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  5. #694
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    a few snaps of function held in memory of NT's 10th anniversary. Images courtesy: our fellow hubber, Kumaresan Prabhu. Thank you, Sir. Kindly provide the details here.

    Raghavendran.



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #695
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Kumaresh,
    NT songs and scenes videos are being embedded here along with our discussions frequently under different topics, which include காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர் ஹிட்ஸ், கதைக்களத்தில் நடிகர் திலகத்தின் பாடல்கள், நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள், and so on. Please browse through different pages. More will follow soon under the different discussions.

    However, why not we watch one now? It will always be a pleasure watching him. And this one is even more special - NT's 175th film - And favourite for many of old time fans like me.
    Song: Oonjalukku Poochootti
    Singer: T.M.Soundararajan & M.S.Viswanathan
    Lyrics: Kannadasan
    Film: Rasi Enterprises, "Avan Thaan Manithan"



    Many may be surprised to see MSV's name in the singers' list - yeah, as the song fades out, you will listen a mild humming in Malaysian Folk tune. And that's MSV.

    Raghavendran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #696
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Dear Kumaresh,
    However, why not we watch one now? It will always be a pleasure watching him. And this one is even more special - NT's 175th film - And favourite for many of old time fans like me.
    Song: Oonjalukku Poochootti
    Singer: T.M.Soundararajan & M.S.Viswanathan
    Lyrics: Kannadasan
    Film: Rasi Enterprises, "Avan Thaan Manithan"

    Raghavendran
    Thank you Ragavendran sir, one of my most favourite song.

    Cheers,
    Sathsih

  8. #697
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களே,

    கடந்த சில வாரங்களாக, தாங்கள் இருவரும் செய்து வரும் தொண்டு திருத்தொண்டு.

    எந்த ஒரு விஷயமும் எளிதாக ஒவ்வொருவரையும் சென்று சேர்வதற்கும், எழுத்தின் மூலம் செய்வதை விட, விஷுவலாக செய்வது தான் சிறந்த உபாயம். அவ்வகையில், தாங்கள் இருவரும் திரை கடலோடியும் திரவியம் சேர்ப்பது போல், நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய செய்திகளை, சேகரித்து, அதை இந்தத் திரியில் பதிவிடும்போது, ஒவ்வொருவரும் மகிழ்ச்சிக்கடலில் தத்தளித்து, பழைய இனிய நினைவுகளில் மூழ்கிப் போகிறோம்!

    இந்தத்திரியின் சுவாரஸ்யம் மேலும் பன்மடங்கு கூடிக் கொண்டே போகிறது.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  9. #698
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    இன்றைய நாள் ஜூலை 27. 43 வருடங்களுக்கு முன்பு இதே நாள் [27-07-1968] ஒரு சனிக்கிழமை. முதலில் ஜூலை 13 வெளிவருவதாக இருந்து பின் 27-ந் தேதி வெளியானது. தந்தியில் வந்த விளம்பரம் இப்போதும் கண் முன்னே நிற்கிறது. சாதாரணமாக முழுப் பக்க விளம்பரங்கள் portrait சைசில் வெளியாகும். ஆனால் தில்லானா விளம்பரமோ Landscape பாணியில் நடிகர் திலகமும் குழுவினரும் தரையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிப்பது போல் வெளிவந்திருந்தது.

    அப்போது எனக்கு மிக சிறு வயது. அந்தக் காலகட்டத்தில் சனிக்கிழமையன்று அரை நாள் பள்ளி நடக்கும். தில்லானா திரையிடப்பட்டிருந்த சிந்தாமணி அரங்கை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். காலையில் அந்த வழியாக கடக்கும்போது இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அப்படியே பிரமித்து போனேன். அவ்வளவு கூட்டம், அடிதடி. எங்கள் சைக்கிள் ரிக்க்ஷா அந்த இடத்தை கடக்கவே 10 நிமிடங்கள் ஆனது. மதியம் பள்ளி முடிந்து வரும்போது மணி ஒன்றை தாண்டியிருக்கும். அப்போது நின்ற வரிசையைப் பார்த்து அசந்து போனேன். அரங்கின் இருபுறமும் உள்ள சின்ன சந்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை நிற்கிறது. படத்தை வெளியான எட்டாவது நாள்தான் பார்க்க முடிந்தது. அப்போதும் அசாத்திய கூட்டம்.

    படம் வெளிவருவதற்கு முன்னர் படத்தைப் பற்றி எத்தனை கேலி பேச்சு? படம் பிப்பீ என போய்விடும் என பேசியவர்கள் எல்லாம் ஓடி ஒளியும் வண்ணம் படம் சூப்பர் டூபர் வெற்றி பெற்றது. எங்கள் மதுரையில் சிந்தாமணி அரங்கில் 132 நாட்கள் ஓடியது. என் நினைவு சரியாக இருக்குமானால், ஓடிய அந்த 132 நாட்களில் ரூபாய் 3 ,47,000 சொச்சம் வசூல் செய்தது. அதே சிந்தாமணியில் கருப்பு வெள்ளைப் படங்களில் பாகப் பிரிவினை 216 நாட்கள் ஓடி சுமார் 3.36,000 ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தததோ அதே போல் சிந்தாமணியில் கலர் படங்களில் இந்த வசூல் ஒரு புதிய சாதனை. இன்னும் சொல்லப் போனால் அதே சிந்தாமணியில் தில்லானாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, மிகப் பெரிய நிறுவனம் தயாரித்த மிகப் பெரிய படங்களின் வசூலை எல்லாம் முறியடித்தது [இதற்கும் கூடுதல் நாட்கள் ஒட்டப்பட்டும் கூட அரை லட்சம் ருபாய் குறைவு என்று நினைவு].

    அந்த 1968 ம் ஆண்டு மதுரையைப் பொறுத்தவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலை எடுத்துக் கொண்டால் [பணமா பாசமாவை தவிர்த்து விட்டு பார்த்தால்- காரணம் அது தங்கத்தில் வெளியானது] முன்னணியில் நின்றது தில்லானாதான்.

    டூயட் இல்லை, நாயகனுக்கு பாடல் இல்லை, சண்டை காட்சி இல்லை, ஏன், நாயகனுக்கு மீசை கூட கிடையாது. எந்த விதமான கவர்ச்சிகளும் இல்லாமல் வெளிவந்தது. இருப்பினும் மக்கள் அமோக வரவேற்பளித்தனர். அப்படிபட்ட ஒரு திரைக் காவியம் மறு வெளியீடு காணும் போதெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    தமிழ்ப் படங்களை பொறுத்த வரையில் வித்தகமும் வர்த்தகமும் கை கோர்த்து பெற்ற இமாலய வெற்றிகளில் தில்லானா என்றுமே முன்னணியில் நிலை கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

    நினைவுகளை ஆசை போட வாய்ப்பளித்ததற்கு நன்றி.

    அன்புடன்
    திரு. முரளி அவர்களே,

    வழக்கம் போல் அருமை.

    நான் பலரிடமும் எப்போதும் வைக்கும் வாதம் இது தான். உலகெங்கும் உள்ள அந்தக் காலத்து நடிகர்கள் முதல் இந்தக் காலத்து நடிகர்கள் வரை அத்தனை பேரையும் கூப்பிடுவோம். அவர்கள் எல்லோரும் படத்தின், அறிமுகக் காட்சியில், பாகவதர் கிராப்பை வைத்துக் கொண்டு, மீசையை வழித்து, நெற்றியில், பைசா அகலப் போட்டு வைத்து, வாயில் நாதஸ்வரத்துடன் உட்காரட்டும். திரை அரங்கில், ஒருவர் கூட சிரித்து விடக்கூடாது. அந்த கெட்டப்பில் உள்ள அந்த நடிகரைப் பார்த்தவுடன், பார்க்கும் ஒவ்வொருவருக்கும், அந்த நடிகரின் மேல் ஒரு வித மரியாதை தான் வர வேண்டும்.

    எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் ஒருவரைத் தவிர வேறு எந்த நடிகர் இந்த கெட்டப்பில் தோன்றியிருந்தாலும் / தோன்றினாலும், திரை அரங்கங்கள் சிரிப்பொலியில் ஆழ்ந்து தான் போயிருக்கும்! இது தான் நடிகர் திலகத்தின் தனிச் சிறப்பு. ஆண்டவன் அவருக்கு வழங்கிய அந்த முகம்; கூடவே, அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை மற்றும் அர்ப்பணிப்பு. அதனால் தான், அந்தத் தெய்வீகத் தன்மை அவருக்குத் தானாகவே வந்து விடுகிறது. திரு. முக்தா சீனிவாசன் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியது போல, "சதை படர்ந்த அந்த முகத்தில் அவர் காட்டிய உணர்வுகள் ஏராளம்! ஏராளம்!!".

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  10. #699
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பம்மலர் மற்றும் ராகவேந்தர் சார் முரளி சார் மற்றும் நம் எல்லா நண்பர்களுக்கும்
    கண்கள் பனிகின்றன இதயம் வருடுகிறது . திருவருட்செல்வர் மற்றும் தில்லான மோகனம்பாள் பற்றிய கட்டுரை மிக அருமை
    இப்படிப்பட்ட ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட ரசிகர்கள் பெற சிவாஜி புண்ணியம் செய்தாரோ அல்லது சிவாஜியின் ரசிகர்களாக இருக்க நாம் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்ல.
    முரளி சார் மற்றும் பம்மலர் மற்றும் பார்த்தசாரதி சார் உடன் avm சங்கர ஹால் சென்றது நினைவுக்கு வருகிறது
    அங்குள்ள விற்பனையாளர் சொன்னது "இருக்கும் வரை எப்படியோ தெரியவில்லை மறைந்த பிறகு தான் சிவாஜின் அருமை எல்லோருக்கும் தெரிகிறது " .

    உண்மையை சொல்ல வேண்டுமானால்

    வான் உள்ளவரை இந்த வையகம் உள்ளவரை கார் உள்ளவரை கடல் உள்ளவரை மலை உள்ளவரை
    நம்மவரின் புகழ் என்றும் மறையாது

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றலும் ஆதவன் மறைவது இல்லை என்று பாடியது நம்மவருக்ககதான்

    என்றும் அன்புடன்

    கிருஷ்ணா க
    gkrishna

  11. #700
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,
    உணர்ச்சி மயமான தங்கள் பதிவு அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் ஆழ ஊடுருவியிருக்கும் என்பது திண்ணம். இன்னும் சொல்லப் போனால் நம் ஒவ்வொருவரின் ஊனிலும் உயிரிலும் நடிகர் திலகம் என்ற திருநாமம் ஊடுருவி பரவியுள்ளது என்றால் அது தான் உண்மை. ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய வார்த்தை - vibration - இது தான் நம் ஒவ்வொருவரின் உள்ளும் ஆட்டுவிக்கிறது. இது நடிகர் திலகம் என்கிற ஜீவனைத் தவிர வேறு எவருக்கும் கிட்டாத பேறு - அது யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும் சரி- இந்த உணர்வுடன் கலந்த தன்மை அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மட்டுமே சாத்தியம்.
    அது தான் நம்மை இப்படி சங்கிலி போல் இணைத்து அழைத்து செல்கிறது.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •