Page 95 of 404 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #941
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    the therukkootthu is just fantastic. I will never tire of watching it. What a stupendous performance.
    Sivaji adopting the 'bad acting' aesthetics of therukkoothu and demonstrating it to perfection.
    Savithri - who is not an actor in the film - falling short of even that standard by being totally graceless.
    What nuance I say!! A delight.
    Well said. In between the dialogues, NT often says, " palaar palaar ", a characteristic remark of the therukoothu performers.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Mohan,

    Welcome back. As is your wont you immediately make a mark of your own and the observation regarding the Rajapart and the co-artists is spot on. Hope you get more holidays for us to enjoy such nuances.

    Prabhu,

    That again brings me back to the elaborate post you made on the therukoothu scene some time back, pinpointing the way it was enacted. Need to read it again.

    Regards

  4. #943
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் நவராத்திரி திரைக்காவியத்தை சென்னை மிட்லண்ட் திரையரங்கில் நடிகர் திலகத்துடன் பார்த்து அவரை வெகுவாகப் பாராட்டினார். இதைப் பற்றிய ஒரு நிழற்படம், பேசும் படம் ஜனவரி 1965 இதழில் வெளிவந்தது, இங்கே நம் பார்வைக்கு. வெகுநாளானதால் சற்று புள்ளி புள்ளியாகக் காட்சி அளிக்கிறது. இதனை சரி செய்ய முயன்றால் படத்தின் தெளிவு அடிபடுகிறது. எனவே முடிந்த வரை தெளிவாக்கித் தரப்பட்டுள்ளது.

    Thanks for this rare picture, Raghavendra sir.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  5. #944
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    கண்கள்

    [5.11.1953 - 5.11.2011] : 59வது உதயதினம்

    பொக்கிஷப் புதையல்

    சிறப்பு நிழற்படம்



    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 4.11.1953


    அன்புடன்,
    பம்மலார்.
    What a smart look !!!! Thanks for the lovely picture, pammalar sir.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  6. #945
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Thanks Murali sir.....it's always been a great pleasure to visit the thread and keep myself updated by reading excellent posts written by ardent fans like you.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  7. #946
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Great screenshots from Kathavarayan vasudevan!
    For those who haven't seen the fantasy film, this will surely tap their interest.
    The pose of him flexing his shoulders and circling the ring is from the highly realistic wrestling scene.
    The wrestling scene is worth watching in itself. No drama. Just pure wrestling, Sivaji gets lifted and thrown about and also really lifts the wrestler.

    Are you taking screenshots from your DVD? If so one nEyar viruppam: when initially Kathavarayn goes exploring the world (thanjavur periya kovil, boat race etc.) they impose the visuals on the frame with Sivaji's face. He acts as if he is really following a close boat race! We will get that impression simply from the his facial reactions and exultation at the victory Beautiful one.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  8. #947
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா.

    நடிகர்திலகத்தின் 1980 தீபாவளி வெளியீடான விஸ்வரூபம் வெற்றிவிழாவில் கலந்து கொண்டது எதிர்பாராமல் கிடைத்த இனிய வாய்ப்பு. அந்த தீபாவளி என் பெர்சனல் வாழ்க்கையிலும் ஒரு சின்ன் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுவரை பாவாடை தாவணியில் இருந்த நான், உடன் படித்த தோழிகளின் நச்சரிப்பு தாங்காமல், கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுக்கு மாறியது அப்போதுதான். (அதன்பின்னர் கல்லூரி நாட்களில் அதுவே பிடித்த உடையாகப்போனது வேறு விஷயம்).

    விஸ்வரூபம் ஓடிக்கொண்டிரும்போதே சாந்தியில் குடும்பத்தோடு ஒரு முறையும், என் பெரியப்பாமகன் ரவியோடு ஒருமுறையுமாக இரண்டு முறை அப்படத்தைப் பார்த்துவிட்டேன். ரவி அப்போதே பைக் வைத்திருந்த கல்லூரி மாணவன். பைக் வைத்திருந்தானே தவிர வேறு தப்பு தண்டாவெல்லாம் பண்ணாத சாது. என் தந்தைக்கு அடுத்து சாந்திக்கு ரெகுலாகச்சென்று வரும் வழக்கமுள்ளவன். அப்படிப்போனபோதுதான், சாந்தியில் விஸ்வரூபம் படத்தின் 100-வது நாள் விழா நடக்க இருப்பதாகவும், அந்த விழாவில் ரசிகர்களும் கலந்துகொள்ள வசதியாக, தலைமை மன்றத்தின் சார்பில் சாந்தியில் ரசிகர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாகவும், தான் இரண்டு டோக்கன் வாங்கியதாகவும் சொல்லி என் தந்தையிடம், 'சித்தப்பா, நாளை நாம் ரெண்டு பேரும் போவோம்' என்றான். அப்போது அப்பா, 'எனக்கும் வர ஆசைதான். ஆனால் சாரதா இதற்கெல்லாம் ரொம்ப ஆசைப்படுவாள். அவளை நீ அழைச்சிக்கிட்டு போ' அப்படீன்னு அனுமதி கொடுத்து விட்டார். எனக்கோ பிடிபடாத சந்தோஷம். கொஞ்சமும் எதிர்பாராத வாய்ப்பு அல்லவா?.

    அது காலை நேர விழா. ஞாயிற்றுக்கிழமை என்பதாக நினைவு. முதல்நாள் மாலைதான் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் 100-வது நாள் விழா நடந்திருந்தது. மறுநாள் காலை விஸ்வரூபம் 100-வது நாள் விழா, அன்று மாலை ரஜினியின் 'பொல்லாதவன்' 100-வது நாள் விழா. (தீபாவளி ராசிக்காரரான மெல்லிசை மன்னருக்கு மூன்று படங்களும் வெற்றி. அடுத்த ஆண்டும் கீழ்வானம் சிவக்கும், அந்த 7 நாட்கள், தண்ணீர் தண்ணீர் என மூன்றும் 100 நாட்கள். ராணுவ வீரன் 50 நாட்களைக்கடந்தது. இத்தனைக்கும் இசைஞானி உச்சத்தில் இருந்த நேரம்).

    காலை விடிந்தது முதலே மனதில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காலையிலேயே குளித்து உணவருந்தி, ஜீன்ஸ், டி.ஷர்ட், கூலிங் கிளாஸ் சகிதம் ரவியண்ணனின் பைக்கில் தொற்றிக்கொண்டு சாந்தி போய்ச்சேர்ந்தேன். அந்தக்காலை நேரத்திலேயே சாந்தியில் கார்பார்க்கிங்கில் சரியான கூட்டம். ரவிக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் அங்கே நின்றிருக்க என்னையும் இழுத்துக்கொண்டு கூட்டத்தில் கலந்து விட்டான். அடுத்து வரவிருக்கும் 'சத்திய சுந்தரம்' படம் பற்றி பேச்சு நடந்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு நின்றேன். அத்துடன் அப்போது ஓடிக்கொண்டிருந்த 'மோகனப்புன்னகை' படத்தின் ரிசல்ட் அவ்வளவு திருப்தியளிக்கவில்லை என்று வருத்தத்துடன் பேசினர்.. நண்பர்களில் சிலர், 'யாருடா இது புதுசா இருக்கு?' என்று கேட்க, 'என் தங்கச்சிடா, எங்க சித்தப்பா வருவாரில்லையா?. அவர் பொண்ணு. பேரு சாரதா' என்று அறிமுகப்படுத்தினான்.

    தியேட்டருக்குள் ரசிகர்களுக்காக பால்கனி முழுவதையும் ஒதுக்கி விட்டு, கீழ்த்தளம் முழுவதையும் விருந்தினர்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள். திரையுலகத்தினரும், பத்திரிகையாளர்களும் கார்களில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் மட்டுமல்லாது திரையுலகினர் பலரும் வந்தனர். முதலில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணா, விஜயநிர்மலா தம்பதியினர் வந்திறங்க, அவர்களை 'மாப்பிள்ளை' வேணுகோபால் வரவேற்று அழைத்துச்சென்றார். பின்னர் அவர்கள் மூவரும் பிரதான வாயிலில் நின்று, வந்த வி.ஐ.பி.க்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா, நடிகை சுஜாதா போன்றோர் காரிலிருந்து இறங்கும்போதே நாலாபக்கமும் திரும்பி ரசிககளைப்பார்த்து கைகூப்பினர். நடிகர் பிரேம் ஆனந்த் காரிலிருந்து இறங்கி வந்து ரசிகர்களோடு ஒருவராக நின்று பேசிக்கொண்டிருந்தார். நடிகர் எஸ்.வி.ராமதாஸ், என்னைப்போலவே ஒரு நண்பரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்தார்.

    இதனிடையே டோக்கன் வைத்திருந்த ரசிகர்களை பால்கனிக்கு அனுமதிக்கத்துவங்கி விட, கூட்டம் மொத்தமும் வாயிலுக்கு முன்னேறியது. 'இப்போதே போனால்தான், ஸ்டேஜ் நன்றாகத்தெரிகிற மாதிரி இடமாகப்பார்த்து உட்காரலாம், வா' என்று ரவி கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். டோக்கனைப்பார்த்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். முதல் வகுப்பு டிக்கட் கவுண்ட்டரைக்கடந்து மாடிப்படிக்கு திரும்பும் இடத்தில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் நின்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்தது அதுதான் முதலும் கடைசியும். மேலே போய் நல்ல இடமாகப்பார்த்து உட்கார்ந்து கொண்டோம்.

    விழாத்தலைவர் கலைஞர் கருணாநிதியும், சிறப்பு விருந்தினராக வந்திருந்த சௌகார் ஜானகியும் தியேட்டருக்குள் வந்ததும், வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு நடிகர் கிருஷ்ணா மாலைகளை அணிவித்தார். விழாவைத்தொகுத்து வழங்கிய கதை வசனகர்தா ஆரூர்தாஸ் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தார். கலைஞரும், நடிகர்திலகமும் சேர்ந்தே மேடைக்கு வந்தபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் எழுந்து நின்று விண்ணதிர கைதட்டியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 'சிறந்த ஒளிப்பதிவாளர் எம்.விஸ்வநாத் ராய், சிறந்த படத்தொகுப்பாளர் பி.கந்தசாமி' என்று ஆரூர்தாஸ் அழைத்தபோது அவ்வளவு சலசலப்பில்லாத கூட்டத்தில், 'சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்' என்று அழைத்ததும் மீண்டும் பலத்த கைதட்டல் எழுந்தது. பணிவுக்குப்பேர்போன மெல்லிசை மன்னர் மேடையேறியதும் கலைஞரின் கைகளையும், நடிகர்திலகத்தின் கைகளையும் பிடித்து மரியாதை செலுத்தியவர், கூட்டத்தினரைப்பார்த்து நன்றாகப்பணிந்து கும்பிட்டு அமர்ந்தார்.

    பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, விழா துவங்கியது. முக்தா சீனிவாசன், ஏ.வி.எம்.சரவணன் ஆகியோர் பேசினார்கள். ஒரு கட்டத்தில் சரவணன், '........இதுபோலத்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும்' என்று ஏதோ சொல்ல வந்தபோது கூட்டத்தினர் (குறிப்பாக பால்கனியில் இருந்த ரசிகர்கள்) பலத்த கூச்சலிட்டதால், சட்டென்று அதை நிறுத்திக்கொண்டு வேறு சப்ஜெக்ட்டுக்குத்தாவினார். மேடையில் நின்ற 'மாப்பிள்ளை' ரசிகர்களை நோக்கி, அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.

  9. #948
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா (தொடர்ச்சி)

    அவரையடுத்துப்பேசிய முக்தா சீனிவாசன் சிறப்பாகப்பேசினார். 'நடிகர்திலகம் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவற்றில் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை 100க்கு மேல் இருக்கின்றன, வெள்ளிவிழாப்படங்களும் ஏராளமாக இருக்கின்றன. மேலும், நிறுத்தவே முடியாமல் ஓடிய திரிசூலம் போன்ற படங்களும் (பலத்த கைதட்டல்) அவரது பட்டியலில் உள்ளன. அத்தகைய வெற்றிப்பட வரிசையில் இந்த (விஸ்வரூபம்) படமும் இணைவது, இன்றைய சூழ்நிலையில் மகத்தான நிகழ்வு. நடிகர்திலகத்தின் படங்களைப்பார்த்தால் அவர் முக பாவத்தைப்பார்த்தே அவரது மன உணர்வுகளைச்சொல்லிவிட முடியும். இப்போது நடிப்பவர்களெல்லாம் சோகத்திலும் அதே நடிப்பு, கோபத்திலும் அதே நடிப்பு என்று ஒரே மாதிரி செய்கிறார்கள். விஸ்வநாதன் மியூஸிக் பண்றதை வச்சுத்தான் அவன் சோகமாக நடிக்கிறானா, கோபமாக நடிக்கிறானா என்பதையே கண்டுபிடிக்க முடிகிறது' என்று சொல்லி வந்தவர், 'உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி. என்னுடைய அடுத்த படத்தில் நமது நடிகர்திலகம் கதாநாயகனாக நடிக்கிறார்' என்றதும் பலத்த கைதட்டல் எழ, 'இன்னும் பலமாக கைதட்டுங்கள்' என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார். ('இமயம்' படத்துக்குப்பின் 'அவன்,அவள், அது', 'பொல்லாதவன்' போன்ற வெளிப்படங்களை இயக்கினார். விழாவில் அவர் குறிப்பிட்ட படம்தான் 'கீழ்வானம் சிவக்கும்' படமாக உருவானது).

    விழாவில் கலந்துகொண்டு, அனைவருக்கும் கேடயம் வழங்க வந்திருந்த சௌகார் ஜானகி, ஆங்கிலத்தில் பேசினார். அதனால் அவர் பேச்சு முழுவதற்கும் அரங்கம் அமைதியாக இருந்தது. இறுதியாக கலைஞர் கருணாநிதி பேசியபின், நடிகர்திலகம் நன்றியுரை நிக்ழத்தினார். கலைஞர் கருணாநிதி பேசத்துவங்கியபோது...

    'தம்பி ஆரூர்தாஸ் என்னைப்பேச அழைத்தபோது, சிங்கம் கர்ஜிக்கப்போகிறது என்று சொன்னார். இரண்டு சிங்கங்கள் ஒரே காட்டில் கர்ஜிப்பது (பலத்த கைதட்டல்) திரையுலக மேடையை விட அரசியல் மேடைக்கே பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்' என்று துவங்கியவர், வழக்கம்போல பராசக்தி, மனோகரா காலங்களை நினைவு கூர்ந்தார். மீண்டும் அந்தக்காலம் திரும்பி வரும் வகையில் மாடி வீட்டு ஏழை உருவாகி வருவதைக் குறிப்பிட்டார்.

    கலைஞர் பேசி முடித்ததும், படத்தில் இடம்பெற்ற கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. நடிகர்திலகத்துக்கு, கலைஞர் கருணாநிதி கேடயம் வழங்கியதும், படப்பிடிப்புக்குச் செல்வதற்காக கிருஷ்ணா, அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டார். ஆனால் விஜயநிர்மலா விழாவில் இருந்தார். மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் நடிகை சௌகார் ஜானகி கேடயங்களை வழங்கினார்.

    நடிகர்திலகம் நன்றியுரை நிகழ்த்தினார். அவரும், தனக்கும் கலைஞருக்குமான நெடுநாளைய நட்பைப் போற்றிப்பேசினார். மற்ற கலைஞர்களையும் பாராட்டியவர், படத்தை வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    விழா முடிந்து வெளியே வருபோது பார்த்தால், போகும்போது இருந்ததைவிட நாலு மடங்கு கூட்டம் கார்பார்க்கிங் முழுவது நிறைந்து காணப்பட்டது. விழாவுக்கு அனைத்து கலைஞர்களும் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவர்கள் வெளியே போகும்போது பார்ப்பதற்காக திரளாக கூடி நின்றனர். போலீஸார் தலையிட்டு கார்கள் செல்ல வழியேற்படுத்தித் தந்தனர். சிலர், தங்கள் அபிமான கலைஞர்களின் கார்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் வண்டியேறும்போது பார்த்துவிடலாம் என்று அவர்கள் வாகனங்களின் அருகே கூட்டமாக நின்றனர். கலைஞர் கருணாநிதி வந்திருந்ததால் அவரைப்பார்க்க தி.மு.க.வினரும், நடிகர்திலகத்தைக்காண ரசிகர்களும், காங்கிரஸாரும் கூடி நிற்க, அந்த வளாகமே கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்தது. மவுண்ட் ரோட்டில் பேருந்துகளில் செல்வோர் அனைவரும் சாந்தி வளாகத்தை ஆச்சரியமாக எட்டிப்பார்த்த வண்ணம் சென்றனர்.

    ரவியண்ணனின் பைக், பார்க்கிங் நடுவில் மாட்டிக்கொண்டதால் மட்டுமல்ல, கூட்டம் அனைத்தும் செல்லும் வரை பார்த்து விட்டுப்போகலாம் என்று நாங்கள் நின்றிருக்க, அதே மனநிலையில் ரசிகர்கள் பலரும் நின்றதால், கூட்டம் கலைய வெகுநேரம் ஆனது. வீட்டுக்குத்திரும்பியதும், அனைத்து விஷயங்களையும் அப்பாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னபோது அவர் ரொம்பவே மகிழ்ந்தார், குறிப்பாக என் குதூகலத்தைப் பார்த்து.

    நினைத்துப்பார்க்க எவ்வளவு இனிமையான நாட்கள் அவை.

  10. #949
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சகோதரி சாரதா,

    "விஸ்வரூபம்" 100வது நாள் விழா சிறப்புப்பதிவு மூலம் எங்களையெல்லாம் அந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நாங்களும் அன்று சென்னை 'சாந்தி'யில் இருந்ததாகவே தோன்றியது. விழாப்பதிவு உண்மையிலேயே அற்புதம். தாங்கள் எழுதுவதற்கு கேட்கவா வேண்டும் ! விழா தொடங்குவதற்கு முன் சாந்தி வளாகத்தில் நடந்த சம்பவங்கள், விழாவில் விழாத்தலைவர் கலைஞர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆற்றிய உரைகள், நடிகர் திலகத்தின் நன்றியுரை, விழா நிகழ்வுகள் மற்றும் விழா முடிந்ததும் ஏற்படும் உற்சாகக் களேபரங்கள் என எதையும் விட்டு வைக்காமல் தங்களின் personal நினைவுகளோடு இந்த சிறப்புப்பதிவை அளித்திருந்த விதம் அதியற்புதம். [அன்றைய பத்திரிகைகளில்கூட இந்த விழா இவ்வளவு சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்காது.]

    எங்களது அன்பு வேண்டுகோளை ஏற்று உடனுக்குடன் விழாத் தொகுப்புப் பதிவை மிகச் சிறப்பாக வழங்கிய தங்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #950
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

    கப்பலோட்டிய தமிழன்

    [7.11.1961 - 7.11.2011] : பொன்விழா நிறைவு : 51வது ஜெயந்தி

    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : சிறப்புப் புகைப்படங்கள்





    வருவார்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •