-
12th August 2011, 09:18 AM
#11
Senior Member
Diamond Hubber
தீவிர சைவ மார்க்கத்தில் ராஜா தன்னை முழுதாக ஆட்படுத்திக் கொண்டதால், சித்தர்களின் எண்ணங்களோடு ஒன்றிப் போகிறார். குணா படத்தில் வந்த "அப்பனென்றும் அம்மையென்றும்.." பாடல் வரிகளின் உச்சக் கட்டமே "நீரால் உடல் கழுவி..". லௌகிக வாழ்க்கையை வெறுத்து, துறவறத்தை நோக்கி நடைபோடும் வரிகள். பாடலின் பின்னணி இசையும் ஒருவித அமானுஷ்ய உணர்வை அள்ளித் தெளிக்கிறது. வெண்பாவில் வடித்த முயற்சி தமிழ்த் திரையுலகத்திற்கு புதியது என நினைக்கிறேன். வாழ்த்துக்கள். இதற்கு முன்னர் யாரேனும் வெண்பா வகைப் பாடல்களை எழுதி அது இசையமைக்கப்பட்டிருந்தால் குறிப்பிடவும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
12th August 2011 09:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks