-
19th October 2011, 03:19 PM
#521
Senior Member
Seasoned Hubber
திரு.வாசுதேவன் அவர்களே. பாவை விளக்கு புகைப்பட ஆல்பம் அருமை. அதையும் நமது சண்முகசுந்தரத்தின் நாதஸ்வரத்தில் பாவைவிளக்கு பாடலை அளித்ததற்கு உங்களுக்கு ஒரு சபாஷ்.
-
19th October 2011 03:19 PM
# ADS
Circuit advertisement
-
19th October 2011, 03:25 PM
#522
Senior Member
Seasoned Hubber
திரு.பம்மலார் அவர்களே, பராசக்தி புகைப்பட ஆல்பம் அருமை.
திரு.ராகவேந்திரன் சார், பாபு திரைப்படம் குறித்த பொம்மை தகவல்கள் அருமை. நன்றி.
-
19th October 2011, 03:29 PM
#523
Senior Member
Veteran Hubber
-
19th October 2011, 03:36 PM
#524
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
பாவை விளக்கு வெளிவந்த போது, சில விமர்சனங்களில் நாவல் போல இல்லை என்ற பொத்தாம் பொதுவான பல்லவியைப் பாடி இன்றும் அதையே கூறி வருகின்றன. படிப்பது வேறு, பார்ப்பது வேறு என்ற அளவுகோலை குழி தோண்டி புதைத்து விட்டு எந்த விதத்தில் நடிகர் திலகத்தின் படங்களை தரமிறக்கலாம் என்கிற கண்ணோட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருந்து எழுதி வந்ததை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க முடியாது. தில்லானா மோகனாம்பாள் காவியத்தையே குறை சொன்னவர்கள் மற்றவற்றை விட்டு வைப்பார்களா.. அதில் பாவை விளக்கு விதிவிலக்காகி விடுமா என்ன..
இந்த Negative Attitude காரணமாகவே நடிகர் திலகத்தின் படங்கள் விமர்சனங்களில் எதிர்ப்பை சந்தித்தன, என்றாலும் அதையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி நடை போட்டன என்றால் அதற்கு முழு முதற் காரணம் நடிகர் திலகம் மட்டுமே.
அந்த வரிசையில் பாவை விளக்கு காவியமாகவும் நெஞ்சில் ஓவியமாகவும் நிலைத்து நிற்பது நிதர்சனம்.
குறிப்பாக காவியமாக பாடல் காட்சி படமாக்கப் பட்டபோது பாடல் தாஜ் மகாலில் ஒலிபரப்ப முடியாது. எனவே அதனைத் தன் நினைவில் கொண்டு, அதன் இசையையும், பாடகர் குரலையும், பாடல் சூழலையும், பாடல் வரிகளையும் நெஞ்சில் நிறுத்தி, நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம்.
அது மட்டுமா, ஒரே நேரத்தில் வெளிவந்த தன்னுடைய இரு படங்களிலும் பாடலுக்கு இடையே தன் குரலில் பாடல் வரிகளை/ உரைகளை ஒலிக்கச் செய்ததிலும் சாதனை புரிந்துள்ளார் நடிகர் திலகம். பாவை விளக்கு படத்தில் வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி பாடலிலும், பெற்ற மனம் படத்தில் சிந்தனை செய்யடா பாடலில் எம்.எல்.வி. பாட, இவர் வசனம் பேசியும் குரல் கொடுத்ததும் ஒரு வகையில் சாதனையே.
பெற்ற மனம் படத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் எம்.எல்.வி. அவர்கள் பாடிய உள்ளத்தைத் தொடும் பாடல்
சிந்தனை செய்யடா
Last edited by RAGHAVENDRA; 19th October 2011 at 03:46 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th October 2011, 03:45 PM
#525
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா, mr_karthik மற்றும் அனைவருக்கும்,
சபாஷ் மீனா, நாம் பிறந்த மண், பாபு திரைக்காவியங்களின் ஆவணப்பதிவுகள் விரைந்து வரவிருக்கின்றன !
அன்புடன்,
பம்மலார்.
-
19th October 2011, 04:12 PM
#526
Senior Member
Veteran Hubber
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பாவை விளக்கு
[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய முதல் வெளியீட்டு விளம்பரம்
Full Prints : சுதேசமித்ரன் : 26.10.1960
ஒளிரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
19th October 2011, 04:37 PM
#527
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
சிவாஜி பேரவை சார்பில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 84வது ஜெயந்தி விழாவை நாளிதழ்கள் மட்டுமின்றி மாதமிருமுறை இதழான 'நவீன ஆதித்யன்' இதழும் வண்ணத்தில் ஒருபக்க விழாத்தொகுப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
தங்களின் சீரிய சிவாஜி பேரவைப்பணி மென்மேலும் சிறந்தோங்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
-
19th October 2011, 04:52 PM
#528
Senior Member
Seasoned Hubber
திரு.பம்மலார் அவர்களே! - பரவசமூட்டும் பாவை விளக்கு பொக்கிஷ விளம்பரங்களுக்கு நன்றிகள்.
-
19th October 2011, 04:54 PM
#529
Senior Member
Seasoned Hubber
திரு.பம்மலார் - தங்கள் பாராட்டுக்கு நன்றிகள்.
-
19th October 2011, 05:03 PM
#530
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
கிடைத்தற்கரிய 'பாவை விளக்கு' விளம்பரப் பொக்கிஷங்களை அள்ளித்தந்தமைக்கு மிக்க நன்றி. ஐம்பதாண்டுகளைக்கடந்தும் இவைகளைக் காண முடிகிறதென்றால் உண்மையிலேயே அவை பொக்கிஷங்களன்றி வேறில்லை.
மற்ற படங்களின் பொக்கிஷப்பதிவுகளும் விரைவில் வர இருக்கின்றன என்ற அறிவிப்பு உள்ளத்தில் தேன் பாய்ச்சுகிறது.
தங்களின் அரிய சேவைக்குப்பாராட்டுக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks