-
8th August 2011, 08:12 PM
#881
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
தங்களைப் போன்ற ரசிக சிகரங்களின் பாராட்டுக்களையெல்லாம் பெறுவது என் வாழ்வின் பேறு !
"நிறைகுடம்" 50வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் நிச்சயம் பதிவிடுகிறேன் !
அன்புடன்,
பம்மலார்.
-
8th August 2011 08:12 PM
# ADS
Circuit advertisement
-
8th August 2011, 10:01 PM
#882
Senior Member
Seasoned Hubber
ராமஜெயம் அவர்களின் திரிப்பணியை திருப்பணியாக்கிய பம்மலார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நான் நேரில் ஒண்ணு, மேடைல ஒண்ணுன்னு பேசுறதில்லைப்பா. நமக்கு அப்படி இருக்க முடியலை
நமக்கு ஒரு வேலை இருக்கிற மாதிரி கூட்டத்தில் வந்திருக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் ஏதோ ஒரு வேலை இருக்கும்லே... நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலையைப் பார்க்கிற மாதிரி ஆளுக்காள் பார்ப்பாங்க இல்லே, எதுக்கு அவங்களை வீணா காக்க வைக்கணும்...?
இவற்றையெல்லாம் சொன்னவர் யாரென்று சொல்லவும் வேண்டுமா..
ஆனால் இவற்றை மேற்கோள் காட்டி உயிர்மை மாத இதழின் ஆகஸ்டு பதிப்பில் மணா என்ற நிருபர் ஆறு பக்கங்களுக்கு, பக். 26-31, எழுதியிருக்கிறார்.
என்றும் அழியா பிம்பம் என்கிற தலைப்பில் உள்ள இக்கட்டுரை, சிவாஜி என்கிற சிறந்த மனிதரைத் தற்போதைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுவது மட்டுமின்றி, அவருடைய நேர்மையான கொள்கையும் பண்பும் என்றிருந்தாலும் மக்களிடம் சென்றே தீரும் என்பதற்கான முதற்படியாக அமைந்துள்ளது என்றால் அது உண்மை. நிருபர் மணா அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
அனைத்து சிவாஜி ரசிகர்களும் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய உயிர்மை மாத இதழின் முகப்பு இதோ

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th August 2011, 10:16 PM
#883
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரா ஐயா,
தகவலுக்கு நன்றி. உயிர்மை இதழ் இணையத்தில் ஆகஸ்டு மாத இதழ் இன்னும் வலையேற்றம் பெறவில்லை
[http://www.uyirmmai.com/VeiwMonthlyArchives.aspx
எனினும் நடிகர் திலகத்தின் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது என்பதற்காகவே ஆகஸ்டு இதழை வாங்கிப் படிக்க வேண்டும்
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
8th August 2011, 11:06 PM
#884
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
"உயிர்மை" பதிவுக்கு உளமார்ந்த நன்றி !
டியர் ஜோ சார்,
"உயிர்மை" சுட்டிக்கு கனிவான நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
8th August 2011, 11:44 PM
#885
Senior Member
Veteran Hubber
-
8th August 2011, 11:49 PM
#886
We extend a warm welcome to you Mr.Ramajayam and hope your stay here turns out to be fine, pleasant and enjoyable. And this is for people like Rakesh who are bonded to Hollywood, Mr.Ramajayam visits Hollywood once in every year [in view of his daughter being there] and he had not let go the opportunity bestowed on him. He meticulously fills up the visitor's diary with anecdotes and descriptions of NT and his films and he makes sure that people over there read it. Great work Sir!
Rakesh, another thing that me think about you is just watched the song முத்துசரம் சூடி வரும் வள்ளிப் பெண்ணிற்கு from your favourite பொன்னுஞ்சல், the song being nicely done by MSV/TMS with sweet humming from Vasantha but unfortunately drowned in the midst of ஆகாய பந்தலிலே and நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும். A youthful, cheerful NT and of course your ---- Usha Nandini.
Rakesh, it is not over. Watch out the next, it's for you and Plum.
Regards
-
8th August 2011, 11:56 PM
#887
பெண்ணின் பெருமை - Part I
தயாரிப்பு - ராகினி பிலிம்ஸ்
இயக்கம் - புல்லையா
வெளியான நாள் - 17-02-1956
நகரத்திலே வாழும் ஜமீந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள். முதல் மனைவியின் மகன் ரகுராமன். முதல் மனைவி இறந்து விடவே இரண்டாவது மனைவியை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார் ஜமீந்தார். இரண்டாவது மனைவியின் மகன் நாகேந்திரன், ரகுராமன் படிப்பு வாசம் இல்லாத கோழை. நாகுவோ எதற்கும் துணிந்த முரடன். பணத்தை கணடபடி செலவு செய்பவன். ரகுவை திட்டுவது, அடிப்பது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நாகுவை ஜமீந்தார் நேரடியாக கண்டித்தும் அவன் திருந்துவதாக இல்லை.
ரகுராமனின் மேல் பரிவும் நாகுவின் குணத்தின் மீது கோபம் கொண்டிருக்கிறார் ஜமிந்தார். ஆனால் அவரது இரண்டாவது மனைவியோ தன் மகன் நாகுவிற்கு ஆதரவாக இருக்கிறாள். இப்படி கேட்டது எல்லாம் கிடைக்கும் செல்லபிள்ளை நாகு ஒரு நாட்டியகாரியை விரும்பி அவள் வீட்டிற்கு சென்று வருகிறான்.
நகரத்திற்கு அருகில் இருக்கும் சத்யபுரம் என்ற கிராமத்தில் ஜமிந்தாரின் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் இருக்கின்றன. அதை அந்த கிராமத்து ஏழைகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். இந்த வருடம் குத்தகை பணம் வரவில்லையென்று தெரிந்தவுடன் கிராமத்திற்கு சென்று மிரட்டுகிறான் நாகு. விவசாய தொழில் சரியாக நடக்கவில்லை என்றும் அதனால் குத்தகை பணம் கொடுப்பதற்கு சிறிது கால அவகாசம் கேட்கும் விவசாயிகளை நாகு விரட்டுகிறான். தான் கூட்டிவந்த ஆட்களை விவசாயம் செய்ய சொல்ல கிராமத்துவாசிகள் எதிர்க்கிறார்கள். தடுக்க வரும் ஊர் பெரியவரை நோக்கி நாகு கை ஓங்க அந்த பெரியவரின் மகள் பத்மாவதி அங்கே வந்து யார் வயலில் இறங்குகிறார்கள் பார்ப்போம் என சவால் விட பெண் என்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் நாகு கோபத்துடன் ஊர் திரும்புகிறான்.
இதை கேள்விப்படும் ஜமீந்தார் தானே அந்த கிராமத்திற்கு செல்கிறார். நாகுவை எதிர்த்து பேசிய பெண் யார் என்று கேட்டு தெரிந்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்கிறாள். முதலில் கடிந்து பேசுவது போல் பேசிவிட்டு தன் மகனை கல்யாணம் செய்துக் கொள்ள சம்மதம் கேட்க பெரியவர்களின் அறிவுரைப்படி ஒப்புக் கொள்கிறாள். மகிழ்ச்சியாக ஊர் திரும்பி தன் மனைவியிடம் விஷயத்தை சொல்ல அவள் ஒப்புக் கொள்ள மறுக்கிறாள். ஒரு குடியானவப் பெண் தன் மகனுக்கு பணத்திலும் அந்தஸ்திலும் தகுதியானவள் இல்லை என்று மறுத்து விடுகிறாள். நான் வாக்கு கொடுத்து விட்டேனே என்று சொல்லும் ஜமின்தாரிடம் அப்படி உங்கள் வாக்கு முக்கியம் என்றால் உங்கள மூத்த மகனுக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று கூறி விடவே வேறு வழியின்றி ஜமிந்தாரும் அந்த முடிவுக்கே வருகிறார்.
பெண்ணின் வீட்டில் வைத்து கல்யாணம் நடக்கிறது. மணமேடையில் வைத்து தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள போகும் ரகுவைப் பார்த்ததும் பத்மா மாப்பிள்ளையின் உண்மையான குணத்தை கண்டு அதிர்ந்து போகிறாள். படிப்பறிவில்லாத ஒருவனுக்கு வாழ்க்கை படப் போகிறோம் என்ற அதிர்ச்சி அவளை தாக்கினாலும் மனதை தேற்றிக் கொண்டு ரகுவிற்கு மாலை சூட்டுகிறாள். தன் கணவனின் மனநிலை பாதிப்பை மாற்ற உறுதி எடுத்துக் கொள்கிறாள்.
திருமணத்திற்கு பிறகும் நாகு ரகுவை மரியாதை குறைவாக பேச பத்மா அவனிடம் கடுமையாக பேசிவிட அவன் கோவப்பட்டு வெளியேறுகிறான்.கணவனின் சிறு வயது முதல் அவனை வளர்த்த ஆயாவை வைத்து ரகுவை டாக்டரிடம் அழைத்து செல்ல செய்கிறாள்.
அங்கே வைத்து சிறு வயதிலே தாயை இழந்த ரகுவிற்கு புட்டி பாலில் அபினை கலந்து தூங்க வைத்த விஷயம் வெளிவருகிறது. அதன் காரணமாகவே அவன் மன வளர்ச்சி அடையாதவனாக இருக்கிறான் என்று தெரிய வர அதற்கு மாற்று மருந்து கொடுக்க டாக்டர் முயலும் போது இதை கேள்வி்பட்டு அங்கே வரும் நாகு பணம் கொடுத்ததும் மிரட்டியும் அவரை மருந்து கொடுக்க விடாமல் செய்து விடுகிறான்.
இதை கேள்விப்படும் பத்மா தன் கணவனுக்கு படிப்பு பண்பு முதலியவற்றை சொல்லி கொடுத்து ஒரு மனிதனாக்குகிறாள். இந்த மாற்றத்தை கண்டு மகிழும் ஜமீந்தார் அவனிடம் அலுவலுக பொறுப்பை ஒப்படைக்கிறார். இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் கூட வேறு வழியின்றி நாகு ஏற்றுக் கொள்கிறான். இதற்கிடையில் நாகுவின் நாட்டியக்காரி தோழி நீலா தன்னை கல்யாணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் தொந்தரவு பொறுக்க முடியாமல் சரி என்று சொல்லும் நாகு அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்கிறான்.
கல்யாண செலவிற்காக அலுவலகத்தில் வந்து பணம் கேட்கும் நாகுவிடம் தர முடியாது என்று ரகு சொல்ல சொன்னதாக மானேஜர் சொல்ல, மிகுந்த கோவத்துடன் ரகுவிடம் சென்று நாகு ஆத்திரமாக பேச அப்போதும் ரகு முடியாது என்ற சொல்ல கோவத்தில் நாகு போட என்று சொல்லிக் கொண்டே ரகுவை கன்னத்தில் அறைந்து விடுகிறான். இதை பார்த்துக் கொண்டே வரும் பத்மா நாகுவை கையில் உள்ள பிரம்பால் அடித்து விடுகிறாள். இதை கண்ட நாகுவின் தாய் ராஜேஸ்வரி பத்மாவதியை சத்தம் போட, ஜமிந்தாரும் வருகிறார். நான் இனிமேல் இந்த வீட்டிலே இருக்க மாட்டேன் என்று நாகு வெளியேற அதை பார்த்துக் கொண்டே உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டே படி இறங்கும் ஜமீந்தார் கால் தவறி கிழே விழுந்து விடுகிறார். உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து போய் விடும் ஜமீந்தார் நாகுவை பார்க்க வேண்டுமென்று சொல்லி அனுப்புகிறார். ஆனால் நீலாவின் வீட்டில் தங்கியிருக்கும் நாகுவோ வர முடியாது என மறுத்து விடுகிறான். இதனால் சொத்துக்களை பத்திரமாக பாதுகாக்கவும், பரமாரிக்கவும் உயிலை ரகு பெயருக்கு எழுதி வைத்து விட்டு இறந்து போய் விடுகிறார்.
தன் மகனை பார்க்காமல் தாய் தவிப்பதை கண்டு ரகு தானே நீலாவின் வீட்டிற்கு சென்று நாகுவை அழைக்கிறான். அப்போதும் வர மறுக்கும் நாகு ஒரு நிபந்தனை விதிக்கிறான். ஒன்று நான் அந்த வீட்டில் இருக்க வேண்டும் இல்லையென்றால் உன் மனைவி இருக்க வேண்டும் . இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு உயிலை தன் சிற்றன்னையிடம் ஒப்படைத்துவிட்டு ரகுவும் பத்மாவும் சத்யபுரம் கிராமத்திற்கு சென்று பத்மாவின் வீட்டில் தங்குகிறார்கள்.
சொத்து முழுவதும் தன் கைக்கு வந்த குஷியில் நாகு பணத்தை கண்டபடி செலவு செய்கிறான். நீலாவை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து தாயிடம் அறிமுகம் செய்கிறான், ஆனால் அவள் குடும்பத்தினரை பார்த்துவிட்டு நிலைமையை புரிந்துக் கொள்ளும் அவன் தாய் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். அலுவலக பணம் மொத்தம் காலியாகிறது. அம்மாவை மிரட்டி பணம் வாங்க ஆரம்பிக்கிறான் நாகு. அவனின் தவறான நடவடிக்கையினால் அவன் தாய் கொஞ்சமாக அவனை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் கையில் பணமே இல்லை என்றவுடன் சத்யபுரத்திற்கு ஆள் அனுப்பி வரி வசூலிக்க சொல்கிறான். ஆனால் அங்கே குடியானவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வரிப்பணத்தை ரகுவிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை கேள்விப்பட்டு ஆத்திரத்துடன் நாகு சத்யபுரம் செல்கிறான். அதே நேரத்தில் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ரகு தன் பழைய வீட்டிற்கு செல்கிறான். தன் சிற்றன்னையை சந்தித்து பணம் கொண்டு வந்திருப்பதாக சொல்ல உண்மையான நிலைமையை புரிந்து கொள்ளும் அவள் நாகு சத்யபுரம் சென்றிருக்கும் விஷயத்தை கூற அதை கேட்டவுடன் சித்தியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ரகு சத்யபுரம் செல்கிறான்.
அங்கே கிராமத்தில் ரகுவை தேடி அவன் வீட்டிற்கு செல்லும் நாகுவிற்கும் ரகு மனைவி பத்மாவிற்கும் வாக்குவாதம் முற்றுகிறது. கிராமத்தினர் பலர் தடுக்க முயன்றும் துப்பாக்கியுடன் போராடும் நாகுவை அவர்களால் அடக்க முடியவில்லை. அந்நேரம் அங்கே வரும் ரகுவை தாக்க முயற்சிக்க அவன் தாய் தடுக்கிறாள். அவளையும் கோபத்தில் நாகு தாக்க ரத்தக் காயத்துடன் அவள் மயங்கி விழ, அதுவரை அமைதியாக இருந்த ரகு கோபம் கொண்டு நாகுவை அடிக்கிறான். அவனை கண்டபடி திட்டுகிறான். தாயின் தலையில் வழியும் ரத்தத்தையும் அண்ணனின் சொற்களில் உள்ள நியாயமும் நாகு மனதை பாதிக்க வாழ்க்கையில் முதன் முறையாக தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான். தன் அண்ணனிடமும் அண்ணியிடமும் மன்னிப்பு கேட்கும் அவனை அவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ள படம் இனிதே முடிகிறது.
(தொடரும்)
அன்புடன்
-
9th August 2011, 12:09 AM
#888
பெண்ணின் பெருமை - Part II
இதுவரை நாம் விவாதித்த நடிகர் திலகத்தின் படங்களிருந்து முற்றிலும் மாறு்பட்டது இந்த பெண்ணின் பெருமை திரைப்படம். இதுவரை நாம் அலசிய படங்களில் சில நேரங்களில் படத்தின் கதைக்கேற்ப ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடிகர் திலகம் சில நெகடிவ் ஷேட் உள்ள காட்சிகளில் நடித்திருந்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் முழுக்க முழுக்க ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நடிகர் திலகம் வில்லன் ரோல் செய்த படம் என்று சொன்னால் அது பெண்ணின் பெருமைதான். அந்த நாள் திரைப்படத்தை மறக்கவில்லை. அதை தவிர்த்து பார்க்கும் போது என்று வைத்துக் கொள்ளலாம்.
முதல் காட்சியில் ஜெமினியை அடிப்பது முதல் இறுதிக் காட்சியில் தாயை தாக்குவது வரை வில்லன் வேடத்தில் நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அந்த முதல் காட்சியிலே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துவார். அதாவது பைத்தியமாக உலா வரும் அண்ணன் மேல் வரும் கோவம், மாற்றான் தாயின் மகன் என்பதனால் ஒட்டாமல் விலகும் தன்மை, தான் அவனை விட உயர்ந்தவன் என்ற ஆணவம், அவனுக்கு பரிந்து தன்னை கண்டிக்கிறாரே தந்தை என்ற ஆத்திரம் இது எல்லாமே அந்த உடல் மொழியில் வெளிப்பட்டு விடும்.
சத்யபுரம் கிராமத்து மக்களுக்காக பரிந்து பேசும் மானேஜரை கிண்டலாக நக்கல் அடிப்பது, கிராமத்தில் விவசாயிகளோடு முரடாக பேசுவது, தன்னை எதிர்த்து பேசுவது பெண் என்பதால் தன் கோவத்தை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பது, அந்த பெண்ணின் பேச்சை கேட்டு அனைவரும் வயலில் வேலை செய்யாமல் போய் விட அந்த ஆத்திரத்துடன் வரும் இயலாமை இதையெல்லாம் அந்த கண்களிலே நாம் காணலாம்.
பணமும் பணக்கார அந்தஸ்தும் கொடுக்கும் தோரணையை அவர் நாட்டியக்காரி நீலா வீட்டில் அழகாய் காட்டுவார். நீலாவின் தாய், அவள் தாய் மாமன், அவளின் சித்தப்பா போன்றவர்களை அவர் நடத்தும் விதமே அலாதி. அவர்களை கிள்ளுக்கீரையாய் பேசும் பேச்சு ஒன்றே போதும். அதே நேரத்தில் நீலாவுடன் அவர் கொஞ்சலும் குழைவும் ஏய் நீலு, நீலு என்று அவர் கூப்பிடும் அழகே தனி.
அண்ணனின் திருமணத்திற்கு பின் அண்ணியுடன் மோதும் கட்டங்கள் எல்லாமே டாப். முதலில் கிராமத்து பெண் ஒன்றும் தெரியாது என நினைத்து விரட்டுவது, அண்ணி தனக்கு சரியாக வாதிக்கும் போது அடே இந்த பெண்ணுக்கு இவ்வளவு பேசத் தெரியுமா என முகத்தில் வியப்பை தேக்கி கேட்பது, அடுத்த நிமிடத்தில் அண்ணி தன்னை காளைமாடு என்று சொல்லிவிட்டு கதவை மூடிக் கொண்டு போய் விட கோவத்தில் முகம் சிவக்க அதே நேரத்தில் அவளை ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பது, தன் தந்தை கொடுக்கும் இடம்தான் இதற்கு காரணம் என்று தாயிடம் புலம்புவது, அடுத்த நொடியில் அப்படியே முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு கெஞ்சலாக அம்மா, empty purse என்று தாயிடம் சொல்லி பணம் கேட்பது, பணம் கையில் வந்தவுடன் அப்படியே மாறுவது என பலவற்றை குறிப்பிட வேண்டும்.
தன் கல்யாணத்திற்கு பணம் கேட்டு மானேஜர் இல்லை என்று சொல்லிவிட நேரே அண்ணனிடம் வந்து வாக்குவாதம் செய்து அண்ணன் காரணம் கேட்க அப்போது வரும் கோபத்தில் அவனை அடித்து விட, அதை பார்த்துவிட்டு அண்ணனின் மனைவி இவரை பிரம்பால் அடித்துவிட அதை சற்றும் எதிர்பாராமல் அவர் முகத்தில் காட்டும் அதிர்ச்சியை பார்க்க வேண்டும்.
அண்ணனை கம்பெனி பதவியில் அமர்த்திவிட்டு தன்னை டம்மியாக்கும் தந்தையின் மேல் சினமுற்று அந்த ஏமாற்றத்தை மறக்க நீலா வீட்டிற்கு செல்ல அங்கேயும் அவளின் உறவினர்கள் கேள்வி கேட்க ஒவ்வொன்றுக்கும் அதனால என்ன என திருப்பி மிரட்டுவார். அந்த நேரம் அவர் தன் உடல் மொழியின் மூலமாக ஒரு பரம்பரை பணக்காரன் எப்படி அந்த பணத்திமிரை வெளிப்படுத்துவான், அதுவும் தன்னிடம் காசு வாங்கிக் கொண்டு தன்னை அண்டிப் பிழைக்கும் ஒரு கூட்டம் கேள்வி கேட்டால் அவனின் ரியாக் ஷன் எப்படி அமையும் என்பதை அவர் வெளிப்படுத்தும் விதம் கோடி பெறும்.
தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தந்தையின் மறைவிற்கு கூட போகாமல் நாட்டியக்காரி வீட்டிலே தங்கிவிட அவரை மீண்டும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போவதற்காக வரும் ஜெமினியிடம் காட்டும் ஆத்திரம், ஜெமினியின் பேச்சு நியாயமாக இருந்தும் கூட அதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அந்த வீட்டிலே ஒண்ணு நான் இருக்கணும் இல்லே உன் மனைவி இருக்கணும் என்று அழுத்தந்திருத்தமாய் தன் பிடிவாதத்தை நிலைநாட்டும் காட்சியையும் குறிப்பிட வேண்டும்.
இரவில் போதையில் படுக்கையில் படுத்துக் கொண்டே வேலைக்காரனிடமும் தன் தாயிடமும் அவர் நக்கலாக பேசும் பாணி கிளாஸ். பணம் என்னும் பொருள் அவரை எப்படி ஆட்டி வைக்கிறது என்பதை இரண்டு மூன்று முறை அவர் வெளிப்படுத்தும் முறை சிறப்பாக இருக்கும். மானேஜரிடம் முதலில் 5000 ரூபாய் வேண்டும் என்று சொல்லிவிட்டு அதை 6000,7000 என்று கூட்டி கேட்டுவிட்டு மொத்தப் பணத்தையும் அள்ளிக் கொண்டு போவது அதிகார தோரணையில் என்றால் அதே போல் தன் தாயிடம் அன்பாக பேசுவது போல் பேசி மொத்த பணத்தையும் வாங்கி கொண்டு போவது வேறு ஒரு பாணி. கடைசியில் இனி நல்லவன் போல் வேடம் போட முடியாது என்று தெரிந்தவுடன் அம்மாவிடம் பணம் கேட்கும் போது அவர் பேச்சின் தொனியே மாறுவதை கவனிக்கலாம்.என்னை கொன்று விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு போ என்று சொல்லும் தாயிடம் அம்மா! இப்ப அதுகெல்லாம் நேரமில்லேமா! நீ முதலிலே பணத்தை கொடு என்று இரும்பு பெட்டி சாவியை பிடுங்குவது. சில படங்களில் சில நடிகர்களின் பாத்திரதன்மையைப் பார்த்துவிட்டு இயல்பான வில்லத்தனம் பின்னாளில் வந்தது என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்தாலும் இதை பார்க்கும் போது நடிப்பில் எதையும் அவர் யாருக்கும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாகவே புரிகிறது.
நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் ரோல் என்று சொல்ல முடியாவிட்டாலும் நடிகையர் திலகம் தன் முத்திரையை பதிக்க தவறவில்லை. தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காத கிராமத்து சுட்டிபெண்ணாக வரும்போதும், பின்னர் ஒரு மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு மனைவியாகி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்ணாக மாறும்போதும் அந்த பாத்திரத்தின் தன்மையை புரிந்துக் கொண்டு செய்திருக்கிறார். கோழையான கணவன் முரடனான தம்பியை கண்டு பயந்து ஒளிந்துக் கொள்ள மைத்துனனிடம் அமைதியாக தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும்போது சரி, அதே மைத்துனன் தன் கணவனை அடித்து விட்டான் என்று தெரிந்தவுடன் அவனையே பிரம்பால் விளாசும் போதும் சரி சாவித்திரியின் முகபாவங்கள் அருமையாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தின் பாசிடிவ் அம்சம் என்னவென்றால் எந்த சூழலிலும் அழுது கண்ணீர் வடிக்காமல் பிரச்சனைகளை நேரிடுவது. அதை நடிகையர் திலகம் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
ஜெமினியை பொறுத்தவரை முதலில் அனுதாபத்தை தேடிக் கொள்ளும் பாத்திரம். பிறகு மனைவியின் முயற்சியினால் நார்மலாக மாறும் வேடம். தம்பியிடம் பயப்படுவது, தம்பி அந்த இடத்தை விட்டு போன பிறகு தம்பிக்கு பைத்தியம் என்று எல்லோரிடமும் சொல்வது போன்ற இடங்களில் ஓகே. நார்மலான பிறகு பெரிதாக perform பண்ண ஸ்கோப் இல்லை.
மற்ற பாத்திரங்களில் குறிப்பட வேண்டியவர்கள் தந்தை ரோலில் வரும் நாகையா, நாட்டியக்காரி நீலாவாக வரும் எம்.என்.ராஜம். இருவருக்குமே அவர்களுக்கு பழகி போன பாத்திரம் என்பதால் எளிதாக செய்திருக்கிறார்கள். ஆனால் surprise பாத்திரம் என்றால் அது சித்தி வேடத்தில் வரும் சாந்தகுமாரி. இதுவரை அவரை ஒரு சாப்டான அம்மா வேடத்திலேயே பார்த்த நமக்கு அவரின் வில்லி ரோல் ஒரு ஆச்சரியம் என்றால் அதை அவர் கையாண்ட விதம் நன்றாகவே இருக்கிறது.
எம்.என்.ராஜம் வீட்டில் அவரது அம்மாவாக வரும் ஞானம் [பாசமலர் அத்தை], எஸ்.எம்.துரைராஜ், சட்டாம்பிள்ளை வெங்கடராமன் இவர்களையும் குறிப்பிட வேண்டும்.
வசனம் பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ். மூலக்கதை மராத்தி என்று தோன்றுகிறது. நான் எப்போதும் சொல்வது போல் 50-களில் வெளியான படம் என்றாலே நமக்கு முதலில் வரும் ஒரு தயக்கம் வசனங்கள் தூய தமிழில் இருக்கும் என்பது. இதில் அப்படியே நேர் எதிர். பேச்சு மொழி வசனங்கள்தான் படம் முழுக்க. கிண்டலும் நக்கலும் கேலியும் கலந்த இயல்பான வசனங்கள்.
பாடல்கள்தான் அதிகம். அதிலும் தமிழ் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத தெலுங்கு இசையமைப்பாளர்கள் இருவர் இசையமைத்த படம். பெண்டியால நாகேஸ்வரராவ் மற்றும் அட்டபள்ளி ராமாராவ். அனைத்துப் பாடல்களும் நல்ல பிரபலம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு சில நல்ல பாடல்களும் உண்டு.
சாவித்திரியும் தோழியரும் பாடும் முகூர்த்த நாளும் முடிவாச்சா பாடல், சாவித்திரி முதல் இரவில் பாடும் இதய வானில், எம்.என். ராஜம் நடனம் ஆடிக் கொண்டே பாடும் முடியுமா என்ற பாடல்களை சொல்லலாம். மொத்தம் உள்ள 11 பாடல்களில் நடிகர் திலகத்திற்கு ஒரே பாடல்தான்.
அன்றைய பிரபல இயக்குனர் புல்லையா இயக்கிய படம். நடிகர் திலகம், நடிகையர் திலகம் போன்ற கலைஞர்களும் குடும்பங்களை கவரும் கதையும் கைவசம் இருக்கும் போது இயக்குனரின் வேலை எளிதாகி விடுகிறது. பெண்ணின் பெருமை திரைப்படமும் அந்த வரிசையில் இடம் பெற்றதால் வெற்றிக் கோட்டை எளிதாக தொட முடிந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி திருந்தி விடுவது என்ற அந்த தமிழ் சினிமாவின் கிளிஷேவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால் [அது கூட படம் வெளிவந்தது, இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு என்பதை நினைவில் கொண்டால் பெரிய குறையாக தோன்றாது] இயக்குனர் தன் வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
சென்னையில் காஸினோ, பிராட்வே மற்றும் சேலம் நியூசினிமாவில் 105 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. சென்னையின் மூன்றாவது அரங்கமான மகாலட்சுமியில் 70 நாட்களையும் கடந்தது. எங்கள் மதுரையில் ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் 77 நாட்கள் ஓடியது என்று சொன்னால் சாதாரண அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக பொருள் கொள்ளலாம். திருச்சி ஜுபிடர் அரங்கிலும் 100 நாட்களை நிறைவு செய்ததாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் ஒன்றும் உள்ளது.
இதற்கும் இந்தப் படம் வெளிவந்த காலக்கட்டத்தில் ஒரே நேரத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஜனவரி 14 வெளியான நான் பெற்ற செல்வம், நல்ல வீடு, ஜனவரி 25 அன்று வெளியான நானே ராஜா, பிப்ரவரி 3 அன்று வெளியான தெனாலி ராமன், இந்த சூழலில் பிப்ரவரி 17 அன்று பெண்ணின் பெருமை வெளியானது என்றால் அதற்கடுத்த வாரத்திலேயே அதாவது பிப்ரவரி 25 அன்று ராஜா ராணி திரைப்படமும் வெளியானது. எந்த சூழலாக இருந்தபோதினும் நெகடிவ் பாத்திரமாக இருந்த போதினும் நடிகர் திலகத்திற்கு என்றுமே உள்ள மக்கள் ஆதரவு மூலம் இந்தப் படம் பெரிய வெற்றியை அடைந்தது.
இன்றைக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலுக்காக குறிப்பிட வேண்டிய படம் பெண்ணின் பெருமை.
அன்புடன்.
நண்பர் கார்த்திக் போன்றவர்களுக்கு பிடிக்காத நடிகர் திலகத்தின் கதாபாத்திரம், but Rakesh and Plum, you people will like this. Go for it if you get a chance.
-
9th August 2011, 04:00 AM
#889
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் வில்லத்தனமான நடிப்புப் பெருமை
நடிகையர் திலகத்தின் குடும்பப்பாங்கான பாத்திரப் பெருமை
காதல் மன்னனின் குணச்சித்திர வேடப் பெருமை
இவற்றோடு
முரளி சாரின் தீர்க்கமான திறனாய்வுப் பெருமையையும்
இனி சேர்த்தால்தான்
"பெண்ணின் பெருமை" முழுமை பெறும் !
அன்புடன்,
பம்மலார்.
-
9th August 2011, 05:10 AM
#890
Senior Member
Veteran Hubber
Bookmarks