Page 73 of 404 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #721
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    "பைலட் பிரேம்நாத்" பதிவுகள் Brilliant ! குறிப்பாக 'இலங்கையின் இளங்குயில்' பாடல் தாங்கள் குறிப்பிட்டது போல் இதுவரை இணையத்தில் காணாத ஒன்று ! அதனை பதிவேற்றம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

    "சொர்க்கம்" தொடக்கமே பளிச் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #722
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    அவள் யார்?

    pammalar

  4. #723
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,
    சொர்க்கம் வசூல் விளம்பரம், பொய்யும் புரட்டும் சொல்லி நடிகர் திலகத்தின் வெற்றியை இருட்டடிப்பு செய்வோரின் சொரூபத்தை வெளிக் கொணர்ந்து விட்டீர்கள்.
    தேவி பேரடைஸ் திரையரங்கம் துவங்கிய பின் வெளியான முதல் தமிழ்ப்படம் சொர்க்கம். அந்த வளாகத்தில் வெளியான முதல் தமிழ் - மொழி மாற்றுத் திரைப்படம் - ஜோதிலட்சுமி கதாநாயகியாக நடித்த ஜாக்பாட் ஜாங்கோ - தேவி திரையரங்கில் வெளியானது. மெக்கென்னாஸ் கோல்ட் படத்தின் அபரிமிதமான வெற்றிக்குப் பிறகு அந்த வளாகம் மிகப் பெரிய புகழ் பெற்றது. அந்த வளாகம் உருவானதற்கான காரண காரியங்கள் தனிக் கதை.

    அப்படிப் பட்ட தேவி திரையரங்கின் பிரம்மாண்டமான தோற்றம் அதன் பிரமிப்பு, அனைவருக்கும் ஆர்வம் உண்டாக்கியதில் வியப்பில்லை. அதுவும் தேவி பேரடைஸில் அந்த ரேம்ப்பில் சுற்றி சுற்றி மேலே செல்வது, அந்த விசாலமான லௌஞ்சில் நடிகர் திலகத்தின் ஸ்டில்களைப் பற்றி சிலாகித்தது, முதன் முதலாக சேனல் இசை எனப் படும் அந்த ஏற்பாடு இடைவேளையில் சொர்க்கம் பாடல்களைக் கேட்கும் போது தந்த இனிமை, அந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் அற்புதமான உள் தோற்றம், அநைத்தும் புதுமையான அனுபவம்.. பெயருக்கேற்றார் போல் சொர்க்கமாக விளங்கிய அந்த அரங்கத்தில், அதுவும் அத்தனை உயரத்தில் அந்த படம் திரையிடப் பட்டது மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த ரூபாய் நோட்டு மரம் அந்த ரேம்ப்பின் நடுவே அப்படியே ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. அதே போல் நடிகர் திலகம் அந்த பிரம்மாண்ட செட்டில் வேஷ்டி சட்டையுடன் படுத்து வியந்து பார்க்கும் காட்சி அப்படியே ஸ்டில்ஸ் வைக்கும் இடத்தில் உருவாக்கப் பட்டிருந்தது அனைத்துமே இன்றும் அந்தப் பிரமிப்பை நெஞ்சில் அப்படியே வைத்துள்ளன.

    நுழைவுக் கட்டணம் ரூ 1.25, 2.00, 2.50 மற்றும் ரூ 3.00. முன்பதிவு ஒரு வாரத்திற்கு முன் தொடங்கிய போது காலை 7.10 மணிக்கு க்யூவில் நின்றேன். நின்ற இடம் பிளாசா திரையரங்கு தாண்டி பேருந்து நிறுத்தம் அருகில், தற்போது அந்த நிறுத்தம் இல்லை. அப்படியும் எனக்கு இரண்டாம் நாள் பகல் காட்சி, அதாவது 30.10.1970 ரூ. 3.00 டிக்கெட் கிடைத்தது. ரசிகர்கள் அனைவருக்கும் சொர்க்கம் படம் தான் முதலிடம். அந்த ஸ்டைல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டதோடு மட்டுமின்றி, எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மிகப் பெரிய வெற்றிக்கு வழி வகுத்து விட்டது.

    இரண்டாம் நாள் தேவி பேரடைஸில் நுழையும் போது இடம் மாறி விட்டோமா என்று ஐயப் படுகிற அளவிற்கு புதுமையாக இருந்தது மறக்க முடியாது. இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி உள்ளே நுழைந்து படம் ஆரம்பித்து அந்தக் கனவுக் காட்சி ஆரம்பிக்கும் போது அரங்கம் அதிர்ந்த அதிர்வு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

    உண்மையிலேயே சொர்க்கம் தான். அதுவும் தேவி பேரடைஸில் அப் படத்தை அப்போது பார்க்காதவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகள்... என்று பெருமையோடு சொல்வேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #724
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அவள் யார் திரைப்படம் நல்ல கருத்தம்சம் நிறைந்தது. நடிகர் திலகம் நீதிபதியாக வருவார். சௌகார் ஜானகி டி.கே.ராமச்சந்திரன் ஜோடி அவர்கள் காரில் போகும் போது வரும் டூயட் பாடல் தான் பட்டுப் பூச்சிப் போலும் ராஜா, பாடியவர்கள் ஏ.எம்.ராஜா, ஜிக்கி. இசை எஸ்.ராஜேஸ்வர ராவ். இப்படத்தில் எனக்கு நினைவு தெரிந்து நடிகர் திலகத்திற்கு பாடல்கள் இல்லை. இனிமையான பாடல்கள். பாணிக்ரஹி பாடியது - கண் காணும் மின்னல் தானோ மற்றும் நான் தேடும் போது என்ற பாடல். subdued acting என்பதற்கு இப்படம் உதாரணம்.

    பாடல்களைக் கேட்க

    http://www.thiraipaadal.com/album.ph...D=ALBOLD000403
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #725
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நல்ல மழை, சாலையெல்லாம் வெள்ளம், குடையையும் தாண்டி நனையும் உடல்கள், சூரியன் வருமா என்று வானத்தைப் பார்க்கும் நிலை...

    இன்றைய நிலவரம் போல் உள்ளதல்லவா...

    41 ஆண்டுகளுக்கு முன் 29.10.1970 அன்றும் இதே நிலை தான். காலை சுமார் 9.30 மணி. தீபாவளியைக் கொண்டாடி விட்டு விடு ஓட்டம் ... வீட்டிலோ திட்டு.. அதையெல்லாம் யார் காதில் வாங்கினார்கள் ... கண் காது மூக்கு செவி என ஐம்புலன்களிலும் சிவாஜி என்ற மூன்றெழுத்து மந்திரம் அல்லவா ஆக்கிரமித்துள்ளது.. காலை விமானப் படை வீரர்களுக்கான சிறப்புக் காட்சி சாந்தி திரையரங்கில் எங்கிருந்தோ வந்தாள் திரைக் காவியம்.. எங்களுக்கு பகல் காட்சிக்கு எப்படியோ டிக்கெட் கிடைத்து விட்டது. இருந்தாலும் காலையில் பார்த்தால் நன்றாயிருக்குமே.. அரங்கத்தில் நுழைந்தால்.. எங்கே நுழைவது... இடமே யில்லை... எங்கு பார்த்தாலும் கார்கள்... மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. டிக்கெட் கிடைக்க வில்லை. நண்பர்கள் மிச்சம் மீதி இருந்த ஸ்டார்களையும் கொடிகளையும் கட்டிக் கொண்டிருந்தார்கள்.. மழையில் நனைந்து கொண்டே...நேரம் போனது தெரியவில்லை... பகல் சுமார் 1.00 மணியளவில் கதவுகள் திறக்கின்றன. படம் முடிகிறது. ஆஹா... அனைவரின் முகத்திலும் பூரிப்பு.. எங்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.. காரணம் அவர்கள் பொதுவானவர்கள்... அவர்களே சந்தோஷத்தோடு வரும் போது எங்களுக்குக் கேட்க வேண்டுமா... சரியாக காத்திருந்தவர்கள் போல் ரசிகர்கள் பட்டாசு வெடிக்க துவங்கி விட்டார்கள்... படம் முடிந்து மக்கள் வெளியே போக முடியாத அளவிற்கு பட்டாசு மழை... அந்த மழை ஓய்ந்து இந்த மழை.. அனைவரிடமும் விசாரித்தோம்.. ஒரே பதில்... படம் மிகவும் நன்றாக இருக்கிறது... சிவாஜி சிவாஜி தான்.

    போதாதா..

    எங்கள் காட்சி வந்தது...

    சொல்லவும் வேண்டுமா...

    அந்த நாட்கள் இனிமேல் வருமா...

    Never...(கௌரவம் நினைவு படுத்திக் கொள்ளவும்)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #726
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரே நாளில் இரு படங்கள் 100 நாட்கள் ... ஒரே படம் 200 நாட்கள் ஓடியதற்கு சமம்...அதுவும் இரு முறை...

    இதை செய்ய ஒருவரால் தான் முடியும் .. முடிந்தது...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #727
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள ராகவேந்தர் சார்,

    தச்சோளி அம்பு திரைப்படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் பெறும் காட்சியைக்கண்டு பெருமகிழ்ச்சியடைந்தேன். இவற்றை இதுபோன்ற புகைப்பட ஸ்டில்களில் பார்த்து ஆவலைத்தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ஏனென்றால் நடிகர்திலகத்துக்கு 'நினைவு இல்லம்' அமையப்போவதுமில்லை. அதில், இவையெல்லாம் இடம்பெறப்போவதுமில்லை. அவற்றை நாம் பார்க்கப்போவதுமில்லை.

    "தாத்தா, நீங்கள் வாழும்போது பார்க்க ஆசைப்பட்ட சிவாஜி தாத்தாவின் நினைவு இல்லம் இப்போ ஒருவழியாக உருவாகி விட்டது. அதை உங்கள் சார்பில் நான் போய்ப்பார்த்து வந்தேன்" என்று என் பேரன் என் கல்லறையின் முன் நின்று சொல்லும் காலமாவது வருமா? அல்லது அதுவும் கனவாகவே போய்விடுமா?.
    Last edited by mr_karthik; 29th October 2011 at 01:19 PM.

  9. #728
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    I am unable to visit our hub for 2, 3 days.

    What a Pokkizham - collections about Thachcholi Ambu, Pilot Premnath, Thevar Magan, Sorgam & Engiruntho Vandhal?

    Thanks to Mr.Pammalar, Mr.Ragavendran & Mr.Vasudevan.

    Ofcourse thanks to Mr.Karthik for sharing his memorable golden days.

    Thanks again.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #729
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear All - I have received one mail from our NT's great fan from Vietnam. I posted the same here for our hubbers:

    "Dear Mr.Chandra sekar,

    I have gone thru all the 7 parts of Nadigar Thilagam in the last 3 days and commendable contribution by shardha, Pammalar, ragavendran and you.

    I always thought that I was the greatest worshipper of our God but I feel diminished in my status now.

    I have seen 256 Films out of which 50 movies more than 150 times each and remaining minimum twice and remember most of the release dates and victory details.

    I have been living in overseas for the past 20 years and travel extensively to 60 countries.but if I dont see atleast a scene in one day of our God, That is not my day.

    I am from Neyveli and Chennai woking overseas in Thailand,Indonesia and Vietnam.I am an Engineer and a management accountant by qualification.My proudest credential is that I am a hardcore devotee of acting god from the age of 6 since I saw Navaratri and Pudhiya paravai in Athoor Swarna/Sridhar in 1964 where my Grand pa was working.My entire family is God's fans only.All my friends were natural God's fans or converted God's Fans only(In my class i wont let any one else to be otherwise).

    Since childhood my name was linked with God's name by my friends and relatives.

    I felt that I was seperated from TamilNadu after 21st July'2001.When the god's statue was erected in chennai ,I was in U.S on business.After I was back,I paid a visit from indonesia to have a glimpse at God's statue and took blessings.

    I saw the god only three times in my life,once during election campaign in Neyveli,second during Chettinad school Function and third at Chennai airport(I was fortunate to fall in his feet on that day).

    I will be participating and contributing to your site.

    Regards
    Gopal"
    Last edited by KCSHEKAR; 29th October 2011 at 01:16 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #730
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பம்மலார் சார்,

    எதிர்பார்த்தது போலவே 'சொர்க்கம்' மற்றும் 'எங்கிருந்தோ வந்தாள்' பட பொக்கிஷப்பதிவுகள் களைகட்டின. இரு படங்களுமே 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழகத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் திரையரங்குகளின் பெயர்களையும் விளம்பரங்களில் குறிப்பிட்ட ஸ்ரீ வினாயகா பிக்சர்ஸ் மற்றும் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு மிக்க நன்றி.

    (பாலும் பழமும், சரஸ்வதி சபதம் படங்களின் 100-வது நாள் விளம்பரங்களைப்பார்த்து வருத்தம் அடைந்தேன். இரு படங்களும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியிருக்கும்போது, விளம்பரத்தில் சென்னை 3 அரங்குகளை மட்டும் குறிப்பிட்டு விட்டு 'மற்றும் தென்னாடெங்கும்' என்று போட்டிருந்தனர். ஏன் எல்லா அரங்குகளின் பெயர்களையும் விளம்பரத்தில் குறிப்பிட்டால் வேலுமணியின் பாட்டன் வீட்டு சொத்தும், நாகராஜனின் முப்பாட்டன் வீட்டு சொத்தும் குறைந்து போயிருக்குமா?. ரசிகர்களின் மனநிலையறியாத இவங்களெல்லாம் எப்படி திரைத்துறையில் குப்பை கொட்டினார்கள்?)

    ரசிகர்களுக்கு நீங்கள் செய்து வரும் தொண்டு அளவிடற்கரியது. பொக்கிஷப் பதிவுகளுக்கு மிக்க நன்றி.

    ராகவேந்தர் சார்,

    'எங்கிருந்தோ வந்தாள்' படப்பிடிப்புச்செய்திகளின் பொம்மை ஆவணங்களை அழகுற அளித்துள்ளீர்கள். பொம்மை ஒரு தலைசிறந்த சினிமா பத்திரிகை என்பதில் ஐயமில்லை. அழகான கவரேஜ். பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

    வாசுதேவன் சார்,

    பைலட் பிரேநாத் பாடல்களின் வீடியோ பதிவுகளுக்கு நன்றி. குறிப்பாக 'இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ' பாடல் அடிக்கடி பார்க்க முடியாத ஒன்று.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •