டியர் வாசுதேவன் சார் மற்றும் பம்மலார் சார்,
கலக்கல் என்ற வார்த்தைக்கு தங்களையும் பம்மலாரையும் பொருளாகக் கூறலாம். அசத்தி விட்டீர்கள். கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா புகைப்படத்துடன், அதுவும் மூன்று தலைவர்களை ஒரு சேர இணைத்த அந்த விழாவினை நினைவூட்டி கலக்கி விட்டார் பம்மலார். தாங்கள் 18.10 பாபு வின் 40 ஆண்டு நிறைவினையும் நினைவூட்டி விட்டீர்கள். பாபு வெளியீட்டு தீபாவளி அன்று நான் சென்னையில் இல்லை. தர்மபுரியில் இருந்தேன். அங்கு தான் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் பார்த்தேன். பின்னர் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக சாந்தியில் பார்த்த பிறகுதான் மனம் நிறைவடைந்தது. மறக்க முடியாத நாட்கள்.
முரளி சார், தங்களுடைய பதிவுகளை அன்றாடம் பார்க்க விரும்பும் பலரில் நானும் ஒருவன். தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
அன்புடன்
Bookmarks