-
10th December 2011, 04:10 PM
#1421
Senior Member
Seasoned Hubber
அன்பு பம்மலார் சார், உயர்ந்த மனிதன் விளம்பரங்கள் மற்றும் தாம்பத்யம் படப்பிடிப்பு செய்தி பதிவு அருமை. நன்றி.
-
10th December 2011 04:10 PM
# ADS
Circuit advertisement
-
10th December 2011, 04:12 PM
#1422
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்தசாரதி சார், சக்கைபோடு போடு ராஜா பாடல் பற்றிய உங்கள் ஆய்வு அருமை.
-
10th December 2011, 04:20 PM
#1423
Senior Member
Seasoned Hubber
-
11th December 2011, 12:27 AM
#1424
Senior Member
Veteran Hubber
9.12.2011 வெள்ளி முதல், சென்னை 'நியூ பிராட்வே' திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாக, புதுமைத் திலகத்தின் "புதிய பறவை".
10.12.2011 சனிக்கிழமை முதல், சேலம் 'அலங்கார்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலையுலக மன்னவரின் "மன்னவன் வந்தானடி".
இனிப்பான இந்த இரு தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு Sweet Thanks !
அன்புடன்,
பம்மலார்.
-
11th December 2011, 01:07 AM
#1425
தீவிரமான நடிகர் திலகம் ரசிகர்களிடமோ இல்லை மிதமான ரசிகர்களிடமோ சென்று கேட்டால் கருடா சௌக்கியமா படத்தைப் பற்றி அவ்வளவு சிலாக்கியமான பதில் வராது. ஆனால் தனியொரு மனிதனாக நின்று அந்தப் படத்தின் சிறப்புகளை தெள்ள தெளிவாக எழுதுவதோடு மட்டுமல்லாமல் படிப்பவர்கள் மனதில் அவர்கள் படத்தை பார்க்காதவர்களாக இருந்தால் இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தையும் படம் பார்த்தவர்கள் மத்தியில் இவ்வளவு நுணுக்கங்கள் படத்தில் இருந்ததா நாம்தான் கவனிக்காமல் ரசிக்க தவறி விட்டோமோ என்ற குறுகுறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் அது வாசுதேவன் அவர்களின் பேனாவிற்கு, ரசனைக்கு கிடைத்த வெற்றி. என்னைப் பொறுத்தவரை படம் வெளியான அந்த நேரத்தில் கேரளத்தில் வேலை செய்து கொண்டிருந்ததால் அந்நேரம் தொடர்ச்சியாக வெளியான அந்த நாலு படங்களையும் உடனடியாக பார்க்க முடியாமல் சிறிது காலம் சென்ற பிறகே பார்க்க முடிந்தது. அதிலும் கருடா சௌக்கியமா கிட்டத்தட்ட ஒரு டூரிங் தியேட்டர் போல் இருந்த ஒரு அரங்கிலே பார்க்க நேர்ந்தது. அதுகூட அந்தப் படத்தை சரியாக ரசிக்க முடியாமல் செய்திருக்கலாம். கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் பொதிகையில் சிறிது நேரம் பார்த்தேன். மீண்டும் பார்க்க முயற்சிக்கிறேன்.
அது போல Gentlemen இதழில் வெளி வெளிவந்த நடிகர் திலகத்தின் பேட்டி. மிக அரிதான ஒன்று. பெமினா என்ற பெண்களுக்கான இதழை நடத்திக் கொண்டிருந்த பத்திரிகை குழுமத்தின் மற்றொரு வெளியீடுதான் Gentlemen இதழ் என்பதுதான் என் நினைவு. அதிலும் அந்த பேட்டி 1982 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று சங்கிலி வெளியான அன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பேட்டியில் ஒரு வித்தியாசமான சிவாஜியை பார்க்க முடிகிறது.
படத்தை அலசுவது வேறு. ஆனால் படத்தில் வரும் பாடல் காட்சியை அதன் அனைத்துக் கோணங்களிலும் அலசுவது என்பது வேறு. இரண்டாவதாக சொன்னது சற்றே கடினமான காரியம். ஆனால் நம்முடைய சாரதி அவர்களுக்கோ அதுதான் தண்ணீர் பட்ட பாடு. நடிகர் திலகத்தின் நடிப்பால் மட்டுமே பேசப்பட்ட பாடல்கள் என்ற தலைப்பில் அவர் தொடங்கியிருக்கும் இந்த வரிசை சக்கை போடு போடப் போகிறது என்பது உறுதி. இது போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நடிகர் திலகத்தின் பாடல்களை அவர் அலசப் போகிறார் என்ற ரகசியத்தை உங்களுக்கெல்லாம் சொல்ல விழைகிறேன். அசத்துங்கள் சாரதி!
சிவாஜி பிலிம்ஸ்-ன் முதல் ஹீரோவான தேவ் ஆனந்த் அவர்களுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியும் பாடல் காட்சிகளும் நல்ல முறையில் அமைந்திருந்தன.
அன்புடன்
-
11th December 2011, 01:12 AM
#1426
நீதி பற்றியும் மனிதருள் மாணிக்கம் பற்றியும் கார்த்திக்கின் பதிவு பல்வேறு நினைவுகளை கிளறி விட்டு விட்டது. இங்கே எல்லோரும் குறிப்பிட்டது போல் நீதி 1972-ம் ஆண்டின் கடைசி படம் என்பதால் ஏராளமான எதிர்ப்பார்ப்புகள். ராஜா மிக பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் எந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இருக்கும் என்பது வரை ஒரு பெரிய விவாதமே ரசிகர்களுக்கிடையேயும் திரைப்பட துறை சம்மந்தப்பட்டவர்களிடையேயும் நடந்து வந்தது. ராஜா 100-வது நாளன்று அதற்கு விடை கிடைத்தது. 100-வது நாளன்று தினத்தந்தியில் முதல் பக்கத்தில் கிழே ஒரு ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரமும் மற்றொரு ஓரத்தில் நீதி விளம்பரமும் வெளிவந்தது. அது துஷ்மன் என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக் என்பதும் வெளிவந்தது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ராஜா அளவிற்கு நீதிக்கு எதிர்பார்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் நீதி வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பு நவம்பர் 4 தீபாவளியன்று மதுரையில் சென்ட்ரலில் துஷ்மன் வெளியானது. [பட்டிக்காடா பட்டணமா 182 நாட்களை நிறைவு செய்து சென்ட்ரலில் இருந்து வேறு தியேட்டருக்கு ஷிப்ட் செய்யப்பட்டது]. நான் தீபாவளியன்று மாலைக் காட்சி துஷ்மன் பார்த்தேன். ஜானி மேரா நாம் பார்த்தபோது எந்தளவிற்கு பிடித்திருந்ததோ அதற்கு மாறான உணர்வே துஷ்மன் பார்த்தபோது ஏற்பட்டது.
மதுரை தங்கத்தில் படம் வெளியானது. நீதி படம் வெளியான டிசம்பர் 7 அன்று பார்க்க முடியவில்லை. அன்று தமிழகத்தில் நிலவிய அசாதரணமான அரசியல் சூழல் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பள்ளிக்கூடங்கள் வெகு நாட்கள் மூடப்பட்டு கிடந்து அந்த டிசம்பர் 4 அன்றுதான் மீண்டும் திறக்கப்பட்டன. ஆகவே சனிக்கிழமைதான் படம் பார்த்தேன். அதற்கு முன்னரே படத்தைப் பற்றிய நல்ல opinion வந்து விட்டது. அதுவும் தவிர துஷ்மன் படத்தை போன்று இடையிடையே போர் அடிக்காமல் படத்தை சீரான வேகத்தில் கொண்டு சென்றிருந்தார் சி.வி.ஆர். அந்தக் காட்சியில் எனக்கு இப்போதும் நினவு இருப்பது பயாஸ்கோப் பாட்டின் போது "கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க" என்ற வரியின் போது காண்பிக்கப்படும் பெருந்தலைவரும் நடிகர் திலகமும் இணைந்து இருக்கும் அந்த ஸ்டில். ஹவுஸ்புல் ஆன தங்கம் தியேட்டரே அலறினால் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.ஆனாலும் ராஜா போல பலமுறை பார்க்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. தங்கத்தில் 57 நாட்கள் ஓடியது இந்தப் படம். தங்கத்தில் அத்தனை நாட்கள் என்றால் சாதாரண தியேட்டர்களில் எவ்வளவு நாட்கள் என்று யூகிக்கலாம். சென்னையிலும் சேலத்திலும் 100 நாட்கள் ஓடுகிறது என்ற செய்தி மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது. ராஜா அளவிற்கு நீதி மறு வெளியீடுகள் காணவில்லை என்பதும் உண்மை.
தங்கத்தைப் பொறுத்தவரை நீதி படத்திற்கு பின் ஒரு 18 மாத காலத்திற்கு அவர்கள் தமிழ் படங்களே திரையிடவில்லை. 1973 பிப்ரவரி 2-ந் தேதி முதல் 1974 ஆகஸ்ட் 14 வரை ஹிந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. 1974 ஆகஸ்ட் 15 அன்று வெளியான அத்தையா மாமியாதான் மீண்டும் தமிழ்ப் படங்களின் வெளியீட்டை துவக்கி வைத்தது.
தங்கத்தில் வாரத்திற்கு ஒரு ஹிந்திப் படம் வெளியிடப்படும். படம் பிரமாதமாக ஓடினாலும் சரி மோசமாக ஓடினாலும் சரி கரெக்டாக 7 நாட்கள்தான். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை படம் மாறி விடும். இதன் காரணமாக சில நல்ல படங்களும் பாதிக்கப்பட்டன. உதாரணமாக 1974 ஜனவரி 4 அன்று யாதோன் கி பாராத் வெளியானது. நான் ஞாயிறு மாலை படம் படம் பார்க்கிறேன். கட்டுக்கடங்காத கூட்டம். ஆனாலும் ஒரே வாரத்தில் மாற்றப்பட்டது. அதே 1974 ஜனவரி 1 அன்றுதான் மீனாட்சி தியேட்டரில் பாபி வெளியாகியிருந்தது. இரண்டும் ஒரே நேரத்தில் ஓடியிருக்க வேண்டியது. அதன் பிறகு அதே 1974 வருடம் அக்டோபர் மாதம் பரமேஸ்வரியில் மீண்டும் யாதோன் கி பாராத் வெளியாகி சக்கை போடு போட்டது. தங்கத்தில் வெளியான இந்திப்படங்களைப் பற்றி பேசும் போது வேறொன்று நினைவுக்கு வருகிறது.
1973 வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் பகுதியில் தங்கம் திரையரங்கின் சார்பாக தினத்தந்தியில் ஒரு விளம்பரம் வருகிறது. அதில் என்ன இருந்தது என்றால் "1973 மே மாதம் 11-ந் தேதியிலிருந்து 1973 டிசம்பர் 13-ந் தேதி வரை 217 நாட்களில் எங்களது தங்கம் திரையரங்கில் வெளியான படங்களின் மொத்த வசூல் இவ்வளவு. அதே 217 நாட்களில் மதுரையின் மற்றொரு திரையரங்கில் மொத்த வசூல் இவ்வளவு" என்ற வரிகள். அந்த கணக்கின்படி தங்கம் வசூல் அதிகம். என்ன காரணத்தினால் இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் அதை பார்த்ததும் மாற்று முகாமில் அது மிகுந்த கோவத்தை உருவாக்கியது என்பது உண்மை. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து அதில் குறிப்பிட்டிருந்த அந்த திரையரங்கின் சார்பாக ஒரு பதில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பதில் சரியானபடி எழுதப்படவில்லை என்ற வருத்தம் அந்த முகாமில் வெகு நாட்கள் இருந்தது.
மனிதருள் மாணிக்கம் பற்றி ---- மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
11th December 2011, 01:21 AM
#1427
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் அடுத்த அசத்தல் - 'நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள்' - நெடுந்தொடரை தாங்கள் தொடங்கியிருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. ஆரம்பப்பதிவிலேயே 'சக்கை போடு' போட்டுவிட்டீர்கள் ! எழுதும் பதிவு ஒவ்வொன்றிலுமே தாங்கள் சக்கை போடு போடுபவர் என்பது வேறு விஷயம். இந்த கட்டுரைத்தொடருக்காக தாங்கள் அளித்திருக்கும் முன்னுரை simply superb.
இப்பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறித்த தங்களின் திறனாய்வு வெகு ஜோர். நடிகர் திலகத்தின் முகபாவங்களுக்காகவும், உடல்மொழிக்காகவும் அந்த உடல்மொழியில் அவர் செய்யும் குறும்பு மற்றும் சேஷ்டைகளுக்காகவும் இந்தப்பாடல் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் வனப்பான வரிகளும், இசைவானம் எம்.எஸ்.வி. அவர்களின் ஈர்க்கும் இசையும் பாடலுக்கு கூடுதல் மெருகு.
'சக்கை போடு' போட்டு ஆரம்பித்துள்ளீர்கள் ! இனி இங்கே என்ன போடு போடப்போகிறீர்களோ !
[பாடலின் வீடியோவை இடுகை செய்த இடுகை மன்னன் வாசுதேவன் அவர்களுக்கு இனிய நன்றிகள் !]
அன்புடன்,
பம்மலார்.
-
11th December 2011, 02:07 AM
#1428
Senior Member
Veteran Hubber
வீரபாண்டிய கட்டபொம்மனை பாராட்டி வாழ்த்தி ஆசி வழங்கும் மூதறிஞர்

10.12.2011 : முன்னாள் இந்திய கவர்னர்-ஜெனரல், முன்னாள் சென்னை மாகாண முதல் மந்திரி சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவர்களின் 134வது பிறந்த தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
11th December 2011, 02:47 AM
#1429
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் வழங்கிய பாசம் நிறைந்த பாராட்டுக்களுக்கு எனது பவ்யமான நன்றிகள் !
"நீதி" ஸ்டில் சூப்பர் !
அன்புடன்,
பம்மலார்.
-
11th December 2011, 02:54 AM
#1430
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
தங்களின் ஆனந்தமயமான பாராட்டுக்களுக்கு எனது அற்புத நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks