Quote Originally Posted by bis_mala View Post
உலகம் சுழல்கிறது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் .....................ஏதும் சொல்லவில்லை.


சுழன்றும் ....................... தலை.

என்கிறார்.--------------------
தோன்றுகிறது.
மேலும், உலகம் சுற்றுகிறது என்பதற்கு இன்னொரு குறளையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. 1025.

இங்கு சுற்றும் என்ற சொல்லுக்கு "விரும்பிப் போற்றிக் கொள்ளும்" என்பது பொருள். "சூழ்ந்து நிற்கும்" என்றும் கூறலாம். வேறு சொற்களால் உரை கூறியிருப்பினும், கருத்து இதுவாகவே இருக்கக் காணலாம்.

ஆனால், உலகம் சுற்றுகிறது என்று வள்ளுவர் உணர்ந்திருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு குறிப்பாகக் கூடுமே!

இதைத்தான் "சூட்சுமமாகக்" கூறுதல் என்பர் பிறர்.